இயற்கை தழைவழி இனப்பெருக்கம் விளக்குக | Explain Natural vegetative reproduction (தினம் ஒரு கேள்வியும் & பதிலும்) 12 வகுப்பு

 


தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 12 உயிர் தாவரவியல் &  தாவரவியல்

இயற்கை தழைவழி இனப்பெருக்கம் விவரி

  • இயற்கையாக தழைவழி இனப்பெருக்கத்தில் மொட்டுகள் வளர்ந்து புதிய தாவரங்களைத் தருகின்றன. 
  • மொட்டுகள் வேர், தண்டு, இலை போன்ற உறுப்புகளில் தோன்றுகிறது.

அ) வேரில் தழைவழி இனப்பெருக்கம்
  • சில தாவரங்களின் வேர்களில் தழைவழி அல்லது மாற்றிட மொட்டுகள் தோன்றுகின்றன. 
  • எடுத்துக்காட்டுகள்: முரையா, டால்பர்ஜியா மற்றும் மில்லிங்டோனியா. 
  • சில கிழங்கு வடிவமாற்றிடவேர்கள் மொட்டுகளை தோற்றுவிப்பதைத் தவிர உணவையும் சேமிக்கின்றன. 
  • எடுத்துக்காட்டு: ஐப்போமியாபட்டாட்டஸ் மற்றும் டாலியா. 
  • தகுந்த சூழ்நிலைகளில் மொட்டுகள் கொண்ட வேர்கள் தாய் தாவரத்திலிருந்து பிரிந்து தனித் தாவரமாக வளர்கின்றன.

ஆ) தண்டில் தழைவழி இனப்பெருக்கம்
  • மட்டநிலத் தண்டு - மியூசா பாரடிசியாக்கா மற்றும் ஜின்ஜிஃபெர் அஃபிசினாேல, குர்குமா லாங்கா 
  • தரையடிக்கிழங்கு - அமோர்போபாலஸ் மற்றும் கொலகேஸியா 
  • கிழங்கு - சொலானம் டியூபரோசம்
  • குமிழ்த்தண்டு - அல்லியம் சீப்பா மற்றும் லில்லியம் 
  • ஓடு தண்டு - சென்டெல்லா ஏசியாட்டிகா 
  • வேர்விடும் ஓடுதண்டு - மென்தா மற்றும் ஃபிரகேரியா 
  • நீர் ஓடு தண்டு - பிஸ்டியா, ஐக்கார்னியா 
  • தரைகீழ் உந்து தண்டு - கிரைசான்திமம் 
  • சிறு குமிழ் மொட்டுக்கள் - டயாஸ்காரியா, அகேவ்
  • மட்டநிலத்தண்டின் கணுவின் கோணமொட்டு மற்றும் கிழங்கின் கண் அமைப்பிலிருந்தும் புதிய தாவரங்கள் தோன்றுகின்றன.
இ) இலையில் தழைவழி இனப்பெருக்கம் 
  • சில தாவரங்களில் இலைகளில் மாற்றிடத்து மொட்டுகள் தோன்றுகின்றன. 
  • இவை பெற்றோர் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய தனி தாவரங்களாக வளர்கின்றன. 
  • எடுத்துக்காட்டுகள்: பிரையோஃபில்லம், சில்லா, பெகோனியா. 
  • பிரையோஃபில்லத்தில் சதைப்பற்றுள்ள மற்றும் விளம்பில் பள்ளங்களுடைய இலைகள் உள்ளன. 
  • இப்பள்ளங்களில் வேற்றிட மொட்டுகள் தோன்றுகின்றன. 
  • இவை இலைவளர் மொட்டுகள் என்று அறியப்படுகின்றன. 
  • இலை அழுகியதும் இவ்வமைப்புகளில் வேர் தொகுப்பு உருவாகி தனி தாவரங்களாக மாறுகின்றன. 
  • சில்லா ஆற்று மணலில் வளரும் ஒரு குமிழ்தண்டு தாவரமாகும். 
  • இதன் தழை இலைகள் நீண்டும், குறுகியும் உள்ளன. 
  • இவற்றின் நுனியில் இலைவளர் மொட்டுகள் தோன்றி அவை தரையை தொட்டவுடன் புது தனி தாவரங்களாக மாறுகின்றன.

Explain Natural vegetative reproduction
  • Natural vegetative reproduction is a form of asexual reproduction in which a bud grows and develops into a new plant. The buds may be formed in organs such as root, stem and leaf.

A. Vegetative reproduction in root 
  • The roots of some plants develop vegetative or adventitious buds on them. Example Murraya,
  • Dalbergia and Millingtonia. 
  • Some tuberous adventitious roots apart from developing buds also store food. 
  • Example Ipomoea batatus and Dahlia. 
  • Roots possessing buds become detached from the parent plant and grow into independent plant under suitable condition.

B. Vegetative reproduction in stem
  • Rhizome (Musa paradisiaca, Zingiber officinale and Curcuma longa) 
  • Corm (Amorphophallus and Colocasia)
  • Tuber (Solanum tuberosum) 
  • Bulb(Allium cepa and Lillium) 
  • Runner (Centella asiatica) 
  • Stolon (Mentha, and Fragaria) 
  • Offset (Pistia, and Eichhornia) 
  • Sucker (Chrysanthemum) and
  • Bulbils (Dioscorea and Agave). 
  • The axillary buds from the nodes of rhizome and eyes of tuber give rise to new plants.

C. Vegetative reproduction in leaf
  • In some plants adventitious buds are developed on their leaves. 
  • When they are detached from the parent plant they grow into new individual plants. 
  • Examples: Bryophyllum, cilla, and Begonia. 
  • In Bryophyllum, the leaf is succulent and notched on its margin.
  • Adventious buds develop at these notches and are called epiphyllous buds. 
  • They develop into new plants forming a root system and become independent plants when the leaf gets decayed. 
  • Scilla is a bulbous plant and grows in sandy soils. 
  • The foliage leaves are long and narrow and epiphyllous buds develop at their tips. 
  • These buds develop into new plants when they touch the soil.




Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany