ருடால்ஃப் டீசல் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ருடால்ஃப் டீசல்

டீசல் எந்திரம் என்றால் புரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அதைக் கண்டுபிடித்தவர் ருடால்ஃப் டீசல்.

இவர் 1858-ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் பிறந்தார். வருடைய தந்தை கொல்லர். எனவே தன்னுடைய மகனையும் தன்னுடைய தொழில் துறையில் பயிற்சி அளித்தார். டீசல் எதையும் உடனுக்குடன் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவராக விளங்கினார். ஆராய்ச்சிகள் பல செய்வதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

‘ஆஸ்பர்க்’ தொழிற்பயிற்சிப் பள்ளியில் படித்த டீசல் மியூனிச் தொழில்நுட்பப் பள்ளியில் சிறந்த மாணவர்களில் ஒருவராக விளங்கினார். தன்னுடைய 20-ஆம் வயதில் தொழிற்பயிற்சியை முடித்த இவர் ஆசிரியர்களின் பாராட்டு களைப் பெற்றார். ஒருமுறை டீசல் ஒரு சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தார். அந்த சொற்பொழிவை ஆற்றியவர் 'கார்ல் வின்ட்' இவர் நீராவி எந்திரம் நிலக்கரியின் ஆற்றலில் 90 சதவீதத்தை வீணாக்குகிறது என்பதைக் கண்டறிந்தார். சொற்பொழிவை கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த டீசலின் உள்ளத்தில் கார்ல் வின்ட் கூறிய கருத்துக்கள் ஆழமாகப் பதிந்திருந்தன.

சொற்பொழிவாற்றிய கார்ல் வின்ட் ஒரு கருவியைக் காண்பித்து அதன் செயல்பாடு பற்றி, அதன் அடிப்படையில் விளக்கம் அளித்தார். அந்தக் கருவி விளையாட்டுத்துப்பாக்கி வடிவத்தில் இருந்தது. அதை டீசல் பார்த்துக் கொண்டிருந்தார். சிகரெட் பற்ற வைக்கும் கருவியில் பித்தானை அழுத்தும்போது உண்டான தீப்பொறி அதை எரிய வைக்கிறது என்பதைக் கண்டறிந்தார். இதைப்போலவே எந்திரங்களில் எரிபொருட்களால் கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்த வழி காண ஏன் கூடாது? என்ற கேள்வி பிறந்தது. பின்னர் டீசல் திருமணம் செய்துகொண்டு தன்னுடைய இல்லற வாழ்க்கையை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் தொடங்கினார். கார்ல் வின்ட் கூறிய கருத்துகளும், சிகரெட் கொளுத்தும் பொறியும் மாறிமாறி சிந்தனையில் தோன்றின. அதன் காரணமாகப் புதிய எந்திரம் கண்டு பிடிக்கும் எண்ணம் அவருடைய மனதில் தோன்றியது. அதற்கான மாதிரி படங்களை வரைந்தார். அவருடைய கற்பனையில் தோன்றிய எந்திரம் காகிதத்தில் வரைபடமாக மாறியது. அதற்கான முழு விளக்கங்களையும் எழுதி முடித்தார்.

1893-ஆம் ஆண்டு அவை அச்சில் வெளிவந்தன. டீசலின் திறமையை நல்ல முறையில் புரிந்துகொண்ட பலரும் அவருடைய ஆராய்ச்சிக்கும், எந்திரத்தை உருவாக்கும் பணிக்கும் முதலீடு செய்ய முன்வந்தார்கள். 'கரூப்' என்பவர் டீசலின் ஆராய்ச்சிக்குப் பண உதவி செய்தார். 1893-ஆம் ஆண்டு அவருடைய எந்திரம் பரிசோதனைக்குத் தயாராக நின்றது. சோதனையும் ஆரம்பமானது. அந்த எந்திரம் முடுக்கிய உடன் பயங்கர ஒலியுடன் பற்றத் தொடங்கியது. டீசல் எதிர்பார்த்தது போலவே எந்திரம் இயங்கியது. முதல் முயற்சியில் வெற்றி பெற்ற டீசல் அந்த முறையைப் பின்பற்றியே நான்கு ஆண்டுகள் உழைத்து முழுமையான எந்திரத்தை உருவாக்கினார். ‘டீசல்' உருவாக்கிய எந்திரம் 25 குதிரை சக்தி கொண்டது. தொடக்கத்தில் இந்த எந்திரம் நிலக்கரிப் பொடியின் மூலம் இயக்கப்பட்டது. விளக்கெண் ணெய், மீன் எண்ணெய், பருப்பு விதை போன்றவற்றையும் பயன்படுத்தினார்.

பதினைந்து ஆண்டுகளில் டீசலின் எந்திரம் ஐரோப்பா முழுவதும் பிரபலம் அடைந்தது. டீசலுக்குப் பணமும், பொருளும் குவிந்தன. மியூனிச் நகரில் ஒரு மாளிகையைக் கட்டி குடியேறினார்.

1912-ஆம் ஆண்டு டீசல் தன்னுடைய கண்டுபிடிப்பை அமெரிக்காவில் வெளியிட முடிவு செய்தார். இதனால் கப்பலில் அமெரிக்கா சென்று திரும்பினார். 1913-ஆம் ஆண்டு ருடால்ஃப் டீசல் லண்டனுக்குக் கப்பலில் சென்ற போது எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார்.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany