17 Days only for NEET 2021


Lesson 28- molecular basis of inheritance- part 2  (Tamil / English )

பாடம் 28- மூலக்கூறு அடிப்படையிலான கொள்கைகள். பகுதி 2

1. படியெடுத்தல். 

         டி. என். ஏ வின் ஒரு இழையிலிருந்து ஆர். என். ஏ இழைக்கு செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறைகளே படியெடுத்தல் எனப்படும். 

       டி. என். ஏ சார்ந்த ஆர். என். ஏ பாலிமெரேஸ் என்ற நொதியின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

       ஆர். என். ஏ வை மரபுப்பொருளாகக் கொண்ட சில ரெட்ரோவைரஸ்களில் இத்தகவல் ஒட்டம் அல்லது பாய்வு தலைகீழாக நடைபெறும். எ. கா. HIV. தலைகீழ் படியெடுத்தல் மூலம் ஆர். என். ஏ . டி என்.ஏவை உருவாக்குகிறது. 

2. மொழிபெயர்த்தல்.

          தலைகீழ் படியெடுத்தல் மூலம் ஆர். என். ஏ. டி. என். ஏவை உருவாக்குகிறது. பின் தூது ஆர். என். ஏ வாக படியெடுக்கப்பட்டு ,  மொழிபெயர்த்தல் மூலம் புரதமாகிறது. 

3. படியெடுத்தல் அலகு மற்றும் மரபணு. படியெடுத்தல் அலகு மூன்று பகுதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளது. அவை ஊக்குவிப்பான், அமைப்பு மரபணு மற்றும் நிறைவி ஆகியனவாகும். 

       5' முனையையொட்டி ஊக்குவிப்பான் அமைந்துள்ளது. ஆர். என். ஏ பாலிமெரேஸ் நொதிக்கான பிணைப்பு இடத்தை அளிக்கும் டி. என. ஏ தொடரே ஊக்குவிப்பான் ஆகும். 

       படியெடுத்தல் அலகில் ஊக்குவிப்பான் இருப்பதால் தான், வார்ப்புரு மற்றும் குறியீட்டு இழைகள் தெளிவாகின்றன.

         குறியீட்டு இழையின் 3' முனையில் நிறைவி பகுதி அமைந்துள்ளது. அதற்கேற்ப அதில் ஆர். என். ஏ பாலிமெரேஸின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் டி. என். ஏ வரிசையமைப்பு காணப்படுகிறது. 

4.படியெடுத்தல் நிகழ்முறை. 

      யூகேரியோட்டுகளில் வெளிப்பாட்டு வரிசையமைப்பின் குறியீடுகளான எக்ஸான் மற்றும் வரிசையமைப்பின் குறியீடுகளற்ற இன்ட்ரான் ஆகியவற்றிற்கு மோனோசிஸ்ட்ரானிக் அமைப்பு மரபணுக்கள் இடையூறு செய்கின்றன. 

        பிளத்தல் நிகழ்வால் இன்ட்ரான்கள் நீக்கப்படுகின்றன. HnRNA வில் கூடுதலாக அதன் 5' முனையில் மீதைல் குவானோசைன் ட்ரைபாஸ்பேட் இணைக்கப்படுகிறது. இச்செயல்முறை காப்புறையாக்கம் எனப்படுகிறது. அதே வேளையில் 3' முனையில் அடினைலைட் எச்சங்கள் இணைக்கப்படுகின்றன. இந்நிலைக்கு வாலாக்கம் எனப்படும். 

5. மரபணுக் குறியீடுகள். 

       மரபணுவிலுள்ள நியுக்ளியோடைடு களுக்கு இடையேயான தொடர்பையும் அவை குறியீடு செய்யும் அமினோ அமிலங்களையும் குறிக்கக் கூடியதாகும். மொத்தத்தில் 64 முக்குறியங்களுக்கு வாய்ப்புள்ளன.அதில் 61 முக்குறியங்கள் அமினோ அமிலங்களைக் குறிக்கும். 

        மார்ஷல் நிரன்பெர்க், சவிரோ ஒச்சோவா, ஹர்கோபிந்த் கொரானா, ஃபிரான்சிஸ் கிரிக் மற்றும் இவர்களைப் போன்ற பல அறிவியலாளர்கள் மரபணு குறியீடுகளுக்காக தங்கள் பங்கினை ஆற்றியுள்ளனர்.

6. திடீர் மாற்றமும் மரபணு குறியீடும். 

        திடீர்மாற்றத்தையும் அதனால் குறிப்பிட்ட புரதத்தின் அமினோ அமில வரிசையில் ஏற்பட்ட மாற்றத்தையும் ஒப்பிட்டதில் , மரபணுக் குறியீட்டின் மதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

       திடீர் மாற்றம் பற்றிய ஆய்வுகள் மூலம் மரபணுவிற்கும் டி. என். ஏ விற்கும் உள்ள தொடர்பு நன்கு புரிந்து கொள்ளப்பட்ட இருக்கிறது. 

7. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு மூலம் புள்ளி திடீர்மாற்றத்தை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 

    ABC DEF GHI JKL

   DEF GHI ஆகியவற்றுக்கிடையே O  எழுத்து சேர்க்கப்பட்டால் வரிசையமைப்பு, 

  ABC DEF OGH IJK L

  என மாறும். அதே இடத்தில் O வுடன் Q எழுத்தை சேர்க்க, வரிசையமைப்பு, 

 ABC DEF OQG HIJ KL

என மாறும். 

8. கடத்து ஆர். என். ஏ- இணைப்பு மூலக்கூறு. 

      செல்லின் சைட்டோபிளாசத்தில் சிதறி காணப்படும் அமினோ அமிலங்களை எடுத்து வரும் கடத்தியாக செயல்படுதலும் , தூது ஆர். என். ஏ மூலக்கூறில் உள்ள குறிப்பிட்ட குறியீடுகளைப் படிப்பதுவும் கடத்து ஆர். என். ஏக்களின் வேலையாகும்.

      இந்த சொற்களை ஃபிரான்சிஸ் கிரிக் உருவாக்கினார். 

9. லேக் ஒபரான். 

            செல்களில் லேக்டோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு, பெர்மியேஸ், B  கேலக்டோசிடோசிஸ் மற்றும் டிரான்ஸ்அசிடைலேஸ் ஆகிய மூன்று நொதிகள் தேவைப்படுகின்றன. 

           செல்லுக்குள் லேக்டோஸ் நுழைவதற்கு பெர்மியேஸ் நொதியும் , லேக்டோஸை குளுக்கோஸ் மற்றும் கேலக்டோஸாக மாற்றும் நீராற்பகுப்பு வினைக்காக  B கேலக்டோசிடேஸ் நொதியும், அசிடைல் CO A விலிருந்து, B கேலக்டோசிடேஸூக்கு அசிடைல் குழுவை இடமாற்றம் செய்ய டிரான்ஸ்அசிடைலேஸ் நொதியும் தேவைப்படுகின்றன. 

10. மனித மரபணுத் திட்டம். 

       சர்வதேச மனித மரபணுத் திட்டம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மாபெரும் திட்டம் நிறைவுற 13 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 

         இன்றைய தேதி வரை வரிசைப்படுத்தப்பட்ட உயிரினங்களின் மரபணுவினை விட மனித மரபணுத் திட்டம் 25 மடங்கு பெரியதாகும். முதன் முதலில் நிறைவு செய்யப்பட்ட முதுகெலும்பி மரபணு, மனித மரபணுவாகும்.

11. டி. என். ஏ ரேகை அச்சிடல் தொழில் நுட்பம். 

     இந்த ரேகை அச்சிடல் தொழில்நுட்பம் முதலில் 1985 ஆம் ஆண்டு அலெக் ஜேஃப்ரேஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நபரும் ஒரே மாதிரியான வேதிய அமைப்புடைய டி. என். ஏ வைப் பெற்றுள்ளனர். 

       இந்த நியுக்ளியோடைடு வரிசைகள் மாறி எண் இணை மறு தொடரிகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக இரண்டு நபர்களின் VNTR   க்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இவை மரபிய குறிப்பான்களாகப் பயன்படுகின்றன. 


கலைச்சொல் அகராதி. 

1. எம்பைசீமா.

        நுரையீரல்கள் அளவில் பெரிதாதல் மற்றும்  சரிவர செயல்படாத தீவிர மருத்துவ நிலையினால் ஏற்படும் சுவாசக் குறைபாடு. 

2. எல் நினோ. 

        கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீரில் ஏற்படும் இயல்பற்ற வெப்ப அதிகரிப்பு. 

3. என்டோமெட்ரியாசிஸ்.

        இயல்பாக கருப்பையின் உட்பகுதியில் காணப்பட வேண்டிய என்டோமெட்ரிய திசு அசாதாரண நிலையில் வெளிப்பகுதியில் காணப்படுதல். 

4. ஓரிடத்தன்மை. 

          தனித்தன்மை வாய்ந்த உயிரினங்கள், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மிக அதிக அளவில் காணப்படும் நிகழ்வு. 

5. கரைந்துள்ள ஆக்சிஜன். 

       நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு. 

6. சுற்றுச் சூழல் சுற்றுலா. 

      தனித்தன்மை வாய்ந்த இயற்கை சுற்றுச் சூழ்நிலைகளின் தரத்தையும் அதன் சேவைகளையும் கண்டு மகிழ சுற்றுலா செல்லுதல். 

7. பரவல். 

         ஒரு குறிப்பிட்ட பரப்பில் வாழும் உயிரினங்கள், அப்பகுதியில் பரவியுள்ள விதம் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் விதம் பரவல் எனப்படும். 

8. மிகை உணவூட்டம். 

         நிலப் பகுதியிலிருந்து வரும் உரங்களின் காரணமாக ஏரி அல்லது பிற நீர்நிலைகளில் உண்டாகும் அதிகப்படியான ஊட்டச்சத்து அடர்த்தியான தாவர வளர்ச்சியை உண்டாக்குகிறது. 

9. யூ குரோமேட்டின். 

       அதிக மரபணுக்களைக் கொண்ட குரோமமேட்டினின் இறுக்கமான வடிவமாகும். இதில் படியெடுத்தல் அதிகம் நடைபெறும். 

10. இயோஹிப்பஸ். 

          நவீன குதிரைகளின் முன்னோடிகள். 

Technical points 

1. Transcription. 

         The process of copying genetic information from one strand of DNA into RNA. 

       This process takes place in presence of DNA dependent RNA polymerase. 

      In some retroviruses that contain RNA as the genetic material (eg.HIV), the flow of information is reversed. 

2. Translation. 

       RNA synthesizes DNA by reverse transcription, then transcribed into mRNA by transcription and then into proteins by translation. 

3. Transcription unit and gene. 

     A transcriptional unit in DNA is defined by three regions, a promoter, the structutal gene and a terminator. 

     The promoter is located towards the 5' end of the coding strand. It is a DNA sequence that provides binding site for RNA polymerase. 

         The presence of promoter in a transcription unit, defines the template and coding strands. 

      The terminator region located towards the 3' end of the coding strand contains a DNA sequence that causes the RNA polymerase to stop transcribing. 

4. Process of transcription. 

        In eukaryotes, the monocistronic structural genes have interrupted coding sequences known as exons and non coding sequences called introns. 

      The introns are removed by a process called splicing. hnRNA undergoes additional processing called capping and tailing. 

5. Genetic code. 

         Is the sequence relationship between nucleotide in genes and the amino acids in the proteins they encode. 

      There are 64 possible triplets, and 61 of them are used to represent amino acids. 

      Marshall Nirenberg, Severo Ochoa, Hargobind Khorana, Francis Crick and many others have contributed significantly to decipher the genetic code. 

6. Mutation and genetic code. 

      Comparative studies of mutations and corresponding alternation in amino acid sequence of specific protein have confirmed the validity of the genetic code. 

 7. The effect of point mutation can be understood by the following example. 

ABC   DEF  GHI JKL

       If we insert a letter O between DEF and GHI the arrangement would be

    ABC DEF OGH IJK L

   If we insert OQ at the same place the arrangement would be

    ABC DEF OQG HIJ KL. 

8. tRNA - the adapter molecule. 

      The transfer RNA, molecule of a cell acts as a vehicle that picks up the amino acids scattered through the cytoplasm and also reads specific codes of mRNA molecules. 

     This term was postulated by Francis Crick. 

9. Lac operon. 

      The metabolism of lactose in E. Coli requires three enzymes - permease, B galactosidase and transacetylase. 

        The enzyme permease is needed for entry of lactose into the cell, B galactosidase brings about hydrolysis of lactose to glucose and galactose, while transacetylase transfers acetyl group from acetyl CoA to B galactosidase. 

10. Human genome project. 

       The international human genome project was launched in the year 1990. It was a mega project and took 13 years to complete. 

     The human genome is about 25 times larger than the genome of any organism sequenced to date and is the first vertebrate genome to be completed. 

11. DNA fingerprinting. 

           Was first developed by Alec Jeffreys in 1985 . Each of us have the same chemical structure of DNA. But there are millions of differences in the DNA sequence of base pairs. 

     The variable number tandem repeats of two persons generally show variations and are useful as genetic markers. 


Glossary. 

1. Distribution. 

      The occurrence of different organisms in a given area and the way they are distributed in their space, specific time and utilization of their resources. 

2. DO. 

       Dissolved oxygen is the amount of gaseous oxygen dissolved in the water. 

3. Ecotourism. 

       Travel undertaken to witness sites or regions of unique natural ecological quality the provision of services to facilitate such travel. 

4. El Nino. 

       Unusual warming of surface waters in the eastern tropical pacific Ocean. 

5. Emphysema. 

     A serious medical condition that occurs when the lungs become larger and do not work properly, causing difficult in breathing. 

6. Endemism. 

    The phenomenon in which the organisms are exclusively restricted to a given area. 

7. Endometriosis. 

      An abnormal condition in which endometrial tissue that normally lines the uterus grows outside. 

8. Eohippus. 

        Ancestor of modern horse. 

9. Euchromatin. 

           Is a tightly packed form of chromatin that is enriched in genes, and is often under active transcription. 

10. Eutrophication. 

          Excessive richness of nutrients in a lake or other water bodies frequently due to run of fertilizers from the land causing dense growth of plant life.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany