38 Days only for NEET 2021



Lesson 16- Digestion and Absorption. Part 1 (Tamil / English )

பாடம் 16- செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்- பாகம் 1

1. செரிமான மண்டலம். 
உணவு உட்கொள்ளுதல், உணவிலுள்ள பெரிய மூலக்கூறுகளைச் சிறிய மூலக்கூறுகளாகச் சிதைத்தல் (செரித்தல்), இந்த மூலக்கூறுகளை இரத்தத்தினுள் உட்கிரகித்தல், உட்கிரகிக்கப்பட்ட பொருட்களைச் செல் உட்பொருள்களாக மாற்றுதல் (தன்மயமாதல்) மற்றும் செரிக்காத கழிவுகளை வெளியேற்றுதல் ஆகியன செரித்தலின் பல்வேறு நிலைகள் ஆகும். 

2. பற்கள். 
தீக்கோடான்ட்- ஒவ்வொரு பல்லும் தாடை எலும்பில் உள்ள குழியினுள் பதிந்துள்ள முறை. 
டைபியோடான்ட்- மனிதன் உட்படப் பல பாலூட்டிகள் தன் வாழ்நாளில் இரு முறை பற்கள் முளைக்கும் தன்மையுடையன.முதலில் தோன்றும் 20 தற்காலிகப் பால் பற்கள் உதிர்ந்து பின்னர் 32 நிரந்தரப் பற்கள் தோன்றும். 
ஹெட்டிரோடான்ட்- நிரந்தரப் பற்களில் உளி வடிவ வெட்டும் பற்கள் (I) , கூரிய கிழிக்கும் தன்மை கொண்ட கோரைப்பற்கள் (C) , அரைத்தலுக்கான முன் கடைவாய் பற்கள் (PM) மற்றும் பின் கடைவாய் பற்கள்(M) எனும் வகைகளில் உள்ள தன்மை. 

3. மனிதனின் பற் சூத்திரம். 
2123/2123x2

4. GERD-  இரப்பை உணவுக்குழல் பின்னோட்ட நோய். 
இரைப்பை உணவைக் கடையும் போது இந்தச் சுருக்குத் தசைகள் சரியாகச் சுருங்காத நிலை ஏற்பட்டால் அமிலத்தன்மை கொண்ட இரைப்பை நீர் உணவுக் குழலுக்குள் மீண்டும் நுழைகிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. 

5. லிபர்கன் மடிப்புகள். 
சிறுகுடலின் குடலுறிஞ்சிகளின் அடிப்பகுதியில் சக்கஸ் எண்டிரிகஸ் எனும் சிறுகுடல் நீரைச் சுரக்கும் மடிப்புகளும் உள்ளன. 
குடல் வால்- பெருங்குடலில், பிதுக்கப்பகுதி, பெருங்குடல் பகுதி மற்றும் மலக்குடல் எனும் மூன்று பகுதிகள் உள்ளன. சிறுகுடல், பெருங்குடலுடன் பிதுக்கப் பகுதியில் இணைகிறது. இதன் அடிப்பகுதியில் உள்ள குறுகிய விரல் போன்ற குழல் தன்மை கொண்ட நீட்சி. 

6. செரிமானச் சுரப்பிகள். 
உமிழ் நீர்ச் சுரப்பிகள்- மனிதனின் வாய்க்குழியில் மூன்று இணை உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன. அவை மேலண்ணச் சுரப்பி, கீழ்த்தாடைச் சுரப்பி மற்றும் நாவடிச் சுரப்பி ஆகியனவாகும். 
இவற்றுள் கன்னப்பகுதியில் உள்ள மேலண்ணச் சுரப்பி மிகப்பெரியது. நாக்கிற்குக் கீழ் உள்ள சுரப்பி நாவடிச் சுரப்பியாகும்.
மேலண்ணச் சுரப்பியின் நாளத்திற்கு ஸ்டென்சனின் நாளம் என்றும் கீழ்த்தாடைச் சுரப்பியின் நாளத்திற்கு வார்ட்டனின் நாளம் என்றும் மற்றும் நாவடிச் சுரப்பி நாளத்திற்கு ரிவினிஸ் நாளம் அல்லது பர்தோலின் நாளம் என்றும் பெயர். 

7. இரைப்பை சுரப்பி. 
இரைப்பையின் உட்சுவரில் இரைப்பை சுரப்பிகள் உள்ளன. 
இங்குள்ள முதன்மை செல்கள் அல்லது பெப்ட்டிக் செல்கள் அல்லது சைமோஜன் செல்கள் இரைப்பை நொதிகளைச் சுரக்கின்றன. 
பெரைட்டல் செல்கள் அல்லது ஆக்சின்டிக் செல்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 ஐ உட்கிரகிக்கத் தேவையான கேசல்ஸ் உள்ளமைக் காரணியையும் சுரக்கின்றன. 

8. கல்லீரல். 
நமது உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பியாகிய கல்லீரல் வயிற்றறையின் வலது மேல் பகுதியில் உதரவிதானத்திற்குச் சற்றுக் கீழ் அமைந்துள்ளது. 
கல்லீரல் இடது மற்றும் வலது என இரு பெரிய கதுப்புகளையும் இரண்டு சிறிய கதுப்புகளையும் கொண்டது. 
இக்கதுப்புகள் உதரவிதானத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. 

9. ஒடி சுருக்குத் தசை. 
பொதுப்பித்த நீர் நாளம் கீழ்நோக்கிச் சென்று கணைய நாளத்துடன் இணைந்து கல்லீரல் கணையப் பொதுநாளமாக உருவாகிச் சிறு துளை வழியே முன் சிறுகுடலில் திறக்கிறது.  இத்துளை ஒடி சுருக்குத் தசையால் சூழப்பட்டுள்ளது. 

10. கணையம். 
செரிமான மண்டலத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுரப்பி கணையம் ஆகும். 
நீண்ட  , மஞ்சள் நிறமுடைய இது ஒரு கூட்டுச் சுரப்பி யாகும். 
இதில் நாளமுள்ள சுரப்பிகளும் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளும் உள்ளன. 
இது முன் சிறுகுடலின் U வடிவ பகுதியின் இரு தூம்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. 

கலைச்சொல் அகராதி. 
1. கொலாஜன். 
மூன்று சுருள் அமைப்பு கொண்ட அதிக இழுவிசைத் திறன் கொண்ட புரதம். 

2. ஒரு பால் உயிரி. 
ஆண் இனப்பெருக்க உறுப்புகளோடு ஆண் உயிரி தனியாகவும் பெண் இனப்பெருக்க உறுப்புகளோடு பெண் உயிரி தனியாகவும் இரு வேறாகக் காணப்படல். 

3. டிரிலோஸ்ஃபியர். 
மண்புழுவின் சுரப்புகள், வளைதோண்டுதல் மற்றும் நாங்கூழ் கட்டிகள் வெளியேற்றம் போன்ற இயக்கங்களால் மண்ணில் ஏற்படும் துளைகள். 

4. டிஸ்ப்னோயா. 
வலியுடன் கூடிய சுவாசம்.

Technical points 
1. Digestive system. 
The process of digestion involves intake of the food (ingestion), breakdown of the food into micromolecules (digestion), absorption of these molecules into the blood stream (Absorption), the absorbed substances becoming components of cells(Assimilation) and elimination of undigested substances (Egestion). 

2. Teeth. 
Thecodont- Each tooth is embedded in a socket in the jaw bone. 
Diphyodont- Human beings and many mammals form two sets of teeth during their life time, a set of 20 temporary milk teeth (deciduous teeth) which gets replaced by a set of 32 permanent teeth (Adult teeth).
Heterodont- The permanent teeth are of four different types. Incisors(I) chisel like cutting teeth, Canines (C) dagger shaped tearing teeth, Premolars (PM) for grinding, and Molars(M) for grinding and crushing. 

3. Human dental formula. 
2123/2123x2
Arrangement of teeth in each half of the upper and lower jaw, in the order of I, C, PM and M can be represented by dental formula. 

4. GERD (Gastero Oesophagus Reflex Disorder) 
If the cardiac sphincter does not contract properly during the churning action of the stomach the gastric juice with acid may flow back into the oesophagus and cause heart burn, resulting in GERD. 

5. Crypts of Leiberkuhn. 
The wall of the small  intestine bears crypts between the base of villi. 
Vermiform appendix- In large intestine, the caecum is a small blind pouch like structure that opens into the colon and it possesses a narrow finger like tubular projection. 

6. Digestive glands. 
Salivary glands- three pairs of salivary glands in the mouth. They are the largest parotids gland in the cheeks, the sub maxillary/sub mandibular in the lower jaw and the sublingual beneath the tongue. 
These glands have such as Stenson's duct, Wharton's duct and Bartholin's duct or duct of Rivinis. 

7. Gastric glands. 
The wall of the stomach is lined by gastric glands. 
Chief cells or peptic cells or Zymogen cells in the gastric glands secrete gastric enzymes and Goblet cells secrete mucus. 
The parietal or oxyntic cells secrete HCL and an intrinsic factor responsible for the absorption of vitamin B12 called Castle's intrinsic factor. 

8. Liver. 
Largest gland in our body is situated in the upper right side of the abdominal cavity, just below the diaphragm. 
The liver consists of two major left and right lobes and two minor lobes. These lobes are connected with diaphragam. 

9. Sphincter of oddi. 
The opening of the hepato pancreatic duct into the duodenum is guarded by a sphincter. 

10. Pancreas. 
The second largest gland in the digestive system in the pancreas, which is a yellow coloured, compound elongated organ consisting of exocrine and endocrine cells. 
It is situated between the limbs of the U shaped duodenum. 

Glossary. 
1. Collagen. 
A triple helix protein which allows for great tensile strength. 

2. Dioecious. 
Animals in which male and female reproductive organs in separate individuals. 

3. Drilosphere. 
Is the part of the soil influenced by earthworm secretions, burrowing and castings. 

4. Dyspnoea. 
Painful respiration. 

5. Electromagnetic radiation. 
Electromagnetic radiation is a form of energy that is all around us and takes many forms, such as radio waves microwaves, X rays and gamma rays.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany