22 Days only for NEET 2021



Lesson 24- Sexual reproduction in flowering plants. 
Part 2.  (Tamil / English )

பாடம் 24- பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்கம். பகுதி 2

1. மகரந்தச் சேர்க்கைக்கான முகவர்கள். 

       உயிரற்ற காரணிகள். 

    அனிமோஃபில்லி- காற்று

   ஹைட்ரோஃபில்லி- நீர்

உயிர் சார்ந்த காரணிகள். 

   கேன்தரோஃபில்லி- வண்டுகள்

  ஃபாலினோஃபில்லி- அந்துப்பூச்சி

   மெல்லிடோஃபில்லி- தேனீக்கள்

    சைகோஃபில்லி- வண்ணத்துப்பூச்சிகள்

   மேலக்கோஃபில்லி- நத்தைகள்

     ஆர்னித்தோஃபில்லி- பறவைகள்

    சிராப்டீரோஃபில்லி- வௌவால்கள்

    மிர்மிகோஃபில்லி- எறும்புகள்

    ஒபியோஃபில்லி- பாம்புகள். 

2. கருவுறுதலின் நிகழ்வுகள். 

      - இரட்டைக் கருவுறுதல் சூலகமுடியில் மகரந்தக்குழல் உருவாதல். 

    - சூலகத்தண்டில் மகரந்தக்குழாய் வளர்தல். 

     - சூல்துளை நோக்கி மகரந்தக்குழாய் வளர்தல். 

    - கருப்பையில் காணப்படும் ஒரு சினர்ஜிட்டினுள் மகரந்தக்குழாய் நுழைதல்.

     - ஆண்  கேமிட்கள் வெளியேற்றம், கேமிட்கள் இணைதல் மற்றும் மூவிணைதல். 

3. மகரந்தத்துகள் - சூலக அலகு இடைவினை. 

         மகரந்தத்துகள் சூலக முடி மீது படிந்து மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள். 

         இது ஒரு இயங்கு நிகழ்வாகும். மகரந்தத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் முளைப்பு மற்றும் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது அல்லது தடை செய்யப்படுகிறது. 

4. செயற்கை கலப்பு. 

        பெற்றோரைத் தேர்ந்தெடுத்தல். 

      ஆண் மலடாக்குதல்- தன் மகரந்தச் சேர்க்கையை தடுப்பதற்காக மகரந்தத் தாள்கள் முதிர்விற்கு முன்னர் அவற்றை நீக்கும் முறை ஆணகச்சிதைவாகவும். 

பையிடுதல். 

  கலப்பு செய்தல். 

விதைகளை  அறுவடை செய்து புதிய தாவரங்களை உண்டாக்குதல்.

5. இரட்டைக் கருவுறுதலும் மூவிணைதலும். 

        S. G. நவாஸின் மற்றும் L. கினார்டு 1898 மற்றும் 1899 ஆம் ஆண்டு லில்லியம் மற்றும் ஃபிரிட்டிலாரியா தாவரங்களில் ஆண் கேமீட்டகத்திலிருந்து வெளியேறும் இரண்டு ஆண் கேமிட்டுகளும் கருவுறுதலில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். 

            இரண்டு ஆண் கேமீட்டுகளில் ஒன்று முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டை யை உருவாக்குகிறது. 

        மற்றொரு ஆண் கேமீட் மைய செல்லை நோக்கி நகர்ந்து, அங்குள்ள துருவ உட்கருக்கள் அல்லது துருவ உட்கருக்கள் இணைந்து உருவான இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல்நிலை கருவூண் உட்கரு வை உருவாக்குகிறது. 

6. கருவூண் திசு. 

        கருவுறுதலுக்குப் பின் கரு பகுப்படைவதற்கு முன் முதல்நிலை கருவூண் உட்கரு உடனடியாக பகுப்படைந்து உருவாகும் திசு. 

   உட்கருசார் கருவூண் திசு- காக்ஸினியா, கேப்செல்லா, அராக்கிஸ். 

     செல்சார் கருவூண்திசு- அடாக்ஸா, ஹீலியாந்தஸ், ஸ்கோபாரியா. 

     ஹீலோபிய கருவூண்திசு- ஹைட்ரில்லா, வாலிஸ்நேரியா. 

7. கரு உருவாக்கம். 

        இரண்டு ஆண் கேமிட்களில் ஒன்று முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டை யை உருவாக்குகிறது. 

        இருவிதையிலைத் தாவர கருவளர்ச்சியிலுள்ள நிலைகள் விளக்க ஒனகிராட் அல்லது குருசிஃபெர் வகை கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பையின் சூல்துளைப் பகுதியில் கருவளர்ச்சி நடைபெறுகிறது. 

8. விதை. 

        கருவுற்ற சூல் விதை என்று அழைக்கப்படுகிறது. இது கரு, கருவூண்திசு மற்றும் பாதுகாப்பு உறை கொண்டுள்ளது. 

        விதைகள் கருவூண்திசு கொண்ட விதைகளாகவோ (மக்காச்சோளம், கோதுமை, பார்லி, சூரியகாந்தி) அல்லது கருவூண்திசு அற்ற விதைகளாகவோ (பீன்ஸ், மா, ஆர்கிட்கள், குக்கர் பிட்கள்) இருக்கலாம். 

9.கருவுறா இனப்பெருக்கம். 

       எந்நிலையிலும் ஆண், பெண் கேமீட்கள் இணைவின்றி நடைபெறும் இனப்பெருக்கம். 

      அப்போமிக்ஸிஸ் என்ற சொல் 1908 ஆம் ஆண்டு விங்க்ளர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

10. பல்கருநிலை. 

       ஒரு விதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கரு காணப்பட்டால் அது பல்கருநிலை என்று அழைக்கப்படும். 

        1719 ஆம் ஆண்டு ஆண்டன் ஃபான் லியூவன்ஹாக் சில ஆரஞ்சுத் தாவரங்களில் பல்கருநிலை பற்றிய முதல் தகவலைப் பதிவு செய்தார். 

11. கருவுறாக்கனிகள். 

        கருவுறுதல் நடைபெறாமல் கனி போன்ற அமைப்புகள் சூலகத்திலிருந்து தோன்றலாம். 

எ. கா. வாழைப்பழம், திராட்சை, பப்பாளி. 


கலைச்சொல் அகராதி. 

1. தோட்டக்கலை. 

        கனிகள், காய்கறிகள், மலர்கள், அழகுத் தாவரங்கள் வளர்க்கும் கலை பற்றிய தாவரவியல் பிரிவு. 

2. சூல்திசு. 

       சூலின் உட்புறத்தில் சூலுறையை அடுத்துக் காணப்படும் இருமடிய த் திசு. 

3. போலன்கிட். 

        மகரந்தத்துகள் களின் பரப்பில் காணப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பூச்சிகளை கவரும் உறை. 

4. மீளுருவாக்கம். 

       உயிரினங்கள் தான் இழந்த பாகங்களை மீண்டும் பதிலிடு செய்தல் அல்லது மீட்கும் திறன். 

5. ஸ்போரோபொலினின். 

         கரோட்டினாய்டிலிருந்து பெறப்படும் மகரந்த சுவர் பொருள் இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மையுடைய மகரந்தச் சுவரப் பொருள். 

6. டபீட்டம். 

       வளரும் வித்துருவாக்க திசுவிற்கும், நுண்வித்துகளுக்கும் ஊட்டமளிக்கும் திசு. 

7. ஊடுகடத்து திசு. 

      சூல் தண்டின் உட்பகுதியிலுள்ள சுரக்கும் தன்மையுடைய ஒரடுக்கு கால்வாய் செல்கள்.

Technical points 

1. Agents of pollination. 

     Abiotic agencies. 

  Anemophily- wind

  Hydrophily- water

       Biotic agencies. 

 Cantharophily- Beetle

 Phalaenophily- Moths

 Mellitophily- Bees

 Psychophily- Butterflies

 Malacophily- snails

Ornithophily- Birds

 Chieropterophily- Bat

 Myrmecophily- Ants

Ophiophily- snake

2. Events of fertilization. 

     - germination of pollen to form pollen tube in the stigma. 

    - growth of pollen tube in the style. 

    - direction of pollen tube towards the micropyle of the ovule. 

    - entry of pollen tube into one of the synergids of the embryo sac, discharge of male gametes. 

    - syngamy and triple fusion. 

3. Pollen pistil interaction. 

      The events from pollen deposition on the stigma to the entry of pollen tube into the ovule. 

      It is a dynamic process which involves recognition of pollen and to promote or inhibit it's germination and growth. 

4. Artificial hybridization. 

       Selection of parents

      Emasculation- it is a process of removal of anthers to prevent self pollination before dehiscence of anther. 

     Bagging

     Crossing

     Harvesting seeds and raising plants. 

5. Double fertilization and triple fusion. 

     S. G. Nawaschin and L. Guignard in 1898 and 1899, observed in Lillium and Fritillaria that since this involves the fusion of three nuclei, this phenomenon is called triple fusion. 

    One of the male gametes fuses with the egg nucleus to form zygote. 

     The second gamete migrates to the central cell where it fuses with the polar nuclei or their fusion product, the secondary nucleus and forms the primary endosperm nucleus. 

6. Endosperm. 

      The primary endosperm nucleus divides immediately after fertilization but before the zygote starts to divide, to form the endosperm. 

     Nuclear endosperm- Coccinia, Capsella, Arachis. 

     Cellular endosperm- Adoxa, Helianthus, Scoparia. 

     Helobial endosperm- Hydrilla and vallisneria. 

7. Embryo. 

      one of the male gametes fuses with the egg nucleus to form zygote. It germinate into embryo. 

    The development of dicot embryo (Capsella bursa-pastoris) is of Onagrad or crucifer type. The embryo develops at micropylar end of embryo sac. 

8. Seed. 

       The fertilized ovule is called seed and possesses an embryo, endosperm and a protective coat.

      Seed may be endospermous (wheat, maize, barley, sunflower) or non endospermous (Bean, Mango, Orchids, Curcurbits). 

9. Apomixis. 

       Reproduction does not involve union of male and female gametes. 

     The term Apomixis was introduced by Winkler in the year 1908.

10. Polyembryony. 

         Ocvurrence of more than one embryo in a seed. 

    The first case of polyembryony was reported in certain oranges by Anton von Leewenhoek in the year 1719. 

11. Parthenocarpy. 

       Fruit like structures may develop from the ovary without the act of fertilization. 

Ex. Banana, Grapes, Papaya. 

Glossary. 

1. Horticulture. 

      Branch of plant science that deals with the art of growing fruits, vegetables, flowers and ornamental plants. 

2. Nucellus. 

      The diploid tissue found on the inner part of ovule next to the integuments. 

3. Pollenkitt. 

      A sticky covering found on the surface of the pollen that helps to attract insects. 

4. Regeneration. 

       Ability of organisms to replace over restore the lost parts. 

5. Sporopollenin. 

      Pollen wall material derived from carotenoids and is resistant to physical and biological decomposition. 

6. Tapetum. 

      Nutritive tissue for the developing sporogenous tissue. 

7. Transmitting tissue. 

       A single layer of glandular canal cells lining the inner part of style.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany