சால்வியாவின் மகரந்தச்சேர்க்கை இயங்கு முறை பற்றி விவரி. | Explain pollination in Salvia (Lever mechanism) (தினம் ஒரு கேள்வியும் & பதிலும்) 12 வகுப்பு


தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 12 உயிர் தாவரவியல் &  தாவரவியல்

 சால்வியாவின் மகரந்தச்சேர்க்கை இயங்கு முறை பற்றி விவரி. 

  1. சால்வியாவின் மலர்களில் தேனீக்கள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகின்றது.
  2. சால்வியாவின் ஆண் மலர் முன்முதிர்வு தன்மை கொண்டது.
  3. மலர்கள் ஈருதடு வடிவமுடைய அல்லி வட்டத்தையும், இரு மகரந்தத்தாள்களையும் கொண்டது.
  4. சால்வியாவில் மகரந்தச்சேர்க்கை நடைபெற நெம்புகோல் இயங்கு முறை உதவுகிறது.
  5. மகரந்தப்பையின் மேற்புறத்தில் வளமான மகரந்த மடலையும் கீழ்ப்புறத்தில் வளமற்ற மகரந்த மடலையும் கொண்டுள்ளது.
  6. மகரந்த மடல்களுக்கு இடையே காணப்படும் நீண்ட இணைப்புத்திசு மகரந்தப்பை இங்குமங்கும் நன்கு அசைந்தாட உதவுகிறது.
  7. தேனீ நுழையும்போது மலரின் கீழ்ப்புற உதடு தேனீ அமர்வதற்குரிய தளமாகிறது.
  8. தேனீ புத்தேனை உறிஞ்ச தலையை உள்ளே நுழைக்கும் போது தேனீயின் உடல் இணைப்புத்திசுவில் படுகிறது. 
  9. இதனால் மகரந்தப்பையின் வளமான பகுதி கீழிறங்கி தேனீயின் முதுகில் மோதுகிறது.
  10. தேனீயின் உடலில் மகரந்தத்துகள்கள் படிகின்றன. தேனீ மற்றொரு மலரினுள் நுழையும் பொழுது மகரந்தத்துகள்கள் அம்மலரின் சூலகமுடியில் விழுவதன் மூலம் சால்வியாவில் மகரந்தச்சேர்க்கை நிறைவடைகிறது.

Explain pollination in Salvia (Lever mechanism) 
This flower of salvia is adapted for Bee pollination.
  1. The flower is protandrous and the corolla is bilabiate with 2 stamens.
  2. A lever mechanism helps in pollination.
  3. Each anther has an upper fertile lobe and lower sterile lobe.
  4. Lower sterile lobe separated by a long connective which helps the anthers to swing freely.
  5. When a bee visits a flower, it sits on the lower lip which acts as a platform.
  6. It enters the flower to suck the nectar by pushing its head into the corolla.
  7. During the entry of the bee into the flower the body strikes against the sterile end of theconnective.
  8. This makes the fertile part of the stamen to descend and strike at the back of the bee.
  9. The pollen gets deposited on the back of the bee.
  10. When the bee visits another flower, the pollen is rubbed on stigma. Thus pollination is completed.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany