24 Days only for NEET 2021


Lesson 23- Reproduction in organisms  (Tamil / English )

பாடம் 23- உயிரிகளின் இனப்பெருக்க

1. இனப்பெருக்கம். 

இந்த உயிரியல் நிகழ்வின் மூலம் உயிரிகள் தங்கள் சேய்களை உருவாக்குகின்றன. 

பாலிலி இனப்பெருக்கம்- தனியொரு பெற்றோரால் இனச்செல் உருவாக்கம் இன்றி நடைபெறும் இனப்பெருக்கம். 

பாலினப் பெருக்கம்- இனப்பெருக்க செயலில் இரு பெற்றோர் ஈடுபட்டு இரண்டு வகை இனச்செல்கள் இணைந்து நடைபெறும் இனப்பெருக்கம். 

2. பல்வேறு பாலிலி இனப்பெருக்க முறைகள். 

இருசமப்பிளவு முறை- பெற்றோர் உயிரி இரு சம பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது. எ. கா. அமீபா, பாரமீசியம். 

முகிழ்தல்- இம்முறையில் பெற்றோர் உயிரிகளின் உடலில் ஒன்று அல்லது பல மொட்டுகள் தோன்றி ஒவ்வொன்றும் ஒரு சேய் உயிரி ஆகின்றது. எ. கா. ஹைட்ரா.

துண்டாதல்- இம்முறையில் பெற்றோர் உடலானது பல துண்டுகளாகப் பிரிகின்றது. பிரிந்த ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும் திறனுடையது. எ. கா. ஸ்பைரோகைரா. 

       இழப்பு மீட்டல்- காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் அல்லது திசுக்கள் மறு வளர்ச்சி அடைவது. எ. கா. பிளனேரியா. 

3. கொனிடியா- ஆஸ்பர்ஜில்லஸ், பெனிசிலியம்.

ஜெம்மா- மார்கான்ஷியா. 

ஜெம்யூல்- ஸ்பாஞ்சுகள். 

4. தரை வழி பெருக்கம். 

ஒடு தண்டு- சென்டெல்லா ஏசியாட்டிகா. 

மட்டநிலத்தண்டு- ஜிஞ்ஜிஃபெர் அஃபிசினாலே. 

தரைகீழ் உந்து தண்டு- கிரைசாந்திமம். 

கிழங்கு- சொலானம் டியூபரோசம். 

நீர் ஓடு தண்டு- பிஸ்டியா ஸ்டிராட்டியோட்டஸ். 

குமிழ்த்தண்டு- அல்லியம்  சீப்பா.

தாவர இனப்பெருக்கத்திற்கு பயன்படும் அலகு இனப்பெருக்க உறுப்புகள் அல்லது பரவல் உறுப்புகள் என்று அறியப்படுகின்றன. 

5. இளம் உயிரி நிலை/வளராக்க நிலை. 

ஒரு உயிரியின் பிறப்பிக்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக் காலம். 

6. மகரந்தச் சேர்க்கை. 

மகரந்தப்பையிலிரூந்து மகரந்தத் துகள்கள் சூலகமுடியை சென்றடையும் நிகழ்வு. 

இது மூடு விதை மற்றும் திறந்தவிதைத் தாவரங்களின் ஒரு சிறப்பு பண்பாகும். 

7. கன்னி இனப்பெருக்கம். 

அண்ட செல்லானது,கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயல். 

இது 1745 ல் சார்லஸ் பானட் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது. 

8. வெளிக்கருவுறுதல்.

பெண் உயிரியின் உடலுக்கு வெளியில் ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால் குறிப்பாக அவை வாழும் நீர் வாழிடத்தில் நிகழக்கூடியது. எ. கா. கடற்பஞ்சுகள், மீன்கள், இருவாழ்விகள். 

உட்கருவுறுதல்- ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழக்கூடியது. எ. கா. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள். 

9. இழப்பு மீட்டல் திறன். 

சிதைக்கப்பட்ட கடற்பஞ்சினை ஒரு மெல்லிய பட்டுத்துணியின் வழியாக பிழிந்தால் கிடைக்கும் செல் தொகுப்பு மீண்டும் புதிய முழுமையான கடற்பஞ்சுகளாக உருவாக இயலும். இத்தொழில் நுட்பம் செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. 

10. ஆர்கிட் விதையின் எடை 20.33 மைக்ரோ கிராம். இரட்டை தென்னையின் விதை (லோடோய்சியா மால்டிவிக்கா) எடை ஏறத்தாழ 6 கி. கிராம். 


கலைச்சொல் அகராதி. 

1. உயிரின்றி உயிர் தோன்றல். 

உயிரற்ற வேதிப் பொருட்களிலிருந்து உயிரினம் தோன்றுவது. 

2. அசிடோஜெனிசிஸ். 

அசிடோஜெனிக் பாக்டீரியாக்கள் மூலம் எளிய கரிமப் பொருட்களை அசிட்டேட், ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றுதல்


Technical points 

1. Reproduction. 

It is a biological process by which organisms produce their young ones. 

Asexual reproduction- Reproduction by a single parent without the involvement of gamete formation. 

Sexual reproduction- When two parents participate in the reproductive process involving two types of gametes. 

2. Different modes of asexual reproduction. 

Binary fission- the parent organism divides into two halves and each half forms a daughter individual. Ex. Amoeba, paramecium. 

Budding- the parent body produces one or more buds and each bud grows into a young one. Ex. Hydra. 

Fragmentation- the parent body breaks into fragments and each of the fragment has the potential to develop into a new individual. Ex. Spirogyra. 

Regeneration- is regrowth in the injured region. Ex planaria. 

3. Conidia- Ex. Aspergillus, penicillium. 

Gemma- Marchantia

Gemmules- sponges. 

4. Vegetative propagation. 

Runner- Centella asiatica. 

Rhizome- Zingeiber officinale. 

Sucker- Chrysanthemum

Tuber- Solanum tuberosum

Offset- Pistia stratiotes. 

Bulb- Allium cepa. 

The unit of reproductive structure used in propagation is called reproductive propagules or diaspores. 

5. Juvenile phase/vegetative phase. 

Is the period of growth between the birth of the individual upto reproductive maturity. 

 6. Pollination. 

This process of transfer of pollen grains from the anther to a stigma of a flower. 

Is a characteristic features of spermatophyte. 

7. Parthenogenesis. 

Development of an egg into a complete individual without fertilization. 

It was first discovered by Charles Bonnet in 1745.

8. External fertilization. 

The fusion of male and female gametes takes place  outside the body of female organisms in the water medium. Ex. Sponges, fishes, amphibians. 

Internal fertilization- the fusion of male and female gametes takes place within the body of female organisms. Ex. Reptiles, aves, mammals. 

9. Power of regeneration. 

Sponge when macerated and squeezed through fine silk cloth, the cluster of cells pass through and these can regenerate new sponges. This technique is used for cultivation of sponges. 

10. Fresh weight of an orchid seed may be 20.33 microgram and that of double coconut (Lodoicea maldivica) is about 6kg.

Glossary. 

1. Abiogenesis. 

The emergence of life forms from non living chemical systems. In contrast with spontaneous generation, abiogenesis is not a process that biologists think continues in a particular environment, such as a planet or moon, once a living system has damaged. 

2. Acidogenesis. 

Conversion of simple organic materials into acetate, H2 and Co2 by acidogenic bacteria.


Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany