27 Days only for NEET 2021



LESSON 21- Neural control and co ordination- PART 2  (Tamil / English )

பாடம் 21- நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு. பகுதி 2

1. மைய நரம்பு மண்டலம். 
கட்டுப்பாட்டு மண்டலமாகவும் , செய்திகளை ஒருங்கிணைத்துக் கட்டளையிடும் பகுதியாகவும் இருப்பது மூளையாகும். இது தகவல் செயலாக்கக் களமாகும். மூளைப்பெட்டகத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மூளையைச் சுற்றி மூன்று அடுக்கு மூளை சவ்வுகள் காணப்படுகின்றன. 
மூளைப்பெட்டகத்தின் உட்பரப்பில் பரவியுள்ள தடித்த வெளிப்புற உறை டூயூராமேட்டர் எனப்படும். மூளையோடு ஒட்டியுள்ள உள் உறை பயாமேட்டர் உறையாகும்.இடையில் உள்ள மெல்லிய உறை அரக்னாய்டு படலம் எனப்படும். 
அரக்னாய்டு படலத்திற்கும் டூயூராமேட்டருக்கும் இடையேயுள்ள குறுகிய இடைவெளிக்கு டூயூராமேட்டர் கீழ் இடைவெளி என்று பெயர். அரக்னாய்டு படலத்திற்கும் பயாமேட்டருக்கும் இடையேயுள்ள இடைவெளி அரக்னாய்டு கீழ் இடைவெளி என்று பெயர். 

2. முன் மூளை.
பெருமூளை மற்றும் டயன்செஃபலான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. மூளையின் பெரிய பகுதியான பெருமூளை, அறிவின் அமர்விடம் எனப்படும். டயன்செஃபலானில் எபிதலாமஸ், தலாமஸ், ஹைப்போதாலமஸ் என்ற மூன்று இணை அமைப்புகள் காணப்படுகின்றன. 
நடுமூளை- டயன்செஃபலானுக்கும் பான்ஸுக்கும் நடுவே உள்ள பகுதியே நடுமூளையாகும். நடுமூளையின் கீழ்ப்பகுதியில் ஓரிணை  நீள்வச நரம்புத்திசு கற்றைகள் உள்ளன. இதற்குப்  பெருமூளைக் காம்புகள் என்று பெயர். 
பின்மூளை- ராம்பன்செஃபலான் பகுதியே பின்மூளையாகும். இதில் சிறுமூளை, பான்ஸ் வரோலி மற்றும் முகுளம் ஆகியவை அமைந்துள்ளன. 

3. அனிச்சை செயல். 
மூளைக்கும் செயல்படு உறுப்புக்குமிடையே தண்டுவடம் இணைப்புப் பாலமாக இருக்கின்றது. சில சமயங்களில் உடனடி எதிர்வினை தேவைப்படும் அவசர காலங்களில் தண்டு வடம் மூளையைப் போல் செயல்பட்டுத் தானே இயக்கு தூண்டல்களைத் தொடர்புடைய செயல்படு உறுப்புகளுக்கு அனுப்பி எதிர்வினையை ஏற்படுத்தி விடுகிறது. தண்டு வடத்தின் இத்தகைய அதிவேகச் செயல்பாடே அனிச்சைச் செயல் எனப்படுகிறது. 
அனிச்சை வில்- ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு எதிராக அதிவேகமாகத் திட்டமிடாத தொடர்ச்செயல்கள் தன்னிச்சையாகவே நடைபெறுகின்றன. இவ்வாறான அனிச்சை செயல்பாட்டில் பங்கேற்கிற நரம்பு சார் அமைப்புகளின் தொகுப்பு. 

4. உணர்வைப் பெறுதல் மற்றும் செயல்முறையாக்கம். 
உயிரியின் சுற்றுச் சூழலிலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அவற்றை உணர வைப்பது நமது உணர்வறிதல் பண்பே ஆகும். 
தூண்டலை உணர்தல் மற்றும் தூண்டலின் தன்மை உணர்தல் ஆகியவை மூளையில் நடைபெறுகின்றன. 

5. ஒளி உணர் உறுப்பு- கண். 
கண் பார்வை உறுப்பாகும். கண்ணானது, மண்டையோட்டின் கண்கோள குழியினுள் கீழ்க்கண்ட ஆறு வெளியார்ந்த தசைகளால் பொருத்தப்பட்டுள்ளது. 
அவையாவன, மேற்புறத்தசைகள், கீழ்புறத்தசைகள், பக்கவாட்டுத் தசைகள், நடுப்புற நேர்தசைகள் , மேற்புற சாய்வு தசைகள். 

6. கண் கோளம். 
கண் கோளவடிவமானது. இவற்றில் நாரிழையாலான ஸ்கிளிரா எனும் விழிவெளிப்படலம், இரத்த நாளங்களைக் கொண்ட கோராய்டு எனும் விழி நடுப்படலம் மற்றும் ஒளி ஊணர்தன்மைக் கொண்ட விழித்திரை. 
விழித்திரை- கண்ணின் உள் உறையான விழித்திரை இருபகுதிகளைக் கொண்டுள்ளது. அவை ஒளி உணர்தன்மையற்ற நிறமி எபிதீலியங்களைக் கொண்ட பகுதி, ஒளி உணர் நரம்புப்பகுதி. 

7. ஒளி உணர் செயல்முறைகள். 
கண்ணில் நுழையும் ஒளியானது கார்னியா, முன்கண் திரவம் மற்றும் லென்ஸ் மூலம் விலகலடைந்து விழித்திரையில் குவிக்கப்படுகிறது. இதனால் விழித்திரையில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்கள் கிளர்ச்சியடைகின்றன. 
குச்சி மற்றும் கூம்பு செல்களிலுள்ள நிறமிப்பகுதியில் ரெட்டினால் என்னும் வைட்டமின் A வழிப்பொருளும், ஆப்சின் எனும் புரதமும் காணப்படுகிறது. 

8. கண்ணின் ஒளிவிலகல் குறைபாடுகள். 
மையோப்பியா- கிட்டப்பார்வை. 
ஹைப்பர் மெட்ரோப்பியா - தூரப் பார்வை. 
பிரஸ்பையோபியா- வெள்ளெழுத்து.-  வயது முதிர்வின்  காரணமாக கண் லென்சுல்கள் மீள்தன்மையையும் விழி தகவமைதலையும் இழப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. 
அஸ்டிக்மாடிசம்- இது ஒழுங்கற்ற வளைவுப்பரப்பைக் கொண்ட கார்னியா மற்றும் லென்சுகளால் ஏற்படுகிறது. 
கண்புரை- விழிலென்சில் உள்ள புரதங்களில் ஏற்படும் மாற்றத்தால் லென்சானது ஒளி ஊடுருவும்  தன்மையை இழந்து இந்நிலை ஏற்படுகிறது. 

9. ஒலி உணர்வேற்பிகள். 
செவி. 
ஒலியை உணர்தல், சமநிலை பேணல் என்னும் இரு செயல்களை செயல்படுத்தும் உறுப்பாகச் செவி செயல்புரிகிறது.
கார்ட்டை உறுப்பு- ஒலி உணர்தன்மைக் கொண்ட கார்ட்டை உறுப்பு பேசிலார் படலத்தின் மேல்புறம், ஒரு மேடு போன்று அமைந்துள்ளது. பேசில்லார் படலத்தின் முழு நீளத்திற்கும் நான்கு வரிசைகளில் ஏராளமான மயிரிழைச் செல்கள் காணப்படுகின்றன. 

10. காக்ளியா. 
என்பது நத்தைச் சுருள் போல் சுருண்டு காணப்படும். இது இரண்டு படலங்களால் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
அவை ஸ்கேலா வெஸ்டிபியூலை, ஸ்கேலா டிம்பானி , ஸ்கேலா மீடியா ஆகும். 

கலைச்சொல் அகராதி. 
1. டிஃப்லோசோல். 
வளைதசை  புழுக்களின் குடலின், முதுகு புற மைய அச்சில் உள்ள மடிப்பு. 

2. கெர்க்ரிங் வால்வுகள். 
பின் சிறுகுடலில் உள் பகுதியில் உள்ள வளைய வடிவ மடிப்புகள்.

Technical points 
1. Central nervous system. 
The brain acts as the command and control system. It is the site of information processing. It is located in the cranal cravity and is covered by three cranial meninges.
The outer thicker layer is Duramater which lines the inner surface of the cranial cavity. The median thin layer is Arachnoid mater which is separated from the duramater by narrow subdural space. 
The innermost layer is piameter which is closely adhered to the brain but separated from the arachnoid mater by the subarachnoid space. 

2. Forebrain. 
It comprises the following regions. Cerebrum and Diencephalon. Cerebrum is the seat of intelligence and forms the major part of the brain. Diencephalon consists largely of following three paired structures. 
Midbrain- is located between the diencephalon and the pons.The lower portion of the midbrain consists of a pair of longitudinal bands of nervous tissue called cerebral peduncles. 
Hind brain- Rhombencephalon forms the hindbrain. It comprises cerebellum, pons varolii and medulla oblongata. 

3. Reflex action and Reflex arc. 
The spinal cord remains as a connecting functional nervous structure in between the brain and effector organs. But sometimes when a very quick response is needed, the spinal cord can effect motor initiation as the brain and brings about an effect. 
Reflex arc- The nervous elements involved in carrying out the reflex action constitute a reflex arc or in other words the pathway followed by a nerve impulse to produce a reflex action . 

4. Sensory reception and processing. 
Sensation- awareness of the stimulus. 
Perception- interpretation of meaning of the stimulus. 

5. Photoreceptor- Eye
Eye is the organ of vision; located in the orbit of the skull and held in its position with the help of six extrinsic muscles. 
They are superior, inferior, lateral, median rectus muscles, superior oblique and inferior oblique muscles. 

6. Eye ball- is spherical in nature. 
The wall of the eye ball consists of three layers, Sclera, vascular Choroid and sensory Retina. 
Retina- forms the inner most layer of the eye and it contains two regions, A sheet of pigmented epithelium and neural visual regions. 

7. Mechanism of vision. 
When light enters the eyes, it gets refracted by the cornea, aqueous humor and lens and it is focused on the retina and excites the rod and cone cells. 
The photo pigment consists of Opsin, the protein part and Retinal, derivative of vitamin A. 

8. Refractive errors of eye. 
Myopia- near sightedness. 
Hypermetropia- long sightedness. 
Presbyopia- due to ageing, the lens loses elasticity and the power of accommodation. 
Astigmatism- is due to the rough curvature of cornea or lens. 
Cataract- due to the changes in nature of protein, the lens becomes opaque. 

9. Phonoreceptor- Ear. 
The ear is the site of reception of two senses namely hearing and equilibrium. 
Organ of corti- is a sensory ridge located on the top of the Basilar membrane and it contains numerous hair cells that are arranged in four rows along the length of the basilar membrane. 

10. Cochlea. 
Is a coiled portion consisting of 3 chambers namely, scala vestibuli and scala tympani- these two are filled with perilymph and the scala media is filled with endolymph. 

Glossary. 
1. Typhlosole. 
A median dorsal internal  fold in the intestine of several types of animals, including the earthworm. 

2. Valves of kerkring or plicae circulares. 
Circular folds in the lumen if ileum.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany