T4 பாக்டீரியஃபாஜின் அமைப்பை விவரி | Describe the structure of T4 bacteriophage (தினம் ஒரு கேள்வியும் & பதிலும்) 11 வகுப்பு

 




தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 11 உயிர் தாவரவியல் &  தாவரவியல்

T4 பாக்டீரியஃபாஜின் அமைப்பை விவரி 

T4 பாக்டீரியஃபாஜின் அமைப்பு
  • T4ஃபாஜ்கள் தலைப்பிரட்டை வடிவம் கொண்டவை. 
  • இவை தலை, கழுத்துப்பட்டை, வால், அடித்தட்டு, வால் நார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. 
  • அறுங்கோண வடிவம் கொண்ட தலைப்பகுதி 2000 ஒத்த புரதத்துணை அலகுகளால் ஆனது. 
  • நீண்ட சுருள் வடிவத்தைக் கொண்ட வாலின் மையப்பகுதி உள்ளீடற்றது. 
  • இது தலையுடன் கழுத்துப்பட்டை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 
  • வாலின் முடிவுப்பகுதியில் அடித்தட்டு இணைந்துள்ளது. 
  • அடித்தட்டு ஆறு வால் நார்களையும், ஆறு முட்களையும் பெற்றுள்ளது. 
  • இத்தகைய, நார்கள் பெருக்கச் சுழற்சியின்போது ஓம்புயிரி பாக்டீரிய செல்லின் செல் சுவருடன் ஃபாஜ்கள் ஒட்டிக்கொள்ள உதவுகின்றன. 
  • தலைப்பகுதியில் 50µm அளவுடைய ஈரிழை DNA மூலக்கூறு இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ளது. 
  • ஃபாஜின் நீளத்தை விட அதன் DNA மூலக்கூறின் நீளம் 1000 மடங்கு அதிகமாகும்
Explain the structure of T4 bacteriophage
Structure of T4 bacteriophage
  • The T4 phage is tadpole shaped and consists of head, collar, tail, base plate and fibres
  • The head is hexagonal which consists of about 2000 identical protein subunits. 
  • The long helical tail consists of an inner tubular core which is connected to the head by a collar. 
  • There is a base plate attached to the end of tail. 
  • The base plate contains six spikes and tail fibres. 
  • These fibres are used to attach the phage on the cell wall of bacterial host during replication.
  • A dsDNA molecule of about 50 μm is tightly packed inside the head. 
  • The DNA is about 1000 times longer than the phage itself.




Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany