23 Days only for NEET 2021



Lesson 24- Sexual reproduction in flowering plants. 
Part 1.  (Tamil / English )

பாடம் 24- பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்கம். பகுதி 1

1. மகரந்தத்தாள் வட்டம். 

        மகரந்தத்தாள் வட்டம் மகரந்தத்தாள்களால் ஆனது. ஒவ்வொரு மகரந்தத்தாளும் ஒரு மகரந்தத்தாளும் ஒரு மகரந்தப்பையையும் ஒரு மகரந்தத்தாள் கம்பியையும் கொண்டது. 

      மகரந்தப் பையிலுள்ள மகரந்தத் துகள்கள் ஆண் கேமீட்டகத் தாவரத்தைக்  குறிக்கின்றன. 

2. நுண் வித்துருவாக்கம்.

      இருமடிய நுண்வித்து தாய் செல் குன்றல் பகுப்படைந்து ஒருமடிய நுண்வித்துகள் உருவாகும் படிநிலை. 

3. முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம். 

      இவற்றில் மகரந்த அறை மகரந்தச்சுவரால் சூழப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. 

        இது இருமடலுடைய இரு பை அமைப்பு கொண்டுள்ளது. 

      ஒரு வகைமாதிரி மகரந்தப்பை நான்கு வித்தகங்களைக் கொண்டது. 

      இவற்றில் மகரந்தப்பை சுவர்- புறத்தோல், எண்டோதீசியம், இடை அடுக்குகள், டபீட்டம்.

  மகரந்த அறை

   இணைப்புத் திசு ஆகியவை காணப்படுகிறது. 

4. மகரந்தத் துகள்கள். 

         இதன் சுவர் உட்புற இன்டைன் மற்றும் வெளிப்புற எக்சைன் என இரு அடுக்குகளைக் கொண்டது. 

        எக்சைன் சீரற்ற தடிப்புகளுடன் சில பகுதிகளில் மெல்லியதாக காணப்படும். இப்பகுதிகள் சிறிய வட்டவடிவில் இருந்தால் வளர்துளைகள் என்றும், சற்று நீண்டு காணப்பட்டால் பிளவுப்பள்ளங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

        நுண்வித்தின் உட்கரு பகுப்படைந்து ஒரு தழைவழி உட்கருவையும் , ஒரு உருவாக்க உட்கருவையும் தோற்றுவிக்கிறது. 

5. சூலக வட்டம்

       இது மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பாகும். 

      சூலக வட்டம் என்ற சொல் மலரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூலக அலகுகளைக் குறிக்கிறது. 

        சூலக அலகு சூலகப்பை, சூலகத்தண்டு, சூலகமுடி ஆகிய பகுதிகளை கொண்டது. 

6. பெருவித்தகம். 

        இவற்றில் சூலுறை, சூலகக்காம்பு, சூல்தழும்பு, சூல்காம்புவடு, சூல்திசு, சலாசா, கருப்பை ஆகியவை காணப்படுகிறது. 

7. பெரு வித்துருவாக்கம். 

       பெருவித்து தாய் செல்லிலிருந்து பெருவித்து உருவாகும் நிகழ்வு. 

      ஒருபெருவித்துசார்- பாலிகோனம். 

      இருபெருவித்துசார்- அல்லியம்.

      நான்குபெருவித்துசார்- பெப்பரோமியா. 

8. பெண் கேமிட்டோபைட்  அல்லது கருப்பை. 

         7 செல்கள் கொண்ட 8 உட்கரு பெற்ற கருப்பை உருவாகிறது. 

      இவற்றில் முட்டை சாசனம்- ஒரு முட்டை மற்றும் இரண்டு சினர்ஜிட். 

     எதிரடிச் செல்கள்

     இரண்டாம் நிலை உட்கரு. 

9. திறந்த மலர் மகரந்தச்சேர்க்கை- மலர் மலர்ந்து அதன் முதிர்ந்த மகரந்தப்பை களையும்  சூலகமுடியையும் மகரந்தச்சேர்க்கை க்காக வெளிக் காட்டுகின்றன. 

      மூடிய மலர் மகரந்தச்சேர்க்கை- மகரந்தச்சேர்க்கை மலர் திறக்காமலும் அவற்றின் இன உறுப்புகள் வெளிபாடடையாமலும் இருக்கின்றன. 

எ. கா. காமிலினா. 

10. ஒத்த முதிர்வு- ஒரு மலரில் மகரந்தத்தாள், சூலகமுடி இரண்டும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைவது. எ. கா. மிராபலிஸ் ஜலாபா.

         முழுமையற்ற இருகால முதிர்வு- இருகால முதிர்வு மலர்களில் ஒரு மலரின் மகரந்தத்தாளும் சூலகமுடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடைகின்றன.


கலைச்சொல் அகராதி. 

1. கருவுறாவித்து. 

       குன்றலிலா பகுப்பின் விளைவாக இருமடிய சூல் திசுவிலிருந்து கருப்பை தோன்றும் நிகழ்வு. 

2. மொட்டு விடுதல். 

         பாலிலா இனப்பெருக்க முறையில், பெற்றோர் செல்லிலிருந்து உருவாக்கப்படும் சிறிய வெளி வளரி. 

3. கேலஸ்.

      திசு வளர்ப்பின் மூலம் பெறப்படும் வேறுபாடு அடையாத செல்களின் திரள். 

4. நகல். 

      ஒத்த மரபணுவுடைய உயிரி. 

5. எண்டோதீசியம். 

        மகரந்தப்பையின் புறத்தோலுக்கு கீழ் நீர் உறிஞ்சுத்தன்மை உடைய ஆரப்போக்கில் நீண்ட ஒரடுக்கு செல்களாலான மகரந்தப்பை வெடிப்பதற்கு உதவும் அடுக்கு. 

6. ஒட்டுதல். 

       வேர், கட்டை, ஒட்டுத் தண்டு இரண்டையும் இணைத்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் பாரம்பரிய முறை இனப்பெருக்கம் ஆகும்.

Technical points 

1. Androecium. 

       Is made up of stamens. Each stamen possess an anther and a filament. 

     Anther bears pollen grains which represent the male gametophyte. 

2. Microsporogenesis. 

    The stages involved in the formation of haploid microspores from diploid microspore mother cell through meiosis. 

3. T. S of mature anther. 

      It reveals the presence of anther cavity surrounded by an anther wall. 

      It is bilobed, each lobe having 2 theca (dithecous). 

      A typical anther is tetrasporangiate. 

       It contain

Anther wall- epidermis, endothecium, middle layer, tapetum. 

Anther cavity

Connective

4. Pollen grain. 

     The wall is differentiated into two layers, namely inner layer called intine and outer layer called exine. 

     When these thin areas are small and round it is called germ pores or when elongated it is called furrows. 

     The nucleus of the microspore divides mitotically to form a vegetative and a generative nucleus. 

5. Gynoecium. 

        Represents the female reproductive part of the flower. 

     The word gynoecium one or more pistils of a flower. 

      The word pistil refers to the ovary, style and stigma. 

6. Megasporangium.

          Ovule includes integuments, funiculus, hilum, raphae, nucellus, chalaza, embryo sac. 

7. Megasporogenesis.

         The process of development of a megaspore from a megaspore mother cell. 

   Monosporic- polygonum

   Bisporic- Allium

   Tetrasporic- peperomia. 

8. Female gametophyte or Embryo sac. 

       7 celled embryo sac with 8 nuclei is formed. 

      It includes egg apparatus- one egg and two synergid. 

       Antipodal cells

       Secondary nucleus. 

9. Chasmogamy- pollination occur in open flower. 

     Cleistogamy- pollination occur in closed flower. 

Ex. Commelina. 

10. Homogamy- when the stamens and stigma of a flower mature at the same time. Ex. Mirabilis jalapa. 

     Incomplete dichogamy- the stamen and stigma of a flower mature at different time. 

Glossary. 

1. Apospory. 

        The process of embryo sac formation from diploid cells of nucellus as a result of mitosis. 

2. Budding. 

      A method of asexual reproduction where small outgrowth from a parent cell are produced. 

3. Callus. 

       Undifferentiated mass of cells obtained through tissue culture. 

4. Clone. 

     Genetically identical individuals. 

5. Endothecium. 

       A single layer of hygroscopic radially elongated cells found below the epidermis of anther which helps in dehiscence of anther. 

6. Grafting. 

      Conventional method of reproduction.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany