Classification of Viruses | வைரஸ்களின் வகைப்பாடு
Viruses are classified into seven classes
வைரஸ்கள் ஏழு வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
Each virus possesses only one type of nucleic acid either DNA or RNA
வைரஸ்களின் மரபணுதொகையம் (Viral genome) இரண்டு வகையான உட்கரு அமிலங்களில் வைரஸ்கள் DNA அல்லது RNA ஒன்றை மட்டுமே கொண்டிருக்கும்.
The nucleic acid may be in a linear or circular form
வைரஸ்களில் காணக்கூடிய உட்கரு அமிலங்கள் நீண்ட இழை போன்றோ, வட்டமாகவோ இருக்கும்.
Generally nucleic acid is present as a single unit
பொதுவாக உட்கரு அமிலம் ஒரே அலகாகக் காணப்படுகிறது.
but in wound tumour virus and in influenza virus it is found in segments
ஆனால் காயக்கழலை (Wound tumour) வைரஸ்களிலும், இன்புளுயன்சா வைரஸ்களிலும் உட்கரு அமிலம் சிறுசிறு துண்டுகளாகக் காணப்படும்.
The viruses possessing DNA are called ‘Deoxyviruses’
DNA வைக் கொண்டுள்ள வைரஸ்கள் 'டீஆக்ஸிவைரஸ்கள்' (Deoxyviruses) என்றும்,
Where as those possessing RNA are called ‘Riboviruses’
RNA வைக்கொண்டுள்ள வைரஸ்கள் 'ரிபோவைரஸ்கள்' (Riboviruses)
Majority of animal and bacterial viruses are DNA viruses
பெரும்பாலான விலங்கு, பாக்டீரிய வைரஸ்கள் DNA வைரஸ்களாகும்.
(HIV is the animal virus which possess RNA).
(HIV விலங்கு வைரஸாக இருப்பினும் RNA வைக் கொண்டுள்ளது).
Plant viruses generally contain RNA (Cauliflower Mosaic virus possess DNA).
தாவர வைரஸ்கள் பொதுவாக RNA வைக் கொண்டுள்ளன.
(Cauliflower Mosaic virus possess DNA)
(காலிஃபிளவர் தேமல் வைரஸ்கள் DNA வைப் பெற்றுள்ளன).
The nucleic acids may be single stranded or double stranded
உட்கரு அமிலங்கள் ஓரிழை அல்லது ஈரிழையால் ஆனவை.
On the basis of nature of nucleic acid viruses are classified into four Categories.
உட்கரு அமிலங்களின் அடிப்படையில் வைரஸ்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ssDNA (Parvo viruses) | ssDNA வைரஸ்கள் (பார்வோ வைரஸ்கள்),
dsDNA (Bacteriophages) | dsDNA வைரஸ்கள் (பாக்டீரியஃபாஜ்கள்),
ssRNA (TMV ) | ssRNA வைரஸ்கள் (TMV)
dsRNA(Wound Tumour Virus). | dsRNA வைரஸ்கள் (காயக்கழலை வைரஸ்).
Different Classes of viruses | வைரஸ்களின் பல்வேறு வகுப்புகள்
Class 1 – Viruses with dsDNA - Adeno viruses
வகுப்பு 1 - dsDNA கொண்ட வைரஸ்கள் - அடினோ வைரஸ்கள்
Class 2 –Viruses with (+) sense ssDNA - Parvo viruses
வகுப்பு 2 - வெளிப்பாடடையும் SSDNA கொண்ட வைரஸ்கள் - பார்வோ வைரஸ்கள்
Class 3 – Viruses with dsRNA - Reo viruses
வகுப்பு 3 - dsRNA கொண்ட வைரஸ்கள் - ரியோ வைரஸ்கள்
Class 4 – Viruses with (+)sense ssRNA - Toga viruses
வகுப்பு 4 - வெளிப்பாடடையும் SSRNA கொண்ட வைரஸ்கள் - டோகா வைரஸ்கள்
Class 5 – Viruses with (–)sense ssRNA - Rhabdo viruses
வகுப்பு 5 - வெளிப்பாடடையாத SSRNA கொண்ட வைரஸ்கள் - ராப்டோ வைரஸ்கள்
Class 6 – Viruses with (+) sense ssRNA –RT: that replicate with DNA intermediate in life cycle - Retro viruses
வகுப்பு 6 - வெளிப்பாடடையும் ssRNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில் DNAவுடன் பெருக்கம் அடைபவை. - ரெட்ரோ வைரஸ்கள்
Class 7 – Viruses with ds DNA –RT: that replicate with RNA intermediate in life cycle - Hepadna viruses
வகுப்பு 7 - dsDNA-RT: கொண்ட வைரஸ்கள், வாழ்க்கைச் சுழற்சியில் RNA-வுடன் பெருக்கம் அடைபவை - ஹெபாட்னா வைரஸ்கள்
Tobacco Mosaic Virus | புகையிலை தேமல் வைரஸ் (TMV)
Viruses infect healthy plants through vectors like aphids, locusts etc
செடிப்பேன் (Aphids), வெட்டுக்கிளி (Locust), போன்ற கடத்திகள் வழியாக நோயுற்ற தாவரங்களிலிருந்து பிற தாவரங்களுக்குப் பரவுகிறது.
Structure | அமைப்பு
Electron microscopic studies have revealed that TMV is a rod shaped
புகையிலை தேமல் வைரஸ்கள் (TMV) கோல் வடிவமைப்பு பெற்றுள்ளது.
The virion is made up of two constituents, a protein coat called capsid and a core called nucleic acid
விரியான் எனப்படும் வைரஸ் துகள் இரண்டு முக்கியப் பகுதிப்பொருட்களான கேப்சிட் என்ற புரத உறையையும், மையத்தில் உட்கரு அமிலத்தையும் கொண்டுள்ளது.
The protein coat is made up of approximately 2130 identical protein subunits called capsomeres
புரத உறை ஏறத்தாழ 2130 அமைப்பில் ஒத்த கேப்சோமியர்கள் என்று அழைக்கப்படும் புரதத்துணை அலகுகளால் ஆனது.
which are present around a central single stranded RNA molecule
இவை வைரஸின் மையத்தில் காணப்படுகின்ற ஓரிழை RNA வைச் சூழ்ந்து அமைந்திருக்கின்றன.
The genetic information necessary for the formation of a complete TMV particle is contained in its RNA
ஒரு முழு TMV துகள் உருவாவதற்கான மரபியல் தகவல் முழுவதும் RNA வில் உள்ளது.
The RNA consists of 6,500 nucleotides
TMV வைரஸின் RNA 6,500 நியூக்லியோடைட்களைக் கொண்டுள்ளது.
Bacteriophage | பாக்டீரியஃபாஜ்
Viruses infecting bacteria are called Bacteriophages
பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியஃபாஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன.
It literally means ‘eaters of bacteria’ (Gr: Phagein = to eat)
இதன் நேரடியான பொருள் 'பாக்டீரிய உண்ணிகள் (கிரேக்கம்: ஃபாஜின் = உண்ணுவது).
Phages are abundant in soil, sewage water, fruits vegetables, and milk.
மண், கழிவுநீர், பழங்கள், காய்கறிகள், பால் போன்றவற்றில் ஃபாஜ்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
The T4 phage is tadpole shaped
T4 பாக்டீரிய ஃபாஜ்கள் தலைப்பிரட்டை வடிவம் கொண்டவை.
Its consists of head, collar, tail, base plate and fibre
இவைதலை (head), கழுத்துப்பட்டை (collar), வால் (tail), அடித்தட்டு (basal plate), வால் நார்கள் (tail fibres) ஆகியவற்றைக் கொண்டுள்ளன
The head is hexagonal which consists of about 2000 identical protein subunits.
அறுங்கோண வடிவம் கொண்ட தலைப்பகுதி 2000 ஒத்த புரதத்துணை அலகுகளால் ஆனது.
The long helical tail consists of an inner tubular core which is connected to the head by a collar
நீண்ட சுருள் வடிவத்தைக் கொண்ட வாலின் மையப்பகுதி உள்ளீடற்றது. இது தலையுடன் கழுத்துப்பட்டை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
There is a base plate attached to the end of tail
வாலின் முடிவுப்பகுதியில் அடித்தட்டு இணைந்துள்ளது.
The base plate contains six spikes and tail fibres
அடித்தட்டு ஆறு வால் நார்களையும், ஆறு முட்களையும் (spikes) பெற்றுள்ளது.
These fibres are used to attach the phage on the cell wall of bacterial host during replication
இத்தகைய, நார்கள் பெருக்கச் சுழற்சியின்போது ஓம்புயிரி பாக்டீரிய செல்லின் செல் சுவருடன் ஃபாஜ்கள் ஒட்டிக்கொள்ள உதவுகின்றன.
A dsDNA molecule of about 50 μm is tightly packed inside the head
தலைப்பகுதியில் 50um அளவுடைய ஈரிழை DNA மூலக்கூறு இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ளது.
The DNA is about 1000 times longer than the phage itself
ஃபாஜின் நீளத்தை விட அதன் DNA மூலக்கூறின் நீளம் 1000 மடங்கு அதிகமாகும்.
Multiplication or Life Cycle of Phages
பெருக்கமுறை அல்லது ஃபாஜ்களின் வாழ்க்கைச் சுழற்சி
Phages multiply through two different types of life cycle
இரண்டு வெவ்வேறு வகையான வாழ்க்கைச் சுழற்சிகள் மூலம் ஃபாஜ்கள் பெருக்கமடைகின்றன.
a. Lytic or Virulent cycle
(அ) சிதைவு (Lytic) அல்லது வீரியமுள்ள (Virulent) சுழற்சி
b.Lysogenic or Avirulent life cycle
(ஆ) உறக்கநிலை (Lysogenic) அல்லது வீரியமற்ற (Avirulent) சுழற்சி.
Lytic Cycle | சிதைவு சுழற்சி
During lytic cycle of phage, disintegration of host bacterial cell occurs and the progeny virions are released
இதில் புதிதாகத் தோன்றும் வைரஸ்கள் செல்லுக்குள்ளே பெருக்கமடைந்து ஓம்புயிர் பாக்டீரிய செல் வெடித்து விரியான்கள் வெளியேற்றப்படுகின்றன.
The steps involved in the lytic cycle are as follows
வீரியமுள்ள ஃபாஜின் பெருக்கம் கீழ்க்கண்ட படிநிலைகளில் நடைபெறுகிறது.
(i)ஒட்டிக் கொள்ளுதல் (Adsorption)
(ii) ஊடுருவுதல் (Penetration)
(iii) உற்பத்தி செய்யப்படுதல் (Synthesis)
(iv) தொகுப்பும் முதிர்ச்சியும் (Assembly and Maturation)
(V) வெளியேற்றம் (Release)
Lysogeniccycle | உறக்கநிலை சுழற்சி
In the lysogenic cycle the phage DNA gets integrated into host DNA and gets multiplied along with nucleic acid of the host
இவ்வகை சுழற்சியில் ஃபாஜ் DNAக்கள் ஓம்புயிரி DNA-உடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஓம்புயிர் செல்லின் உட்கரு அமிலம் பெருக்கமடையும் அதேசமயத்தில் ஃபாஜ் DNA-வும் பெருக்கமடைகிறது.
On exposure to UV radiation and chemicals the excision of phage DNA may occur and results in lytic cycle
UV கதிர்வீச்சுகள் மற்றும் வேதிப்பொருட்கள் தாக்குதல் இருக்கும் போது ஃபாஜ் DNA பிளவுக்கு உட்பட்டுச் சிதைவு சுழற்சியிலேயே பெருக்கமடைகிறது.
Virion | விரியான்
Virion is an intact infective virus particle which is non-replicating outside a host cell
விரியான் என்பது தொற்றுத்தன்மை வாய்ந்த, ஓம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத, ஒரு முழுமையான வைரஸ் துகளாகும்.
Viroids |விராய்டுகள் .
Viroid is a circular molecule of ssRNA without a capsid
இவை புரத உறையற்ற, வட்டவடிவமான ஓரிழை RNAக்களாகும்.
The RNA of viroid has low molecular weight
இதன் RNA குறைந்த மூலக்கூறு எடையைக் கொண்டது.
Viroids cause citrus exocortis and potato spindle tuber disease in plants
இவை சிட்ரஸ் எக்ஸோகார்ட்டிஸ், உருளைக்கிழங்கில் கதிர்வடிவகிழங்கு நோய் போன்ற தாவரநோய்களை உண்டாக்குகின்றன.
Virusoids |வைரஸ் ஒத்த அமைப்புகள் அல்லது விருசாய்டுகள்
They are the small circular RNAs which are similar to viroids but they are always linked with larger molecules of the viral RNA
இவை சிறிய வட்டவடிவ RNAக்களை பெற்று விராய்டுகளை ஒத்திருந்தாலும், வைரஸின் பெரிய RNA மூலக்கூறுடன் எப்பொழுதும் தொடர்பினைக் கொண்டுள்ளன.
Prions | பிரியான்கள்
Prions are proteinaceous infectious particles
இவை தொற்றும் தன்மையுடைய புரதத்துகள்களாகும்.
They are the causative agents for about a dozen fatal degenerative disorders of the central nervous system of humans and other animals
மனிதன் மற்றும் பல விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக உள்ளன.
For example Creutzfeldt – Jakob Disease (CJD), Bovine Spongiform Encephalopathy (BSE) – commonly known as mad cow disease and scrapie disease of sheep
எடுத்துக்காட்டு: க்ரூயிட்ஸ்ஃபெல்ட்-ஜேக்கப் நோய் (CJD), மாடுகளின் பித்த நோய் (Mad cow disease) என்று பொதுவாக அழைக்கப்படும் போவைன் ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி(BSE), ஆடுகளின் ஸ்கிராபி (Scrapie) நோய் ஆகியவைகளாகும்.
.
Viral diseases | வைரஸ் நோய்கள்
Plant diseases | தாவர நோய்கள்
1. Tobacco mosaic | புகையிலை தேமல் நோய்
2. Cauliflower mosaic | காலிஃபிளவர் தேமல் நோய்
3. Sugarcane mosaic | கரும்பு தேமல் நோய்
4. Potato leaf roll | உருளைக்கிழங்கின் இலைச்சுருள் நோய்
5. Bunchy top of banana | வாழையின் உச்சிக்கொத்து நோய்
6. Leaf curl of papaya | பப்பாளியின் இலைச்சுருள் நோய்
7. Vein clearing of Lady’s finger | வெண்டையின் நரம்பு வெளிர்தல் நோய்
8. Rice Tungro disease | நெல்லின் துங்ரோ நோய்
9. Cucumber mosaic | வெள்ளரியின் தேமல் நோய்
10. Tomato mosaic disease | தக்காளியின் தேமல் நோய்
Animal diseases | விலங்கு நோய்கள்
1, Foot and mouth disease of Cattle | கால்நடைகளில் கோமாரி நோய்
2. Rabies of dog | வெறி நாய்க்கடி
3. Encephalomyelitis of horse | குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய்
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
EBOLA, ZIKA, AIDS, SARS, HIN1
1. Common cold | சளி
2. Hepatitis B | ஹெப்பட்டைட்டிஸ் B
3. Cancer | புற்றுநோய்
4. SARS(Severe Acute Respiratory Syndrome) | சார்ஸ் (அதிதீவர சுவாசக் குறைபாடு)
5. AIDS (Acquired Immuno Deficiency Syndrome) எய்ட்ஸ் (பெறப்பட்ட நோய் எதிர்ப்புசக்தி குறை நோய்)
6. Rabies | வெறி நாய்க்கடி
7. Mumps | பொன்னுக்குவீங்கி
8. Polio | இளம்பிள்ளைவாதம்
9. Chikungunya | சிக்குன்குன்யா
10. Small Pox | பெரியம்மை
11.Chicken pox | சின்னம்மை
12. Measles | தட்டம்மை
Streaks on Tulip flowers are due to Tulip Breaking Virus which belong to Potyviridae group
துலிப் மலர்களின் இதழ்களில் காணக்கூடிய நீண்ட வரிகள் அனைத்தும் துலிப் மலர் விரியும் வைரஸ்களால் உண்டாகிறது.
Viruses of Baculoviridae grouViruses of Baculoviridae group are commercially exploited as insecticides are commercially exploited as insecticides
இவை பாட்விரிடே குழுமத்தைச் சார்ந்தவை. பேக்குலோவிரிடே குழுமத்தைச் சார்ந்த வைரஸ்கள் வணிகரீதியாகப் பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Cytoplasmic Polyhedrosis Granulo viruses and Entomopox viruses were employed as potential insecticides
சைட்டோபிளாச பாலிஹெட்ரோஸிஸ் கிரானுலோ வைரஸ்கள், எண்டமோபாக்ஸ் வைரஸ்கள் போன்றவை திறன்மிக்க பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Post a Comment