பாடம் 18- உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்- பகுதி 1
1. இரத்தத்திலுள்ள உட்பொருட்கள்.
உடல் திரவமான இரத்தம் உடலின் பல்வேறு பாகங்களுக்குப் பொருட்களைக் கடத்துகிறது.
இரத்தம் திரவ நிலையிலுள்ள இணைப்புத்திசுவாகும்.
இது பிளாஸ்மா எனும் திரவப்பகுதியையும் அதனுள் மிதக்கும் ஆக்கத்துகள்களையும் கொண்டது.
மொத்த இரத்த கொள்ளளவில் 55% பிளாஸ்மாவும் , 45% ஆக்கத் துகள்களும் உள்ளன.
70 கிலோ எடையுள்ள மனிதனில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு ஏறத்தாழ 5000 மி. லி ஆகும்.
2. பிளாஸ்மா.
இவற்றில் நீர் (80-92%) மற்றும் நீரில் கரைந்துள்ள பொருட்களான பிளாஸ்மா புரதங்கள், கனிமப் பொருட்கள் (0.9%), கரிமப் பொருட்கள் (0.1%) மற்றும் சுவாச வாயுக்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
பிளாஸ்மா புரதங்கள்.
அல்புமின்- இரத்தத்தின் ஊடுகலப்பு அழுத்தத்தை நிர்வகிக்கிறது.
குளோபுலின்- அயனிகள், ஹார்மோன்கள், கொழுப்பு ஆகியவற்றைக் கடத்துவதுடன் நோயெதிர்ப்புப் பணியிலும் உதவுகிறது.
புரோத்ராம்பின் மற்றும் ஃபைப்ரினோஜன்- இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.
கரிமப் பொருட்கள்- யூரியா, அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள்.
கனிமப் பொருட்கள்- சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடுகள், கார்பனேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள்.
3. இரத்த சிவப்பணுக்கள் அல்லது எரிதிரோசைட்டுகள்.
இரத்தச் செல்களில் இரத்தச் சிவப்பு அணுக்களே மிக அதிக அளவில் காணப்படுகின்றன. ஒரு ஆரோக்கியமான ஆணின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டருக்குச் ஏறத்தாழ 5 முதல் 5.5 மில்லியன் சிவப்பணுக்களும் பெண்ணின் இரத்தத்தில் ஒரு கன மில்லிமீட்டருக்கு ஏறத்தாழ 4.5 முதல் 5.0 மில்லியன் சிவப்பணுக்களும் காணப்படுகின்றன.
பெரியவர்களில் ஆக்ஸிஜன் குறையும் வேளையில் சிறுநீரஙங்களால் சுரக்கப்படும் எரித்ரோபாயட்டின் எனும் ஹார்மோன் எலும்பு மஜ்ஜையில் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் தண்டு செல்களைத் தூண்டி இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றது.
4. இரத்த வெள்ளையணுக்கள்.
இரத்த வெள்ளை அணுக்கள், உட்கருக்களைக் கொண்ட நிறமற்ற, அமீபாய்டு வடிவம் மற்றும் இயக்கம் உடையச் செல்களாகும். மேலும் இவை ஹீமோகுளோபின் மற்றும் இதர நிறமிகளற்றவை. ஒரு சராசரி நலமான மனிதனில் ஒரு கன மில்லி லிட்டர் இரத்தத்தில் ஏறத்தாழ 6000 முதல் 8000 இரத்த வெள்ளையணுக்கள் காணப்படுகின்றன.
இரு முக்கிய பிரிவுகள்- துகள்களுடைய வெள்ளையணுக்கள் மற்றும் துகள்களற்ற வெள்ளையணுக்கள்.
5. நியூட்ரோஃபில்கள்.
இவை ஹெட்டிரோஃபில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மெல்லிய இழையால் இணைக்கப்பட்ட 3 அல்லது 4 கதுப்புகளைக் கொண்டிருப்பதால் இவை பல்லுரு உட்கரு நியூட்ரோஃபில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மொத்த வெள்ளையணுக்களில் 60%- 65% இவ்வகையைச் சார்ந்தவை.
ஈசினோஃபில்கள்- இதன் உட்கரு க்கள் இரு கதுப்புகளைக் கொண்டவை. அவற்றை இணைக்க மெல்லிய இணைப்பை கொண்டிருக்கின்றன. உடலில் சில ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
6. பேசோஃபில்கள்.
வெள்ளையணுக்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் (0.5-1.0%) உள்ளவை. ஹிப்பாரின் , செரடோனின் மற்றும் ஹிஸ்டமின்கள் போன்றவற்றை இவை சுரக்கின்றன.
துகள்களற்ற வெள்ளையணுக்கள்- நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரலில் உற்பத்தியாகும் இவ்வகை வெள்ளையணுக்களில் சைட்டோபிளாச துகள்கள் இல்லை. இரண்டு வகை- லிம்போசைட்டுகள், மோனோசைட்டுகள்.
7. திராம்போசைட்டுகள் அல்லது இரத்தத் தட்டுகள்.
இவை எலும்பு மஜ்ஜையிலுள்ள சிறப்பு செல்களாலான மெகாகேரியோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உட்கரு க்கள் அற்றவை. மனிதனின் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 1,50,000- 3,50,000 வரை இரத்தத் தட்டுகள் காணப்படுகின்றன.
இவ்வணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த உறைதல் கோளாறுகள் ஏற்பட்டு உடலில் அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்படும்.
8. ABO இரத்த வகை.
இரத்தச் சிவப்பணுக்களின் மேற்புறப் படலத்தில் இருக்கும் அல்லது இல்லாத ஆன்டிஜன்களின் அடிப்படையில் A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக இரத்தத்தை வகைப்படுத்தலாம்.
A, B மற்றும் O பிரிவு மனிதர்களின் இரத்தப் பிளாஸ்மாவில் இயற்கையாகவே எதிர்வினைப் பொருட்கள் உள்ளன. சிவப்பணுவின் மேற்புறத் படலத்தில் உள்ள ஆன்டிஜென்களுக்கு அக்ளுட்டினோஜன்கள் என்று பெயர்.
9. Rh காரணி.
D ஆன்டிஜன் எனும் மற்றுமொரு புரதம் இரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் பெரும்பாலான மனிதர்களில் காணப்படுகிறது. இது ரீசஸ் குரங்கின் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள புரதத்தை ஒத்துக் காணப்படுவதால் இவை Rh காரணி எனப் பெயரிடப்பட்டது.
இரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இந்த D ஆன்டிஜன் காணப்பட்டால் அவர்கள் Rh+ மனிதர்கள் எனவும் D ஆன்டிஜன் அற்றவர்கள் Rh- மனிதர்கள் எனவும் கருதப்படுவர்.
10. எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபிடாலிஸ்.
Rh காரணி, இரத்தச் சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்ற குறைபாடுகளால் அக்கரு பாதிக்கப்படுகிறது. கருவின் இரத்தச் சிவப்பணுக்கள் சிதைந்து அதன் எண்ணிக்கை குறைவது இதற்கு காரணமாகும்.
இந்நிலையைத் தவிர்க்க முதல் பிரசவத்திற்குப் பின் உடனடியாக Rh நெகட்டிவ் தாய்க்கு Dஆன்டிபாடிக்கான எதிர்வினைப் பொருளான ரோக்கம் என்னும் மருந்தை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும்.
கலைச்சொல் அகராதி.
1. ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு.
ஹென்லே வளைவின் ஏறுதூம்பு அதற்குரிய நெஃப்ரானின் கிளாமருலார் பகுதிக்கு அருகில் வந்து அமைகிறது. இவ்விடத்தில் உட்செல் மற்றும் வெளிச்செல் இரத்த நுண்நாளங்களுக்கு இடையேயான பிளவுப் பகுதி வழியாக இது செல்கிறது. இக்குழல் செல்களும் இரத்த நாள செல்களும் சிறப்படைந்து கிளாமருலார் அருகு அமைப்பை உருவாக்குகிறது.
2. ஜக்ஸ்டா மெடுல்லரி நெஃப்ரான்கள்.
இவ்வகை மெடுல்லா அருகு நெஃப்ரான்களின் கிளாமருலஸ்கள் கார்டெக்ஸின் உள்ளடுக்கில் மெடுல்லா பகுதியை அடுத்து காணப்படுகின்றது. இதன் ஹென்லே வளைவு மெடுல்லாவின் ஆழ்பகுதி வரை நீண்டுள்ளது. இவ்வகை நெஃப்ரான்கள் அடர்த்தி மிகு சிறுநீரை உருவாக்குகின்றது.
Technical points
Technical points.
1. Composition of blood.
Blood is the most common body fluid that transports substances from one part of the body to the other.
Blood is a connective tissue consisting of plasma (fluid mstrix) and formed elements.
The plasma constitutes 55% of the total blood volume. The remaining 45% is the formed elements that consist of blood cells.
The average blood volume is about 5000ml (5L) in an adult weighing 70kg.
2. Plasma.
It mainly consists of water (80-92%) in which the plasma proteins, inorganic constituents (0.9%), organic constituents (0.1%) and respiratory gases are dissolved.
Plasma proteins.
Albumin- maintains the osmotic pressure of the blood.
Globulin- facilitates the transport of ions, hormones, lipids and assists in immune function.
Prothrombin and Fibrinogen- involved in blood clotting.
Organic constituents.
Urea, amino acids, glucose, fats and vitamiins.
Inorganic constituents.
Chlorides, carbonates and phosphates of potassium, sodium, calcium and magnesium.
3. Red blood cells or Erythrocytes.
They are abundant than the other blood cells. There are about 5 million to 5.5 millions of RBC mm-3 of blood in a healthy man and 4.5-5.0 millions of RBC mm-3 in healthy women.
Erythropoietin is a hormone secreted by the kidneys in response to low oxygen and helps in differentiation of stem cells of the bone marrow to erythrocytes in adults.
4. White blood cells (leucocytes).
They are colourless, amoeboid, nucleated cells devoid of haemoglobin and other pigments. Approximately 6000 to 8000 per cubic mm of WBC are seen in the blood of an average healthy individual.
WBC are divided into two types, granulocytes and agranulocytes.
5. Neutrophils.
Also called heterophils or polymorphonuclear cells which constitute about 60% -65% of the total WBCs.
Eosinophils- They have distinctly bilobed nucleus and the lobes are joined by thin strands. It increase during certain types of parasitic infections and allergic reactions.
6. Basophils.
They are less numerous than any other type of WBCs constituting 0.5% -1. 0% of the total number of leucocytes. They secrete substances such as heparin, serotonin அந்த histamines.
Agranulocytes- are characterised by the absence of granules in the cytoplasm and are differentiated in the lymph glands and spleen. Two types- lymphocytes, monocytes.
7. Thrombocytes or platelets.
They are produced from megakaryocytes and lack nuclei. Blood normally contains 1,50,000- 3,50,000 platelets mm-3 of blood.
The reduction in platelet number can lead to clotting disorders that result in excessive loss of blood from the body.
8. ABO blood grouping.
Depending on the presence or absence of surface antigens on the RBCs, blood group in individual belongs to four different types namely, A, B, AB and O. The plasma of A, B and O individual have natural antibodies in them.
Surface antigens are called agglutinogens.
9. Rh factor.
Is a protein (D antigen) present on the surface of the red blood cells in majority of humans. This protein is similar to the protein present in Rhesus monkey, hence the term Rh.
Individuals who carry the antigen D on the surface of the red blood cells are Rh+ and the individuals who do not carry antigen D, are Rh-
10. Erythroblastosis foetalis.
Rh factor becomes fatal to the foetus because the child suffers from anaemia and jaundice.
This condition can be avoided by administration of anti D antibodies to the mother immediately after the first child birth.
Glossary.
1. Juxtaglomerular apparatus.
The ascending limb of Henle returns to the glomerular region of its own nephron, where it passes through the fork formed by the afferent and efferent arterioles. Both the tubular and vascular cells at this point are specialized to form juxtaglomerular apparatus that lie next to the glomerulus.
2. Juxtamedullary nephrons.
The glomeruli of the juxtaglomerular nephrons lie in the inner layer of cortex next to the medulla and the loops of Henle plunges through the entire depth of the medulla concentrated urine is formed in these nephrons.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment