யூரி காகரின் | தினம் ஒரு அறிவியல் மேதை



 யூரி காகரின்

விண்வெளியில் முதன்முதலில் நடந்த மனிதர் யூரி காகரின் 'எனும் ரஷ்யர். காகரின் என்றால் ரஷ்ய மொழியில் காட்டு வாத்து என்றொரு அர்த்தம் உண்டு. ஆனால், இவர் வான் கழுகு. ஆவார் என அப்பொழுது தெரியாது. அப்பா தச்சு வேலை செய்து குடும்பத்தை ஜீவனம் செய்து கொண்டிருந்தார்; உலகப்போர் வந்து இவரின் ஊர் முழுக்க ஹிட்லரின் படையால் துவம்சம் ஆனது. அப்பா ராணுவத்துக்குப் போனார்.

போர்க்காலம் முழுக்க அடுத்த என்ன நடக்குமோ என்கிற பரிதவிப்பில் இருக்க, குட்டிப்பையன் யூரிக்கோ பறக்கும் பலவகை விமானங்களைப் பார்த்துக் கண்கள் விரிய சிரித்தார். தானும் அதைப்போலவே பறக்க வேண்டும் என்று அம்மாவிடம் சொல்வார். துஷினோ எனும் பக்கத்து ஊரில் நடக்கும் விமானச் சாகச கண்காட்சி வேறு சீக்கிரம் பற என அவரை வெறியேற்றியது. அருகில் இருந்த ஏரோக்ளப்பில் அம்மாவிடம் அடம் பிடித்து அங்கே சேர்ந்தார். காற்றில் மிதந்த பொழுது அவருக்குன் பாய்ந்த உற்சாகத்தில் 'இதுதான் நம் வாழ்க்கை' என முடிவு செய்து கொண்டார். அரசாங்க விமானப் பயிற்சியில் சேர்ந்து தேறி வெளியே வந்தார்.

ரஷ்யாவும் அமெரிக்காவும் நீயா நானா எனப் பல முனைகளில் மோதிக்கொண்டிருந்தன. விண்வெளியில் யார் முதலில் மனிதனை அனுப்பிச் சாதிப்பது என்கிற போட்டி பின்னிக்கொண்டிருந்தது. யூரி அப்பொழுது அதற்கான சாய்ஸ் ஆனார்; விண்வெளிக்கு முதல் ஆளாகப் பயணம் போனார். 108 நிமிடங்கள் நீடித்த அந்தச் சாகசம் அவரைத் தேசிய ஹீரோ ஆக்கியது. குருஷேவ் முத்தத்தால் இவரை நனைத்தார்; நாடு முழுக்கப் பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. எண்ணற்ற பைலட்களுக்கு விண்கல பயணத்துக்கான பயிற்சி வழங்கிக்கொண்டிருந்த இவர் விமான விபத்தில் 34 வயதில் மரணமடைந்தார். Under the wide and starry sky, Dig the grave and let me lie எனும் ஸ்டீவென்சன் வரிகள் அவருக்கு அஞ்சலியாக ஒலித்திருக்கும் வான்வெளியில் !

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany