30 Days only for NEET 2021



Lesson 19- Excretion Part 2  (Tamil / English )

பாடம் 20- இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம். பகுதி 1

1. இயக்கங்களின் வகைகள். 
அமீபா போன்ற இயக்கம்- மேக்ரோஃபேஜ் போன்ற செல்கள் நோய்க்கிருமிகளை விழுங்குவதற்காக தனது சைட்டோபிளாசத்தை பயன்படுத்திப் போலிக்கால்களை உண்டாக்கி இவ்வகை இயக்கத்தை மேற்கொள்கின்றன. 
குறு இழை இயக்கம்- இவ்வகை இயக்கம் சுவாசப்பாதை மற்றும் இனப்பெருக்கப் பாதையில் அமைந்துள்ள குறுயிழை எபிதீலிய செல்களில் நடைபெறுகின்றது. 
நீளிழை இயக்கம்- சாட்டை போன்ற இயக்க உறுப்பு அல்லது நீளிழைகளைக் கொண்ட செல்களில் இவ்வகை இயக்கம் நடைபெறுகின்றது. 
தசை இயக்கம்- இவ்வகை இயக்கம் கைகள், கால்கள், தாடைகள், நாக்கு ஆகிய உறுப்புகளில் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையால் நடைபெறுகின்றது. 

2. தசைகளின் வகைகள்.
கருவளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து தோன்றும் சிறப்புத்திசுவே தசைகள் ஆகும். தசைகள் மையோசைட்டுகள் எனும் செல்களாலானவை. பெரியவர்களின் உடல் எடையில் 40-50% அளவு தசைகள் உள்ளது. இந்தச் செல்கள் இணைப்புத் திசுவால் இணைக்கப்பட்டுத் தசைத்திசுவாகின்றது. 
தசைகளை எலும்புத் தசைகள், உள்ளூறுப்புத் தசைகள் மற்றும் இதயத் தசைகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 

3. சார்கோலெம்மா. 
ஒவ்வொரு தசையிழையும் மெலிந்த நீண்ட அமைப்பாகும். பெரும்பாலானவை ஒரு முனையோ அல்லது இரு முனைகளுமோ கூரியனவாக முடிகின்றன. தசையிழையில் பல நீள்கோள வடிவ உட்கருக்கள் சார்கோலெம்மா எனப்படும்  பிளாஸ்மா சவ்வின் கீழ் அமைந்துள்ளன. தசையிழையின் சைட்டோபிளாசம் சார்கோபிளாசம் எனப்படும். 
மையோகுளோபின்- என்பது தசையிழைகளில் காணப்படும் சிவப்பு நிறச் சுவாச நிறமியாகும். இது ஹீமோகுளோபின் போன்று ஆக்ஸிஜனை கவரும் தன்மையுடைய இரும்பு அயனிகளைக் கொண்ட சுவாச நிறமியாகும். இந்நிறமி ஆக்ஸிஜனைத் தேக்கிவைக்கும் தன்மை கொண்டது. 

4. தசை நுண்ணிழை.
இதன் நீளம் முழுவதும் அடுத்தடுத்த அடர்த்தி மிகு மற்றும் அடர்த்தி குறை பட்டைகள் காணப்படுகின்றன. 
அடர்த்தி மிகு A பட்டைகள் (மாறுபட்ட தன்மை கொண்ட பட்டைகள்) மற்றும் அடர்த்தி குறைவான I பட்டைகள் (ஒத்த தன்மை கொண்ட பட்டைகள்) ஆகியன மாறி மாறி நேர்த்தியான அமைந்துள்ளன. 
ஒவ்வொரு அடர்த்தி மிகு பட்டையிலும் அடர்த்தி குறைவான H பகுதி எனும் மையப்பகுதி உள்ளது. 
ஒவ்வொரு H பகுதியையும் M என்னும் அடர்த்தி மிகு கோடு செங்குத்துவாக்கில் இரண்டாகப் பிரிகிறது. 
I பட்டைகளின் நடுவில் அடர்த்தியான Z கோடு என்னும் பரப்பு காணப்படுகிறது. 

5. தசைச் சுருக்கப் புரதங்களின் அமைப்பு. 
தசைச் சுருக்கச் செயலானது தசையிழைகளில் உள்ள ஆக்டின் மற்றும் மையோசின் எனும் தசைப் புரதங்களைச் சார்ந்தது. 
HMM- குட்டையான கரத்தில் கனமான மீரோமையோசின். 
LMM- வால் பகுதியில் இலகுவான மீரோமையோசின். 
ஒவ்வொரு மெல்லிய இழையும், பின்னிய இரு ஆக்டின் மூலக்கூறுகளால் ஆனது. ஆக்டினில் குளோபுலார் ஆக்டின் பகுதி மற்றும் இழை ஆக்டின் பகுதிகள் என இரு பகுதிகள் உள்ளன. 

6. சறுக்கும் இழை கோட்பாடு. 
இக்கோட்பாடு 1954 ஆம் ஆண்டு ஆன்ட்ரூ F ஹக்ஸ்லி மற்றும் ரோல்ப் நீடர்கெர்க் என்பவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கோட்பாட்டின் படி குறிப்பிட்ட நீளமுடைய ஆக்டின் மற்றும் மையோசின் இழைகள் ஒன்றின் மீது ஒன்றாக இழைகிறது. இதன் விளைவாகத் தசைச்சுருக்கம் ஏற்படுகின்றன. இந்நிகழ்வின் போது ஆற்றலைப் பயன்படுத்தபடுகின்றது. 

7. தசையின் இழுவிசை. 
தசை சுருக்கத்தினால் உருவானது. பளு அல்லது சுமை என்பது தசைச் சுருக்கத்திற்கு எதிரான ஆற்றல் அல்லது எடை ஆகும். தசை சுருக்கம் என்பது தசைகளில் இழுவிசையை ஏற்படுத்துவதாகும்.

8. மையோசினின் தலைப்பகுதியும் அது பிணைப்பும் பகுதியும் 90० கோணத்திலிருந்து 45० க்கு சாய்ந்த பின் விசையின் தாக்கம் தொடங்குகிறது. இதனால் குறுக்குப்பால அமைப்பு உறுதியான உயர்விசை பிணைப்பாக மாறி மையோசின் தலைப்பகுதியை சுழல வைக்கிறது. 

9. எலும்புத் தசை கிளைக்கோஜன் பகுப்பாய்வு. 
தடகள வீரர்களின் விளையாட்டுத் திறனை அளவிட தசைகளில் உயிர்த்திசு சோதனை செய்யப்படுகிறது. தசைகளில் உள்ள கிளைக்கோஜனை அளவிட உதவும் நிலையான முறையாகும். 

10. மணிக்கட்டு எலும்பு கால்வாய் நோய். 
மணிக்கட்டில் உள்ள எலும்புகளும் இணைப்பு நார்களும் சிறுத்து மைய நரம்பை அழுத்துகிறது. 

கலைச்சொல் அகராதி. 
1. ஸ்கிளிரைட்டுகள். 
கணுக்காலிகளின் மென்மையான உடலைப் பாதுகாக்கும் கடினமான, கவசம் போன்ற அமைப்புகள். கால்சியப் படிவு அல்லது புரதங்களின் குறுக்கிணைவால் உருவான வலுவான புறச்சட்டகம்.

Technical points 
Technical points. 
1. Types of movement. 
Amoeboid movement- cells such as macrophages exhibit amoeboid movement for engulfing pathogens by psudopodia formed by the streaming movement of the cytoplasm. 
Ciliary movement- this type of movement occurs in the respiratory passages and genital tracts which are lined by ciliated epithelial cells. 
Flagellar movement- this type of movement occurs in the cells which are having flagella Or whip like motile organelle. 
Muscular movement- the movement of hands, legs, jaws, tongue are caused by the contraction and relaxation of the muscle which is termed as the muscular movement. 

2. Types of muscles. 
Muscles are specialized tissues which are derived from the embryonic mesoderm. They are made of cells called myocytes and constitute 40-50 percent of body weight in an adult. 
The muscles are classified into three types, namely skeletal, visceral and cardiac muscles. 

3. Sarcolemma. 
Each muscle fibre is thin and elongated. Most of them taper at one or both ends. Muscle fibre has multiple oval nuclei just beneath it's plasma membrane. The cytoplasm of the muscle fibre is called the sarcoplasm. 
Myoglobin- is a red coloured respiratory pigment of the muscle fibre. It is similar to haemoglobin and contains iron group that has affinity towards oxygen and serves as the reservoir of oxygen. 

4. Myofibril. 
Along the length of each myofibril there are a repeated series of dark and light bands. 
The dark A bands (Anisotropic bands) and the light l bands (isotropic bands) are perfectly aligned with one another. 
Each dark band has a lighter region in its middle called the H zone. 
Each H zone is bisected vertically by a dark line called the M line. 
The light I bands also have a darker mid line area called the Z disc. 

5. Structure of contractile proteins. 
Contraction of the muscle depends on the presence of contractile proteins such as actin and myosin in the myofilaments. 
HMM- The short arm constitutes the heavy meromyosin. 
LMM- The tail portion forms the light meromyosin.
The thin filaments also contain several regulatory proteins like tropomyosin and troponin which help in regulating the contraction of muscles along with actin and myosin. 

6. Sliding filament theory. 
In 1954,Andrew F Huxley and Rolf Niedergerke proposed the sliding filament theory to explain muscle contraction. According to this theory, overlapping actin and myosin filaments of fixed length slide past one another in an energy requiring process, resulting in muscle contraction.

7. Contraction. 
Is the creation of tension in the muscle which is an active process and relaxation is the release of tension created by contraction. 

8. Power stroke. 
(Cross bridge tilting) 
Begins after the myosin head and hinge region tilt from a 90o angle to a 45o angle. 

9. Skeletal muscle Glycogen Analysis. 
Used to measure an athlete's sporting performance by taking muscle biopsies. It is a standard method to measure muscle glycogen. 

10. CTS. 
Carpal Tunnel syndrome. 
The narrow passage bounded by bones and ligaments in the wrist gets narrowed and
pinches the median nerve. 

Glossary. 
1. Sclerites. 
Is hard armor like structure for arthopods soft body. They are really deposition of calcium or cross linking of protein to make the exoskeleton stronger. 

2. Septum pellucidum. 
Located in the midline of the brain, between the two cerebral hemispheres. It separates the lateral ventricles I and II.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany