Lesson 5- Morphology of flowering plants (Tamil / English )
பாடம் 5. பூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல்
1. வேர்கள்.
ஆணி வேர்.
இருவித்திலைத் தாவரங்களில் உள்ளது போல் நிலைத்து தொடர்ந்து வளரும் முதல் நிலை வேர்.
சல்லி வேர்.
இவ் வேர்கள் பெரும்பாலும் ஒரே அளவில் கொத்தாக நூலிழை போல் காணப்படும்.
வேற்றிட வேர்.
முளைவேர் அல்லாமல் தாவரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து உருவாகும் வேர்கள்.
2. வேரின் பகுதிகள்.
வேர்மூடி- வேர் முனை பாரங்கைமா செல்களால் ஆன குவிந்த ஓர் அமைப்பினால் சூழப்பட்டிருக்கும்.
வளராக்கத்திசு மண்டலம்- தொடர்ந்து பகுப்படைந்து எண்ணிக்கையில் பெருகும் ஆக்குத் திசுக்கள்.
நீட்சி மண்டலம்- நீட்சியடையும் செல்கள்.
முதிர்ச்சி மண்டலம்- முதிர்ந்த மாறுபாடு அடையும் செல்கள்.
3. சுவாசத் துளைகள்.
நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் காற்றோட்டம் மிகக் குறைவாக இருக்கும். சுவாசத்திற்காக எதிர் புவி நாட்டமுடைய சிறப்பு வேர்களை உருவாக்குகின்றன.
எ. கா. ரைசோஃபோரா.
4. இலை அதைப்பு.
லெகூம் வகைத் தாவரங்களில் இலையடிப்பகுதியானது அகன்றும் பருத்தும் காணப்படுகிறது.
எ. கா. கிளைட்டோரியா.
5. நரம்பமைவு.
இலைத்தாள் அல்லது இலைப் பரப்பில் நரம்புகளும், கிளை நரம்புகளும் அமைந்திருக்கும் முறை.
வலைப்பின்னல் நரம்பமைவு.
இதில் மையத்தில் ஒரு தெளிவான மைய நரம்பும், அதிலிருந்து தோன்றும் பல சிறிய இரண்டாம் நிலை நரம்புகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இலைப் பரப்பில் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகின்றன.
இணைப்போக்கு நரம்பமைவு.
இவ்வகை நரம்பமைவில் அனைத்து நரம்புகளும் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்கின்றன. மேலும் இங்கு தெளிவான வலைப்பின்னல் அமைப்பு தோன்றுவதில்லை. இவ்வகை நரம்பமைவு ஒரு விதையிலைத் தாவர இலைகளின் சிறப்பமைவாகும்.
6. இலை வகை.
தனி இலை.
ஒரு இலைக்காம்பில் ஒரே ஒரு இலைத்தாள் மட்டும் இருக்கும். எ. கா. மாங்காய்.
கூட்டிலை.
ஓர் இலைக்காம்பில் பல இலைத்தாள்கள் இருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு இலைத்தாளிற்கும் சிற்றிலை என்று பெயர்.
சிறகு வடிவக் கூட்டிலைகள்.
கூட்டிலைக் காம்பு என்ற அச்சில் பல பக்கவாட்டுச் சிற்றிலைகளை மாற்றிலை அமைவிலோ அல்லது எதிரிலை அமைவிலோ கொண்டு அமைந்திருக்கும். எ. கா. வேம்பு.
அங்கை வடிவக் கூட்டிலை.
அனைத்து சிற்றிலைகளும் இலைக்காம்பின் நுனியில் ஒரே புள்ளியில் இணைக்கப்பட்டு இருக்கும். உள்ளங்கை யிலிருந்து விரல்கள் தோன்றுவது போல இங்கு சிற்றிலைகள் ஆரநீட்சிகளாக தோன்றுகிறது. எ. கா. இலவு.
7. இலை அடுக்கமைவு.
தண்டில் இலைகள் அமைந்திருக்கும் முறை.
மாற்றிலை அடுக்கமைவு.
இவ்வகை இலையமைவில் ஒரு கணுவில் ஒரே ஒரு இலை மட்டும் காணப்படும். அடுத்தடுத்துள்ள கணுக்களில் இவ்விலைகள் மாறிமாறி மாற்றிலை அமைவில் அமைந்திருக்கும். எ. கா. ஹைபிஸ்கஸ்.
எதிரிலை அடுக்கமைவு.
இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் இரண்டு இலைகள், ஒன்றுக்கொன்று எதிரெதிராக அமைந்துள்ளன. எ. கா. கலோட்ராபிஸ்.
வட்ட இலை அடுக்கமைவு.
இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் மூன்றிற்கு மேற்பட்ட இலைகள் வட்டமாக அமைந்து காணப்படுகின்றன. எ. கா. அல்ஸ்டோனியா.
8. மஞ்சரி.
கிளைத்த அல்லது கிளைக்காத அச்சின் மேல் கொத்தாக பல மலர்கள் குறிப்பிட்ட முறையில் தோன்றுவது ஆகும்.
ரசிமோஸ் மஞ்சரி.
மஞ்சரியின் மைய அச்சின் நுனி மொட்டு தொடர்ந்து வளர்ந்து பக்கவாட்டில் மலர்களை உருவாக்குவது.
சைமோஸ் மஞ்சரி.
மையத் தண்டு வளர்ச்சி தடைப்பட்டு மலரில் முடிவடையும். பக்க மொட்டுகளின் மூலம் தொடர்ந்து வளர்ச்சி நடைபெறும்.
9. மலர் சீரமைவு.
ஒரு மலரை மையத்தின் வழியாக எந்த ஒரு தளத்தில் இரு சம பாதியாகப் பிரிக்க முடிதல்.
ஆரச் சீரமைவு.
மலரின் மையத்தில் செல்லுமாறு எந்த ஆரத்தில் அல்லது எந்த தளத்தில் வெட்டி னாலும் இரு பிம்ப உருவங்களாக பிரியும் மலர்கள். எ. கா. கடுகு, ஊமத்தை, மிளகாய்.
இருபக்க சீரமைவு.
ஒரே ஒரு தளத்தில் மட்டுமே மலரை இரு சம பாகங்களாகப் பிரிக்க முடியும். எ. கா. பைசம், செம்மயிற்கொன்றை (gulmohar), கருவாமரம் (cassia).
சமச்சீரற்றவை.
எந்தப் பரப்பிலும் சமச்சீர் இல்லாத மலர்கள். மலரின் எந்த ஆரத்தில் வெட்டி னாலும் இரு சம பாகங்கள் கிடைக்காது.
எ. கா. கல்வாழை (canna).
10. சூலகப்பை அமைவிடம்.
சூலகப்பை மலரின் மற்ற பாகங்களுடன் எங்கு ஒட்டியிருக்கிறது என்பதை குறிப்பிடுவதாகும்.
ஹைப்போகைனஸ்- புல்லி இதழ்கள், அல்லி இதழ்கள், மகரந்த தாள்கள் மேற்மட்ட சூலகப்பையின் அடியில் இணைந்திருக்கும். எ. கா. கடுகு, செம்பருத்தி, கத்திரிக்காய்.
பெரிகைனஸ் - ஹைபாந்தியம் ஓர் மேல்மட்டச் சூலகப்பையின் அடியில் இணைந்திருப்பது. எ. கா. ஊட்டி ஆப்பிள் ( plum), ரோஜா (rose), குழிப்பேரி (peach).
எப்பிகைனஸ்- புல்லி இதழ்கள், அல்லி இதழ்கள், மகரந்த தாள்கள் கீழ்மட்டச் சூலகப்பையின் மேல்புறத்தில் இணைந்திருக்கும். எ. கா. கொய்யாப்பழம் (guava), வெள்ளரிப்பழம் (cucumber).
கலைச்சொல் அகராதி.
1. எண்ணிக்கை அமைவு.
ஓர் வட்ட அடுக்கில் அமைந்துள்ள மலர் உறுப்புகளின் எண்ணிக்கை ஆகும்.
2. தொங்கும் அமைவு.
மலர்கள் தனித்தனியாக அல்லது மஞ்சரியாக தொங்கும் அமைப்பு, தொங்கு மஞ்சரி/தொங்கு சூல்.
3. ராச்சில்லா.
ஸ்பைக்லெட்டின் அல்லது சிறு கதிர் மஞ்சரியின் மைய அச்சு..
Technical points
1. Root.
Tap root.
When the primary root persists and continues to grow as in dicotyledons, it forms the main root of the plant.
Fibrous root.
Bunch of thread- like roots equal in size.
Adventitious root.
Root developing from any part of the plant other than radicle.
2. Regions of root.
Root cap- Root tip is covered by a dome shaped parenchymatous cells.
Meristematic zone- The cells actively divide and continuously increase in number.
Zone of elongation- elongated cells.
Zonebof maturation- mature differentiated cells.
3. Pneumatophores.
Develop special kinds of roots (negatively geotrophic) for respiration because the soil becomes saturated with water and aeration is very poor.
Example- Rhizophora.
4. Pulvinus.
In legumes leafbase become broad and swollen.
Example- Clitoria.
5. Venation.
The arrangement of veins and veinlets on the leaf blade or lamina.
Reticulate venation- prominent midrib from which several secondary veins arise that branch and anastomose like a network.
Parallel venation- Veins run parallel to each other and do not form a prominent reticulum.
6. Leaf type.
Simple- When the petiole bears a single lamina. Ex. Mango.
Compound- main rachis bears more than one lamina surface called leaflets.
Pinnately compound leaf- one in which the rachis, bears laterally a number of leaflets, arranged alternately or in an opposite manner. Ex. Neem
Palmately compound leaf- one in which the petiole bears terminally, one or more leaflets which seem to be radiating from a common point like fingers from the palm. Ex. Silk cotton.
7. Phyllotaxy.
The mode of arrangement of leaves on the stem.
Alternate- only one leaf per node and the leaves on the successive nodes are arranged alternate to each other. Ex. Hibiscus.
Opposite- each node possess two leaves opposite to each other. Ex. Calotropis.
Whorled- more than three leaves are present in a whorl at each node forming a circle or whorl. Ex. Alstonia.
8. Inflorescence.
Group of flowers arising from a branched or unbranched axis with a definite pattern.
Racemose- The central axis of the inflorescence possesses terminal bud which is capable of growing continuously and produce lateral flowers.
Cymose- central axis stops growing and ends in a flower, further growth is by means of axillary buds.
9. Flower symmetry.
A flower is symmetrical when it is divided into equal halves in any plane running through the centre.
Actinomorphic (radial symmetry).
The flower shows two mirror images when cut in any plane or radius through the centre. Ex. Mustsrd, Datura, Chilli.
Zygomorphic (Bilateral symmetry).
The flower can be divided into equal halves in only one plane. Ex. Pisum, Gulmohar, Cassia.
Asymmetric(amorphic).
Flower lacks any plane of symmetry and cannot be divided into equal halves in any plane. Ex. Canna.
10. Position of ovary.
The position or attachment of ovary relative to the other floral parts.
Hypogynous- The term is used for sepals, petals and stamens attached at the base of a superior ovary. Ex. Mustard, China rose, brinjal.
Perigynous- The term is used for a hypanthium attached at the base of a half inferior ovary. Ex. Plum, rose, peach.
Epigynous- The term is used for sepals, petals and stamens attached at the tip of an inferior ovary. Ex. Guava, cucumber.
Glossary.
1. Merosity.
Number of parts per whorls.
2. Pendulous.
Hanging downward loosely or freely (like catkin)
3. Rachilla.
Central axis of a spikelet.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment