கரோலஸ் லின்னேயஸ் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


கரோலஸ் லின்னேயஸ்

கரோலஸ் லின்னேயஸ் அல்லது கார்ல் லின்னேயஸ் (பிறப்பு: 23, மே 1707; இறப்பு : 10, ஜனவரி 1778) தாவரவியல், விலங்கியல் அறிஞர், மருத்துவர்.

உயிரினங்களை... குறிப்பாக தாவரங்களை உடலியல் மற்றும் உருவ அடிப்படையில் வகைப்படுத்தி, அவற்றுக்கு பெயரிட்டு விளக்கும் 'டாக்ஸானமி' முறையின் தந்தை. இவரை சுருக்கமாக 'பெயரிடும் முறையின் தந்தை' எனக் குறிப்பிடுவது வழக்கம்.

விலங்குகள் மற்றும் தாவரங்களுக்குப் பேரினப் பெயர், அதைத் தொடர்ந்து சிற்றினப் பெயர் என இரு பெயரிடும் முறையை முதன்முதலில் நிலைத்தரமாகப் பயன்படுத்தியவர் லின்னேயஸ். தற்கால மனிதர்களை 'ஹோமோசேப்பியன்ஸ்’ எனக் குறிப்பிடுவதை இரு பெயரிடும் முறைக்குச் சான்றாகச் சொல்லலாம்.

நவீன ‘உயிரினச் சூழலியலின் (உயிரினங்களை அவை வாழும் சூழலோடு தொடர்புபடுத்திப் பயிலும் இயல்) தந்தை’ என்றும் இவரைக் குறிப்பிடுகின்றனர்.

தெற்கு சுவீடனில் ஸ்டென்புரோஹல்ட் என்ற இடத்தில் பிறந்த லின்னேயஸ், லுண்ட் பல்கலைக்கழகத்திலும், ஓராண்டு கழித்து உப்சாலா பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து மருத்துவம் படித்தவர். பின்னர் நெதர்லாந்து சென்று ஹார்டர் விஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார். நெதர்லாந்தில் இருந்தபோதுதான் இவரது புகழ்பெற்ற 'சிஸ்டமா நேச்சுரா' நூல் வெளியிடப்பட்டது. இதில் 4,400 விலங்குகளையும், 7,700 தாவரங்களையும் வகைப்படுத்தி யிருந்தார் லின்னேயஸ். உப்சாலா பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறை தலைவராகவும், பின்னர் தாவரவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

1 Comments

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany