37 Days only for NEET 2021


Lesson 16- Digestion and Absorption - part 2 (Tamil / English )

பாடம் 16- செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் - பகுதி 2

1. வாய்க் குழியில் உணவு செரித்தல். 
உணவின் மீதான பார்வை, அதன் மணம், சுவை மற்றும் வாய்க் குழியில் உணவுப்பொருள் ஏற்படுத்தும் தொடு தூண்டல் ஆகியவற்றால் தூண்டப்பெற்ற அனிச்சை செயல் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. 
உணவுக் கவளங்கள்- உணவை ஈரப்படுத்தி, மென்மையாக்கிக் குழைத்த நிலைக்கு மாற்றி உயவுத் தன்மையை ஏற்றி எளிதில் விழுங்குவதற்கேற்ற தன்மைக்கு உணவை உமிழ்நீர் மாற்றுகின்றது. 
விழுங்குதல்- நன்கு அரைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் உணவுக் கவளங்களாக மாற்றப்பட்டுத் தொண்டை வழியாக உணவுக் குழலுக்குள் செலுத்தப்படும் நிகழ்ச்சி. 

2. உணவு இரப்பைப்பாகு. 
இரைப்பையில் 4 முதல் 5 மணி நேரம் தங்கியுள்ள உணவு தொடர் அலையியக்கத்தின் மூலம் இரைப்பை நீருடன் கலந்து கடையப்படுகிறது. இதனால் உணவு இரைப்பைப்பாகு என்னும் கூழ்ம நிலையை அடைகிறது. 

3. கணைய நீர். 
கணைய நீரில் டிரிப்ஸினோஜன் கைமோடிரிப்ஸினோஜன், கார்பாக்ஸிபெப்டிடேஸ்கள் கணைய அமைலேஸ்கள், கணைய லிப்பேஸ்கள் மற்றும் நியூக்ளியேஸ்கள் போன்ற நொதிகள் உள்ளன. 
சிறுகுடல் கோழைப்படலத்திலிருந்து சுரக்கும் என்டிரோகைனேஸ் எனும் நொதி செயல்படாத டிரிப்ஸினோஜனை செயல்படும் டிரிப்ஸினாக மாற்றுகின்றது. டிரிப்ஸின்  , கணைய நீரிலுள்ள செயல்படாத கைமோடிரிப்ஸினோஜனை செயல்படும் நொதியான கைமோடிரிப்ஸின் ஆக மாற்றுகின்றது. 
டிரிப்ஸின், புரதங்களை நீராற்பகுத்து பாலிபெப்டைடுகள் மற்றும் பெப்டோன்களாக மாற்றுகின்றது. கைமோடிரிப்ஸின் குறிப்பிட்ட அமினோ அமிலங்களுடன் இணைந்துள்ள பெப்டைடு பிணைப்புகளை நீராற்பகுக்கின்றது. 

4. சக்கஸ் என்டரிகஸ். 
புருன்னரின் சுரப்பியின் சுரப்புப் பொருளும் சிறுகுடல் சுரப்பிகளின் சுரப்புப் பொருளும் இணைந்து சக்கஸ் என்டரிகஸ் எனும் சிறுகுடல் நீரை உருவாக்குகின்றது. 

5. மாட்டோம்..... மால்டேஸ்...... குளுக்கோஸ்+குளுக்கோஸ்
சுக்ரோஸ்..... சுக்ரேஸ்..... குளுக்கோஸ்+ ஃபிரக்டோஸ்
லாக்டோஸ்...... லாக்டேஸ்...... குளுக்கோஸ்+ காலக் டோஸ்
டைபெப்டைடுகள், டிரைபெப்டைடுகள்...... பெப்டிடேஸ்....... அமினோ அமிலங்கள்
நியூக்ளிடைடுகள்..... நியூக்லியோடைடேஸ்......நியூக்ளியோசைடு+பாஸ்பாரிக் அமிலம்
நியூக்ளியோசைடு........ நியூக்லியோசைடேஸ்....... சர்க்கரை+ நைட்ரஜன் காரங்கள்
டைகிளிசரைடுகள்...... லிபேஸ்கள்....... கொழுப்பு அமிலங்கள்+ கிளிசரால்.

6. உட்கிரகித்து செரிக்கப்பட்ட பொருள்கள். 
செரிமானத்தின் முடிவில் தோன்றும் இறுதி விளைப்பொருட்களைக் குடலின் கோழைப்பகுதி வழியாக இரத்தம் மற்றும் நிணநீருக்குள் செலுத்தும் நிகழ்ச்சி. 
சிறுகுடலின் உட்பகுதியில் உள்ள உட்கிரகிக்கும் அலகுகளான குடலுறிஞ்சிகளின் நடுவில் லாக்டீல் என்னும் நிணநீர் நுண் குழலும் அதனைச் சுற்றி நுண்ணிய இரத்த நுண் நாள வலையும் உள்ளன. 

7.கழிவு நீர் வெளியேற்றம். 
பின் சிறுகுடலில் இருந்து செரிமானத்தால் உருவாகும் கழிவுப்பொருட்களும் உட்கிரக்க இயலாத பொருட்களும் பெருங்குடலில் செலுத்தப்படுகின்றன. இது பெரும்பாலும் நார் பொருட்களால் ஆனது. 
இந்த நார் பொருட்கள் பெருங்குடலில் உள்ள இணைவாழ் பாக்டீரியாக்களால் பயன்படுத்தப்பட்டு வைட்டமின் K மற்றும் பிற வளர்சிதை மாற்றப் பொருட்கள் உருவாகின்றன. 

8. கல்லீரல் அழற்சி ( மஞ்சள் காமாலை). 
இந்நிலை கல்லீரல் பாதிப்பால் தோன்றுகிறது. இதனால் சிதைந்த ஹூமோகுளோபினிலிருந்து வரும் பித்த நிறமிகளை இரத்தத்திலிருந்து பிரிப்பது பாதிக்கப் படுகின்றது. 
வாந்தி. 
இது எதிர் அலையியக்க நிகழ்வாகும். கேடு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் கெட்டுப்போன உணவு ஆகியவை வயிற்றிலிருந்து வாய் வழியே வெளியேறுவது வாந்தியாகும்.

9. வயிற்றுப்போக்கு. 
உலகம் முழுவதும் காணப்படும் வயிறு-குடல் கோளாறு ஆகும். சில சமயங்களில் உணவு மற்றும் நீரின் வழியாகப் பரவும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் இது ஏற்படும். 
மலச்சிக்கல். 
குறைவான உடல் உழைப்பு மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு ஆகியவற்றால் குடலியக்கத்தில் குறை ஏற்பட்டு மலக்குடலில் அதிக நேரம் மலம் தங்கி விடுவதே மலச்சிக்கல் ஆகும். 

10. செரியாமை அல்லது அஜீரணம். 
சரிவர உணவு செரிக்காததால் இக்குறைபாடு தோன்றுகிறது. எப்போதும் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. 
போதுமான அளவு செரிமான நொதிகள் சுரக்காமை, படபடப்பு, உணவு நஞ்சாதல், அதிகம் உண்ணுதல் மற்றும் காரம் மிக்க உணவு ஆகியவற்றால் இந்நிலை ஏற்படுகிறது.
 
கலைச்சொல் அகராதி. 
1. உள்ளுறுப்பு அகற்றம். 
எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள உள்ளுறுப்புகளை அகற்றிக்கொள்ளுதல். என்று. எ.கா.கடல் வெள்ளி. 

2. ஃபால்சி ஃபார்ம் தசை நாண்கள்.
கல்லீரல் கதுப்புகளைப் பிரிக்கிறது. உதரவிதானத்தோடு கல்லீரலை இணைக்கிறது. 

3. செயல்பாட்டு சுவாச கொள்திறன். 
வெளிசுவாசத்திற்கு பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு. 

4. கோப்பை செல். 
சுவாச மண்டலத்திலும், குடலிலும் காணப்படும் கோழைப்பொருளைச் சுரக்கும் சிறப்பான தூண் வடிவ எபிதீலிய செல். 

5. மேல் தொண்டை. 
உருண்டை வடிவமானது. மேல் மற்றும் கீழ்த்தாடைகளுக்கு இடையில் காணப்படும். பல சிற்றினங்களில் இது சவ்வு போன்றும் உமிழ்நீர் சுரப்பியுடன் இணைந்து காணப்படும். உணவு விழுங்குவதற்கு இந்த அமைப்பு பயன்படுகிறது.

Technical points 
1. Digestion in the buccal cavity. 
The smell, sight and taste as well as the mechanical stimulation of food in the mouth, triggers a reflex action which results in the secretion of saliva. 
Bolus- The mucus in Saliva prepares the food for swallowing by moistening, softening, lubricating and adhering the masticated food into a bolus. 
Deglutition- The bolus is then passed into the pharynx and then into the oesophagus by swallowing . 

2. Chyme. 
Food remains in the stomach for 4 to 5 hours, the rhythmic peristaltic movement churns and mixes the food with gastric juice and make it into a creamy liquid. 

3. Pancreatic juice. 
It contains enzymes such as trypsinogen, chymotrypsinogen, carboxy peptidases, pancreatic amylases, pancreatic lipases and nucleases. 
Trypsinogen is activated by an enzyme, enterokinase, secreted by the intestinal mucosa into active trypsin, which in turn activates the enzyme chymotrypsinogen in the pancreatic juice. 
Trypsin hydrolyses protein into polypeptides and peptones, while chymotrypsin hydrolyses peptide bonds associated with specific amino acids. 

4. Succus entericus. 
The secretions of the Brunner's gland along with the secretions of the intestinal glands constitute the intestinal juice. 

5. Maltose....maltase.... Glucose+glucose
Sucrose...... Sucrase...... Glucose+ fructose
Lactose...... Lactase.... Glucose+ galactose
Dipeptides, tripeptides..... Peptidase........ Amino acids+ nucleoside
Nucleotides...... Nucleotidase...... Phosphoric acid. 
Nucleoside..... Nucleosidase...... Sugar+nitrogen base
Diglycerides and monoglycerides....... Lipsses...... Fatty acids+glycerol.

6. Absorption of digested products. 
Absorption is a process by which the end product of digestion passes through the intestinal mucosa into the blood and lymph. 
The villi in the lumen of ileum are the absorbing units, consisting of a lacteal duct in the middle surrounded by fine network of blood capillaries. 

7. Egestion. 
The digestive waste and unabsorbed substances in the ileum enter into the large intestine and it mostly contains fibre called roughage. 
The roughage is utilized by symbiotic bacteria in the large intestine for the production of substances like vitamin K and other metabolites. 

8. Jaundice. 
It is the condition in which liver is affected and the defective liver fails to break down haemoglobin and to remove bile pigments from the blood. 
Vomiting. 
It is reverse peristalsis. Harmful substances and contaminated food from stomach are ejected through the mouth. 

9. Diarrhoea. 
It is the most common gastrointestinal disorder worldwide. It is sometimes caused by bacteria or viral infections through food or water. 
Constipation. 
In this condition, the faces are retained within the rectum because of irregular bowel movement due to poor intake of fibre in the diet and lack of physical activities. 

10. Indegestion. 
It is a digestive disorder in which the food is not properly digested leading to a feeling of fullness of stomach. 
It may be due to inadequate enzyme secretion, anxiety, food poisoning, over eating and spicy food.

Glossary. 
1. Evisceration (Autotomy). 
Ejection of viscera as a defensive action by an animal. 

2. Falciform ligament. 
It seperate lobes of liver connect the liver with diaphragm. 

3. Functional respiratory capacity (FRC). 
Volume of air present after expiration in lungs. 

4. Goblet cells. 
Special mucus secreting columnar epithelial cell located in the respiratory tract and intestine. 

5. Hypopharynx. 
Is a somewhat globular structure, located medially to the mandibles and the maxillae. In many species it is membranous and associated with salivary glands. It assists in swallowing the food.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany