பாடம் 17- சுவாசித்தல் மற்றும் வாயு பரிமாற்றம்
1. சுவாசத்தின் பணிகள்.
வளிமண்டலத்திற்கு ம் இரத்தத்திற்கும் இடையே ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பரிமாற்றம் செய்தல்.
உடலின் pH அளவை நிலைப்படுத்திப் பேணுதல்.
உட் சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்ட நோயூக்கிகள் மற்றும் மாசுபடுத்தி களிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல்.
இயல்பான குரலொலிக்கான குரல் ஒலி நாண்களை பராமரித்தல்.
செல் சுவாசத்தால் உருவாக்கப்படும் வெப்பத்தைச் சுவாசத்தின் மூலம் வெளியேற்றல்.
2. மேற்பரப்பிகள்.
நுண்காற்றுப் பையின் மேற்புறத்தில் காணப்படும் மெல்லிய, செல்களற்ற, புரதம் மற்றும் பாஸ்போலிப்பிடுகளாலான படலமாகும்.இது காற்று நுண்ணறையின் பரப்பு இழுவிசையைக் குறைத்து நுரையீரல்களைச் சிதைவடையாமல் பாதுகாக்கிறது.
மேலும் நுரையீரல் வீக்கத்தை தடுத்து சுவாசத்தை எளிதாக்குகிறது. குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் காற்றுப்பைகளில் குறைவான அளவே மேற்பரப்பிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அக் குழந்தைகளுக்கு சிசு மூச்சுத்திணறல் நோய்க் குறியீடு ஏற்படுகின்றது.
ஏனெனில் கர்ப்ப காலத்தின் 25 வது வாரத்தில் தான் காற்றுப்பை மேற்பரப்பிகள் உருவாக்கப்படுகின்றன
3. சுவாசப் பரப்பின் பண்புகள்.
அதிகப் பரப்பளவையும் அதிக இரத்த நுண்நாளங்களையும் பெற்றிருக்க வேண்டும்.
ஈரத்தன்மையுடன் மிக மெல்லிய சுவருடையதாக இருத்தல் வேண்டும்.
புறச் சூழலோடு நேரடி தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும்.
சுவாசத்தின் போது காற்று எளிதாக ஊடுருவக் கூடியதாக இருக்க வேண்டும்.
4. சுவாச நிகழ்வின் படிநிலைகள்.
வளிமண்டலம் மற்றும் நுரையீரல் களுக்கு இடையேயான வாயு பரிமாற்றம்.
நுரையீரல்களுக்கும் இரத்தத்திற்கும் இடையேயான O2 மற்றும் Co2 பரிமாற்றம்.
இரத்தத்தின் மூலம் O2 மற்றும் Co2 ஆகியவை கடத்தப்படுதல்.
இரத்தம் மற்றும் செல்களுக்கிடையே வாயு பரிமாற்றம்.
செல்கள், பல உடற்செயலியல் செயல்களைச் செய்ய O2 ஐ எடுத்துக் கொள்ளுதலும் Co2 ஐ வெளியேற்றுதலும்.
5. உட் சுவாசம்.
நுரையீரலில் உள்ள காற்றின் அழுத்தம் வளிமண்டலத்தின் அழுத்தத்தை விடக் குறைகிறது. இதனை ஈடுசெய்வதற்கென வெளிக் காற்று சுவாசப் பாதைகளின் வழியே நுரையீரலினுள் நுழையும்.
6. வெளிச் சுவாசம்.
நுரையீரல்கள் அழுத்தப்பட்டு நுரையீரலிலுள்ள காற்றழுத்தத்தை விட அதிகரிக்கிறது. இதனால் சுவாசப்பாதையின் வழியாக நுரையீரலிலுள்ள காற்று வெளியேற்றப்படுகிறது.
7. ஸ்பைரோமீட்டர்.
ஒரு ஆரோக்கியமான மனிதனின் சராசரி சுவாசம் ஒரு நிமிடத்திற்கு 12- 16 முறையாகும். ஒருவரின் நுரையீரல் செயல்பாட்டை அறிவதற்கான மருத்துவ க் கணக்கீட்டில் சுவாசத்தின் போது பங்கேற்கும் காற்றின் கொள்ளளவை அளக்க ஸ்பைரோமீட்டர் எனும் கருவி பயன்பாட்டில் உள்ளது.
8. சுவாசக் கொள்ளளவுகள்.
மூச்சுக்காற்று அளவு.
இயல்பான ஒவ்வொரு சுவாசத்தின் போதும் உள்ளேறும் காற்று அல்லது வெளியேறும் காற்றின் கொள்ளளவே மூச்சுக்காற்று அளவு ஆகும். மூச்சுக்காற்று அளவு சுமார் 6000 -8000மில்லி லிட்டர் அளவுள்ள காற்றை உள்ளிழுக்கவோ அல்லது வெளியேற்றவோ இயலும். கடினமான உடற்பயிற்சியின் போது மூச்சுக்காற்றளவானது சுமார் 4-10 மடங்கு அதிகரிக்கிறது.
உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு.
உள்மூச்சின் போது வலிந்து உள்ளிழுக்கப்படும் கூடுதல் காற்றின் அளவே உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு எனப்படுகிறது. இதன் அளவு சுமார் 2500- 3000 மில்லி லிட்டர் ஆகும்.
9.வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு.
விசையுடன் வலிந்து வெளியேற்றப்படும் கூடுதல் காற்றின் அளவே வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு எனப்படுகிறது. சாதாரணமாக இதன் அளவு 1000- 1100 மில்லி லிட்டர் ஆகும்.
எஞ்சிய கொள்ளளவு.
வெளியேற்றப்பட்ட வெளிமூச்சிற்கும் பிறகும் நுரையீரல்களில் தங்கி விடும் காற்றின் அளவு எஞ்சிய கொள்ளளவு எனப்படுகிறது. இதன் அளவு சுமார் 1100- 1200 மில்லி லிட்டர் ஆகும்.
கலைச்சொல் அகராதி.
1. ஹைபாக்ஸியா.
தேவையான அளவிற்குத் திசுக்கள் ஆக்ஸிஜனை பெறாத நிலை.
2. அடைகாக்கும் கருவி.
நுண்ணியிரிகள் அல்லது செல்கள் வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இவ்வளர்ப்பிற்குத் தேவையான உகந்த வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றைப் பராமரித்தல் மற்றும் கருவியினுள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளைச் சரி செய்தல் ஆகிய பணிகளைச் செய்கிறது.
Technical points
1. Respiratory functions.
To exchange O2 and Co2 between the atmosphere and the blood.
To maintain homeostatic regulation of body pH.
To protect us from inhaled pathogens and pollutants.
To maintain the vocal cords for normal communication.
To remove the heat produced during cellular respiration.
2. Surfactants.
Are the thin non cellular films made of protein and phospholipids covering the alveolar membrane. The surfactant lowers the surface tension in the alveoli and prevents the lungs from collapsing. It also prevents pulmonary oedema.
Premature babies have low levels of surfactant in the alveoli may develop the the new born respiratory distress syndrome (NRDS) because the synthesis of surfactants begins only after the 25th week of gestation.
3. Characteristic features of respiratory surface.
Surface area must be very large and richly supplied with blood vessels.
Should be extremely thin and kept moist.
Should be in direct contact with the environment.
Should be permeable to respiratory gases.
4. The steps involved in respiration.
The exchange of air between the atmosphere and the lungs.
The exchange of O2 and Co2 between the lungs and the blood.
Transport of O2 and Co2 by the blood.
Exchange of gases between the blood and the cells.
Uptake of O2 by the cells for various activities and the release of Co2.
5. Inspiration.
The increase in pulmonary volume and decrease in the intrapulmonary pressure forces the fresh air from outside to enter the air passages into the lungs to equalize the pressure.
6. Expiration.
Increase in the intrapulmonary pressure slightly above the atmospheric pressure causing the expulsion of air from the lungs.
7. Spirometer.
On an average, healthy human breathes 12-16 times /minute. An instrument is used to measure the volume of air involved in breathing movements for clinical assessment of a person's pulmonary function.
8. Respiratory volumes.
Tidal volume (TV) - is the amount of air inspired ஆர் expired with each normal breath. It is approximately 500mL, normal human adult can inspire or expire approximately 6000 to 8000mL of air per minute. During vigorous exercise, the tidal volume is about 4-10 times higher.
Inspiratory Reserve volume (IRV) - additional volume of air a person can inspire by forceful inspiration. The normal value is 2500- 3000mL.
9. Expiratory Reserve volume (ERV).
Additional volume of air a person can forcefully exhale by forceful expiration. The normal value is 1000 -1100mL.
Residual volume (RV).
The volume of air remaining in the lungs after a forceful expiration. It is approximately 1100- 1200mL.
Glossary.
1. Hypoxia.
The failure of tissues for any reason to receive an adequate supply of oxygen.
2. Incubator.
Is a device used to grow and maintain microbiological cultures or cell cultures, and maintains optimal temperature, humidity and other conditions such as the carbon dioxide and oxygen content of the atmosphere inside.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment