Lesson 2. Biological classification (Tamil / English )
பாடம்- 2. உயிரினங்களின் வகைப்பாடு
1. சந்ததி மாற்றம்.
அனைத்து தாவரங்களிலும் பொதுவாக சந்ததி மாற்றம் காணப்படுகிறது.
ஒற்றை மடிய(n) கேமீட்டகத் தாவர நிலையும், இரட்டை மடிய (2n) வித்தகத்தாவர நிலையும் மாறி மாறி வாழ்க்கைச் சுழற்சியில் காணப்படுகிறது.
2. டிமிட்ரி ஐவான்ஸ்கி.
வைரஸ்கள் பாக்டீரிமங்களை விடச் சிறியது என நிரூபித்தார்.
M. W. பெய்ஜிரிங்க்.
புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை ' தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம்' என்று அழைத்தார்.
W. M. ஸ்டான்லி.
வைரஸ்களை படிக வடிவில் பிரித்தெடுத்தார்.
3. விரியான்.
தொற்றுத் தன்மை வாய்ந்த, ஓம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத, ஒரு முழுமையான வைரஸ் துகளாகும்.
4. விராய்டுகள்.
விராய்டுகளை T. O. டெய்னர், 1971 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
இவை புரத உறையற்ற , வட்ட வடிவமான ஒரிழை RNA க்களாகும்.
இதன் RNA குறைந்த மூலக்கூறு எடையை கொண்டது.
இவை சிட்ரஸ் எக்ஸோகார்ட்டிஸ், உருளைக்கிழங்கில் கதிர் வடிவ கிழங்கு நோய் தாவர நோய்களை உண்டாக்குகின்றன.
5. வைரஸ் ஒத்த அமைப்புகள் அல்லது விருசாய்டுகள்.
J. W. ராண்டல்ஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்களும் 1981 ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.
இவை சிறிய வட்ட வடிவ RNA க்களை பெற்று விராய்டுகளை ஒத்திருந்தாலும், வைரஸின் பெரிய RNA மூலக்கூறுடன் எப்பொழுதும் தொடர்பினை கொண்டுள்ளன.
6. பிரியான்கள்.
ஸ்டான்லி B. புரூச்னர் 1982 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
இவை தொற்றும் தன்மையுடைய புரதத்துகள்களாகும்.
மனிதன் மற்றும் பல விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளன.
7. லைக்கென்கள்.
பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பாகும்.
இதில் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி என்றும் பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை காற்று மாசுக் காரணியை ( குறிப்பாக கந்தக டை ஆக்சைடு) எளிதில் உணரக்கூடியவை என்பதால் இவை மாசு சுட்டிக்காட்டிகளாக கருதப்படுகின்றன.
8. பூஞ்சை வேரிகள்.
பூஞ்சைகளின் மைசீலியங்கள் மற்றும் தாவர வேர்களுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி வாழ்க்கை அமைப்பாகும்.
இந்த தொடர்பில் பூஞ்சைகள் வேரிலிருந்து ஊட்டத்தை உறிஞ்சுகின்றன.
அதற்குப் பதிலாக பூஞ்சைகளின் ஹைஃபா வலைப்பின்னல் அமைப்பு தாவரங்கள் மண்ணிலிருந்து நீர், கனிம ஊட்டங்களை உறிஞ்சு வதற்கு உதவுகின்றன.
9. வாழிடத்தின் அடிப்படையில் லைக்கன்களின் வகைப்பாடு.
கார்டிகோலஸ் - மரப்பட்டை.
லிக்னிகோலஸ் - கட்டை.
சாக்ஸிகோலஸ் - பாறை.
டெர்ரிகோலஸ் - நிலம்
கடலில் வாழ்பவை- கடலில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை.
நன்னீர் வகை.
நன்னீரில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை.
10. பூஞ்சைவேரிகளின் வகைகள்.
அ) புற பூஞ்சை வேரிகள்.
பூஞ்சைகளின் மைசீலியம் வரின் சூழ்ந்து அடர்த்தியான உறையின் தோற்றுவிக்கிறது.
இது மேலுறை என அறியப்படுகிறது.
ஹைஃபா வலை பின்னல்கள் செல் இடைவெளியில் ஊடுருவி புறத்தோல் மற்றும் புறணி பகுதியை சென்றடைந்து ஹார்டிக் வலையை உருவாக்குகிறது.
ஆ) அக பூஞ்சை வேரிகள்.
ஹைஃபா க்கள் வேரின் வெளிப்புற புறணி செல்களை ஊடுருவி சென்று உட்பகுதியில் வளர்கின்றன.
இ) புற அக பூஞ்சை வேரிகள்.
இவ்வகையைச் சேர்ந்த பூஞ்சை வேரிகள் உறையை போன்று வேரை சூழ்ந்தும் புறணி செல்களை ஊடுருவி யும் காணப்படுகின்றன.
Technical points
1. Alternation of generation.
Common in all plants.
Alternation of the haploid gametophytic phase (n) with diploid sporophytic phase (2n) during the life cycle.
2. Dimitry Ivanowsky .
Proved that viruses are smaller than bacteria.
M. W. Beijierink.
Defined the infectious agent in tobacco leaves as ' contagium vivum fluidum'
W. M. Stanley.
Showed that viruses could be crystallised and crystals consist largely of proteins.
3. Virion.
Is an intact infective virus particle which is non replicating outside a host cell.
4. Viroid.
Is a circular molecule of ssRNA without a capsid and was discovered by T. O. Diener in the year 1971.
The RNA of viroid has low molecular weight.
Viroids cause citrus exocortis and potato spindle tuber disease in plants.
5. Virusoids.
Were discovered by J. W. Randles and Co workers in 1981.
They are the small circular RNAs which are similar to viroids but they are always linked with larger molecules of the viral RNA.
6. Prions .
Were discovered by Stanley B. Prusiner in the year 1982 and are proteinaceous infectious particles.
They are the causative agents for about agents for about a dozen fatal degenerative disorders of the central nervous system of humans and other animals.
7. Lichens.
The symbiotic association between algae and fungi.
The algal partner is called phycobiont Or photobiont, and the fungal partner is called mycobiont.
Lichens are sensitive to air pollutants especially to sulphur di oxide.
8. Mycorrhizae.
The symbiotic association between fungal mycelium and roots of plants.
In this relationship fungi absorbs nutrition from the root and in turn the hyphal network of mycorrhizae forming fungi helps the plant to absorb water and mineral nutrients from the soil.
9. Classification of lichen based on the habitat.
Corticolous- bark
Lignicolous- wood
Saxicolous- rocks
Terricolous- ground
Marine- siliceous rocks of sea
Fresh water- siliceous rock of fresh water.
10. Types of mycorrhizae.
a. Ectomycorrhizae-
The fungal mycelium forms a dense sheath around the root called mantle.
The hyphal network penetrate the intercellular spaces of the epidermis and cortex to form Hartignet.
b) Endomycorrhizae.
The hyphae grows mainly inside the roots, penetrate the outer cortical cells of the plant root.
c) Ectendomycorrhizae.
The fungi form both mantle and also penetrates the cortical cells.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment