60 Days only for NEET 2021

 


Lesson 1. Living world.  (Tamil / English )


பாடம் 1. உயிரி உலகம் 
1. உயிரினங்களின் பொதுப் பண்புகள். 
  • வளர்ச்சி
  • ஊட்ட முறை
  • நகர்வு
  • இனப்பெருக்கம்
  • கழிவு நீக்கம்
  • உறுத்துணர்வு
  • சுவாசித்தல்
  • வளர்சிதை மாற்றம்
  • செல் அமைப்பு
  • தூண்டலும் துலங்களும்

2. வகைப்பாட்டியல். 
  • உயிரினங்களைப் பல்வேறு வகைப்பாட்டு படிநிலை அலகுகளாக வகைப்படுத்தும் பிரிவு. 
  • விளக்கமளித்தல், இனங் கண்டறிதல், உயிரினங்களைப் பதப்படுத்துதல் போன்ற செய்முறைகளைக் கவனிக்கக் கூடியது. 
  • வகைப்படுத்துதல்+ பெயரிடுதல்= வகைப்பாட்டியல். 

3. குழுப் பரிணாம வகைப்பாட்டியல். 
  • வேறுப்பட்ட சிற்றினங்களைப் பற்றி படிக்கக்கூடிய ஒரு பரந்த உயிரியல் பிரிவு. 
  • வகைப்பாட்டியலுடன்  சேர்த்து பரிணாம வரலாறு மற்றும் குழுமப்பரிணாம தொடர்புகளை பற்றி அறியக் கூடிய பிரிவு. 
  • வகைப்படுத்துதல்+ குழுமப்பரிணாம்= குழுப்பரிணாம வகைப்பாட்டியல். 

4. பன்னாட்டுத் தாவரவியல் பெயர் சூட்டுச் சட்டம் (ICBN). 
  • கரோலஸ் லின்னேயஸ் ஆரம்பக்கால தாவரப் பெயரிடுதல் அடிப்படை விதிகளை 1751 ல் வெளியிடப்பட்ட தன்னுடைய ஃபிலாசோபியா பொட்டானிகா என்ற புத்தகத்தில் முன் மொழிந்தார். 
  • தாவரப் பெயரிடுதல் விதிமுறைகளை A. P. டீ காண்டோல்  1813 ல் வெளியிட்ட தனது தியரி எலிமெண்டரி டி லா பொட்டானிகா எனும் நூலில் வழங்கினார். 

5. வகைப்பாட்டியலின் படிநிலைகள். 
  • கரோலஸ் லின்னேயஸ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. 
  • வகைப்பாட்டின் பல்வேறு நிலைகளான பெரும் பிரிவு முதல் சிற்றினம் வரை இறங்கு  வரிசையில் படிநிலைகளாக  அமைந்துள்ளன. 

6. வகைப்பாட்டு துணைக்கருவிகள். 
  • வகைப்பாட்டியலைப் பற்றி அறிய உதவும் முக்கிய துணைக்கருவிகள். 
  • உயிரினங்களை இனம் கண்டறிய, வரிசைப்படுத்த உதவும் சில சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள், வழிமுறைகள், செயல் நுட்பங்கள் போன்றவை ஆகும். 

7. உலர் தாவர மாதிரி ஹெர்பேரியம்.
  • ஹெர்பேரியம் என்பது உலர் தாவரங்களைப் பாதுகாக்கும் நிலையம் அல்லது இடமாகும். 
  • தாவரங்களை சேகரித்து அழுத்தி, உலர்த்திய பின்பு தாளில் ஒட்டிப் பாதுகாக்கப்படும் இடமாகும். 

8. தாவரவியல் தோட்டங்கள். 
  • தாவரங்கள் பல நிலைகளில் பல வகைகளில் அமைந்த இடத்தைக் குறிப்பது. 
  • தோட்டங்களில் அலங்காரத் தாவரங்கள் அழகு, வாசனை, மதம் மற்றும் கெளரவத்திற்காக வளர்க்கப்படுகின்றன. 
  • இந்திய தாவரவியல் தோட்டம்- ஹவுரா. 
  • தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிலையம்- லக்னோ. 

9. வகைப்பாட்டு திறவுகள்.
  • அறிமுகமில்லாத தாவரங்களைச் சரியாக இனம் கண்டறிய பயன்படுகின்றன. 
  • பொதுவாகப் பயன்படுத்தப்படும் திறவு  கவட்டுக் கிளைத்தல் திறவு ஆகும். 

10. Monograph. 
  • ஒரு சிற்றினத்தின் தகவல்களை சேகரித்தல். 

கலைச்சொல் அகராதி. 
1. உயிர்க்கோளம். 
உயிரினங்கள் வாழக்கூடிய புவியின் பகுதி. 
2. வேதி முறை வகைப்பாடு. 
உயிர் வேதியியல் கூறுகளின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தும் ஒர் வகைப்பாட்டு முறையாகும். 
3. கிளைகள். 
பரிணாம வரைப் படத்தில் ஒத்த பண்புகளை கொண்ட சிற்றினங்களின் தொகுப்பை காட்டும் கிளை. 
4. கால் வழி கிளைத்தல். 
பொதுவான மூதாதையரிடமிருந்து பெறப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகிரப்பட்ட, தனித்துவமான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட குழும முறை. 
5. இனப்பரிணாமம். 
உயிரின தொகுப்பின் இனப்பரிணாம  வளர்ச்சி ஆகும். 
6. ப்ரோட்டோலாக். 
முதல் முறையாக ஆசிரியரால் பதிப்பிக்கப்பட்ட முழு மூலத் தாவரத்தின்  அறிவியல் பெயரோடு வெளியிடப்பட்ட தாவரம் சார்ந்த தகவல்கள். 

Technical points 
1. Attributes of living organisms. 
  1. Growth
  2. Nutrition
  3. Movement
  4. Reproduction
  5. Excretion
  6. Irritability
  7. Respiration
  8. Metabolism
  9. Consciousness
  10. Cellular organization
2. Taxonomy. 
  • Discipline of classifying organisms into taxa. 
  • Governs the practices of naming, describing, identifying and specimen preservation. 
  • Classification+ nomenclature= Taxonomy
3. Systematics. 
  • Broad field of biology that studies the diversification of species. 
  • Governs the evolutionary history and phylogenetic relationship in addition to taxonomy. 
  • Taxonomy+ phylogeny= systematics. 

4. ICBN. 
  • It deals with the names of existing (living) and extinct (fossil) organisms. 
  • First proposed by Linnaeus in 1737 and 1751 in his philosophia Botanica. 
  • In 1813 a detailed set of rules regarding plant nomenclature was given by A. P. de Candolle in his famous work 'Theorie elementaire de la botanique'. 

5. Taxonomic Hierarchy. 
  • Introduced by Carolus Linnaeus. 
  • It is the arrangement of various taxonomic levels in descending order starting from kingdom up to species. ( diagram ncert- page no 10.) 

6. Taxonomic Aids. 
  • Tool for the taxinomic study. 
  • Some techniques, procedures and stored information that are useful in identification and classification of organisms. 

7. Herbarium. 
  • Herbaria are store houses of preserved plant collections. 
  • Plants are preserved in the form of pressed and dried specimens mounted on a sheet of paper. 
  • Herbaria act as a centre for research and function as sources of material for systematic work. 

8. Botanical Gardens. 
  • Gardens existed for growing ornamental plants for aesthetic value, religious and status reasons. 
  • Indian botanical garden- Howrah
  • National Botanical Research Institute- Lucknow. 

9. Key. 
  • The tools for the identification of unfamiliar plants. 
  • The most common type of key is a dichotomous key. 

10. Monograph. 
  • Complete global account of a taxon of any rank- family, genus or species at a given time. 

Glossary. 
1. Biosphere- The region of earth on which life exist. 
2. Chemotaxonomy- classification based on the biochemical constituents of plants. 
3. Clades- Group of species comprising common ancestor and its descendants. 
4.Cladistics- Methodology used to classify organisms into monophyletic group. 
5. Phylogeny- Evolution of group of organisms. 
6. Protologue- set of information associated with the scientific name of a taxon as its first valid publication containing the entire original material regarding the taxon. 

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

2 Comments

  1. It is good and a guide for the students who prepare for NEET.Thank you....

    ReplyDelete
  2. Amazing preparation sir😇😊

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany