நோக்கம் :
மாணாக்கர்களிடையே பொதிந்துள்ள அறிவாற்றலை வெளிக்கொணரவும், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டும் இத்தேர்வுகள் உயர் நிலைக் கல்வி அளவில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுள் திறன் வாய்ந்த மாணாக்கர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித் தொகை வழங்கி மேற்படிப்பினைத் தொடர வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
NTSE தேர்வின் நிலைகள் :
NTSE தேர்வானது இரு நிலைகளை உள்ளடக்கியது. (1) தேசிய அளவிலான திறனறித் தேர்வு நிலை - | (NTSE Stage - 1) (2) தேசிய அளவிலான திறனறித் தேர்வு நிலை - || (NTSE Stage - II)
தேசிய அளவிலான திறனறித் தேர்வு நிலை - 1 : (NTSE Stage - I)
தகுதிகள் :
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில / யூனியன் பிரதேசங்களில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் இத்தேர்வில் பங்குபெற தகுதியுடையவர்கள் ஆவர்.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை
பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவரும். www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், அரசால் அந்தந்த வருடத்தில் வெளியிடப்படும் புதிய நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
தேர்வின் பகுதிகள் :
(1) பகுதி - | (மனத்திறன் தேர்வு)
(2) பகுதி - || (படிப்பறிவுத் திறன் தேர்வு)
பகுதி - 1 மனத்திறன் தேர்வு : (Mental Ability Test - MAT)
மனத்திறன் தேர்விற்கென்று தனித்த பாடத்திட்டம்
ஏதும் பின்பற்றப்படுவதில்லை, இத்தேர்விலும் ,
NMMS - MAT தேர்வைப் போன்றே மாணவர்களின்
பகுத்தாயும் திறன், காரணம் அறியும் திறன்,
முப்பரிமாண வெளியில் காட்சிப்படுத்தி
கண்டறியும் திறன் (ability to visualize in space),
எண்ணியல் திறன் போன்றவற்றை சோதித்து
அறிவதாக அமையும். NMMS - MAT தேர்வைப்
போன்றே இத்தேர்விலும் வினாக்கள்
அமைந்திருக்கும். ஆனால் வினாக்களின்
கடினத் தன்மை சற்று அதிகமாக இருக்கும்.
இத்தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் தலா
1 மதிப்பெண் அளிக்கப்படும். அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
இத்தேர்விற்கு 120 நிமிடங்கள் ஒதுக்கப்படும்
பகுதி - 2 படிப்பறிவுத் திறன் தேர்வு (Scholastic Aptitude Test - SAT)
* SAT தேர்வானது மாணாக்கர்கள் பாடப்
பொருளில் பெற்றுள்ள திறன்களை சோதித்து
அறியும் வகையில் இருக்கும். இத்தேர்வில்
9 மற்றும் 10 ஆம் வகுப்பு STATE BOARD, CBSE, ICSE
பாடத் திட்டத்தில் இருந்து அறிவியல் (40)
கணக்கு (20), சமூக அறிவியல் (40) பாடங்களில்
இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.
ஒவ்வொரு வினாவிற்கான சரியான விடைக்கும்
மதிப்பெண் அளிக்கப்படும். அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
இத்தேர்விற்கு 120 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்படும் விதம்:
இத்தேர்வில் தகுதி பெற பொதுப் பிரிவு
மாணவ / மாணவியர்கள் நிலை - 1 ன்
ஒவ்வொரு தேர்விலும் (மனத்திறன் தேர்வு ,
படிப்பறிவுத் திறன் தேர்வு) 40% மதிப்பெண்கள்
பெற வேண்டும், SC/ST மற்றும் மாற்றுத்
திறனாளி மாணவ / மாணவியர் 32%
மதிப்பெண்களும் பெற்றால் போதுமானது.
வழங்கப்படும் உதவித் தொகை விபரம்
தேசிய திறனாய்வுத் தேர்வு நிலை - என்பது,
தேசிய அளவிலான தேசிய திறனாய்வுத்
தேர்வு நிலை - || ல் பங்கேற்க நடத்தப்பெறும்
தகுதித் தேர்வு மட்டுமே என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும். எனவே, NTSE நிலை - 1ல்
மட்டும் தகுதி பெறும் மாணவ மாணவியர்க்கு
எவ்வித உதவித் தொகையும் வழங்கப்படுவதில்லை .
தேசிய அளவிலான திறனறித் தேர்வு நிலை - || (NTSE - Stage - II)
NTSE - நிலை | தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை :
இத்தேர்விற்கென்று, தேர்வர் தனியே
விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும் இத்தேர்விற்கென்று எவ்வித
கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
NTSE - நிலை || தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:
NTSE - நிலை - | ல் தகுதி பெற்ற மாணவ /
மாணவியர்கள் இத்தேர்வு எழுத தகுதி
பெற்றவர்களாவர்.
தேர்வின் பகுதிகள் :
* NTSE - நிலை || ஆனது. தேர்வின் அமைப்பைப்
பொறுத்தவரையில் NTSE - நிலை I ஐப் போன்றே
மனத்திறன் மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்வு
பகுதிகளை உள்ளடக்கியது. வினா அமைப்பும்
NTSE - நிலை I ஐப் போன்றே அமைந்திருக்கும்.
மனத்திறன் தேர்வில் 100 வினாக்களும், படிப்பறிவுத்
திறன் பகுதியில் 100 வினாக்களும் அமைந்திருக்கும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வு என்பதால்
வினாக்களின் கடினத் தன்மை மிக அதிகமாக இருக்கும்.
* NTSE - நிலை - || படிப்பறிவுத் திறன் தேர்வைப்
பொறுத்த வரையில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு
STATE BOARD, CBSE, ICSE பாடத் திட்டத்தில் இருந்து
வினாக்கள் அமையும் என்பதால், நமது மாணவ
மாணவியர்கள் முன்னரே CBSE / ICSE பாடத்
திட்டத்தின் படி உள்ள பாடப் பகுதிகளை அறிந்து
தங்களை முழுமையாக தயார் செய்து கொள்ள வேண்டும்.
மாணவ / மாணவியர்கள் தேர்வு செய்யப்படும் விதம் :
NTSE - நிலை - || ல் மனத் திறன்
தேர்வு மற்றும்
படிப்பறிவுத் திறன் தேர்வில் தலா
40% மதிப்பெண்
பெற்றும், SC / ST மற்றும் மாற்றுத்
திறனாளி மாணவ /
மாணவியர் 32% மதிப்பெண்களும்
பெற்றும் உள்ள
மாணவர்கள் தகுதி பெற்றவர்களாக
கருதப்படுவார்கள்.
தகுதி பெற்ற மாணவர்களுள் இரு
(MAT + SAT)
தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள்
அடிப்படையில்
அகில இந்திய அளவில் தகுதி நிர்ணய
மதிப்பெண்கள்
(Cut - off) நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் அம்மதிப்பெண்கள்
அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 15%,
பழங்குடியின் பிரிவினருக்கு 7.5%,
மாற்றுத்திறனாளிகளுக்கு
4% - ம் , எஞ்சிய 74.5% பொதுப்பிரிவினருக்கும்
ஒதுக்கப்பட்டு
தேர்வு செய்யப்படுவர்.
வழங்கப்படும் உதவித் தொகை விவரம்:
தேசிய திறனாய்வுத் தேர்வு - நிலை - || ல்
மாணவ / மாணவியர்கள் பெற்ற
மதிப்பெண்கள் அடிப்படையில்
அகில இந்திய அளவில் 1000
மாணவ மாணவியருக்கு
கீழ்க்கண்டவாறு உதவித் தொகை
வழங்கப்படும்.
(1) மாதம் ஒன்றிற்கு ரூ. 1250
வீதம் 11 மற்றும் 12 வது
வகுப்பு பயிலும் வரை.
(2) மாதம் ஒன்றிற்கு ரூ.2000 வீதம்
இளங்கலை மற்றும் முதுகலைப்
பட்டப் படிப்பு பயிலும் வரை
(3) முனைவர் (Ph.d) பட்டப்படிப்பிற்கு
UGC நிர்ணயித்துள்ள விகிதத்தில்.
Post a Comment