Lesson 11. Transport in plants - part 2 (Tamil / English )
பாடம் 11. தாவரங்களில் கடத்து முறைகள் - பாகம் 2
1. இடப்பெயர்ச்சி.
சைலத்திற்குள் அல்லது ஃபுளோயத்திற்குள் நடைபெறும் இடப்பெயர்ச்சி நீண்ட தூர இடப்பெயர்ச்சி யாகும்.
எடுத்துக்காட்டு- சாறேற்றம் மற்றும் கரைபொருட்களின் இடப்பெயர்ச்சி.
2. வேர் செல்களில் நீர் செல்லும் பாதை.
அப்போபிளாஸ்ட்- ஒரு உயிருள்ள செல்லின் பிளாஸ்மா சவ்விற்கு வெளியில் அமைந்த அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
சிம்பிளாஸ்ட்- நீரானது வெளிப்புறம் அமைந்த வேர் செல்லின் பிளாஸ்மா சவ்வு வழியாக சைட்டோபிளாசத்தினை அடைந்து அங்கிருந்து பிளாஸ்மாடெஸ்மேட்டா வழியாக அருகமைந்த செல்லின் சைட்டோபிளாசத்தினை அடைகிறது. சைட்டோபிளாசத்தில் செல்லும் போது நீர் வாக்குவோலுக்குள் செல்லாமல் அதைச் சுற்றியே செல்கிறது. இதன் மூலம் அதிகப்படியான செல்சவ்வினை கடக்காமல் நீர் இறுதியாக சைலத்தினை அடைகிறது.
சவ்விடை வழிப்பாதை.
சவ்விடை வழியில் நீரானது படிப்படியாக செல்லில் ஒரு புறம் நுழைந்து மறுபுறம் வெளிவருகிறது. இவ்வழியில் குறைந்தது ஒரு செல்லில் இரண்டு சவ்வுகளை தாண்டியே நீர் செல்கிறது. மேலும் நீர் டோனோபிளாஸ்டுக்குள்ளும் செல்லும்.
3. நீர் வடிதல்.
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நீராவிபோக்கின் வீதம் வெகுவாகக் குறைகிறது. இந்நிலையில் நீர் உறிஞ்சப்படும் தாவரத்தினுள் அதிகப்படியான நீர் சேர்ந்து வேர் அழுத்தத்தினை உருவாக்குகிறது.
இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. என்று. எ.கா. புற்கள், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி மற்றும் அலோகேஷியா.
ஈரப்பதமுள்ள நிழற்பாங்கான பகுதியில் வளரும் தாவரங்களில் காணப்படும் இவ்வகை நீர்வடிதலில் இலைத்துளை போன்ற ஒரு துளை வழியாகவே நீர் வெளியேறுகிறது. இத்துளை நீர் சுரப்பி மக்ஷ அல்லது ஹைடதோடு.
4. கூட்டிணைவு இழுவிசை அல்லது கூட்டிணைவு நீராவிப் போக்கு இழுவிசைக் கோட்பாடு.
இக்கோட்பாட்டை டிக்ஸன் மற்றும் ஜாலி (1894) ஆகியோரால் முன்மொழியப்பட்டு மீளவும் டிக்ஸனால் (1914, 1924) பரிந்துரைக்கப்பட்டது.
- நீரின் அதிகபட்சக் கூட்டிணைவு விசை அல்லது இழுவிசைத் திறன்.
- நீர் தம்பத்தின் தொடர்ச்சி.
- நீராவிப்போக்கின் இழுவிசை அல்லது உடைபடா நீர்தம்பத்தில் ஏற்படும் அழுத்தம்.
5. சில தாவரங்களில் நடைபெறும் நீராவிப் போக்கின் வீதம்.
மக்காச்சோளம்- 2 லிட்டர்
சூரியகாந்தி- 5 லிட்டர்
மேப்பிள் மரம்- 200 லிட்டர்
பேரிச்சை மரம்- 450 லிட்டர்.
தாவரங்களின் பல்வேறு தரைமேல் பகுதிகளிலிருந்து அதிகப்படியான நீர், ஆவியாக வெளியேறுதல்.
6. பொட்டாசியம் அயனி கடத்தல் கோட்பாடு.
லெவிட் (1974) என்பவரால் வெளியிடப்பட்ட இக்கொள்கையினை ராஷ்க் (1975) விளக்கினார்.
பொட்டாசியம் அயனிகள் உட் புகுந்தால் இலைத்துளை திறக்கிறது.
பொட்டாசியம் அயனி வெளியேறுவதால் இலைத்துளை மூடுகிறது.
7. தாவர நீராவிப்போக்குத் தடுப்பான்கள்.
தாவரத்தில் நீராவிப்போக்கினைத் தடுக்கப் பயன்படும் எந்தப் பொருளும் நீராவிப்போக்குத் தடுப்பான்கள் எனப்படும்.
- இலைத்துளைக்கு மேல் இயல்சார் தடுப்பான்களாகச் செயல் படுபவை.
நிறமற்ற பிளாஸ்டிக்
சிலிக்கோன் எண்ணெய்
குறைந்த பாகுத்தன்மை மெழுகு கள்.
- இலைத்துளை மூடுவதை தூண்டுபவை.
பினைல் மெர்குரி அசிடேட்.
அப்சிசிக் அமிலம்
டோடிசினில் சக்சினிக் அமிலம்
8. தோற்றுவாய் மற்றும் தேக்கிடம்.
தோற்றுவாய்- என்பது வளர்சிதை மாற்றம் நடைபெறும் இடத்திற்கோ அல்லது சேமிக்கப்படும் இடத்திற்கோ உணவினை ஏற்றுமதி செய்யும் தாவர உறுப்பு ஆகும். என்று. எ.கா. வளர்ச்சியடைந்த இலைகள் மற்றும் முளைக்கும் விதைகள்.
தேக்கிடம்- உணவைப் பெறும் ஒரு தாவர உறுப்பு. எ. கா. வேர்கள், கிழங்குகள், வளர்ச்சியடையும் பழங்கள் மற்றும் முதிர்ச்சியடையாத இலைகள்.
9.முன்ச் - மொத்த ஒட்டக் கோட்பாடு.
முன்ச் (1930) என்பவரால் முன்மொழியப்பட்ட மொத்த ஒட்டக் கோட்பாட்டினைக் க்ராப்ட்ஸ்(1938) விரிவாக்கம் செய்தார்.
இக் கொள்கையின்படி கரிமப் பொருட்கள் அல்லது கரைபொருட்கள் அதிகச் சவ்வூடுபரவல் அழுத்தம் உடைய இடத்திலிருந்து குறைந்த சவ்வூடுபரவல் அழுத்தம் உடைய இடத்திற்கு விறைப்பழுத்த சரிவு வாட்டத்திற்கு ஏற்றாற்போலச் செல்கிறது.
10. ஃபுளோயத்தில் உணவு ஏற்றம் மற்றும் வெளியேற்றம்.
ஃபுளோயத்தில் உணவேற்றம்- முதிர்ந்த இலைகளின் இலையிடைத்திசு செல் களிலிருந்து ஃ புளோயம் சல்லடை கூறுகளுக்கு ஒளி சேர்க்கை விளைபொருட்கள் இடம் பெருகிறது.
ஃபுளோயத்திலிருந்து உணவு வெளியேற்றம்- சுக்ரோஸ் சல்லடைக் கூறுகளிலிருந்து தேக்கிட உறுப்புகளான வேர்கள், கிழங்குகள், பூக்கள் மற்றும் பழங்கள் ஆகிய இடங்களுக்கு இடம் பெருகிறது.
11. டோனன் சமநிலை.
செல்லுக்குள் நேர்மின் அயனிகளின் செறிவானது செல்லுக்கு வெளியில் உள்ளதை விட அதிகமாக இருக்க நேரிடுகிறது. மின்னாற்றல் சமன் மற்றும் பரவல் நிகழ்வு ஆகிய இரண்டையும் மின் அயனிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
கலைச்சொல் அகராதி.
1. கார்பானிக் அமிலம்.
கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைவதால் உருவாகும் திறன் குறைந்த அமிலக் கரைசல்.
2. அகார்.
சிவப்பு பாசியிலிருந்து பெறப்படும் கூழ்மம் போன்ற பொருள்.
3. ஜெலட்டின்.
விலங்குகளிடமிருந்து பெறப்படும் பசைத்தன்மை வாய்ந்த பொருள்.
4. மாற்றியமாதல்.
அணுக்கள் எந்த இழப்பு அல்லது ஆதாயம் இல்லாமல் அதே மூலக்கூறுகள் அணு குழுக்களை மறு ஒழுங்கு செய்தல்.
5. சாறு.
நீர் மற்றும் கரைநிலை கனிமங்கள் கொண்ட திரவம்.
Technical points
1. Translocation.
Transport within the network of xylem or phloem is an example for long distance transport.
Example- Ascent of sap and Translocation of solutes.
2. Path of water across root cells.
Apoplast- water moves exclusively through the cell wall or non living part of the plant without crossing any membrane.
Symplast- water has to cross plasma membrane to enter the cytoplasm of outer root cell; then it will move within adjoining cytoplasm through plasmodesmata around the vacuoles without the necessity to cross more membrane, till it reaches xylem.
Transmembrane route- water sequentially enters a cell on one side and exists from the cell on the other side.
In this pathway, water crosses at least two membranes for each cell. Transport across the tonoplast is also involved.
3. Guttation.
During high humidity in the atmosphere, the rate of transpiration is much reduced. When plants absorb water in such a condition root pressure is developed due to excess water within the plant. Thus excess water exudates as liquid from the edges of the leaves.
Example- Grasses,, tomato, potato, brinjal and Alocasia.
It occurs through stomata like pores called hydathodes generally present in plants that grow in moist and shady places.
4. Cohesion tension or cohesion and transpiration pull theory.
Originally proposed by Dixon and Jolly (1894) and again put forward by Dixon (1914, 1924).
- strong cohesive force or tensile strength of water.
- continuity of the water column in the plant.
- transpiration pull or tension in the unbroken water volumn.
5. Rate of transpiration in some plants.
Corn plant- 2 litres
Sunflower- 5 litres
Maple tree- 200 litres
Date palm- 450 litres.
The loss of excess water in the form of vapour from various aerial parts of the plant.
6. Theory of K+ transport.
Proposed by Levit (1974) and elaborated by Raschke(1975).
Influx of K+ ions- stomata open.
Efflux of K+ ions- stomata closed.
7. Plant antitranspirants.
Is used to designate any material applied to plants for the purpose of retarding transpiration.
- To act as physical barrier above the stomata.
Colourless plastics
Silicone oil
Low viscosity waxes.
- Induction of stomata closure.
Phenyl mercuric acetate
Abscisic acid
Dodecenyl succinic acid.
8. Source and sink.
Source- any organ in plants which are capable of exporting food materials to the areas of metabolism or to the areas of storage. Example- mature leaves, germinating seeds.
Sink- any organ in plants which receives food from source. Example- Root tubers, developing fruits and immature leaves.
9. Munch mass flow hypothesis.
Proposed by Munch (1930) and elaborated by Crafts (1938).
According to this hypothesis, organic substances or solutes move from the region of high osmotic pressure to the region of low osmotic pressure along the turgor pressure gradient.
10. Phloem loading and unloading.
Phloem loading- The movement of photosynthesis from mesophyll cells to phloem sieve elements of mature leaves.
Phloem unloading- From sieve elements sucrose is translocated into sink organs such as roots, tubers, flowers and fruits.
11. Donnan equilibrium.
The action concentration would be greater in the internal than in the external solution.
This electical balance or equilibrium controlled by electrical as well as diffusion.
Glossary.
1. Carbonic acid.
A weak acidic solution of carbon di oxide dissolved in water.
2. Agar.
Jelly like substance, derived from red algae.
3. Gelatin.
An animal based product used as a gelling agent.
4. Isomerisation.
Rearrangement of atomic groups within the same molecule without any loss or gain of atoms.
5. Sap.
It is a fluid consist of water and dissolved minerals.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment