32 Days only for NEET 2021


Lesson 19- Excretion  (Tamil / English )

பாடம் 19- கழிவு நீக்கம்

1. கழிவு நீக்க முறைகள். 
அமோனியா நீக்கிகள்- பெரும்பாலான நைட்ரஜன் கழிவுப் பொருளை அம்மோனியா நீக்கிகள் எனப்படும். பெரும்பாலான மீன்கள், நீர்வாழ் இரு வாழ்விகள்  மற்றும் நீர்வாழ் பூச்சிகள் ஆகியவை அம்மோனியா நீக்கிகள் ஆகும். 
யூரிக் அமில நீக்கிகள்- ஊர்வன, பறப்பன, நிலவாழ் நத்தைகள் மற்றும் பூச்சிகள் ஆகியவை நைட்ரஜன் கழிவுகளை யூரிக் அமிலப் படிகங்களாக, மிகக்குறைவான நீரிழப்புடன் வெளியேறுகின்றன. 
யூரியா நீக்கிகள்- பாலூட்டிகளும் நிலவாழ் இரு வாழ்விகளும் யூரியாவை நைட்ரஜன் கழிவாக வெளியேற்றுகின்றன. 

2.சிறுநீரகத்தின் அமைப்பு. 
பெர்டினியின் சிறுநீரகத் தூண்கள் - மெடுல்லரி பிரமிடுகளுக்கிடையே நீட்சியடைந்துள்ள கார்டெக்ஸ் பகுதி. 
நெஃப்ரான். 
ஒவ்வொரு சிறுநீரகமும் சிக்கலான குழல்களைக் கொண்ட ஒரு மில்லியன் நெஃப்ரான்களால் ஆனது. நெஃப்ரான்கள் தான் சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானிலும் வடிகட்டும் பகுதியான ரீனல் கார்பசல் அல்லது மால்பிஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல் ஆகிய இரு பகுதிகள் உண்டு. 
சிறுநீரக நுண்குழல் இரட்டைச் சுவருடைய கிண்ண வடிவ அமைப்பான பெளமானின் கிண்ணம் எனும் அமைப்பில் தொடங்குகிறது. பெளமானின் கிண்ணத்தினுள் இரத்த நுண் நாளங்களால் ஆன கிளாமருலஸ் காணப்படுகிறது. 

3. பெளமானின் கிண்ணம். 
கிளாமருலஸில் உள்ள எண்டோதீலியத் திசுவில் நிறைய நுண்துளைகள் உள்ளன. கிளாமருலஸின் புற அடுக்கு, எளிமையான தட்டை செல்களால் ஆக்கப்பட்ட பெரைட்டல் அடுக்காகும். உள்ளடுக்கு போடோசைட்டுகள் எனும் எபிதீலிய செல்களால் ஆனது. 

4. அண்மை சுருள் நுண்குழல். 
சிறுநீரக நுண்குழல், பெளமானின் கிண்ணத்திற்குப் பிறகு அண்மை சுருள் நுண்குழலாகவும் பிறகு கொண்டை ஊசி வடிவம் கொண்ட ஹென்லேயின் வளைவாகவும் உருவாகிறது. ஹென்லேயின் வளைவு என்பது  மெல்லிய கீழிறங்கு தூம்பையும் தடித்த மேலேறு தூம்பையும் கொண்டதாகும். 
சேய்மை சுருள் நுண்குழல். 
மேலேறு தூம்பு அதிக சுருளமைப்புடைய சேய்மை சுருள் நுண் குழலாக தொடர்கிறது. இறுதியில் இக்குழல் சேகரிப்பு நாளத்தில் முடிவடைகிறது. 

5. வாசா ரெக்டா.
ஜக்ஸ்டா மெடுல்லரி நெஃப்ரான்களில், மேற்கண்ட வெளிச்செல் நுண் தமனிகள் நீள் கற்றையாக, ஹென்லே வளைவுக்கு இணையாக நீண்ட நாளத்தை உருவாக்கியுள்ளன. இதற்கு வாசா ரெக்டா என்று பெயர். கார்டிகல் நெஃப்ரான்களில் வாசா ரெக்டா காணப்படுவதில்லை அல்லது எண்ணிக்கையில் குறைந்திருக்கும். 

6. கிளாமருலார் வடிகட்டுதல். 
சிறுநீரகத் தமனி மூலம் இரத்தம் கிளாமருலஸை சென்றடைகிறது. இரத்தத்தில், அதிக அளவு நீர், கூழ்ம புரதங்கள், சர்க்கரைகள், உப்புகள் மற்றும் நைட்ரஜன் கழிவுப் பொருட்கள் ஆகியவை அடங்கியுள்ளன. 
இதனால் ஏற்படுத்தப்படும் நீர்ம அழுத்தம் மனிதனில் சுமார் 55mmHg என கணக்கிடப்பட்டுள்ளது. 
நிகர வடிகட்டலுக்கான அழுத்தம்= கிளாமருலாரின் நீர்ம அழுத்தம் - (கூழ்ம ஊடு கலப்பு அழுத்தம்+ கிளாமருலார் கிண்ணத்தின் நீர்ம அழுத்தம்) 
நிகர வடிகட்டலுக்கான அழுத்தம்= 55mmHg- (30mmHg+ 15mmHg) = 10mmHg.

7. கிளாமருலார் வடிகட்டுதல். 
இரண்டு சிறுநீரகங்களிலும் உள்ள மொத்த நெஃப்ரான்கள் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வடி திரவத்தின் கொள்ளளவு. 
மீதமுள்ள அதிகப்படியான 10mmHg     நிகர அழுத்தமே சிறுநீரக நுண் வடிகட்டுதல் நிகழ்வுக்குக் காரணமாக அமைகிறது. 

8. கிளாமருலார் வடிகட்டும் வீதம். 
முதிர்ச்சியடைந்த மனிதர்களில் இவ்வீதம் ஒரு நிமிடத்தில் சுமார் 120 மி. லி முதல் 125 மி. லி. வரை ஆகும். 

9. மீள உறிஞ்சப்படுதல்.
இந்நிகழ்வின் மூலம் வடிதிரவம் மீண்டும் சுற்றோட்டத்திற்குள் செல்கிறது. ஒரு நாளில் உருவாகும் வடி திரவத்தின் அளவு சுமார் 170 லி முதல் 180லி வரை ஆகும். அதாவது வடிதிரவத்தில் சுமார் 99% ஸஹீஹ் குழல்களால் மீள உறிஞ்சப்படுகிறது. ஏனெனில் வடிதிரவத்தில் உள்ள சில பொருட்கள் உடலுக்குத் தேவைப்படுகின்றன. 10. உடல் நீரை தக்க வைப்பதாலும் ADH சுரப்பு குறைவதாலும் ஏற்படும் கரைபொருள் இழப்பும் உடல் திரவத்தின் ஊடு கலப்பு அழுத்தத்தை குறைப்பதால் நீர்த்த சிறுநீர் உருவாகிறது. 

கலைச்சொல் அகராதி. 
1. மீசன்ட்ரி. 
உணவுப்பாதை உறுப்புகளையும் வயிற்றறையில் உள்ள இதர உறுப்புகளையும் தாங்கி நிற்கும் மெல்லிய, இரட்டைச் சுவர் உடைய எபீதிலியச் சவ்வு. 

2. ஃபைலோஜெனி. 
உடலமைப்பு அல்லது மரபுப் பண்புகளில் காணப்படும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட உயிரியல் சிற்றினங்களுக்கிடையேயான தொடர்பைக் குறிப்பது. இது தொகுதி வரலாறு எனவும் கூறப்படுகின்றது.

Technical points 
Technical points. 
1. Modes of excretion. 
Ammonoteles- Animals that excrete most of it's nitrogen in the form of ammonia. Ex. Many fishes, aquatic amphibians and aquatic insects. 
Uricoteles- Reptiles, birds, land snails and insects excrete uric acid crystals, with a minimum loss of water. 
Ureoteles- Mammals and terrestrial amphibians mainly excrete urea. 

2. Structure of kidney. 
Renal columns of Bertini- The part of cortex that extends in between the medullary pyramids. 
Nephron- Each kidney has one million complex tubular structures. Each nephron consists of a filtering corpuscle called renal corpuscle and renal tubule. 
The renal  tubules begins with a double walled cup shaped structure called the Bowmans capsule, which encloses a ball of capillaries that delivers fluid to the tubules called the glomerulus. 

3. Bowman's capsule. 
The endothelium of glomerulus has many pores. The external parietal layer of the Bowman's capsule is made up of simple squamous epithelium and the visceral layer is made of epithelial cells called podocytes. 

4. Proximal convoluted tubule. 
The renal tubule continues further to form proximal convoluted tubule followed by a U shaped loop of Henle that has a thin descending and a thick ascending limb. 
Distal convoluted tubule- The ascending limb continues as a highly coiled tubular region. They may many nephrons open into a straight tube called collecting duct. 

5. Vasa recta. 
The efferent arteriole serving the juxta medullary nephron forms bundles of long straight vessel. And runs parallel to the loop of Henle. 
Vasa recta is absent or reduced in cortical nephrons. 

6. Glomerular filtration. 
Blood enters the kidney from the renal artery, into the glomerulus. Blood is composed of large quantities of water, colloidal proteins, sugars, salts and nitrogenous end product. 
Glomerular hydrostatic pressure which is around 55mmHg.
Net filtration pressure=Glomerular hydrostatic pressure- (colloidal osmotic pressure+ capsular hydrostatic pressure). 
Net filtration pressure= 55mmHg- (30mmHg+ 15 mmHg) =10mmHg.

7. Ultrafiltration. 
The effective glomerular pressure of 10mmHg.
The net filtration pressure of 10mmHg is responsible for the renal filtration. 

8. Glomerular filtration rate. 
Is the volume of filtrate formed min-1 in all nephrons of both the kidneys. 
In adults the GFR is approximately 120-125mL/min.

9. Reabsorption. 
Movement of the filtrate back into the circulation. The volume of filtrate formed per day is around 170-180 L and the urine released is around 1.5 L per day, I, e., nearly 99% of the glomerular filtrate that has to be reabsorbed by the renal tubules as it contains certain substances needed by the body. 

10. Hypotonic urine. 
Is formed when osmotic pressure of the body fluid is decreased due to water retention or solute loss when ADH secretion is lowered. 

Glossary. 
1. Mesentery. 
A thin double walled epithelial membrane that support alimentary canal and other organs in the abdominal cavity. 

2. Phylogeny. 
Relationships among various biological species based upon similarities and differences in their physical or genetic characteristics. 

3. Piezoelectric effect. 
It is the ability of certain materials to generate an electrical charge in response to applied mechanical stress.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany