ஜான் மெய்னார்ட் கெய்ன்ஸ்
ஜான் மெய்னார்ட் கெய்ன்ஸ் மேக்ரோஎகனாமிக்ஸ் துறையின் தந்தை. கடந்த நூற்றாண்டின் சிறந்த தலை றந்த பொருளாதார் நிபுணர்களில் ஒருவரான அவரின் பெயராலேயே கெய்ன்சின் எக்கனாமிக்ஸ் துறை வழங்கப்படுகிறது. கணிதம் படித்து முடித்த பின்பு ஆங்கிலேய சிவில் சர்வீஸ் துறையில் சேர்ந்து பணியாற்றினார் இவர். அங்கே இந்திய பொருளாதாரத்தை பற்றிய ஆய்வுகளைச் செய்தார். அதைக்கொண்டு இந்திய கரன்சி அண்ட் ஃபினான்ஸ் என்கிற நூலை எழுதினார்.
அதற்குப் பின்னர்க் கருவூலத்துறையில் அவர் பணியாற்றினார். முதல் உலகப்போர் முடிந்த பின்பு நடந்த அமைதி ஒப்பந்த மாநாட்டில் இங்கிலாந்து அரசின் முக்கியப் பிரதிநிதியாக அவர் இருந்தார். ஆனால், அப்பதவியை வெகு விரைவில் துறந்தார் அவர். அந்த மாநாட்டின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விமர்சித்துப் புத்தகம் எழுதினார்.
மிகக்கடுமையான, பெரிய இழப்பீட்டு தொகையை ஜெர்மனி மீது திணித்து இருப்பது சரியான போக்கில்லை என்று அவர் வாதிட்டார். இதன் மூலம் ஜெர்மானிய மக்கள் இன்னமும் ஏழைகளாக மாறுவார்கள். அவர்களுக்கு நிதிச்சுமை அதிகமாகும். அதற்குப் பழிவாங்கவே அவர்கள் முயல்வார்கள் என்று கச்சிதமாகக் கணித்தார் இவர்.
அந்த நூல் அதிவேகமாக விற்றுத் தீர்ந்தது. அவர் சொன்னபடியே நடந்தது. ஹிட்லர் ஜெர்மனியின் பழிவாங்கும் படலத்தை இரண்டாம் உலகப்போராக ஆக்கினார்.
ஆரம்பக் காலங்களில் விலை வாசியைக் கட்டுப்படுத்திப் பொருளாதரத்தை சீர்படுத்த மத்திய வங்கி வட்டி விகிதங்களை விலைவாசி ஏறும் பொழுது குறைக்கவும்,விலைவாசி குறையும் பொழுது ஏற்றவும் செய்யவேண்டும் என்று வாதிட்டார். இரண்டு உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் வேலை வாய்ப்பின்மை அதிகமாகி விடவே அரசு மக்களுக்குச் செலவு செய்வதை அதிகப்படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் முழுமையான வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்று திட்டங்கள் தீட்டிக்கொடுத்தார் கெய்ன்ஸ்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி குழுமம் இரண்டும் அவர் சிந்தனையில் விளைந்த அற்புதங்களே. விலை வாசி ஏற்றம் என்பது ஒருவகையான வரி விதிப்பே என்று அற்புதமாக விளக்கிய அவரின் பொருளாதார் கருத்துக்கள் இன்று முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்ளப்படா விட்டலும் அவற்றின் அடிப்படையில் நவீன பொருளாதாரம் இயங்குகிறது என்றால் அது மிகையில்லை.
Post a Comment