அகியோ மோரிடோ | தினம் ஒரு அறிவியல் மேதை

 

                                அகியோ மோரிடோ

இணையற்ற தொழில்நுட்பத்தால் உலகைப் புரட்டிய பிதாமகர் அகியோ மோரிடோ. இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றி னார். பதினான்கு தலைமுறைகளாகச் செய்து வரும் மதுபான தயாரிக்கும் குடும்பப் பிசினசை வேண்டாம் என்று 375 டாலர் பணத்தோடு வெளியே வந்தார்.

உலகப்போருக்குப் பின், அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தைத் தொழில்நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும், இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினர். 1946-ல் டோக்கியோ டெலிகம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனைத் தொடங்கினார்கள். டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் டேப் செய்து அதில் வேதிப்பொருட்கள் சேர்த்து சாதித்தார்கள். தாங்கள் உருவாக்கிய டேப் ரெக்கார்டர் கருவியை வாங்கிக்கொள்ள ஆளே இல்லை என்று சோர்ந்து போகாமல் அதற்கான மார்க்கெட் தேடி அலைந்தார் பள்ளிகளில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்த்து இறங்கி கலக்கினார்கள். லட்சங்கள் குவிய ஆரம்பித்தது.

லட்சங்கள் குவிய ஆரம்பித்தாலும் பத்துச் சதவிகிதத்தை ஆய்வுகளில் யோசிக்காமல் முதலீடு செய்தார்கள். ஈpm என்று டயோட் இருந்தால் இன்னமும் சிறப்பாக ட்ரான்சிஸ்டர் வேலை செய்யும் என்று புரிந்தது. அதைத் தயாரிக்க உரிய பொருளைத்தேடி அலைந்த பொழுது பாஸ்பரஸ் நல்லபடியாகச் சொன்னதைக் கேட்டது. அப்பொழுதைய ஜாம்பவான் பெல் லேப்ஸ் நிறுவனமோ பாஸ்பரஸ் வேஸ்ட் என்றிருந்தது. ஆனாலும்,நம்பிக்கையோடு ஆய்வுகளைத் தொடர்ந்தார்கள். துல்லியமான ட்ரான்சிஸ்டர்கள் உருவாகின. அந்த ஆய்வின் பொழுது எழுந்த 'double tomnelling efect ஒரு நோபல் பரிசை கூடுதல் போனஸானது

முதலில் மிகப்பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க, அது கவனம் பெறவில்லை; பார்த்தார் மோரிடோ. பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள்: மாபெரும் வெற்றிப் பெற்றது அது. அளவில் சிறியதாக இருந்ததுதான் அதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். அதையே எட்டு இன்ச் டிவி, வீடியோ ரெகார்டர் என விரிவாக்கிக் கொண்டே போனார்கள்.

உலகம் முழுக்க 'மேட் இன் ஜப்பான்' என்கிற சொல்லுக்கு ஒரு தனிக் கவுரவத்தைத் தந்தது இவரின் நிறுவனம். அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சிகரமான பெயரை யோசித்தார்கள். இலத்தீனில் ஒலி என்பதற்குச் சோனஸ் எனப் பெயர்; அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம். சோனி எனப் பெயர் மாறியது.

ஜப்பானின் பீச்சுளில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார். பீச்சுகள் வரை டேப் ரெக்கார்டர்களைக் கொண்டு போய் மக்கள் சிரமப்பட்டுப் பாடல் கேட்பதை பார்த்தார் இவர். பெல் லேப்ஸின் தொழில்நுட்பத்தில் இருந்து பாடல் கேட்கும் ஒரு கருவியைப் படைத்தார்கள். அதன் அளவை சிறிதாக்க சொன்னார் அகியோ மோரிடோ. பின்னர் நண்பர் இபுகா இப்படிச் சத்தமாகப் பாடல்

கேட்க கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல 'ஹெட்செட்' என்கிற கான்செப்டை கொண்டு வந்தார்கள். இப்படித்தான் நடந்து கொண்டே பாடல் கேட்கும் இளைஞர்களின் கனவுப் பொருளான வாக்மேன் பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் வாக்மேன் விற்குமா என்கிற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்காவிட்டால் தான் பதவி விலகுவதாகச் சொல்லி சாதித்தார்.

அமெரிக்காவில் போய்ச் செட்டில் ஆனார் இவர்; ஜப்பானியர் என்கிற பெருமையை அவர் விடவில்லை. அமெரிக்கர்களைப் புரிந்து கொள்ளவே அங்கே போனார்; எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைப்படுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது, 'சோனி' அமெரிக்காவில் கோக்க-கோலா, ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில் மக்களால் பார்க்கப்பட்டது.

தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதைத் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தவர். "தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள், ஆனால் அதே தவறை மறுபடியும் செய்யாதீர்கள்" என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு ரோல்மாடல், அவரது ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும், "முடியாது என்று சொல்லத் தெரியாத ஜப்பான்" அப்படித்தான் அவர் ஒற்றைப் பிராண்டின் மூலம் தன் நாட்டையே தலைநிமிர்த்தினார்.

1 Comments

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany