பாடம் 22- வேதிய ஒருங்கிணைப்பு. பகுதி 2
1.தைமஸ் சுரப்பி.
இதன் ஒரு பகுதி நாளமில்லாச் சுரப்பியாகவும் மறுபகுதி நிணநீர் உறுப்பாகவும் செயலாற்றக்கூடியது. இரட்டைக் கதுப்புடைய தைமஸ் சுரப்பி, இதயம் மற்றும் பெருந்தமனிக்கு மேல் மார்பெலும்பிற்குப் பின் அமைந்துள்ளது.
தைமுலின், தைமோசின் , தைமோபாயடின் மற்றும் தைமிக் திரவக் காரணி ஆகிய நான்கு ஹார்மோன்களை தைமஸ் சுரக்கின்றது.
2. அட்ரினல் சுரப்பிகள் அல்லது சிறுநீரக மேற் சுரப்பிகள்.
ஓரிணை அட்ரினல் சுரப்பிகள் சிறுநீரகத்தின் முன்முனைப்பகுதியில் அமைந்துள்ளன. எனவே இதற்கு சிறுநீரக மேற் சுரப்பிகள் என்றும் பெயர்.
திசுவியல் அடிப்படையில், கார்டெக்ஸ் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை சோனா குளாமரூலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா ரெடிகுலாரிஸ் ஆகும்.
3. அட்ரினல் மெடுல்லா.
அட்ரினல் சுரப்பியின் உள் மையப்பகுதியான மெடுல்லா நீள் கோளவடிவ மற்றும் தூண் வகை செல்களால் ஆனது. இவை இரத்த நுண்குழல் வலைப்பின்னலைச் சுற்றி அமைந்துள்ளன.
பறத்தல், பயம், சண்டை ஆகியவற்றோடு தொடர்புடைய அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் ஹார்மோன்களைச் சுரக்கின்றது. இது 3Fஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது.
4. அட்ரினல் ஹார்மோன்களின் பணிகள்.
குளுக்கோ கார்டிகாய்டுகள்- குளுக்கோஸ் அல்லாத பொருட்களில் இருந்து குளுக்கோஸ் உருவாக்கம், கொழுப்புச்சிதைவு மற்றும் உயிர்காப்பு நிகழ்வான புரதச் சிதைவு ஆகிய செயல்களை செய்கின்றன.
கார்டிசோல்- இதயம், இரத்தக்குழாய் மற்றும் சிறுநீரகச் செயல்களைப் பராமரிப்பதில் இவை ஈடுபடுகின்றன.
தாது கலந்த கார்டிகாய்டுகள்- உடலின் நீர் மற்றும் மின்பகு பொருட்களின் சமநிலையை ஒழுங்குபடுத்துகின்றன.
ஆல்டோஸ்டீரோன்- சோடியம், நீர் ஆகியவற்றை மீள உறிஞ்சி பாஸ்பேட் அயனிகள் வெளியேற்றப்படுவதற்கும் மின்பகு பொருட்கள், நீர்ம அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பராமரிக்கவும் இந்த ஹார்மோன் உதவுகின்றது.
5. கணையம்.
இது ஒரு கூட்டுச் சுரப்பியாகும். இது நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்புப் பணிகளை மேற்கொள்கின்றது.
கணையம் இரைப்பையின் கீழ் அமைந்துள்ள இலை வடிவச் சுரப்பியாகும்.
இன்சுலின்- பெப்டைடு ஹார்மோனான இன்சுலின், உடலின் குளுக்கோஸ் சமநிலை பேணுதலில் முக்கியப் பங்காற்றுகின்றது.
6. குளுக்ககான்.
இது ஒரு பாலிபெப்டைடு ஹார்மோனாகும். இது கல்லீரலின் மேல் செயல்பட்டு கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுகிறது. மேலும், லாக்டிக் அமிலத்திலிருந்தும் , கார்போஹைட்ரேட் அல்லாத மூலக்கூறுகளிலிருந்தும் குளுக்கோஸ் உற்பத்தி செய்து இரத்தத்தில் சேர்ப்பதால் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.
7. விந்தகம்.
ஆண்களில் ஓரிணை விந்தகங்கள் விந்தகப் பையில் உள்ளன. விந்தகமானது இனப்பெருக்க உறுப்பாகவும் மற்றும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது.
விந்து நுண்குழல்கள் மற்றும் இடையீட்டுச் செல்களால் விந்தகம் ஆக்கப்பட்டுள்ளது.
இடையீட்டுச் செல்களில் உற்பத்தியாகும் பல ஆண்பால் ஹார்மோன்கள் ஒட்டுமொத்தமாக ஆன்ட்ரோஜன் எனப்படுகிறது. இதில் டெஸ்டோஸ்டீரோன் முக்கியமானதாகும்.
8. முன் கழுத்துக் கழலை.
இது மண்டலக்கழலை என்றும் அழைக்கப்படும். இது தைராக்ஸின் சுரப்பு குறைவதால் ஏற்படுகின்றது.
தைராய்டு சுரப்பி வீங்குதல், சீரத்தில் தைராக்ஸின் அளவு குறைதல், TSH சுரத்தல் அதிகரிப்பு ஆகியன முன் கழுத்துக் கழலையின் சில அறிகுறிகளாகும்.
9. குள்ளத்தன்மை.
குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால் குள்ளத்தன்மை ஏற்படுகின்றது. இதனால் எலும்பு மண்டல வளர்ச்சி மற்றும் பால் முதிர்ச்சி தடைபடுகிறது.
அக்ரோமெகாலி- பெரியவர்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் அதிகரிப்பதால் இந்நிலை தோன்றுகின்றது. அக்ரோமெகாலியின் சில அறிகுறிகளாவன, கை எலும்புகள், கால் பாத எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் மிகை வளர்ச்சி பெறுகின்றன. மேலும் இன உறுப்புகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள், வயிற்றுறுப்புகள், நாக்கு, நுரையீரல், இதயம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளான தைராய்டு, அட்ரினல் போன்றவை பெரிதாதல் ஆகியவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.
10. கிரிடினிசம்.
குழந்தைகளில் குறை தைராய்டு சுரப்பு காரணமாக இந்நிலை உண்டாகின்றது. இதனால் குறைவான எலும்பு வளர்ச்சி, பால் பண்பில் முதிர்ச்சியின்மை, மன வளர்ச்சி குறைதல், தடித்த சுருங்கிய தோல், தடித்த துருத்திய நாக்கு, உப்பிய முகம், குட்டையான தடித்த கை மற்றும் கால்கள் ஆகியவை தோன்றுகின்றன.
கலைச்சொல் அகராதி.
1. குடல் உறிஞ்சி.
முதுகெலும்பிகளின் குடலில் உள் படலத்தில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள்.
2. கொட்டாவி.
கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதினால் ஏற்படும் நீண்ட நேர உட்சுவாசம்.
Technical points
1.Thymus gland.
Is partially an endocrine and partially a lymphoid organ. It is bilobed structure just above the heart and aorta, behind the sternum.
It secretes four hormones such as thymulin, thymosin, thymopoietin and thymic humoral factor.
2. Adrenal gland.
A pair of adrenal glands are located at the anterior end of the kidneys, hence also called suprarenal glands.
Histologically the adrenal cortex has three distinct zones, zona glomerulosa, zona fasciculata and zona reticularis.
3. Adrenal medulla.
It is the central part of adrenal gland and is composed of ovoid and columnar cells, which are found around the network of blood capillaries.
It secretes the hormones adrenalin and noradrenalin and referred as '3F hormone'(fight, flight and fright hormone).
4. Function of adrenal hormones.
Glucocorticoids- stimulate gluconeogensis, lipolysis and proteolysis.
Cortisol- is a glucocorticoid involved in maintaining cardio vascular and kidney functions.
Mineralocorticoids- regulates water and electrolyte balance of our body.
Aldosterone- stimulates the reabsorption of sodium and water and eliminates potassium and phosphate ions through excretion, thus it helps in maintaining electrolytes, osmotic pressure and blood pressure.
5. Pancreas.
Is a composite gland which performs both exocrine and endocrine functions.
It is located just below the stomach as a leaf like structure.
Insulin- is a peptide hormone and plays an important role in glucose homeostasis.
6. Glucagen - is a polypeptide hormone. It is a potent hyprerglycemic hormone that acts on the liver and promotes the breakdown of glycogen to glucose, synthesis of glucose from lactic acid and from non carbohydrate molecules.
7. Testis.
A pair of testis is present in the scrotal sac of males. The testis functions as a sex organ and also as an endocrine gland.
The testis is composed of seminiferous tubules and interstitial cells or Leydig cells. The leydig cells secrete several male sex hormones, collectively called androgens, mainly testosterone.
8. Simple goitre- is also known as Endemic goitre. It is caused due to hyposecretion of thyroxine. The symptoms includes enlargement of thyroid gland, fall in serum thyroxine level, increased TSH secretion.
9. Dwarfism- is due to hyposecretion of growth hormone in chilfren, skeletal growth and sexual maturity is arrested.
Acromegaly- is due to excessive secretion of growth hormone in adults. Over growth of hand bones, feet bones, jaw bones, malfunctioning of gonads, enlargment of viscera, tongue, lungs, heart, liver, spleen and endocrine gland like thyroid, adrenal etc.
10. Cretinism.
In infants, hypothyroidism causes cretinism. A cretin shows retarded skeletal growth, absence of sexual maturity, retarded mental ability, thick wrinkled skin, protruded enlarged tongue, bloated face, thick and short limbs occurs.
Glossary.
1. Villus.
A minute finger like process from intestinal lining of vertebrates.
2. Yawning.
Prolonged inspiration due to increase in Co2 concentration.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment