55 Days only for NEET 2021

 




Lesson 4- Animal kingdom  (Tamil / English )

பாடம் 4. விலங்குலகம்

1. தொகுதி. மெல்லுடலிகள். 
தலையின் முன்பக்கத்தில் உணர் நீட்சிகள், கண்கள் மற்றும் ஆஸ்ஃபிரேடியம் ஆகிய உணர் உறுப்புகள் காணப்படுகின்றன. இரட்டை ஓடுடைய மெல்லுடலிகளிலும் வயிற்றுக் காலிகளிலும் நீரின் தரத்தைக் கண்டறிவதற்கு ஆஸ்ஃபிரேடியம் பயன்படுகிறது. 
எ. கா. பைலா (ஆப்பிள் நத்தை), பிங்க்ட்டடா (முத்து சிப்பி). 

2. தொகுதி. எக்கினோடெர்மேட்டா. 
குழல் கால்கள் அல்லது போடியா எனப்படும் கால்களுடன் கூடிய நீர்க்குழல் மண்டலம் அல்லது ஆம்புலேக்ரல் மண்டலம் இத்தொகுதியின் மிக முக்கிய பண்பாகும். 
எ. கா. ஆஸ்ட்ரியஸ் (நட்சத்திர மீன்), எக்கினஸ் (கடல் குப்பி). 

3. தொகுதி. ஹெமிகார்டேட்டா. 
இத்தொகுதியில் மென்மையான புழு போன்ற உடலமைப்பைக் கொண்ட விலங்கினங்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. கடல் நீரில் வாழும் வளைவாழ் உயிரிகளான இவை பொதுவாக நாக்குப் புழு அல்லது அகார்ன் புழு என்று அழைக்கப்படுகின்றன. 
புரோபோஸிஸ் பகுதியில் காணப்படும் ஒற்றைப் புரோபோசிஸ் சுரப்பி அல்லது கிளாமருலஸ் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. 
எ. கா. பலனோகிளாசஸ், சாக்கோகிளாசஸ். 

4. தொகுதி. முதுகுநாணுடையவை. 
நரம்பு வடத்திற்குக் கீழாகவும் உணவுப் பாதைக்கு மேலாகவும் நீண்ட தண்டு போன்ற முதுகு நாணை பெற்றிருக்கும். 
முதுகுநாணிற்கும் மேலாகவும் முதுகு புற உட்சுவருக்கு கீழாகவும் அமைந்துள்ள நரம்பு வடமானது குழல் வடிவத்திலும் உள்ளீடற்றும், திரவம் நிரம்பியும் காணப்படுகிறது. 
வாழ்க்கைச் சுழற்சியின் ஏதாவது ஒரு நிலையில் தொண்டை செவுள் பிளவுகள் காணப்படுகின்றன. 

5. முதுகுநாணுடையவை யின் துணைத் தொகுதி.
1. யூரோகார்டேட்டா (அ) டியூனிகேட்டா- எ. கா. அசிடியா, சால்பா.
2. செஃபலோகார்டேட்டா- எ. கா. பிராங்கியோஸ்டோமா. 
3. முதுகெலும்புடையவை- எ. கா. மீன்கள். 

6. துணைத்தொகுதியான முதுகெலும்புடையவை. 
அ. தாடையற்றவை- தாடையற்ற பிரிவின் கீழ் உள்ள விலங்குகள், மீன்களைப் போன்று நீரில் வாழும் தன்மையுடையவை. இணையுறுப்புகள் அற்றவை. 
வகுப்பு- வட்ட வாயின- எ. கா. பெட்ரோமைசான். 
ஆ. தாடையுடையவை. 

7. வட்ட வாயின் வகுப்புகள். 
1. மீன்கள்- செவுள்கள் மூலம் சுவாசிக்கக் கூடிய நீந்துவதற்கு இணை துடுப்புகளைக் கொண்ட நீர் வாழ் மீன்களின் வகைகள் அனைத்தும் அடங்கும். 
வகுப்பு 1. குருத்தெலும்பு மீன்கள்- எ. கா. ஸ்கோலியோடான் (சுறா). 
வகுப்பு 2. எலும்பு மீன்கள்- எ. கா. எக்சோசீட்டஸ் (பறக்கும் மீன்கள்). 

8. வட்ட வாயின் வகுப்புகள். 
2. கால்களுடையவை. 
வகுப்பு 1. இருவாழ்விகள்- எ. கா. புயூபோ (தேரை) 
வகுப்பு 2. ரெப்டிலியா- எ. கா. கீலோன் (நீராமை). 
வகுப்பு 3. பறப்பன- எ. கா. கார்வஸ் (காகம்). 
வகுப்பு 4. பாலுட்டிகள்- எ. கா. முட்டையிடுபவை- ஆர்னிதோரிங்கஸ். 
குட்டி ஈனுபவை- மேக்ரோபஸ்.

9. Poikilothermic. 
இருவாழ்விகள், நீர் மற்றும் நிலம் ஆகிய இரு வாழிடங்களிலும் வாழக்கூடிய விலங்குகளைக் கொண்ட முதல் நான்கு காலி, முதுகெலும்பிகளாகும்.உடல் வெப்பம் மாறும் தன்மை கொண்டவை. 

10. பாலூட்டிகளின் பற்கள். 
தீக்கோடான்ட், ஹெடிரோடான்ட் மற்றும் டைபியோடான்ட் வகை பற்கள் காணப்படுகின்றன. 

கலைச்சொற்கள். 
1. அடிப்போஸ் திசு. 
        அடிப்போசைட்டு தொகுப்பு. 
2. தலைமுறை மாற்றம். 
        ஒருமை பாலினப் பெருக்கமும் இருமய பாலிலா இனப்பெருக்கமும் ஒரு விலங்கின் வாழ்க்கைச் சுழற்சியில் மாறி மாறி ஏற்படுதல். 
3. வேட்டரின் புனல். 
       கல்லீரல் கணையப் பொது நாளம். 
4. ஆம்புல்லா. 
       உணர்ச்சி நரம்புகளைக் கொண்ட ஒவ்வொரு அரைவட்டக் கால்வாயின் அகன்ற திறப்பு. 
5. அப்நோயியா (மூச்சுத் தடை). 
        தற்காலிகமாகச் சுவாசம் நிறுத்தப்படுதல்.


Technical points 
1. Phylum- Mollusca. 
The sense organs are tentacles, eyes and osphraidium (to test the purity of water and present in bivalves and gastropods). 
Examples. Pila (Apple snail), Pinctada (Pearl oyster). 

2. Phylum. Echinodermata. 
The most distinctive feature of echinoderms is the presence of the water vascular system or ambulacral system with tube feet or podia. 
Example. Asterias (Starfish or Sea star), Echinus (Sea urchin).
 
3. Phylum- Hemichordata. 
This phylum consists of a small group of worm like, soft marine animals, mostly tubiculous and commonly called the acorn worms or tongue worms. 
Excretion is by a single proboscis gland or glomerulus situated in the proboscis. 
Example- Balanoglossus, Saccoglossus. 

4. Phylum- Chordata. 
Presence of elongated rod like notochord. 
A dorsal hollow or tubular fluid filled nerve cord lies above the notochord and below the dorsal body wall. 
Presence of pharyngeal gill slits or clefts in all chordates at some stage of their life cycle. 

5. Subphylum of chordata. 
1. Urochordata or Tunicata- Ex. Ascidia, Salpa. 
2.Cephalochordata- Ex. Branchiostoma. 
3. Vertebrata- Ex. Pisces. 
6. Divisions of Vertebrata. 

a. Agnatha - jawless fish like aquatic vertebrates without paired appendages. 
Class- Cyclostomata- ex. Petromyzon. 
b. Gnathostomata - bears jaw. 

7. Super classes of Gnathostomata. 
1. Pisces- includes all fishes which are essentially aquatic forms with paired fins for swimming and gills for respiration. 
Class1. Chondrichthyes- Ex. Scoliodon(Shark). 
Class 2. Osteichthyes- Ex. Exocoetus (Flying fish). 

8. Super classes of Gnathostomata. 
2. Tetrapoda- bear limbs. 
Class 1. Amphibia- Ex. Bufo (Toad) 
Class 2. Reptilia- Ex. Chelone(Turtle) 
Class 3. Aves- Ex. Corvus (Crow). 
Class 4. Mammalia- Ex. Oviparous- Ornithorhynchus
 Viviparous- Macropus. 

9. Poikilothermic. 
Amphibians are the first vertebrates and tetrapods to live both in aquatic as well as terrestrial habitats. 

10. Mammalian teeth. 
Teeth are thecodont, heterodont and diphyodont. 

Glossary. 
1. Adipose tissue. 
       A group of adipocytes. 
2. Alternation of generation. 
        Alternation of haploid sexual and diploid asexual generation in the life cycle of an animal. 
3. Ampulla of vater. 
       Common duct called hepato- pancreatic duct. 
4. Ampulla. 
        The widened opening for each of the semicircular canals, containing sensory innervations. 
5. Aponea. 
      Temporary stopping of respiration.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany