21 Days only for NEET 2021


Lesson 25- Human reproduction  
Technical points (Tamil / English )

பாடம் 25- மனித இனப்பெருக்கம்

1. செர்டோலி செல்கள். 

         அல்லது செவிலிச் செல்கள் விந்து உற்பத்தி செல்கள் ஆகும். நீண்ட பிரமிடு வடிவம் கொண்ட செர்டோலி செல்கள் விந்தணுவாக்கத்தின் போது விந்துக்கள் முதிர்ச்சியடையும் வரை அவற்றிற்கு உணவூட்டம்  அளிக்கின்றன. மேலும் விந்து செல் உற்பத்தியின் போது இவை இன்ஹிபின் என்னும் ஹார்மோனைச் சுரந்து எதிர்மறை பின்னூட்ட கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றன. 

2. லீடிக் செல்கள் அல்லது இடையீட்டு செல்கள். 

      விந்து நுண் குழல்களைச் சூழ்ந்துள்ள மென்மையான இணைப்புத்திசுவினுள் பொதிந்து காணப்படுகின்றன. இச்செல்கள் விந்துசெல்லாக்கத்தைத் தொடங்கும் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன. 

3. பல்போயுரித்ரல் அல்லது கௌப்பர் சுரப்பிகள். 

     ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் ஒரிணை விந்துப்பைகளும், கௌப்பர் சுரப்பிகள் என அழைக்கப்படும் ஓரிணை பல்போயுரித்ரல் சுரப்பிகளும் மற்றும் ஒற்றை புரோஸ்டேட் சுரப்பியும் துணை சரப்பிகளாக உள்ளன. 

       விந்துப்பைகள் செமினல் பிளாஸ்மா என்னும் காரத்தன்மையுள்ள திரவத்தைச் சுரக்கின்றன. இத்திரவத்தில் ஃப்ரக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், புரோஸ்டகிளான்டின்கள் மற்றும் விந்து திரவத்தை உறைய வைக்கும் நொதியான வெஸிகுலேஸ் போன்றவை காணப்படுகின்றன. 

4. இன்ஃபன்டிபுலம். 

        ஃபெல்லோப்பியன் குழாயின் முன் முனைப்பகுதியில் புனல் வடிவிலான அமைப்பு காணப்படுகிறது. புனலுருவின் விளிம்பில் விரல் போன்ற நுண் நீட்சிகள் அமைந்துள்ளன. 

       அவை அண்ட வெளியீட்டின் போது விடுபடும் அண்டத்தைத் தன்னை நோக்கி இழுப்பதற்குப் பயன்படுகின்றன. புனலுருவின் வாய்ப்பகுதி அகன்று ஆம்புல்லா எனும் மையப்பகுதியாக விரிவடைகிறது. 

5. பால் சுரப்பிகள். 

         ஆண், பெண் இருபாலரிலும் காணப்படும் மாறுபாடடைந்த வியர்வைச் சுரப்பிகள் ஆகும். ஆண்களில் இவை அளவில் குறைந்து செயலற்ற எச்ச உறுப்பாகவும், பெண்களில் இயல்பான செயல்படும் உறுப்பாகவும் காணப்படுகிறது. 

      மார்புப் பகுதியில் ஓரிணை பால் சுரப்பிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பால் சுரப்பியிலும் சுரப்பித் திசுக்களும் வேறுபட்ட அளவுகளில் கொழுப்பும் உள்ளன. மார்பகங்களின் மத்தியில் பால்காம்பு அமைந்துள்ளது. இதனைச் சுற்றி நிறமிகளாலான ஏரியோலா என்னும் வட்ட வடிவ பரப்பு காணப்படுகிறது. 

6. விந்து செல் உருவாக்கம்- விந்தகங்களின் விந்தக நுண் குழல்களில் வரிசையாக நடைபெறும் செயல்களினால் ஆண் இனச்செல்கள் அல்லது விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுதல். 

       அண்ட செல் உருவாக்கம்- பெண் இனப்பெருக்க முதன்மை உறுப்பான அண்டகங்களிலிருந்து பெண் இனச்செல்லான அண்டம் அல்லது முட்டை உருவாகும் நிகழ்ச்சி. 

7. மாதவிடாய் சுழற்சி. 

         பெண்களின் இனப்பெருக்க காலமான பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் நீங்கலாக சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை அண்டக சுழற்சி நிகழ்கிறது. 

    மாதவிடாய் நிலை

    ஃபாலிக்குலார் நிலை அல்லது பெருகு நிலை

   அண்ட செல் விடுபடு நிலை

    லூட்டியல் அல்லது சுரப்பு நிலை

8. கருவுறுதல்- ஒரு ஒற்றைமைய விந்தணு ஒரு ஒற்றைமய அண்ட செல்லுடன் இணைந்து கருவுற்ற அண்டத்தை அல்லது இரட்டைமய கருமுட்டையை உருவாக்கும் நிகழ்ச்சி. 

        கரு பதிதல்- அகச் செல் திரள்கள் கருவாக வளர்ச்சியடைந்து கருப்பையின் உட்சுவரில் பதிகிறது. இதன் முடிவில் கர்ப்பம் தொடங்குகிறது. 

9. கர்ப்ப பராமரிப்பு மற்றும் கரு வளர்ச்சி. 

      கருகோளமாக்கல்- ஓரடுக்குக் கருக்கோளம் மூவடுக்குக் கருக்கோளமாக மாறும் நிகழ்ச்சி. 

     கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசு தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாகச் செயல் பட்டு மனித கோரியானிக் கொனடோடிரோபின், மனித கோரியானிக் சொமட்டோமாம்மோடிரோபின் அல்லது மனித பிளாசன்டல் லாக்டோஜென், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் என கரு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. 

10. மகப்பேறு- என்பது கர்ப்பகாலம் நிறைவடைந்து குழந்தை பிறத்தலைக் குறிக்கும் சொல்லாகும். 

         பால் சுரத்தல்- பால் சுரப்பிகள் பாலை உற்பத்தி செய்யும் நிகழ்ச்சி. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும், கர்ப்ப காலத்தின் போதும், பாலூட்டும் போதும் பால் சுரப்பிகளில் மாற்றம் ஏற்படுகின்றன. 


கலைச்சொல் அகராதி. 

1. பாசிப் பெருக்கம். 

       கழிவுநீரில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துகள், மிதவைப் பாசிகளின் மிகை வளர்ச்சியை உண்டாக்குகின்றன. 

2. ஒவ்வாமை. 

       மிகையுணர்வு வினை பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

3. மானிட தோற்றவியல்.

     மனித மக்கள் தொகையில் உள்ள உயிரியல் மற்றும் கலாச்சாரப் பண்புகளில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் படிக்கும் பிரிவு மானுடவியல் எனப்படும். இவ்வியலில் உலகின் அனைத்துப் பகுதியிலும் வாழும் மனிதர்களின் உயிரியல் மற்றும் கலாச்சாரப் பண்புகள் ஆய்ந்தறியப்படுகின்றன. 

5. உணர்தடை டி என் ஏ. 

        இரண்டு இழைகள் உடைய டி என் ஏ வின் குறியீடு உடைய இழைக்கு நிரப்புக் கூறாக அமையும் குறியீடற்ற இழை. இவை கடத்து ஆர். என். ஏ உருவாக்கத்திற்கான வார்ப்புருவாக அமையும்.

Technical points 

1. Sertoli cells. 

       They are elongated and pyramidal and provide nourishment to sperms till maturation. They also secrete inhibin, a hormone which is involved in the negative feedback control of sperm production. 

2. Leydig cells or interstitial cells. 

      They are embedded in the soft connective tissue surrounding the seminiferous tubules. These cells are endocrine in nature and secrete androgens namely the testosterone hormone which initiates the process of spermatogenesis. 

3. Bulbourethral glands or Cowper's gland. 

        The accessory glands of the male reproductive system include the paired seminal vesicles and bulbourethral glands and single prostrate gland. 

       The seminal vesicles secrete an alkaline fluid called seminal plasma containing fructose sugar, ascorbic acid, prostaglandins and a coagulating enzyme called vesiculase which enhances sperm motility. 

4. Infundibulum. 

           The proximal part of the fallopian tube bears a funnel shaped infundibulum. The edges of the infundibulum have many finger like projections called fimbriae which help in collection of the ovum after ovulation. 

5. Mammary gland. 

       They are modified sweat glands present in both sexes. It is rudimentary in the males and functional in the females. 

        A pair of mammary glands is located in the thoracic region. It contains glandular tissue and variable quantities of fat with a median nipple surrounded by a pigmented area called the areola. 

6. Spermatogenesis- is the sequence of events in the seminiferous tubules of the testes that produce the male gametes, the sperms. 

     Oogenesis- is the process of development of the female gamete or ovum or egg in the ovaries. 

7. Menstrual cycle. 

         Or ovarian cycle occurs approximately once in every 28/29 days during the reproductive life of the female from menarche to menopause except during pregnancy. 

     Menstrual phase

    Follicular or proliferative phase

    Ovulatory phase

     Luteal or secretory phase

8. Fertilization and implantation. 

       Fertilization occurs when a haploid sperm fuses with a haploid ovum to form a fertilized egg or diploid zygote. 

      Implantation- the inner cell mass of the blastocyst develops into the embryo and becomes embedded in the endometrium of the uterus. 

9. Maintenance of pregnancy and embryonic development. 

     Gastrulation- the transformation of the blastocyst into a gastrula with the primary germ layers by the movement of the blastomeres. 

      During pregnancy, the placenta acts as a temporary endocrine gland and produces large quantities of human chorionic Gonadotropin, human Chorionic somatomammotropin or human placental lactogen, oestrogens and progesterone which are essential for a normal pregnancy. 

10. Parturition. 

          Is the completion of pregnancy and giving birth to the baby. 

     Lactation- is the production of milk by mammary glands. The mammary glands show changes during every menstrual cycle, during pregnancy and lactation. 


Glossary. 

1. Algal bloom. 

       Presence of large amounts of nutrients in waste water causing excessive growth of planktonic algae. 

2. Allergy. 

      A hypersensitivity reaction that can involve various deleterious effects. 

3. Anthopogenic causes. 

       Problems created by human. 

4. Anthropology. 

       The study of differences and similarities, both biological and cultural in human populations. Anthropology is concerned with typical biological and cultural characteristics of human populations in all periods and in all parts of the world. 

5. Antisense DNA. 

        It is the non coding strand complementary to the coding strand in double stranded DNA. The antisense strand serves as a template for mRNA synthesis.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany