59 Days only for NEET 2021

 


Lesson 2. Biological classification  (Tamil / English )


பாடம்- 2. உயிரினங்களின் வகைப்பாடு 
1. வகைப்பாட்டு முறைகள். 
இரண்டு பெரும் பிரிவு- கார்ல் லின்னேயஸ். 
மூன்று பெரும் பிரிவு- எர்னெஸ்ட் ஹெக்கேல்.
நான்கு பெரும் பிரிவு- கோப் லேண்ட். 
ஐந்து பெரும் பிரிவு- விட்டாக்கெர். 
ஆறு பெரும் பிரிவு- தாமஸ் கேவாலியர்- ஸ்மித். 
ஏழு பெரும் பிரிவு- ருகிரோவும் சக ஆய்வாளர்களும். 

2. ஐந்து பெரும் பிரிவு வகைப்பாடு. 
1969 ஆம் ஆண்டு முன்மொழியப் பட்டது. 
உயிரிகளை அவற்றின் செல் அமைப்பு, உடல் அமைப்பு, உணவூட்ட முறை, இனப்பெருக்கம், இனப் பரிணாமக் குழுத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. 

3. மொனிரா. 
செல்லின் தன்மை. 
தொல்லுட்கரு உயிரிகள். 

உடல் அமைப்பு. 
பெரும்பாலானவை ஒரு செல் உயிரினங்கள். அரிதாக பல செல் உயிரினங்கள். 

செல் சுவர். 
செல் சுவர் உண்டு. (பெப்டிடோ கிளைக்கான், மியுகோபெப்டைட்களால் ஆனது) 

உணவூட்ட முறை. 
தற்சார்பு ஊட்ட முறை (ஒளிச் சார்பு, வேதிச் சார்பு) சார்பூட்ட ஊட்ட முறை (ஒட்டுண்ணிகள், சாற்றுண்ணிகள்)

இடப்பெயர்ச்சி அடையும் திறன். 
இடப்பெயர்ச்சி திறன் உடையவை அல்லது அற்றவை. 

எடுத்துக்காட்டு உயிரினங்கள். 
ஆர்க்கிபாக்டீரியா, யூ பாக்டீரியா, சயனோஃபாக்டீரியா, ஆக்டினோமைசீட்கள், மைக்கோபிளாஸ்மா. 

4. ஆர்க்கிபாக்டீரியங்கள். 
இவை பழைமையான தொல்லுட்கரு உயிரி களாகும். 
மிக கடுமையான சூழ்நிலைகளாகிய வெப்ப ஊற்றுகள், அதிக உப்புத்தன்மை, குறைந்த pH போன்ற சூழ்நிலைகளில் வாழ்பவை. 
எ. கா. மெத்தனோபாக்டீரியம். 

5. உண்மையான பாக்டீரியா.
உறுதியான செல்சுவரை  கொண்டு காணப்படும். 

6. சயனோ பாக்டீரியங்கள். 
சில சிற்றினங்களில் அளவில் பெரிய நிறமற்ற செல்கள் உடலத்தின் நுனி அல்லது இடைப்பகுதியில் காணப்படுகின்றன. இவை ஹெட்டிரோசிஸ்டுகள் ஆகும். இவ்வமைப்புகள் நைட்ரஜன் நிலைப்படுத்த உதவுகின்றன. 
      இப்பிரிவு உயிரினங்களின் உடலத்தைச் சூழ்ந்து மியுசிலேஜ் படலம் காணப்படுவது சிறப்பு பண்பாகும். 

7. மைக்கோபிளாஸ்மா. 
மொல்லிகியுட்கள் மிகச் சிறிய பல்வகை உருவமுடைய கிராம் எதிர் நுண்ணுயிரி களாகும். 
இவைகளை முதன் முதலில் நக்கார்டும், சக ஆய்வாளர்களும் 1898 ஆம் ஆண்டு போவின்  புளுரோ  நிமோனியா வால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நுரையீரல் திரவ த்திலிருந்து தனிமைப்படுத்தினர்.

8. பூஞ்சைகளின் செல்சுவர்.
கைட்டின் எனும் பாலிசாக்கரைட்களாலும் ( N அசிட்டைல் குளுக்கோஸமைனின் பல் படி). 

9. பூஞ்சைகளின் பாலினப் பெருக்கம். 
இரண்டு செல்களின் சைட்டோபிளாச இணைவு உட்கரு இணைவு
குன்றல் பகுப்பு வழி ஒற்றை மடிய வித்துகள் உண்டாதல்.

10. பூஞ்சைகளின் வகைப்பாடு. 
ஊமைசீட்ஸ்- அல்புகோ. 
சைகோமைசீட்ஸ். 
  • ரொட்டி மீது வளரக் கூடியவை- மியூக்கர். 
  • சாணத்தில் வாழ்பவை- பைலோபோலஸ். 
ஆஸ்கோமைசீட்ஸ். 
ஈஸ்ட்கள், மாவொத்தப் பூசணங்கள், கிண்ணப் பூஞ்சைகள், மோரல்கள் போன்றவைகளை கொண்ட தொகுப்பாகும். 

பசிடியோமைசீட்ஸ். 
இதில் ஊதல் காளான், தவளை இருக்கை பூஞ்சை, பறவை கூடு பூஞ்சை, அடைப்புக்குறி பூஞ்சை, துர்நாற்றக் கொம்புப் பூஞ்சைகள், துரு மற்றும் கருப்பூட்டை பூஞ்சைகள் இப்பிரிவை  சார்ந்தவை. 

டியூட்டிரோமைசீட்ஸ். (முழுமைப்பெறா பூஞ்சைகள்) 
பாலினப் பெருக்கம் காணப்படுவதில்லை. 

கலைச்சொல் அகராதி. 
1. உறக்க நகராவித்து. 
தடித்த சுவருடைய,  ஒய்வு நிலையிலுள்ள, நகரும் தன்மையற்ற பாலிலா வித்துக்கள். 

2. பாலிலா நிலை. 
பூஞ்சைகளில் பாலிலா அல்லது முழுமையற்ற நிலை. 

3. பல்லுட்கரு நிலை. 
தடுப்புச் சுவரற்ற பல உட்கரு க்கள் கொண்ட நிலை. 

4. தனிக் கட்டுரை (அ) தனி வரைவு நூல். 
ஒரு குறிப்பிட்ட குடும்பம், பேரினம், சிற்றினம் போன்ற வரிசையுடைய தாவர குழுவின் மொத்த விளக்கத்தை தாங்கிய நூலாகும். 

5. பூஞ்சை வங்கி. 
புதிய பூஞ்சைகளின் விவரம், பெயர் அடங்கிய இணையத்தள தரவு. 

6. சைட்டோபிளாச இணைவு. 
சைட்டோபிளாசம் இணைவது. 

7. பால் நிலை. 
பூஞ்சைகளில் பால் நிலை அல்லது முழுமையான நிலை. 

8. உடல வித்துகள். 
ஹைஃபாக்கள் துண்டாதல் மூலம் உண்டாக்கப்படும் பாலிலா வித்துக்கள். 


Technical points 
1. Systems of classification. 
Two kingdom- Carl Linnaeus
Three kingdom- Ernst Haeckel
Four kingdom- Copeland
Five kingdom- R. H. Whittaker. 
Six kingdom- Thomas Cavalier- Smith. 
Seven kingdom- Ruggerio et al. 

2. Five kingdom classification. 
The kingdoms include Monera, Protista, Fungi, plantae and Animalia. 
The criteria adopted for the classification include cell structure, thallus organization, mode of nutrition, reproduction and phylogenetuc relationship. 

3. Monera. 
Cell type- prokaryotic
Level of organization- unicellular
Cell wall- present (made up of peptidoglycan and mucopeptides) 
Nutrition- Autotrophic (photoautotrophic, chemoautotrophic) heterotrophic (parasitic and saprophytic) 
Motility- motile or non motile
Organisms- Archaebacteria, Eubacteria, Cyanobacteria, Actinomycetes and mycoplasma. 

4. Archaebacteria. 
Primitive prokaryotes and are adapted to thrive in extreme environments like hot springs, high salinity, low pH and so on. 
Example- Metanobacterium. 

5. Eubacteria. 
True bacteria
They are characterised by the presence of a rigid cell wall.

6. Cyanobacteria. 
In some forms a large colourless cell is found in the terminal or intercalary position is called Heterocysts. 
They are involved in nitrogen fixation. 
The presence of mucilage around the thallus . 

7. Mycoplasma. 
They are very small, pleomorphic gram negative microorganisms. 
They are first isolated by Nochard and co workers in the year 1898 from pleural fluid of cattle affected with bovine pleuro pneumonia. 
Lack cell wall. 

8. Cell wall of fungi. 
Made up of a polysaccharide called chitin (polymer of N- acetyl glucosamine). 

9. Sexual reproduction in fungi. 
Fusion of two protoplasts (plasmogamy) 
Fusion of nuclei (karyogamy) 
Production of haploid spores through meiosis. 

10. Classes of fungi. 
Oomycetes- Albugo
Zygomycetes- 
a) Bread mold fungi- Mucor, Rhizopus. 
b) Coprophilous fungi- Pilobolus. 
Ascomycetes- cup fungi- Morchella. 
Basidiomycetes- puff ball, toad stools, Bird nest fungi, bracket fungi, stink horns, rusts and smuts - Agaricus. 
Deuteromycetes. (Fungi imperfecti) - lack sexual reproduction- phoma. 
      

   Glossary. 
1. Akinetes. 
   Thick walled, dormant, non motile asexual spores. 
2. Anamorph. 
    Asexual or imperfect state of fungi. 
3. Coenocytic condition. 
     Aseptate, multinucleate condition. 
4. Monograph. 
    Complete account of a taxon of any rank. 
5. Mycobank. 
    Online database documenting new mycological names. 
6. Plasmogamy. 
    Fusion of cytoplasm. 
7. Teleomorph. 
    Sexual or perfect state of the fungi. 
8. Thallospores. 
    Asedual spores formed due to the fragmentation of hyphae. 

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany