ஸ்டீபன் ஹாகிங் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ஸ்டீபன் ஹாகிங்

ஸ்டீபன் ஹாகிங் இயற்பியல் உலகம் போற்றும் தன்னிகரற்ற நம்பிக்கை நாயகன். பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள், கடிகார பாகங்கள், அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார். அப்பா மருத்துவம் படிக்கச் சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்ஃபோர்டில் படித்தார்; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன. மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார்; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பைப் படிக்க இயலாது; எனினும் தன் திறனைக் கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார்.

எதோ தடுமாற்றம் உண்டானது; மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார்; மங்கலாக உணர ஆரம்பித்தார் பேச்சு குழற ஆரம்பித்தது; செயல்பாடுகள் முடங்கின மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் இருந்தது. இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள்; முதலில் நொறுங்கிப்போனவர் யின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளைத் தொடர்ந்தார். காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசைப் பெற்றது.

கரங்கள் செயலற்று போயின; சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசினார். 1979-ல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார். கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கப்படுகிறது.

காஸ்மாலஜி துறையை 'சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல்' எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே; இவரின் 'A Brief History of Time' நூல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது . ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர்.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany