Classification of Living World | உயிரி உலகின் வகைப்பாடு
In our daily life we see several things in and around us.
நமது அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல பொருட்களைக் காண்கிறோம்.
classification is essential and could be done only by understanding and comparing the things based on some characters
வகைப்பாடு சில பண்புகளின் அடிப்படையில் புரிந்து கொள்வதற்கும், ஒப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
Theophrastus, “Father of Botany” used the morphological characters to classify plants into trees, hrubs and herbs
தாவரவியலின் தந்தையான தியோஃபிராஸ்டஸ் தாவரங்களைப் புற அமைப்புப் பண்புகளின் அடிப்படையில் மரங்கள், புதர்ச்செடிகள், சிறுசெடிகள் என வகைப்படுத்தினார்.
Aristotle classified animals into two groups. i.e., Enaima (with red blood) and Anaima (without red blood)
மேலும் அரிஸ்டாட்டில் விலங்கினங்களை இரத்த நிறத்தின் அடிப்படையில், சிவப்புநிற இரத்த உயிரிகள் (Enaima), சிவப்புநிறமற்ற இரத்த உயிரிகள் (Anaima) என இரு பெரும்பிரிவுகளாகப் பிரித்தார்.
Systems of Classification | வகைப்பாட்டு முறைகள்
(1735) - Carl Linnaeus - Two Kingdom - 1. Plantae 2. Animalia
(1735) - கார்ல் லின்னேயஸ் - இரண்டு பெரும்பிரிவு
1. பிளாண்டே 2. அனிமேலியா
(1866) - Ernst Haeckel - Three Kingdom - 1. Protista 2. Plantae 3. Animalia
(1866) - எர்னெஸ்ட் ஹெக்கேல் - மூன்று பெரும்பிரிவு
1. புரோட்டிஸ்டா, 2. பிளாண்டே, 3. அனிமேலியா
(1956) - Copeland - Four Kingdom - 1. Monera 2. Protista 3. Plantae 4. Animalia
(1956) - கோப்லேண்ட் - நான்கு பெரும்பிரிவு
1. மொனிரா 2. புரோட்டிஸ்டா 3. பிளாண்டே 4. அனிமேலியா
(1969) - R.H. Whittaker - Five Kingdom
(1969) - R.H. விட்டாக்கெர் - ஐந்து பெரும்பிரிவு
1. மொனிரா 2. புரோட்டிஸ்டா 3. பூஞ்சைகள் 4. பிளாண்டே 5. அனிமேலியா
(1998) - Thomas Cavalier-Smith - Six Kingdom
(1998) - தாமஸ் கேவாலியர்-ஸ்மித் - ஆறு பெரும்பிரிவு
1.ஆர்க்கிபாக்டீரியங்கள், 2.பாக்டீரியங்கள் 3. புரோட்டிஸ்டா 4. பூஞ்சைகள் 5. பிளாண்டே 6. அனிமேலியா
(2015) - Ruggierio et al., - Seven Kingdom
(2015) - ருகிரோவும் சக ஆய்வாளர்களும் - ஏழு பெரும்பிரிவு
1.ஆர்க்கிபாக்டீரியங்கள், 2.பாக்டீரியங்கள் 3. புரோட்டிஸ்டா 4.குரோமிஸ்டா 5.பூஞ்சைகள் 6. பிளாண்டே 7. அனிமேலியா
Two Kingdom Classification | இரண்டு பெரும்பிரிவு வகைப்பாடு
Carl Linnaeus classified living world into two groups namely Plants and Animals based on morphological characters
கார்ல் லின்னேயஸ் உயிரின உலகத்தை அவற்றின் புறப்பண்புகளின் அடிப்படையில் தாவரங்கள், விலங்குகள் என இரு குழுக்களாகப் பிரித்தார்.
His classification faced major setback because Prokaryotes and Eukaryotes were grouped together
எனினும் இவரின் வகைப்பாடு மிகுந்த பின்னடைவு அடைந்தது. இதற்குக் காரணம் இவர் உயிரினங்களில் தொல்லுட்கரு உயிரிகள், மெய்யுட்கரு உயிரிகள் ஆகிய இரண்டு பிரிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே குழுவின் கீழ் வகைப்படுத்தினார்.
Similarly fungi, heterotrophic organisms were placed along with the photosynthetic plants
இதே போல் சார்பூட்ட முறையைச் சார்ந்த பூஞ்சை இனங்களைத் தற்சார்பு ஊட்ட முறையைக் கொண்ட தாவர இனங்களுடன் ஒன்றாகச் சேர்த்து வகைப்படுத்தினார்.
In course of time, the development of tools compelled taxonomists to look for different areas like cytology, anatomy, embryology, molecular biology, phylogeny etc., for classifying organisms on earth.
காலப்போக்கில் நவீன தொழில்நுட்பக் கருவிகளின் வளர்ச்சிக்காரணமாக வகைப்பாட்டாளர்கள் வெவ்வேறு பிரிவுகளான செல்லியல், உள்ளமைப்பியல், கருவியல், மூலக்கூறு உயிரியல், இனப்பரிணாமம் (Phylogeny) போன்ற மேலும் பல பண்புகளைப் பயன்படுத்திப் புவியில் உள்ள உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளனர்.
It helps in understanding the evolutionary relationship between organisms
உயிரினங்களுக்கு இடையேயுள்ள பரிணாமத் தொடர்பினை அறிவதற்கும் உதவுகிறது.
Five Kingdom Classification | ஐந்து பெரும்பிரிவு வகைப்பாடு
The Kingdoms include Monera, Protista, Fungi, Plantae and Animalia. The criteria adopted for the
classification include cell structure, thallus organization, mode of nutrition, reproduction and phylogenetic relationship.
உயிரிகளை அவற்றின் செல் அமைப்பு, உடல் அமைப்பு, உணவூட்ட முறை, இனப்பெருக்கம், இனப்பரிணாமக் குழுத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் மொனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா என ஐந்து பெரும்பிரிவுகளாகப் பிரித்தார்.
Merits | நிறைகள்
The classification is based on the complexity of cell structure and organization of thallus
இந்த வகைப்பாடு சிக்கலான செல் அமைப்பு, உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
It is based on the mode of nutrition
உணவூட்டமுறையின் அடிப்படையில் இவ்வகைப்பாடு அமைந்துள்ளது.
Separation of fungi from plants
பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
It shows the phylogeny of the organisms
உயிரினங்களுக்கிடையே காணப்படும் இனப்பரிணாம் குழுத்த்தொடர்பினை எடுத்துக்காட்டுகிறது.
Demerits | குறைகள்
The Kingdom Monera and protista accommodate both autotrophic and heterotrophic organisms, cell wall lacking and cell wall bearing organisms thus making these two groups more heterogeneous.
தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள், செல் சுவருடைய , செல் சுவரற்ற உயிரினங்கள் மொனிரா, புரோட்டிஸ்டா எனும் பெரும்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இவ்விரண்டு பெரும்பிரிவுகளும் மாற்றுப்படித்தான பண்பை பெறுகின்றன.
Viruses were not included in the system
வைரஸ்கள் இந்த வகைப்பாட்டில் சேர்க்கப்படவில்லை.
Carl Woese and co-workers in the year 1990 introduced three domains of life viz., Bacteria, Archaea and Eukarya based on the difference in rRNA nucleotide sequence, lipid structure of the cell membrane
காரல் வோஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்களும் 1990ஆம் ஆண்டு உயிரினங்களில் மூன்று முக்கிய உயிர்ப்புலங்களை (domain) அறிமுகப்படுத்தினர்.
அவை பாக்டீரியா, ஆர்க்கியே, யுகேரியா என்பவைகளாகும்.
இவ்வகைப்பாடு rRNA நூக்லியோடைட் தொடர்வரிசையிலுள்ள வேறுபாடு, செல் சவ்வில் உள்ள கொழுப்புகளின் அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் உள்ளது.
Six Kingdom Classification | ஆறு பெரும்பிரிவு வகைப்பாடு
The Kingdom Monera is divided in to Archaebacteria and Eubacteria
இதில் மொனிரா என்ற பெரும்பிரிவை ஆர்க்கிபாக்டீரியங்கள், பாக்டீரியங்கள் என்று இரண்டாகப் பிரித்தார்.
Seven Kingdom Classification | ஏழு பெரும்பிரிவு வகைப்பாடு
which is a practical extension of Thomas Cavalier’s six Kingdom scheme.
இது தாமஸ் கேவாலியர்-ஸ்மித்தின் ஆறு பெரும்பிரிவு வகைப்பாட்டின் செயல்முறை சார்ந்த விரிவான தொகுப்பாகும்.
According to this classification there are two Super Kingdoms. (Prokaryota and Eukaryota)
இந்த வகைப்பாட்டின்படி உயிரிகள் இரண்டு மிகப்பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (புரோகேரியோட்டா, யுகேரியோட்டா).
Prokaryota includes two Kingdoms namely Archaebacteria and Eubacteria.
புரோகேரியோட்டா இரண்டு பெரும்பிரிவுகளாகவும் அதாவது ஆர்க்கிபாக்டீரியா மற்றும் பாக்டீரியா எனவும்,
Eukaryota includes the Protozoa, Chromista, Fungi, Plantae and Animalia
யுகேரியோட்டாவை புரோட்டோசோவா, குரோமிஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே (தாவரங்கள்) மற்றும் அனிமேலியா (விலங்குகள்) எனும் ஐந்து பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
A new Kingdom, the Chromista was erected and it included all algae whose chloroplasts contain chlorophyll a and c, as well as various colourless forms that are closely related to them
குரோமிஸ்டா எனும் புதிய பெரும்பிரிவு தோற்றுவிக்கப்பட்டு, இதில் பசுங்கணிகத்தில் பச்சையம் a மற்றும் C கொண்ட பாசிகளும், இவையுடன் நெருக்கமான தொடர்புடைய பல வகை நிறமற்ற உயிரிகளும் வைக்கப்பட்டுள்ளன.
Diatoms, Brown algae, Cryptomonads and Oomycetes were placed under this Kingdom
டயாட்டம்கள், பழுப்புப் பாசிகள், கிரிப்டோமோனாட்கள், ஊமைசீட்ஸ் போன்றவை இந்தப் பெரும்பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ளன.
Post a Comment