எட்மன்ட் ஹாலி | தினம் ஒரு அறிவியல் மேதை

 


எட்மன்ட் ஹாலி

இடையறாத ஆர்வத்திற்கு அறிவியலில் ஒரு பெயரை சொல்ல சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு எட்மன்ட் ஹாலி எனச் சொல்லிவிடலாம். லண்டனில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அறிவியலால் ஈர்க்கப்பட்டார். வானத்தை அடிக்கடி தொலை நோக்கியின் மோளம் வகுப்பிலேயே உட்கார்ந்து பார்க்கிற அளவுக்கு அவருக்கு ஆர்வம் இருந்தது. இருபது வயதில் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெறாமல் அப்பாவின் அனுமதி பெற்று கிழக்கிந்திய கம்பெனியின் வசமிருந்த செயின்ட் ஹெலினா தீவில் தங்கி 341 நட்சத்திரங்களை உற்றுநோக்கி அவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதினார்.

அவருக்கு முதுகலை பட்டம் தரப்பட்டு ராயல் சொசைட்டியில் சேர்க்கப்பட்டார். அவர் நியூட்டனை சந்தித்துக் கெப்ளரின் விதிகளைப் பற்றி விவாதிக்கப் போனால் அதற்கான சான்றுகளோடு நியூட்டன் இருப்பதைக் கண்டு வியந்தார். அவரை ஊக்குவித்துப் புகழ்பெற்ற 'Philosophiae Naturalis Principia Mathematicd' நூலை வெளியிடச் செய்தார்.

அப்பொழுதுதான் அவரை ஒரு வால்நட்சத்திரம் ஈர்த்தது. ஜூலியஸ் சீசர் பதினான்கு வயதில் கண்ட ஒரு வால்மீன் அடிக்கடி வரலாற்றில் வருவதைக் கண்டார். சீனர்கள் அதை broom star என்றனர். 1531, 1607, 1682 ஆகிய மூன்று வருடங்களில் காணப்பட்ட வால் நட்சத்திரம் வேறல்ல அது ஒரே வால் நட்சத்திரம்தான். அது மீண்டும் 1758 இல் வரும் ஒவ்வொரு முறை சூரியனை சுற்ற அது 76 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது என அறிவித்தார். வான வீதியில் சென்ற 24 வால்மீன்களின் நகர்ச்சிப்பாதையை 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு எட்மண்ட் ஹாலி, 'வால்மீன்களின் வானியல் சுருக்க வரலாறு (A Synopsis of the Astronomy of Comets) என்னும் அரிய விஞ்ஞான நூலைப் படைத்தார். 1720 முதல் பதினெட்டு ஆண்டுகள் நிலவைப் பற்றி ஆய்வுகள் செய்தார்.

ரஷ்யாவின் மன்னர் மகா பீட்டர் இங்கிலாந்து வந்த பொழுது நியூட்டனை சந்திக்க விரும்ப அவர் அனுப்பியது ஹாலியை தான்; 65-வது வயதில் ஹாலி 18 ஆண்டுகளுக்கு ஒரு வரும் சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராயத் துவங்கி தனது 84-வது வயதில் அத்திட்டத்தை முடித்துக் காட்டினார்! இறுதியில் இரண்டு வருடங்கள் கழித்து மறைந்தார். அவர் கணித்தபடியே 1758-ல் வால்நட்சத்திரம் வந்தது; பார்க்க அவரில்லை. அவரின் பெயரை அந்த வால்நட்சத்திரத்திற்குச் சூட்டி உலகம் பெருமை சேர்த்தது.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany