பாடம் 15- தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும். பாகம் 2
1.தாவர வளர்ச்சி ஹார்மோன்களின் பண்புகள்.
பொதுவாக வேர்கள், தண்டுகள் மற்றும் இலைகளில் உற்பத்தியாகிறது.
தாவரத்தின் ஓரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கடத்துத் திசுக்கள் மூலம் கடத்தப்படுகிறது.
மிகக் குறைந்த அளவில் தேவைப்படுகிறது.
அனைத்து ஹார்மோன்களும் கரிமச் சேர்மங்களாகும்.
ஹார்மோன் உற்பத்திக்குச் சிறப்பான செல்களோ அல்லது உறுப்புகளோ இல்லை.
தாவர வளர்ச்சியைத் தூண்டுதல், தடை செய்தல், வளர்ச்சி உருமாற்றம் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. கூட்டு விளைவுகள் மற்றும் எதிர்ப்பு விளைவுகள்.
கூட்டு விளைவுகள்- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரிமப் பொருட்கள் மற்றொரு கரிமப்பொருளின் செயல்பாட்டினை போலச் செயல்படுகிறது. எடுத்துக்காட்டு- ஆக்சின், ஜிப்ரலின்கள் மற்றும் சைட்டோகைனின்.
எதிர்ப்பு விளைவுகள்- இதில் பங்கு பெறும் இரண்டு கரிமச் சேர்மங்கள் தாவரத்தின் குறிப்பிட்ட பணி மேற்கொள்வதில் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒன்று குறிப்பிட்ட பணியை ஊக்குவிக்கும் ,மற்றொன்று அப்பணியைத் தடை செய்கிறது. எடுத்துக்காட்டு- ABA மொட்டு மற்றும் விதை உறக்கத்தைத் தூண்டுகிறது. ஜிப்ரலின்கள் அதைத் தடை செய்கிறது.
3. உயிர் ஆய்ந்தறிதல்.
தாவரங்கள் அல்லது தாவரப்பாகங்களின் வளர்ச்சிக்குக் காரணமான வளர்ச்சி பொருட்களின் செயல்பாட்டினைக் கண்டறியும் முறை.
ஆக்சின்கள்- அவினா வளைவு ஆய்வு/ வெஸ்ட் சோதனை.
ஜிப்ரலின்கள்- குட்டை பட்டாணி ஆய்வு
சைட்டோகைனின்- வேம்பு விதையிலை ஆய்வு.
எத்திலின்- வாயு நிறப் பகுப்பாய்வு.
அப்சிசிக் அமிலம்- நெல் முளைக்குருத்து உறை.
4. ஆக்சின் வகைகள்.
இயற்கை- தாவரங்களில் காணப்படும் ஆக்சின்கள் .
இண்டோல் அசிடிக் அமிலம் (IAA)
இண்டோல் புரோப்பியானிக் அமிலம் (IPA)
இண்டோல் பியூட்டரிக் அமிலம் (ABA)
பினைல் அசிடிக் அமிலம் (PAA)
செயற்கை- செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இவை ஆக்சினின் பண்புகளை ஒத்து காணப்படுகிறது.
2,4 டைகுளோரோ பீனாக்சி அசிடிக் அமிலம் (2, 4 -D)
2,4,5 ட்ரைகுளோரோ பீனாக்சி அசிடிக் அமிலம் (2, 4,5- T)
நாஃப்தலீன் அசிடிக் அமிலம் ( NAA).
5. நுனி ஆதிக்கம்- நுனிமொட்டு இருக்கும் போது பக்கமொட்டின் வளர்ச்சி நுனிமொட்டு உற்பத்தி செய்யும் ஆக்சினால் தடைசெய்யப்படுதல். (ஆக்சின்)
போல்டிங்- திடீரென தண்டு நீட்சியடைவதும் அதனைத் தொடர்ந்து மலர்தல்.(ஜிப்ரலின்கள்)
ரிச்மாண்ட் லாங்க் விளைவு- சைட்டோகைனின் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதை தாமதப் படுத்துகிறது. (சைட்டோகைனின்).
இறுக்கநிலைத் தாவர ஹார்மோன்- இக்காலத்தில் தண்டுத்தொகுப்பு வளர்ச்சியைக் குறைத்து வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. (அப்சிசிக் அமிலம்)
6. ஒளிக்காலத்துவம்.
ஒளி மற்றும் இருள் கால (ஒளி காலம்) அளவிற்கு ஏற்ப மலர்தலுக்கான செயலியல் மாறுபாடு.
இந்த வார்த்தையை கார்னர் மற்றும் அல்லார்டு (1920) என்பவர்களால் சோயா மொச்சையின் (கிளைசின் மேக்ஸ்) பைலாக்ஸி ரகத்திலும் , புகையிலையின் (நிக்கோட்டியானா டொபாக்கம்) மேரிலாண்ட் மாமூத் என்ற ரகத்திலும் இது கண்டறியப்பட்டது.
7. ஒளிக்காலத்துவத்தின் அடிப்படையில் அமைந்த தாவரங்களின் வகைப்பாடு.
நெடும் பகல் தாவரங்கள்- பட்டாணி, பார்லி, ஓட்ஸ்.
குறும் பகல் தாவரங்கள்- புகையிலை, காக்லிபர், சோயாமொச்சை, நெல், கிரைசாந்திமம்.
பகலளவு சாராத் தாவரங்கள்- உருளை, ரோடோடெண்ட்ரான், தக்காளி, பருத்தி.
8. தட்பப்பதனம்.
இருபருவ மற்றும் பல பருவ தாவரச் சிற்றினங்களில் குறைந்த வெப்பநிலைக்கு (0oC முதல் 5oC) உட்படுத்தி மலர்தல் தூண்டப்படுகிறது.
தட்பப்பதனம் என்ற வார்த்தையை முதன் முதலில் T. D. லைசென்கோ என்பவரால் பயன்படுத்தப்பட்டது. (1938).
9. விதை உறக்கம்.
விதைகள் உகந்த சுற்றுச்சூழல் தன்மை இருந்தாலும் முளைக்காமல் இருக்கும் தன்மை.
10. ஃபைட்டொஜெரண்டாலஜி.
வயதாகுதல், உதிர்தல், மூப்படைதல் ஆகியவற்றை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.
கலைச்சொல் அகராதி.
1. உதிரும் பகுதி.
இலைக்காம்பின் அடிப்பகுதியில் குறுக்குவாட்டத்தில் அமைந்த மெல்லிய சுவருடைய செல்களால் ஆன அடுக்கு.
2. அல்லிலோபதி.
ஒர் தாவரம் உற்பத்தி செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரி வேதிபொருட்கள் பிற தாவரங்களின் முளைத்தல், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது.
3. சுழலசைவு.
பின்னுகொடி மற்றும் பற்றுகம்பிகளின் வளரும் நுனிதண்டில் தானாக நிகழும் அசைவு.
4. ஃபைட்டோகுரோம்.
குறைந்த செறிவில் ஒளியாக மாறக் கூடிய புரத தாவர நிறமி, சிவப்பு மற்றும் தொலைச்சிவப்பு ஒளியினால் மலர்தலை கட்டுபடுத்தும்.
5. உவர்ச்சார் இறுக்கம்.
அதிகப்படியான தாது உப்புக்கள் தாவரங்களின் வளர்ச்சி மீது ஏற்படுத்தும் அதீத விளைவுகள்.
6. அடுக்கமைத்தல்.
சில தாவர விதைகளை குளிர் நிலைக்கு உட்படுத்தி விதை உறக்கத்தை நீக்குதல்.
Technical points
1. Characteristics of phytohormones.
Usually produced in tips of roots, stem and leaves.
Transfer of hormones from one place to another takes part through conductive systems.
They required in trace quantities.
All hormones are organic in nature.
There are no specialized cells or organs for their secretion.
They are capable of influencing physiological activities leading to promotion, inhibition and modification of growth.
2. Synergistic and Antagonistic effects.
Synergistic effects- The effect of one or more substance in such a way that both promote each others activity. Example- Activity of auxin and gibberellins or cytokinins.
Antagonistic effects- The effect of two substances in such a way that they have opposite effects on the same process. One accelerates and other inhinbits. Example- ABA and gibberellins during seed or bud dormancy. ABA induces dormancy and gibberellins break it.
3. Bioassay.
Testing of substances for their activity in causing a growth response in a living plant or it's part.
Auxin- Avena curvature test or Went experiment.
Gibberellins- Dwarf pea assay
Cytokinin- Neem cotyledon assay
Ethylene- Gas chromatography
Abscisic acid- Rice coleoptile.
4. Types of Auxin.
Natural auxin- Auxin occuring in plants.
Indole Acetic acid
Indole propionic acid
Indole Butyric acid
Phenyl Acetic acid
Synthetic Auxin- These are synthesized artificially and have properties like Auxin
2 ,4- Dichloro Phenoxy Acetic Acid(2, 4-D).
2,4,5- Trichoro Phenoxy Acetic Acid (2, 4,5- T).
Napthalene Acetic Acid (NAA).
5. Apical dominance- Suppression the growth in lateral bud by apical bud due to auxin produced by apical bud. (Auxin)
Bolting- sudden elongation of stem followed by flowering. (Gibberellin)
Richmond Lang effect- Application of cytokinin delays the process of aging by nutrient mobilization. (Cytokinin)
Stress hormone- It inhibits the shoot growth and promotes growth of root system. This character protect the plants from water stress. (Abscisic acid)
6. Photoperiodism.
The physiological change on flowering due to relative length of light and darkness.
The term photoperiodism was coined by Garner and Allard (1920).
Observed in Biloxi variety of soyabean (Glycine max) and Maryland mammoth variety of tobacco (Nicotiana tabacum).
7. Classification of plants based on photoperiodism.
Long day plants- Barley and Oats.
Short lond day plants- Wheat and Rye.
Short day plants- Tobacco, Cocklebur, Soyabean, Rice and Chrysanthemum.
Long short day plants- some species of Bryophyllum, Night jasmine
Intermediate day plants- Sugarcane and Coleus
Day neutral plants- Potato, Rhododendron, Tomato and Cotton.
8. Vernalization.
Many species of biennials and perennials are induced to flower by low temperature exposure (0oC to 5oC).
The term was first used by T. D. Lysenko(1938).
9. Seed dormancy.
The condition of a seed when it fails to germinate even in suitable environmental condition.
10.Phytogerontology.
The branch of botany which deals with ageing, abscission and senescence.
Glossary.
1. Abiscission zone.
A region near the base of petiole of leaf which contains abscission layer.
2. Allelopathy.
The chemical substances released by one plant species which affect or benefit another plant.
3. Nutation.
The growing stems of twiner and tendrils show automatic movement.
4. Phytochrome.
A photo reversible proteinaceous plant pigment in very low concentration that absorbs red and far red light which controls flowering.
5. Salt stress.
Adverse effects of excess mineral salts on plants.
6. Stratification.
A process of breaking the dormancy of some plants resulting from chilling requirements.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment