29 Days only for NEET 2021



LESSON 20- Locomotion and movement. Part 2  (Tamil / English )

பாடம் 20- இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம். பகுதி 2

1. எலும்புத் தசைச் சுருக்க வகைகள். 
சம இழுவிசைச் சுருக்கம்- இவ்வகை சுருக்கத்தின் போது தசைகளின் நீளத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. ஆனால் இழுவிசையில் மாற்றம் ஏற்படுவதில்லை. 
சம நீளச் சுருக்கம்- இவ்வகை சுருக்கத்தின் போது தசையின் நீளத்தில் மாற்றமடைவதில்லை ஆனால் இழுவிசையில் மாற்றம் ஏற்படுகின்றது. 

2. எலும்புத் தசையிழைகளின் வகைகள். 
ஆக்ஸிஜனேற்ற இழைகள்- அதிக எண்ணிக்கையில் மைட்டோகாண்டிரியாவையும் அதிக அளவு ஆக்ஸிகரண பாஸ்பேட் ஏற்ற திறனும் பெற்ற தசையிழைகள். 
சிவப்பு தசையிழைகள்
கிளைக்கோலைடிக் தசையிழைகள்
வெண்மை நிறத் தசையிழைகள். 

3. அச்சுச் சட்டகம். (80 எலும்புகள்). 
இந்தச் சட்டகம் உடலின் முக்கிய அச்சை உருவாக்குகின்றது. 
மண்டையோடு- இதில் உள்ள எலும்புகள் கபால எலும்புகள் மற்றும் முகத்தெலும்புகள் என இரு தொகுப்புகளாக அமைந்துள்ளன. மொத்தமாக உள்ள 22 எலும்புகளில் கபால எலும்புகள் 8 ம் முகத்தெலும்புகள் 14ம் அடங்கும். 
நாவடி எலும்பு- தொண்டைக் குழியின் அடிப்பகுதியில் U வடிவ ஒற்றை நாவடி எலும்பு உள்ளது. 
முதுகெலும்புத் தொடர்- 33 முள்ளெலும்புகள் தொடர்ந்து வரிசையாக இணைக்கப்பட்டு உடலின் முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடராக உள்ளது. இம்முள்ளெலும்புகள் முள்ளெலும்பு இடைத்தட்டுகள் என்னும் குருத்தெலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளன.
மார்பெலும்பு- தட்டையான மார்பெலும்பு வயிற்றுப்புறத்தில் மார்புக்கூட்டின் மையப் பகுதியில் உள்ளது. 

4. இணையுறுப்புச் சட்டகம்.
கையெலும்புகள், கால் எலும்புகள் மற்றும் அவற்றின் வளையங்கள் கொண்ட தொகுப்பு. இச்சட்டகத்தில் 126 எலும்புகள் உள்ளன. 
தோள் வளையம்- கைகள் தோள் வளையத்துடன் இணைந்துள்ளன. இலகுத்தன்மை கொண்ட இவ்வளையம் , எல்லா திசைகளிலும் மேற்கை அசைய அனுமதிக்கிறது. இதனால் தான் இவ்வளவு அசைவு உடலின் வேறெந்த பகுதியிலும் காணப்படுவதில்லை. 
இடுப்பு வளையம்- அதிக எடையைத் தாங்கும் படியான உறுதியான சிறப்பு வாய்ந்த அமைப்பாகும். இவை காக்ஸல் எலும்பு எனும் இரு இடுப்பு எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வெலும்புகள் கால்களை அச்சுச் சட்டகத்துடன் இணைத்து பாதுகாக்கிறது. 

5. மூட்டு. 
உடலில் உள்ள எலும்புப் பகுதிகளின் அனைத்து வகை இயக்கங்களுக்கும் மூட்டுகள் அவசியமானது. எலும்புகள் இணையும் புள்ளிகளுக்கு மூட்டுகள் என்று பெயர். 
நாரிணைப்பு மூட்டுகள்- இவ்வகை மூட்டுகள் அசையா மூட்டுகள் ஆகும். எனவே எலும்புகளுக்கிடையே எந்த அசைவுமிருக்காது. 

6. குருத்தெலும்பு மூட்டுகள். 
இவ்வகை மூட்டுகள் சிறிதளவு அசையும் தன்மை பெற்றவை. இவற்றின் மூட்டுப்பரப்புகள் குருத்தெலும்பால் பிரிக்கப்பட்டுள்ளன. 
உயவு மூட்டுகள் அல்லது திரவ மூட்டுகள் அல்லது சைனோவியல் மூட்டுகள்- இவ்வகை மூட்டுகள் நன்கு அசையும் தன்மை கொண்டவை. எலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் சைனோவியல் திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளன.

7. மையாஸ்தீனியா கிரேவிஸ்.
நரம்பு தசை சந்திப்பில் அசிட்டைல் கோலைன் செயல்பாடு குறைவதால் இந்நிலை தோன்றுகிறது. இது ஒரு சுயதடைகாப்பு நோயாகும். இதனால் எலும்புத் தசைகளில் தசைச் சோர்வு, பலமின்மை மற்றும் பக்கவாதம் ஆகியன தோன்றும். 
தசைச் சிதைவு நோய்- பல தசைநோய்களின் ஒன்றிணைந்த தொகுப்பு தசைச் சிதைவு நோய் என்பதாகும். எலும்புத் தசைகளின் தீவிரச் செயலிழப்பு, தசைகளைப் பலமில்லாமல் ஆக்கி, நுரையீரல் மற்றும் இதயச் செயலிழப்பை உண்டாக்கி இறுதியில் இறப்பை ஏற்படுத்துகிறது. 

8. டெட்டனி.
பாரதைராய்டு ஹார்மோன் பற்றாக்குறையின் காரணமாக உடலில் கால்சியத்தின் அளவு குறைகிறது. இதனாலேயே தீவிரத் தசை இறுக்கம் ஏற்படுகின்றது. 
மூட்டுவலி- இவை எலும்பு மண்டலத்தில் ஏற்படும் முக்கியக் குறைபாட்டு நோய்களாகும்.

9. எலும்புப்புரை. 
கால்சியத்தை உணவின் வழியாகப் போதுமான அளவிற்கு எடுத்துக்கொள்ளாத நிலையிலும் ஹார்மோன்  குறைபாடு காரணமாகவும் இந்நோய் தோன்றுகிறது. 

10. கெளட்.
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிகங்களாகப் படிவது அல்லது அவற்றைக் கழிவு நீக்கம் மூலம் வெளியேற்ற முடியாத நிலையில் கெளட் தோன்றுகின்றது. உயவு மூட்டுகளில் இது படிகின்றது.

கலைச்சொல் அகராதி. 
1. நுண்முட்கள் /சீட்டாக்கள்.
இவை சிறியவை. மண்புழுவின் உடற்சுவரில் உள்ள குழிகளில் காணப்படும். கைட்டினால் ஆன S போன்ற அமைப்புகள். இவை இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. இவற்றுள் சில, ஆண் இனப்பெருக்கத் துளையின் அருகில் பீனியல் சீட்டாக்களாக மாறிக் கலவியின் போது பயன்படுகின்றன. 

2. பகிரப்பட்ட பண்புகள். 
இரு வேறு விலங்கு வழித்தோன்றல்கள் கொண்ட பொதுவான பண்பு. 

3. இனச்செல் வெளியேற்றம். 
நீர் வாழ் உயிரிகள் முட்டை மற்றும் விந்துசெல்களை வெளியேற்றுதல்.

Technical points 
Technical points. 
1. Types of skeletal muscle contraction. 
Isotonic contraction- the length of the muscle changes but the tension remains constant. 
Isometric contraction- the length of the muscle does not change but the tension of the muscle changes.
 
2. Types of skeletal muscle fibers. 
Oxidative fibre- fibres that contain numerous mitochondria and have a high capacity for oxidative phosphorylation. 
Red muscle fibers
Glycolytic fibres
White muscle fibres

3. Axial skeleton. (80 bones) 
It forms the main axis of the body. 
Skull- is composed of two sets of bones - cranial and facial bones. It consists of 22 bones of which 8 are cranial bones and 14 are facial bones. 
Hyoid bone- a single U shaped bone is present at the base of the buccal cavity. 
Vertebral column- also called back bone. It consists of 33 serially arranged vertebrate which are inter connected by cartilage known as intervertebral disc. 
Sternum- chest bone. 
Is a flat bone on the mid ventral line of the throax. 

4. Appendicular skeleton. 
The bones of the upper and lower limbs along with their girdles constitute the appendicular skeleton. It composed of 126 bones. 
Pectoral girdle- the upper limbs are attached to the pectoral girdles. These are very light and allow the upper limbs a degree of mobility not seen anywhere else in the body. 
Pelvic girdle- is a heavy structure specialized for weight bearing. It is composed of two hip bones called coxal bones that secure the lower limbs to the axial skeleton. 

5. Joint. 
They are essential for all types of movements performed by the bony parts of the body. 
Fibrous joints or synarthroses- They are immovable fixed joints in which no movement between the bones is possible.

6. Cartilaginous joints or Amphiarthroses. 
They are slightly movable joints in which the joint surfaces are separated by a cartilage and slight movement is only possible. 
Synovial joints or Diarthroses joints- they are freely movable joints, the  articulating bones are seperated by a cavity which is filled with synovial fluid.

7. Myasthenia gravis. 
An autoimmune disorder affecting the action of acetylcholine at neuromuscular junction leading to fatique, weakening and paralysis of skeletal muscles. 
Muscular distrophy- The group of diseases. They are associated with the progressive degeneration and weakening of skeletal muscle fibres, leading to death from lung or heart failure. 

8. Tetany. 
Rapid muscle spasms occur in the muscles due to deficiency of parathyroid hormone resulting in reduced calcium levels in the body. 
Arthritis- is an inflammatory or degenerative disease that damages the joints. 

9. Osteoporosis. 
It occurs due to deficiency of Vitamin D and hormonal imbalance. The bone becomes soft and fragile. 

10. Gouty arthritis or gout. 
Inflammation of joints due to accumulation of uric acid crystals or inability to excrete it. 

Glossary. 
1. Setae. 
They are small, S shaped chitinous structures present in the pits of the body wall of earthworms. They aid in locomotion. Some setae are modified into penial setae in the male genital opening and these help in copulation. 

2. Shared character. 
A shared character is one that two lineages have in common. 

3. Spawning. 
Process of shedding of mass eggs or sperms in water.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany