பாடம் 30. மனித நலன் மற்றும் நோய்கள்
1. செயலாக்க நோய்த்தடைகாப்பு.
உடலில் எதிர்பொருளை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் நோய்த்தடைகாப்பு சார்ந்த எதிர்ப்புத் திறன்.
மந்தமான நோய்த்தடைகாப்பு.
இவ்வகை தடைகாப்பில், எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக எதிர்ப்பொருள் உற்பத்தி அவசியமில்லை. புறச் சூழலிலிருந்து எதிர்ப்பொருட்கள் உயிரிக்குள் செலுத்தப்படுகின்றன.
2. தடுப்பு மருந்தேற்றம்.
என்பது குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்தடைக்காப்பை ஏற்படுத்துவதற்காக நமது உடலில் தடுப்பு மருந்தை செலுத்துவதாகும்.
நோய்த்தடுப்பாக்கம்- என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்த்தடைக்காப்பை நமது உடல் உருவாக்குவதாகும்.நோய்தடுப்பாக்கம் என்பது தடுப்பு மருந்தேற்றத்திற்கு பிறகு நமது உடலில் ஏற்படும் உண்மையான மாற்றங்களை குறிக்கிறது.
3. ஒவ்வாமை.
மனிதர்களில் சிலர் தமது சுற்றுப்புறத்தில் உள்ள சில பொருட்களுக்கு எதிராக ஒவ்வாமையை கொண்டுள்ளனர். சுற்று புறத்தில் காணப்படும் சில நோய் எதிர்ப்பு தூண்டிகளை நமது உடல் எதிர்கொள்ளும் போது நமது தடைக்காப்பு மண்டலம் மிகை துலங்கலை ஏற்படுத்துவது மிகை உணர்மை எனப்படும்.
4. சுயதடைகாப்பு நோய்கள்.
என்பது சுய மற்றும் அயல் மூலக்கூறுகளை பிரித்தறிய இயலாத தன்மையினால் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான தடைக்காப்பு துலங்கல்களின் விளைவாகும்.
நமது உடல் சுய எதிர்ப்பொருட்களையும் மற்றும் செல்நச்சாக்க T செல்களையும் உற்பத்தி செய்து நமது திசுக்களை அழிக்கின்றன.
5. நிணநீரிய உறுப்புகள்.
நோய்த்தடைகாப்பு மண்டலத்தைச் சேர்ந்த அமைப்பிலும் மற்றும் பணியிலும் வேறுபட்ட பல உறுப்புகள் மற்றும் திசுக்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன.
லிம்போசைட்டுகளின் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகள் நிணநீரிய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
6. எய்ட்ஸ்.
என்பது பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு குறைவு சிண்ட்ரோம் எனப்படும். இந்நோய் ஒருவரது வாழ்நாளில் தாமாகவே பெற்றுக் கொண்ட தடைக்காப்பு மண்டல குறைபாட்டு நோயாகும். இது பிறவி நோயல்ல.
எய்ட்ஸ் நோய் மனித நோய்த்தடைகாப்பு குறைவு வைரஸ் தொற்றால் ஏற்படுவதாகும்.
7. புற்றுநோய்.
கட்டி அல்லது திசுபெருக்கம் என்பது கட்டுப்படுத்த முடியாமல் பெருகும் செல்களின் கூட்டமாகும். கட்டி தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து இயல்பான திசுக்களையும் ஆக்கிரமிப்பது புற்றுநோய் எனப்படும்.
கட்டியில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி இரண்டாம் நிலை கட்டிகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலைக்கு வேற்றிட பரவல் அல்லது மெட்டாஸ்டாசிஸ் என்று பெயர்.
8. தவறான போதை மருந்து மற்றும் மதுப்பழக்கம்.
ஒஃபியாய்டு- என்பது மைய நரம்பு மண்டலம் மற்றும் குடல் பாதைகளில் காணப்படும் குறிப்பிட்ட ஒஃபியாய்டு உணர்வேற்பிகளுடன் இணையும் போதை மருந்தாகும்.
கேனபினாய்டுகள்- என்பவை கேனாபிஸ் சடைவா என்ற இந்திய சணல் செடியிலிருந்து பெறப்படுகின்ற கூட்டு வேதிப்பொருட்களாகும். மரிஜுவானா, கஞ்சா, ஹசிஷ் மற்றும் சாரஸ் போன்றவற்றின் முக்கிய மூலாதாரமாக விளங்குபவை இயற்கையான கேனபினாய்டுகள்.
9. பழக்க அடிமைப்பாடு நிலை மற்றும் சார்பு நிலை.
பழக்க அடிமைப்பாடு என்பது ஒரு நபர் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஆல்கஹால் போன்ற சிலவற்றை செய்யவோ அல்லது எடுத்துக்கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ தூண்டும் உடல் சார்ந்த அல்லது உளவியல் ரீதியான தேவையாகும். இப்பழக்கம் அழிவைத் தரும்.
போதை மருந்து பயன்படுத்துபவர் தொடர்ந்து போதை மருந்தை மட்டுமே நினைகாகிறார். மேலும் அதன் மீது அவருக்கு தொடர்ச்சியான கட்டுப்படுத்தப்பட முடியாத ஏக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையே மகிழ்ச்சி உணர்வு எனப்படும்.
10. தடுப்பு முறைகள் மற்றும் கட்டுப்பாடு.
நண்பர்களின் அழுத்தத்தைத் திறமையாகக் கையாளுதல்.
பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை நாடுதல்
கல்வி மற்றும் ஆலோசனை.
ஆபத்தான அறிகுறிகளைக் கண்டறிதல்.
தொழில்முறை மற்றும் மருத்துவ உதவியை நாடுதல்.
கலைச்சொல் அகராதி.
1. மூலச் சிற்றினங்கள்.
ஒரு சூழ்நிலை மண்டலத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தில் அழிவு, மற்ற சிற்றினங்களில் உள்ள சராசரியை விட அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
2. மேக்ரோஃபேஜ்.
மோனோசைட்டுகளில் இருந்து பெறப்படுகின்ற மிகப்பெரிய வெள்ளையணு இவை ஆகும். இவை செல் விழுங்குதல் பணியை மேற்கொள்கின்றன.
3. கோழைச் சார்ந்த நிணநீரிய திசு.
பொதுவாக இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பாகும். பேயர் திட்டுகள், டான்சில்கள்.
4. அமைவிடம்.
ஒரு குறிப்பிட்ட பண்பிற்கான மரபணு, ஒரு குறிப்பிட்ட குரோமோசோமில் அமைந்துள்ள இடம்.
Technical points
1. Active immunity.
The immunological resistance developed by the organisms through the production of antibodies in their body.
Passive immunity- does not require the body to produce antibodies to antigens. The antibodies are introduced from outside into the organism.
2. Vaccination.
Is the process of administrating a vaccine into the body or the act of introducing a vaccine into the body to produce immunity to a specific disease.
Immunization- is the process of the body building up immunity to a particular diseases. Immunization describes the actual changes in the body after receiving a vaccine.
3. Allergy.
Some of the individuals are very sensitive to some particles present in the environment. The exaggerated response of the immune system to certain antigens present in the environment is called hypersensitivity.
4. Auto immunity.
Is due to an abnormal immune response in which the immune system fails to properly distinguish between self and non self and attacks it's own body.
Our body produces antibodies and cytotoxic T cells that destroy our own tissues.
5. Lymphoid organs.
Immune system of an organism consists of several structurally and functionally different organs and tissues that are widely dispersed in the body.
The organs involved in the origin, maturation and proliferation of lymphocytes.
6.AIDS.
Is an acronym for Acquired Immuno Deficiency Syndrome. It is the deficiency of immune system, acquired during there life time of an individual indicating that it is not a congenital disease.
AIDS is caused by Human Immuno Deficiency Virus.
7. Cancer.
A tumour or neoplasm is a group of cells whose growth has gone unchecked. When a tumour continues to grow and invades healthy tissue.
They spread to other parts of the body from the tumour and give rise to secondary tumour. This is known as metastasis.
8. Drug and alcohol abuse.
Opioids- are drugs which bind to specific opioid receptors present in the central nervous system and intestinal tract.
Cannobinoids- are a group of chemicals obtained from Cannabis sativa, the Indian hemp plant. Natural cannabinoids are the main source of marijuana, ganja, hashish and charas.
9. Addiction and dependence.
Addiction is a physical or psychological need to do or take or use certain substance such as alcohol, to the point where it could be harmful to the individual.
Addiction to drugs and alcohol can lead to a psychological attachment to certain effects such as euphoria and temporary feeling of well being.
10. Prevention and control.
Effectively dealing with peer pressure.
Seeking help from parents and peers.
Education and counselling.
Looking for danger signs.
Seeking professional and medical assistance.
Glossary.
1. Inflammation.
Eg. Vaginitis. Inflammation in the vagina, urethritis- inflammation in the urethra, endocervicitis- inflammation inside the cervix, epididymitis- inflammation in the epididymis, prostatitis- inflammation in the prostrate gland.
2. Keystone species.
A species whose loss from an ecosystem would cause a greater than average change in other species population or ecosystem process.
3. Locus.
The particular point on the chromosome at which the gene for a given trait occurs.
4. Macrophage.
A large, leucocyte derived from a monocyte that functions in phagocytosis.
5. Malt mucosal associated lymphoid tissue.
Collective terms for secondary lymphoid organs located along various mucous membrane surfaces including peper's patches, tonsils, appendix.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment