தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 11 உயிர் தாவரவியல் & தாவரவியல்
லைக்கென்களின் வகைப்பாடு தருக
லைக்கென்கள் வகைப்பாடு
வாழிடத்தின் அடிப்படையில்
கார்ட்டிகோலஸ் (மரப்பட்டை மீது காணப்படுபவை),
லிக்னிகோலஸ் (கட்டை மீது வாழ்பவை),
சாக்ஸிகோலஸ் (பாறை மீது வாழ்பவை)
டெர்ரிகோலஸ் (நிலத்தில் வாழ்பவை),
கடலில் வாழ்பவை (கடலில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை),
நன்னீர் வகை (நன்னீரில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை).
உடலப்புற அமைப்பின் அடிப்படையில்
லெப்ரோஸ் (வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு காணப்படுவதில்லை), கிரஸ்டோஸ் (ஓடு போன்ற அமைப்பு),
ஃபோலியோஸ் (இலை ஒத்த வகை),
புருட்டிகோஸ் (கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு)
லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில்
ஹோமியோமிரஸ் (பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல்),
ஹெட்டிரோமிரஸ் (வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்) என வேறுபட்டுள்ளன
லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி பரவலின் அடிப்படையில்
ஆஸ்கோமைசீட்ஸ்வகுப்பைச் சார்ந்தவையாக இருப்பின் - ஆஸ்கோலைக்கென்
பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை எனில் - பசிடியோலைக்கென்
- Corticolous (on Bark)
- Lignicolous (on Wood)
- Saxicolous (on rocks)
- Terricolous (on ground)
- Marine (on siliceous rocks of sea)
- Fresh water (on siliceous rock of fresh water).
- Leprose (a distinct fungal layer is absent)
- Crustose - crust like;
- Foliose - leaf like;
- ruticose - branched pendulous shrub like
- Homoiomerous (Algal cells evenly distributed in the thallus) and
- Heteromerous (a distinct layer of algae and fungi present).
Vimal raj
ReplyDeletePost a Comment