16 Days only for NEET 2021



Lesson 29- Evolution  (Tamil / English )

பாடம் 29- பரிணாமம்

1. உயிரினத் தோற்றம். 

             சிறப்புப் படைத்தல் கோட்பாட்டின் படி உயிரினங்கள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியினால் படைக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. 

        தான் தோன்றல் கோட்பாடு அல்லது உயிரின்றி உயிர் தோன்றல் கோட்பாட்டின்படி உயிரினங்கள் உயிரற்ற பொருட்களிலிருந்து தோன்றின. பல மில்லியன் ஆண்டுகளாக உயிரற்ற பொருட்களான வேதிப்பொருட்கள் மற்றும் மூலக்கூறுகளில் படிப்படியாக நடைபெற்ற பரிணாமத்தால் உயிரினங்கள் தோன்றின. 

       பெருவெடிப்புக் கோட்பாடு - இந்த பேரண்டம் ஒற்றைப் பெரு வெடிப்பினால் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்குகிறது. 

2. உயிரினத் தோற்றம் குறித்த சோதனை அணுகுமுறை. 

     யூரே மற்றும் மில்லர் ஆகியோர் கரிம மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்றும் அவற்றிலிருந்து உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். 

         இத்திரவத்தில் கிளைசின், அலனைன், பீட்டா அலனைன் மற்றும் அஸ்பார்டிக் அமிலம் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டன. 

3. அமைப்பொத்த உறுப்புகள். 

        முதுகெலும்பிகளின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால்கள் குறித்த ஒப்பீட்டு உடற்கூறியல் ஆய்வுகள், அவையனைத்தும் ஒரே அடிப்படை வரைவியைக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

       விரி பரிணாமம்- உருவாக்கத்தில் ஒரே மாதிரியாக அமைந்து ஆனால் வெவ்வேறு செயல்களை செய்யக்கூடிய உறுப்புகள் அமைப்பொத்த 

உறுப்புகள் எனப்படும். இவை விரி பரிணாமத்தை ஏற்படுத்தக் கூடியவை. 

4. செயலொத்த உறுப்புகள். 

       அமைப்பு அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் ஒரே விதமான செயலைச் செய்யக் கூடிய உறுப்புகள். 

       எடுத்துக்காட்டாக பறவைகள் மற்றும் பூச்சிகளின் இறக்கைகள் வெவ்வேறு தோற்ற அமைப்பைப் பெற்றிருந்தாலும் அவை பறத்தல் என்ற ஒரே செயலைச் செய்கின்றன. இது குவி பரிணாமத்திற்கு வழிகோலுகிறது. 

5. தகவமைப்புப் பரவல். 

       ஒரு மூதாதை இனத்திலிருந்து புதிய சிற்றினங்கள், புதிய வாழிடங்களில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளுடன் தோன்றும் பரிணாம நிகழ்வு. 

6. மரபணு ஒட்டம். 

             இனச்செல்கள் வழியாக மரபணுக்கள் இடம்பெயர்தல் அல்லது ஒரு இனக்கூட்டத்தில் தனிப்பட்ட உயிரினங்களின் உள்ளேற்றம் (உட்பரவல்) அல்லது வெளியேற்றம் (வெளிப்பரவல்). 

       மரபியல் நகர்வு/சீவால் ரைட் விளைவு. 

           வாய்ப்புகள் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு இனக்கூட்டத்தின் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிணாம நிகழ்வு. 

7. ஹார்டி- வீன்பெர்க் விதியின் ஊகங்கள். 

       திடீர் மாற்றம் இன்மை

      சீரற்ற இனச்சேர்க்கை

       மரபணு ஓட்டம் இன்மை

       மிகப்பெரிய உயிரினத் தொகை

         இயற்கைத் தேர்வு இன்மை. 

8. மனிதனின் வெவ்வேறு பரிணாமங்கள். 

       ராமாபித்திகஸ்

    ஆஸ்ட்ரலோபித்திகஸ்   

     ஹோமோ ஹாபிலிஸ்

      ஹோமோ ஏரக்டஸ்

      நியாண்டர்தால்

      ஹோமோ சேப்பியன்ஸ்.

9. சிற்றினமாக்கம். 

         ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் பெற்று ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட, வேறுபட்ட சிற்றினங்களாக மாறுவது. 

       எ. இ. எமர்சன் என்பவர் சிற்றினத்தை மரபுரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தனிமை பெற்ற , இயற்கையான NV இனக் கூட்டம். 

10. விலங்குகள் மர பற்றுப் போதல். 

     இது பொதுவானதும் தவிர்க்க இயலாததும் ஆகும். ஏனெனில் சில சிற்றினங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் பெரிய அளவிலான அல்லது விரைவான மாறுதல்களுக்கேற்ப எப்போதும் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியாது. 

      சிற்றினம் மரபறற்றுப்போதல்

      . பெருந்திரள் மரப்பற்றுப்  போதல். 

     உலக அளவில் மரப்பற்றுப் போதல். 


கலைச்சொல் அகராதி.

1. ஃபைப்ராய்டஸ். 

       கருப்பையின் உட்சுவரிலும் வெளிப்பகுதியிலும் காணப்படும் அசாதாரண கட்டிகள் /வளர்ச்சிகள்.

2. பனிப்பாறையாறுகள். 

     மெதுவாக நகரக் கூடிய பெருந்திரளான பனிப்பாறை. 

3. மண்ணியல். 

        புவியின் தோற்றம் மற்றும் அமைப்பு குறித்து படிக்கும் அறிவியல் பிரிவு. 

4. மரபணு வங்கிகள். 

         தனி உயிரிகள், விதைகள் , திசுக்கள் அல்லது இனப்பெருக்க செல்களை இயற்கை வாழிடங்களுக்கு வெளியே பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட நிலையங்கள். 

5. மரபணுக் குழுமம். 

       ஓரு சிற்றினத்தில் உள்ள அனைத்து மரபணுக்களின் தொகுப்பு. 

6. மாயத் தோற்றம். 

       இல்லாத ஒன்றை பார்ப்பதாகவோ , கேட்பதாகவோ அல்லது ஏதேனும் ஒன்றை உணர்வதாகவோ உணர்தல். 

7. வளர்கரு.

          முதுகெலும்பிகளின் கரு வளர்ச்சியில் முழு உயிரியின் புலனாகக் கூடிய கூறுகளைக் கொண்ட நிலை. 

8. வளைவாழ் உயிரிகள். 

        வளை தோண்டுவதற்கான தகவமைப்புகள் உடைய இவ்வுயிரினங்கள் பெரும்பாலும் பூமிக்கடியில் வாழ்வனவாகும். என்று. கா. பேட்ஜர், துன்னெலிகள், கிளாம்கள் மற்றும் மோல் சலமாண்டர்கள். 

9. கேலக்ஸி. 

         குறிப்பிட்ட முறையில் அமைந்துள்ள நட்சத்திர க் கூட்டம். 

10. ஹீமோசோயின். 

               மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய நச்சு நிறமி. 

Technical points 

1. Origin of life. 

       Theory of special creation states that life was created by a supernatural power, respectfully referred to as God. 

         According to the theory of spontaneous generation or Abiogenesis, living organisms orginated from non living materials and occurred through stepwise chemical and molecular evolution over millions of years. 

      Bing bang theory explains the origin of universe as a singular huge explosion in physical terms. 

2. Experimental approach to the origin of life. 

       Urey and Miller (1953), paved way for understanding the possible synthesis of organic compounds that led to the appearance of living organisms. 

     Glycine, alanine, beta alanine and aspartic acid were identified.

3. Homologous structures. 

        In vertebrates, comparative anatomical studies reveal a basic plan in various structures such as fore limbs and Hind limbs. 

      Divergent evolution- structures which are similar in origin but perform different functions are called homologous structures that brings about divergent evolution. 

4. Analogous evolution. 

       Organisms having different structural patterns but similar function. 

      For example, the wings of birds and insects are different structurally but perform the same function of flight that brings about convergent evolution. 

5. Adaptive radiation. 

          The evolutionary process which produces new species diverged from a single ancestral form becomes adapted to newly invaded habitats. 

6. Gene flow. 

       Movement of genes through gametes or movement of individuals in (immigration) and out (emigration) of a population. 

    Genetic drift/ Sewall Wright effect- is a mechanism of evolution in which allele frequencies of a population change over generation due to chance. 

7. Hardy Weinberg's assumptions include. 

      No mutation

      Random mating

      No gene flow

      Very large population size

       No natural selection

8. Evolution of Man. 

      Ramapithecus

      Australopithecus

      Homo habilis

      Homo erectus

      Neanderthal man

      Homo sapiens

9. Speciation. 

         The process by which one species evolves into one or more different species. 

      A. E. Emerson defines species as a genetically disinctive , reproductively isolated natural population. 

10. Extinction of animals. 

         It was common if not inevitable because species could not always adapt to large or rapid environmental changes. 

    Species extinction

    Mass extinction

    Global extinction. 

Glossary. 

1. Fibroids. 

       They are abnormal growths formed on the outside, inside or in the walls of the uterus. 

2. Foetus. 

        Developmental stage extending from the ninth week development to birth. 

3. Fossorial. 

       Is  an animal adapted to digging which lives primarily, but not soley, underground. Some examples are badgers, naked mole rats, clams and mole salamanders. 

4. Galaxy. 

      A specific arrangement of stars. 

5. Gene bank. 

        A facility established for the ex situ conservation of individuals, seeds, tissues or reproductive cells. 

6. Gene pool. 

       The total gene content of a whole species. 

7. Geology. 

       The study of origin and structure of Earth. 

8. Glaciers. 

           A large mass of ice that moves slowly. 

9. Haemozoin. 

      Toxic malarial pigment that causes malaria fever. 

10. Hallucination. 

             The sensation of seeing, hearing or sensing something that does not exist.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany