பாடம் 18- உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்- பகுதி 2
1. இரத்தம் உறைதல்.
ஒரு காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு இரத்தக் கட்டி உருவாகி அதிகமான இரத்தப் போக்கைக் நிறுத்தும் நிகழ்வு.
இவ்வாறு திரட்சியடைந்த இரத்தத்தட்டுகள் அல்லது சேதமடைந்த செல்களால் வெளியிடப்பட்ட இரத்த உறைதல் காரணிகள் பிளாஸ்மாவிலுள்ள இரத்த உறைதல் காரணிகளுடன் கலக்கின்றன. செயல்படா நிலையிலுள்ள புரோத்ராம்பின் என்னும் புரதம், கால்சியம் அயனிகள் மற்றும் வைட்டமின் K ஆகியவற்றின் முன்னிலையில் செயல்படும் திராம்பினாக மாற்றமடைகிறது.
2. நிணநீர்.
இரத்த நுண் நாளங்களிலிருந்து திசுக்களுக்குள் கசியும் 90% திரவம் மீண்டும் இரத்த நுண்நாளங்களுக்குள்ளேயே நுழைகின்றன. எஞ்சிய 10% திரவத்தை நிணநீர் நாளங்கள் இரத்தக்குழாய்களுக்குக் கொண்டு செல்கிறது.
நிணநீர் நாளங்களில் உள்ள திரவத்திற்கு நிணநீர் என்று பெயர்.
3. சுற்றோட்டப் பாதைகள்.
திறந்த சுற்றோட்ட மண்டலங்கள்- சுற்றோட்டத் திரவமாக ஹீமோலிம்பைக் கொண்டிருக்கும். இது இரத்தக் குழலின் வழியாகப் பைக்குழிக்கு இதயத்தால் உந்தி அனுப்பப்படுகின்றது.இந்தப் பைக்குழி ஹீமோசில் எனப்படும். இந்த வகை கணுக்காலிகள் மற்றும் பெரும்பாலான மெல்லுடலிகளில் காணப்படுகிறது.
மூடிய சுற்றோட்ட மண்டலங்கள்- இதயத்தில் இருந்து உந்தித்தள்ளப்படும் இரத்தம், இரத்த நாளங்கள் வழியே பாய்கிறது. இவ்வகை சுற்றோட்டம் வளைத்தசைப்புழுக்கள், தலைக்காலிகள் மற்றும் முதுகெலும்பிகளில் காணப்படுகிறது.
4. மனித சுற்றோட்ட மண்டலம்.
ரேமண்ட் டி வீசன்ஸ் என்பவர் 1706 ம் ஆண்டு இதயத்தின் அமைப்பை விவரித்தார். மனித இதயம் இதயத்தசை எனும் சிறப்புத்தசையால் ஆக்கப்பட்டது. இதயச்சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது. அவை, வெளிப்புற அடுக்கான எபிகார்டியம், நடுவில் உள்ள மயோகார்டியம் மற்றும் உட்புற எண்டோகார்டியம் போன்றவையாகும்.
5. பேஸ்மேக்கர்.
விரைவான சீரியக்கம் கொண்ட இதயத்தசைச் செல்கள் இதயத்தூண்டி செல்கள் எனப்படும். ஏனெனில் மொத்த இதயத்தின் துடிப்பு வீதத்தை இச்செயல்களே தீர்மானிக்கின்றன.
இந்தப் பேஸ்மேக்கர் செல்கள் வலது சைனு ஏட்ரியல் (SA node) கணுவில் அமைந்துள்ளன.
வலது ஆரிக்கிளின் இடது பகுதியில் ஆரிக்குலோ வெண்ட்ரிகுலார் முடிச்சு (AV node) உள்ளது.
6. இதய இயக்கச் சுழற்சி.
இதயத் துடிப்பின் தொடக்கம் முதல் அடுத்த துடிப்பின் தொடக்கம் வரை உள்ள நிகழ்வுகள். இது 0.8 வினாடிகள் வரை நடைபெறுகிறது.
படிநிலை 1- வென்டிரிக்குலார் டயஸ்டோல்.
படிநிலை 2- ஆரிக்குலார் சிஸ்டோல்.
படிநிலை 3- வென்டிரிக்குலார் சிஸ்டோல் (ஒத்த கொள்ளளவு சுருக்கம்)
படிநிலை 4- வென்டிரிக்குலார் சிஸ்டோல் (வென்டிரிக்குலார் வெளியேற்றம்).
படிநிலை 5- வென்டிரிக்குலார் டயஸ்டோல்.
7. எலக்ட்ரோகார்டியோகிராம்.
இவை குறிப்பிட்ட காலத்தில் இதயத்தில் ஏற்படும் மின்திறன் மாற்றங்களைப் பதிவு செய்யும் கருவியாகும். தோல், கைகள், கால்கள் மற்றும் மார்புப் பகுதியில் மின் முனைகளைப் பொருத்தி மின் திறன் பதிவு செய்யப்படுகிறது. ஒரு இதயச் சுழற்சியில் இதயத்தின் மின் திறனில் ஏற்படும் மாற்றங்களை இக்கருவி பதிவு செய்கிறது.
இதயச் சுழற்சியின் போது, இதயத்துடிப்பைத் துவக்குவது வலது ஆரிக்கிளிலுள்ள சிறப்புத் தசை மடிப்புகளால் ஆன சைனு ஆரிக்குலார் கணுவாகும். இந்த இயக்கம் அலையாக இதயத்தில் பரவுகிறது.
Pஅலை- ஆரிக்குலார் மின்முனைப்பிரியக்க நீக்கம்.
PQ இடைவெளி- ஆரிக்குலோ வெண்ட்ரிகுலார் கணு தாமதம்).
QRS கூட்டமைப்பு- வெண்ட்ரிகுலார் மின்முனைப்பியக்க நீக்க நிலை.
ST பகுதி.
T அலை- வெண்ட்ரிகுலார் முனைப்பியக்க நீக்கம்.
8. இரட்டைச் சுற்றோட்டம்.
முதன் முதலில் விளக்கியவர் வில்லியம் ஹார்வி (1628) ஆவார்.
இதயத்தின் வழியாக இரத்தம் இருமுறை சுற்றுகிறது. முதலாவது சுற்று இதயத்தின் வலதுபுறமும் இரண்டாவது சுற்று இதயத்தின் இடதுபுறமும் நடைபெறுகிறது.
பாலூட்டிகளில் தெளிவான இரட்டைச் சுற்றோட்டம் நடைபெறுகிறது. இதயத்தின் அனைத்து அறைகளும் முழுமையாகப் பிரிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.
9. இதயச் செயல்பாட்டை நெறிப்படுத்துதல்.
மனிதனின் இதயத்துடிப்பானது, இதயத்தின் தசைகளிலிருந்து தோன்றுவதால் மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சார்ந்ததாகும்.
நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பு மண்டலம் ஆகியவற்றோடு அருகருகே உள்ள செல்களுக்கு இடையேயான சமிக்ஞைகளும் இணைந்து நுண்தமனிகளின் விட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இரத்தப் பாய்வையும் மாற்றுகிறது.
பரிவு நரம்பு மண்டலம் நார்- எபிநெஃப்ரினையும், அட்ரீனல் மெடுல்லா எபிநெஃப்ரினையும் வெளியிடுகின்றன.
10. சுற்றோட்ட மண்டலத்தின் கோளாறுகள்.
மிகை இரத்த அழுத்தம்- இது மனிதர்களிடையே அதிகம் காணப்படும் நோயாகும். உடல் நலமுடைய ஒருவரின் இரத்த அழுத்தம் 120/80 மி. மீ பாதரசம் ஆகும். சிஸ்டாலிக் அழுத்தம் 150மி.மீ பாதரசத்தை விட அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 90மி.மீ பாதரசத்தை விட அதிகமாகவும் நிலையாக இருக்கும். கட்டுப்படுத்த இயலாத நாள்பட்ட மிகை இரத்த அழுத்தம், இதயம், மூளை மற்றும் சிறுநீரகங்கள்ப் பாதிக்கிறது.
இதயத்தசை தமனி நோய்- இக்குறைப்பாட்டில் இதயத்தமனிகளின் படிவுகள் தோன்றி இரத்தக்குழல்கள் குறுகலடையும். கொலஸ்ட்ரால், நார் பொருட்கள், இறந்த தசைச்செல்கள் மற்றும் இரத்தப் பிலேட்லெட்டுகள் போன்றவைகளைக் கொண்ட அதிரோமா உருவாகுதல் அதிரோஸ்கிலெரோசிஸ் எனப்படும். படிவுகள் பெரிதாகி இதய இரத்தக் குழாய்களுக்குள் இரத்த உறைவுக் கட்டிகளை உருவாக்கலாம். இதற்கு கரோனரி திராம்பஸ் என்று பெயர். இது மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
மார்பு முடக்கு வலி(குருதி தடையால் இதயத் தசையில் ஏற்படும் வலி).
இதயத்தசை தமனி நோயின் தொடக்க நிலைகளில் நோயாளிகள் இவ்வலியை உணருவார்கள். அதிரோமா கரோனரி தமனிகளை ஒரளவுக்கு அடைப்பதால் இதயத்திற்குச் செல்லும் இரத்த அளவு குறைகிறது.
இதயச் செயலிழப்பு அல்லது இதயத்தசை நசிவுறல் நோய்- இந்நிலை இதயத்தசை சுருங்குதலில் ஏற்படும் குறைப்பாட்டால் தோன்றுகிறது. இதில் ஃப்ராங்க் - ஸ்டார்லிங் விளைவு இயல்பான இறுதி டயஸ்டோலிக் கொள்ளளவில் இருந்து கீழ்நோக்கிச் செல்வதுடன் வலது புறம் மாறுகின்றது. செயலிழக்கும் இதயம், குறைந்த அளவு வீச்சுக் கொள்ளளவை வெளியேற்றுகிறது.
கலைச்சொல் அகராதி.
1. லாகுனே.
எலும்பில் காணப்படும் சிறு வெற்றிடங்கள் அல்லது பள்ளங்கள்.
2. மேக்ரோஃபேஜ்கள்.
மோனோசைட்டுகளிருந்து பெறப்படும் நோயெதிர்ப்பு செல்கள், நுண்ணுயிரிகளையும் , செல் துணுக்குகளையும் செல் விழுங்குதல் முறையில் அழிக்கும் தன்மையுடையது.
3. மாஸ்ட் செல்கள்.
பேசோஃபிலிக் துகள்களை சைட்டோபிளாசத்தில் கொண்ட இணைப்புத்திசு. வீக்கம் மற்றும் ஒவ்வாமையின் போது ஹிஸ்டமைன் போன்ற பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை.
Technical points
Technical points.
1. Coagulation of blood.
The mechanism by which excessive blood loss is prevented by the formation of clot is called blood coagulation or clotting of blood.
Clotting factors released from the clumped platelets or damaged cells mix with clotting factors in the plasma. The protein called prothrombin is converted to it's active form called thrombin in the presence of calcium and vitamin K.
2. Lymph.
About 90% of fluid that leaks from capillaries eventually seeps back into the capillaries and the remaining 10% is collected and returned to blood system by means of a series of tubules known as lymph vessels or lymphatics.
The fluid inside the lymphatics is called lymph.
3. Circulatory pathways.
Open circulatory system- has haemolymph as the circulating fluid and is pumped by the heart, which flows through blood vessels into the sinuses. Sinuses are referred as haemocoel.seen in Arthropods and most molluscs.
Closed circulatory system- blood is pumped by the heart and flows through blood vessels. Seen in Annelids, Cephalopods and Vertebrates.
4. Human circulatory system.
The structure of the heart was described by Raymond de viessens, in 1706. Human heart is made of special type of muscle called cardiac muscle. The heart walk is made up of three layers, the outer epicardium, middle myocardium and inner endocardium.
5. Pacemaker.
The cardiac cells with fastest rhythm are called pacemaker cells, since they determine the contraction rate of the entire heart.
These cells are located in the right sinuatrial node /pacemaker (SAN).
On the left side of the right atrium is a node called auriculo ventricular node(AVN).
6. Cardiac cycle.
The events that occur at the beginning of heart beat and lasts until the beginning of next beat is called cardiac cycle. It lasts for 0.8seconds.
Phase 1- ventricular diastole
Phase 2- Atrial systole
Phase 3- ventricular systole(isovolumetric contraction)
Phase 4- ventricular systole(ventricular ejection)
Phase 5- ventricular diastole.
7. Electrocardiogram (ECG).
An records the electrical activity of the heart over a period of time using electrodes placed on the skin, arms, legs and chest. It records the changes in electrical potential across the heart during one cardiac cycle.
The special flap of muscle which initiates the heart beat is called as sinu-auricular node or SA node in the right atrium.
P wave- Atrial depolarisation.
PQ Interval- AV node delay.
QRS complex- ventricular depolarisation
ST segment
T wave- ventricular repolarisation.
8. Double circulation.
Circulation of blood was first described by William Harvey (1628).
The blood circulates twice through the heart first on the right side then on the left side to complete one cardiac cycle.
The complete double circulation is more prominent in mammals because of the complete partition of all the chambers in the heart.
9. Regulation of cardiac activity.
The type of heart in human is myogenic because the heart beat originates from the muscles of the heart.
The nervous and endocrine systems work together with paracrine signals to influence the diameter of the arterioles and alter the blood flow.
Sympathetic neurons release nor epinephrine and adrenal medulla releases epinephrine.
10. Disorders of circulatory system.
Hypertension- The normal blood pressure in man is 120/80mmHg. In cases when the diastolic pressure exceeds 90mm Hg and the systolic pressure exceeds 150mmHg persistently. Damage the heart, brain and kidneys.
Coronary heart disease- occurs when the arteries are lined by atheroma. The build up of atheroma contains cholesterol, fibres, dead muscle and platelets and is termed atherosclerosis. Plaque grows within the artery and tends to form blood clots, forming coronary thrombus. Thrombus in a coronary artery results in heart attack.
Angina pectoris- (ischemic pain in the heart muscles) is experienced during early stages of coronary heart disease. Atheroma may partially block the coronary artery and reduce the blood supply of the heart.
Myocardial infraction (Heart failure) - is a decrease in cardiac muscle contractility. The Frank-Starling curve shifts downwards and towards the right such that for a given EDV, a failing pumps out a smaller stroke volume than a normal healthy heart.
Glossary.
1. Lacunae.
A cavity or depression especially in a bone.
2. Macrophages.
Immune cells derived from monocytes; engaged in phagocytosis of microbes and debris.
3. Mast cells.
Cells filled with basophilic granules found in numbers in connective tissue and releases histamine and other substances during inflammatory and allergic reactions.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment