பாடம் 21- நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு. பகுதி 1
1. நரம்பு மண்டலம்.
நியூரான்கள் எனப்படும் அதி சிறப்படைந்த செல்களால் ஆக்கப்பட்டது நரம்பு மண்டலம் ஆகும். இச்செல்களே பல்வேறு தூண்டல்களை பெற்று அதன் தன்மைகளைக் கண்டறிந்து, செயல்படுத்தி அவற்றைக் கடந்து கின்றன.
உணர்ச்சியறிதல் பணிகள்
இயக்கு பணிகள்
தானியங்கு பணிகள்
2. மனித நரம்பு மண்டலம்.
இதனை மைய நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு மண்டலம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
நியூரான்களை அவை செய்யும் வேலைகளை அடிப்படையாக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
உட்செல் நியூரான்கள்- உணர்வுறுப்புகள் பெறும் நரம்புத் தூண்டல்களை மைய நரம்பு மண்டலத்திற்குக் கடத்துபவை.
வெளிச்செல் நியூரான்கள்- மைய நரம்பு மண்டலத்திலிருந்து இயக்கு தூண்டல்களை செயல்படு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்பவை.
இடை நியூரான்கள்- உட்செல் மற்றும் வெளிச்செல் நியூரான்களுக்கிடையே மைய நரம்பு மண்டலத்தில் இணைப்பாக உள்ளவை.
3. நிஸ்ஸல் துகள்கள்.
நியூரானின் செல் உடல் மற்றும் டென்ட்ரைட்டுகளில் சைட்டோபிளாசம் காணப்படுகிறது. மேலும் நிஸ்ஸல் துகள்களைக் கொண்ட எண்டோபிளாச வலையும் உள்ளது.
ரான்வியர் கணு- ஆக்ஸானில் உள்ள மயலின் உறை தொடர்ச்சியாகக் காணப்படுவதில்லை. அடுத்தடுத்த ஷிவான் செல்களுக்கிடையயே சிறு இடைவெளி உண்டு.
4. நரம்பு சந்திப்பு முடிச்சு.
ஆக்ஸானின் சேய்மை முனையின் ஒவ்வொரு கிளையும் குமிழ் போன்ற முடிச்சில் முடிகிறது. இது நரம்பு சந்திப்பு முடிச்சு எனப்படும். இதனுள் நரம்புணர்வு கடத்திகள் நிரம்பிய சைனாப்டிக் பைகள் உள்ளன.
ஆக்ஸான்கள் செல் உடலிலிருந்து பெறும் தூண்டல்களை நரம்பு செல் இடைவெளி அல்லது நரம்பு தசை சந்திப்பிற்குக் கடத்துகின்றன.
5. நியூரான்களின் வகைகள்.
பல முனை நியூரான்கள்- இவ்வகையில் ஒரு ஆக்ஸானும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் டென்ட்ரைட்டுகளும் இருக்கும்.
இரு முனை நியூரான்கள்- இவ்வகையில் ஒரு ஆக்ஸான் மற்றும் ஒரு டென்ட்ரைட் மட்டுமே இருக்கும்.
ஒரு முனை நியூரான்கள்- இவ்வகையில் குட்டையான சிறு நீட்சியும் ஒரு ஆக்ஸானும் மட்டுமே இருக்கும்.
6. நரம்பு தூண்டலின் தோற்றமும் கடத்துதலும்.
செல் உள் திரவம்- அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் பாஸ்பேட்டுகள் உள்ளன. இவற்றுடன் எதிர்மறை மின்தன்மை கொண்ட புரதங்களும் பிற கரிம மூலக் கூறுகளும் உள்ளன.
செல் வெளித்திரவம்- அதிக அளவு சோடியம் குளோரைடு, பைகார்பனேட்டுகள் , உணவூட்டப் பொருட்கள் மற்றும் செல்லுக்கான ஆக்ஸிஜன் ஆகியவற்றுடன் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நியூரான்களிலிருந்து வெளியேற்றப்படும் வளர்சிதை மாற்றக் கழிவுகள் ஆகியவையும் உள்ளன.
7. ஒய்வு நிலை சவ்வு மின் அழுத்தம்.
ஓய்வுநிலையில் உள்ள நியூரானின் பிளாஸ்மா சவ்வின் புற, அகப் பரப்புகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு. இந்நிலையில் நியூரிலெம்மாவின் வெளிப்புறத்திலிருந்து உள்ளே வரும் சோடியம் அயனிகளை விட உட்புறத்தில் இருந்து அதிக அளவு பொட்டாசியம் அயனிகள் வெளியேறுகின்றன.
8. செயல்நிலை சவ்வு மின்னழுத்தம்.
செல் உடலிலிருந்து ஆக்ஸானுக்கு செய்திகள் அனுப்பப்படும் போது செயல்நிலை மின்னழுத்தம் தோன்றுகிறது. மின்முனைப்பியக்க நீக்கம், மின்முனைப்பியக்க மீட்சி மற்றும் உச்சமின்முனைப்பியக்கம் ஆகிய மூன்று நிலைகளை கொண்டுள்ளது.
9. சைனாப்சிஸ் பகுதியில் தூண்டல் கடத்தப்படுதல்.
இரு நியூரான்கள் சந்திக்கும் பகுதி நரம்பு சந்திப்பு அல்லது சைனாப்ஸ் எனப்படும். இதன் வழியாகத் தூண்டல்கள் கடத்தப் படுகின்றன.
சைனாப்ஸில் தூண்டலைத் தரும் நியூரான், முன் சைனாப்டிக் நியூரான் என்றும், தூண்டலைப் பெறும் நியூரான் பின் சைனாப்டிக் நியூரான் என்றும் அழைக்கப்படுகிறது.
10. சைனாப்டிக் பிளவு.
சைனாப்ஸில், இவ்விரண்டும் சந்திக்கும் இடத்தில் உள்ள சிறு இடைவெளிக்குச் சைனாப்டிக் பிளவு என்று பெயர். இரண்டு நியூரான்களுக்கு இடையே உள்ள இவ்விடைவெளி அமைப்பு ரீதியான இடைவெளியாகவும் செயல் ரீதியான பாகமாகவும் செயல்படுகிறது.
கலைச்சொல் அகராதி.
1. ஒடியின் சுருக்குத்தசை.
சிறுகுடலினுள் வேட்டரின் புனல் திறக்கும் இடத்தில் உள்ள சுருக்கத்தசை
.
2. பாய்டன் சுருக்கு தசை.
கணைய நாளத்துடன் இணையும் முன்பு உள்ள பித்த நாளப்பகுதியில் காணப்படும் சுருக்குத் தசை.
3. டீனியே கோலை.
பெருங்குடலில் உள்ள நீளவாட்டுத் தசை இழைகள்.
Technical points
Technical points.
1. Neural system.
It comprises of highly specialized cells called neurons, which can detect, receive, process and transmit different kinds of stimuli.
Sensory functions
Motor functions
Autonomic functions
2. Human neural system.
Is divided into two, the central neural system (CNS) and the pheripheral neural system (PNS).
There are three functional classes of neurons.
They are the afferent neurons that take sensory impulses to the central neural system ( CNS) from the sensory organs.
The efferent neurons that carry motor impulses from the CNS to the effector organs.
Interneurons that lie entirely within the CNS between the afferent and efferent neurons.
3. Nissl's granules.
The cell body and the dentrites contain cytoplasm and granulated endoplasmic reticulum.
Nodes of Ranvier.
Schwann cells are not continuous along the axon; so there are gaps in the myelin sheath between adjacent Schwann cells. These gaps are called Nodes of Ranvier.
4. Synaptic knob.
Each branch at the distal end of the axon terminates into a bulb like structure. It possess synaptic vesicles filled with neurotransmitters.
The axon transmits nerve impulses away from the cell body to an inter neural space or to a neuro muscular junction.
5. Types of neuron.
Multipolar neurons- have many processes with one axon and two or more dendrites.
Bipolar neurons- have two processes with one axon and one dendrite.
Unipolar neurons- have a single short process and one axon.
6. Generation and conduction of nerve impulses.
Intracellular fluid- with large amounts of potassium and magnesium phosphate along with negatively charged proteins and other organic molecules.
Extra cellular fluid- found outside the axolemma contains large amounts of sodium chloride, bicarbonates, nutrients and oxygen for the cell; and carbon dioxide and metabolic wastes released by the neuronal cells.
7. Resting membrane potential.
The electrical potential difference across the plasma membrane of a resting neuron. During which the interior of the cell is negative due to greater efflux of K+ outside the cell than Na + influx into the cell.
8. Action membrane potential.
It occurs when a neuron sends information down an axon, away from the cell body. It includes following phases, depolarisation, repolarisation and hypo polarization.
9. Synaptic transmission.
The junction between two neurons is called a synapse through which a nerve impulse is transmitted.
The first neuron involved in the synapse forms the pre- synaptic neuron and the second neuron is the post synaptic neuron.
10. Synaptic cleft.
A small gap between the pre and post synaptic membranes. That forms a structural gap and a functional bridge between neurons.
Glossary.
1. Sphincter of oddi.
Sphincter which guard the opening of the ampulla of vater into the duodenum.
2. Sphincter of boydon.
Sphincter which guard opening of the bile duct before it joins with the pancreatic duct.
3. Taeniae coli.
Longitudinal muscular chords in the colon.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment