31 Days only for NEET 2021

Lesson 19- Excretion Part 2  (Tamil / English )

பாடம் 19- கழிவு நீக்கம் பகுதி 2

1. குழல்களின் பணிகள். 
அண்மை சுருள் நுண்குழல்- குளுக்கோஸ், லாக்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், சோடியம் அயனிகள் மற்றும் நீர் ஆகியவை வடிதிரவத்திலிருந்து மீள உறிஞ்சப்படுகின்றன. 
ஹென்லே வளைவின் உள்ள கீழிறங்கு குழாயின் சுவர்களில் அக்வாபோரின்கள் இருப்பதால் நீர் ஊடுருவிச் செல்லும். ஆனால் உப்புகளால் ஊடுருவிச் செல்ல இயலாது. 
ஹென்லே வளைவின் மேலேறு குழாயின் சுவர்கள், நீரை அனுமதிப்பதில்லை. ஆனால் கரை பொருட்களான சோடியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் அயனிகள் ஊடுருவ அனுமதிக்கிறது. 
சேய்மை சுருள் நுண் குழல் நீரை மீள எடுத்து குழலுக்குள் பொட்டாசியத்தைச் சுரக்கிறது. எனவே சேய்மை சுருள் நுண் குழல் திரவத்தில் நீர், சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவை எஞ்சியுள்ளது.
சேகரிப்பு நாளத்தின் வழியே நீர் ஊடுருவிச் செல்கிறது. பொட்டாசியம் அயனிகள் செயல் மிகு கடத்தல் மூலம் குழலினுள் விடப்படுகின்றது.

2. குழல்களில் சுரத்தல்- ஹைட்ரஜன், பொட்டாசியம், அம்மோனியா, கிரியாட்டினின் மற்றும் கரிம அமிலங்கள் ஆகியவை புற நுண்குழல்களைச் சுற்றியுள்ள இரத்த நுண் நாளத் தொகுப்பிலிருந்து குழலில் உள்ள வடிதிரவத்தினுள் செல்கின்றன. 
அடர்த்தி மிக்க சிறுநீர் உருவாதல்- சிறுநீர் எதிரோட்ட முறையை பயன்படுத்தி சிறுநீரகங்கள், அடர்த்தி மிக்க சிறுநீர் உற்பத்தியை நிறைவேற்றுகின்றன. ஹென்லே வளைவின் முக்கியப் பணி, சோடியம் மற்றும் குளோரைடு அயனிகளின் அடர்த்தியாக்கலே ஆகும். 

3. ஹென்லே வளைவின் கீழிறங்கு தூம்பும் மேலேறு தூம்பும் செயல்மிகு கடத்தல் மூலம் எதிரோட்ட பெருக்கத்தை உருவாக்குகிறது. 
வடி திரவம் கீழிறங்கு தூம்பிற்குள் நுழையும் போது, குழலின் உட்பகுதியில் உள்ள நீர் இடையீட்டு திரவத்திற்குள் ஊடுருவுவதால், இடையீட்டு திரவத்தின் ஆஸ்மோலாரிட்டி குறைகிறது. 
வாசா ரெக்டா, எதிரோட்டப் பரிமாற்றி வழியாக மெடுலாவின் ஊடு கலப்பு வேறுப்பாட்டை பராமரிக்கிறது. 

4. சிறுநீரகத்தின் பணிகளை நெறிப்படுத்துதல். 
ADH  மற்றும் டையபெட்டிஸ் இன்சிபிடஸ்- சிறுநீரகப்பணிகளை ஹைப்போதாலமஸ், ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு மற்றும் ஓரளவிற்கு இதயம் ஆகியவைகளை உள்ளடக்கிய ஹார்மோன் பின்னூட்ட கட்டுப்பாடே , கண்காணித்து நெறிப் படுத்துகிறது

5. ரெனின் ஆஞ்சியோடென்சின். 
நெஃப்ரானின் உட்செல் தமனியில் உள்ள சிறப்புத் திசுவை ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு ஆகும். இதில் மாக்குலா டென்ஸா மற்றும் துகள் செல்கள் காணப்படுகின்றன. மாக்குலா டென்ஸா செல்கள் சேய்மை சுருள் குழலில் திரவம் பாய்வதை உணர்கின்றன. மேலும் இவை உட்செல் தமனியின் குறுக்களவையும் பாதிக்கிறது. துகள் செல்கள் ரெனின் என்னும் நீதியைச் சுரக்கின்றன. 

6. ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் காரணி. 
இதயத்திலுள்ள ஏட்ரியல் செல்கள் அதிகமாக விரிவடைதன் காரணமாக ஏட்ரியத்திற்குள் அதிகமாக இரத்தம் பாய்கிறது. இதன் விளைவாக ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் பெப்டைடு வெளிப்படுகிறது. இது சிறுநீரகத்தை அடைந்து அங்கு Na+ . அயனிகளின் வெளியேற்றத்தையும் கிளாமருலஸூக்குள் இரத்தம் பாய்வதையும் அதிகரிக்கின்றது. மேலும் இவை இரத்தக்குழாய் விரிவாக்கியாகச் செயல்பட்டு உட்செல் கிளாமருலார் தமனிகளை விரிவடையச் செய்கின்றன. அல்லது வெளிச்செல் கிளாமருலார் தமனிகள் மீது இரத்தக்குழாய் சுருக்கியாகச் செயல்பட்டு அவற்றைச் சுருங்கச் செய்கின்றன. 

7. சிறுநீர் வெளியேற்றம். 
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நிகழ்வே மிச்சுரிஷன் அல்லது சிறுநீர் வெளியேற்றமாகும். நெஃபாரானில் உருவாகிய சிறுநீர், சிறுநீரக நாளங்களின் வழியே சிறுநீர்ப்பையை அடைந்து அங்கு மைய நரம்பு மண்டலத்திலிருந்து, சமிக்ஞை வரும் வரை தற்காலிகமாக சேகரித்து வைக்கப்படுகிறது. 

8. கழிவு நீக்கத்தில் பிற உறுப்புகளின் பங்கு. 
சிறுநீரகங்களைத் தவிர்த்து, நுரையீரல், கல்லீரல் மற்றும் தோல் ஆகியவைகளும் நைட்ரஜன் கழிவுப்பொருட்களின் வெளியேற்றத்தில் பங்கேற்கின்றன. 
ஒவ்வொரு நாளும் பெருமளவு நீரையும், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடையும் (18லி/நாள்), குறிப்பிடத்தக்க அளவு நீரையும் நுரையீரல் வெளியேற்றுகிறது. 
கல்லீரலில் சுரக்கும் பித்தநீரில் உள்ள பொருட்களான பிலிரூபின் மற்றும் பிலிவர்டின் ஆகியவையும், கொலஸ்டிரால், ஸ்டீராய்டு ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் மருந்துகள் ஆகியவையும் செரிமான மண்டலக் கழிவுகளோடு சேர்த்து வெளியேற்றப்படுகிறது. 

9. சிறுநீர் பாதைத் தொற்று.
பெண்களின் சிறுநீர் வெளிவிடு நாளம் மிகக் குட்டையானது. இதன் துளை மலத்துளையின் அருகில் உள்ளது. சுகாதாரமற்ற கழிவறை பழக்க வழக்கங்கள் வழியாக மலத்திலுள்ள பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர் துளையில் தொற்றுகின்றன.
சிறுநீரகச் செயலிழப்பு. 
நைட்ரஜன் கழிவுப் பொருளை வெளியேற்ற சிறுநீரகங்கள் தவறுவதால் யூரியா போன்றவை உடலில் தேங்கி சிறுநீர் வெளியேற்றம் பெருமளவில் குறைகிறது. இரு வகை- ஒன்று உடனடி செயலிழப்பு மற்றொன்று நாள்பட்ட செயலிழப்பு ஆகும். 

10. யூரேமியா.
இரத்தத்தில் யூரியா மற்றும் புரதமில்லாத நைட்ரஜன் கூட்டுப் பொருட்களான யூரிக் அமிலம் மற்றும் கிரியாட்டினின் ஆகியவை அதிகமிருப்பது, யூரேமியாவின் பண்பாகும். 
சிறுநீரகக் கற்கள். 
சிறுநீரகத்தின் பெல்விஸ் பகுதியில் உள்ள சிறுநீரக நுண்குழல்களில், உருவாகும் ஒரு கடினமான கல் போன்ற தொகுப்பு சிறுநீரக கற்கள் அல்லது நெஃப்ரோலித்யாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. 
கிளாமருலோ நெஃப்ரைடிஸ்- இந்நோய் பிரைட்டின் நோய் என்றும் அழைக்கப்படும் குழந்தைகளில், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தாக்கத்தின் பின் விளைவாக இரண்டு சிறுநீரகங்களிலும் கிளாமருலஸ் வீங்குதல் இந்நோயின் பண்பாகும். 

கலைச்சொல் அகராதி. 
1. காற்றுடைமார்பு. 
புளூரல் இடைவெளியில் காற்றுள்ள நிலை. இது நுரையீரல்களைச் சிதைக்கும்.
 
2. மாறு வெப்பநிலை உயிரிகள். 
வெளிப்புற வெப்பநிலை மாறுதலுக்கு ஏற்ப தங்களது உடல் வெப்பநிலையையும் மாற்றிக் கொள்ளும் பிராணிகள். 

3. தன்னகத்தே உணர்வேற்பு.
உடலின் நிலை, இயக்கம் மற்றும் சமநிலை போன்ற உடலின் உட்புறத்திலிருந்து தோன்றும் தூண்டல்களை உணரும் தன்மை.

Technical points 
Technical points. 
1. Function of the tubules. 
Proximal convoluted tubule- Glucose, lactate, amino acids, Na+ and water in the filtrate is reabsorbed in the PCT. 
Descending limb of Henle's loop is permeable to water due the presence of aquaporins, but not permeable to salts. 
Ascending limb of Henle's loop is impermeable to water but permeable to solutes such as Na+, Cl- and K+.
Distal convoluted tubule- recovers water and secretes potassium into the tubule. 
Collecting duct- is permeable to water, secretes K+ and reabsorbs Na+ to produce concentrated urine. 

2. Tubular secretion- substances such as H+, K+, NH4+, creatinine and organic acids  move into the filtrate from the peritubular capillaries into the tubular fluid. 
Formation of concentrated urine- is accomplished by kidneys using counter current mechanisms. The major function of Henle' loop is to concentrate Na+ and Cl-. 

3. Ascending and descending limbs of Henle, create a counter current multiplier. 
Henle of the JM nephrons which creates medullary osmotic gradient. 
The vasa recta, maintains the medullary osmotic gradient via counter current exchanger.

4. Regulation of kidney function. 
ADH and Diabetes insipidus- The functioning of kidneys is efficiently monitored and regulated by hormonal feedback control mechanisam involving the hypothalamus, juxta glomerular apparatus and to a certain extent the heart.

5. Renin angiotensin. 
Juxta glomerular apparatus is a specialized tissue in the afferent arteriole of the nephron that consists of  macula densa and granular cells. The macula densa cells sense distal tubular flow and effect afferent arteriole diameter, whereas the granular cells secrete an enzyme called renin. 

6. Atrial natriuretic factor. 
Excessive stretch of cardiac atrial cells cause an increase in blood flow to the atria of the heart and release Atrial Natriuretic Peptide or factor travels to the kidney where it increases Na+ excretion and increases the blood flow to the glomerulus, acting on the afferent glomerular arterioles as a vasodilator or on efferent arterioles as a vasoconstrictor. 

7. Micturition. 
The process of release of urine from the bladder. 
Urine formed by the nephrons is ultimately carried to the urinary bladder where it is stored till it receives a voluntary signal from the central nervous system. 

8. Role of other organs in excretion. 
Apart from kidneys, organs such as lungs, liver and skin help to remove wastes. 
Our lungs remove large quantities of carbon dioxide (18 L/day) and significant quantities of water every day. 
Liver secretes bile containing substances like, bilirubin and biliverdin, cholesterol, steroid hormones, vitamins and drugs which are excerted out along with the digestive wastes. 

9. Urinary tract infection- Female's urethra is very short and it's external opening is close to the anal opening, hence improper toilet habits can easily carry faecal bacteria into the urethra. 
Renal failure (kidney failure) - Failure of the kidney's to excrete wastes may lead to accumulation of urea with marked reduction in the urine output. Two types- Acute and chronic renal failure. 

10. Uremia - is characterized by increase in urea and other non protein nitrogenous substances like uric acid and creatinine in blood. 
Renal calculi- kidney stone or calculi, also called renal stone or nephrolithiasis, is the formation of hard stone like masses in the renal tubules of renal pelvis. 
Glomerulonephritis- it is also called Bright's disease and is characterized by inflammation of the glomeruli of both kidneys and is usually due to post- streptococcal infection that occurs in children. 

Glossary. 
1. Pneumothroax. 
Presence of air in the pleural cavity which causes collapsing of lungs. 

2. Poikilotherms. 
Cold blooded organisms/ body temperature fluctuates according to environmental temperature. 

3. Properioception. 
The ability to sense stimuli arising within the body regarding position, motion and equilibrium.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany