19 Days only for NEET 2021


LESSON 27- Principles of inheritance and variation  (Tamil / English )

பாடம் 27- மரபு கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்

 1. மரபியல்- பாரம்பரியத்தின் அறிவியல் - பாரம்பரியப் பண்புகள் எவ்விதம் பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் கடத்துகிறது எனும் செயல்முறையை எடுத்துரைக்கும் உயிரறிவியலின் ஒரு பிரிவாக மரபியல் திகழ்கிறது. 

      W. பேட்டன் 1906 ம் ஆண்டு மரபியல் எனும் பதத்தை அறிமுகப்படுத்தினார். 

2. மெண்டலால் ஆய்வு செய்யப்பட்ட பட்டாணியின் ஏழு பண்புகள். 

      1. தாவர உயரம்- நெட்டை x குட்டை

      2. கனி வடிவம்- வீங்கிய/ உப்பிய x இறுக்கமுற்ற

      3. விதை வடிவம்- உருண்டைx சுருங்கிய

      4. விதையிலை நிறம்- மஞ்சள்x பச்சை

      5. மலர் அமைவிடம்- கோணம் x நுனியிலமைந்த

     6. மலர் நிறம்- ஊதா x வெள்ளை

      7. கனி நிறம்- பச்சைx மஞ்சள். 

3. மெண்டலிய பாரம்பரியத்தில் மெண்டலிய விதிகள். 

      ஓங்குத் தன்மை விதி

    தனித்துப் பிரிதல் விதி (கேமீட்களின் தூயத்தன்மை விதி) 

     சார்பின்றி ஒதுங்குதல் விதி. 

4. ஒரு பண்பு கலப்பு. 

        ஒற்றைப் பண்பின் பாரம்பரியமாகும் , அதாவது தாவரத்தின் உயரம் பாரம்பரியமடைதல். இது ஒரு மரபணுவின் இரண்டு அல்லீல்களை உள்ளடக்கியது. 

    புறத்தோற்ற வகைய விகிதம்- 3:1

     மரபணுவாக்க வகையம் விகிதம்- 1:2:1

இருபண்புக் கலப்பு- இரு எதிரிடைப் பண்புகளைப் பெற்ற தாவரங்களுக்கிடையே நடைபெறும் ஒரு மரபியல் கலப்பாகும். இரு வேறுபட்ட அல்லீல்களைக் கொண்ட மரபணுக்களிடையே நிகழும் பாரம்பரியம் ஆகும். 

    புறத்தோற்ற வகைய விகிதம்- 9:3:3:1

5.முழுமையற்ற ஓங்குத் தன்மை. 

      இக்கலப்பு ஓங்குத் தன்மை பெற்றோரின் புறத்தோற்றத்தை வெளிப்படுத்தாமல் இடைப்பட்ட நிறமான இளஞ்சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துகிறது. 

         ஒத்தபண்பிணைவு பெற்ற தூய தாவரமாக உள்ள சிவப்பு மலர்களை யுடைய  அந்தி மந்தாரை (மிராபிலிஸ் ஜலாபா) - 4 மணித்தாவரம் ஒன்றை மற்றொரு ஒத்தபண்பினைப் பெற்ற வெள்ளை மலர்களையுடைய தூய தாவரத்துடன் கலப்பு செய்த போது முதல் மகவுச்சந்ததியில் இளஞ்சிவப்பு மலர்கள் பெற்ற கலப்புயிரி தாவரம் உருவானது. 

6. இணை ஓங்குத் தன்மை. 

      மாற்றுப்பண்பிணைவு கொண்ட தாவரத்தில் இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப்படுத்தும் முறை. 

      ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்புகளை வெளிப்படுத்தும் நிகழ்வு. 

   விகிதம்- 1:2:1

7. பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாடு. 

      சட்டன் மற்றும் போவேரி (1903) பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாட்டினைத் தனித்தனியாக முன்வைத்தனர்.

        சட்டன் என்பவர் குரோமோசோம்களின் தனித்துப் பிரிதலின் கருத்துக்களை மெண்டலிய கொள்கைகளோடு இணைத்தார். 

        துணை- தாமஸ் கன்ட் மார்கன் (1910) டிரோசோபிலா மெலனோகாஸ்டர் (2n= 8).

8. பிணைப்பு. 

        ஓர் உயிரினத்தின் தனிப்பட்ட பண்புகளைத் தீர்மானிக்கும் மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்குக் குரோமோசோம்களால் எடுத்துச் செல்லப்படுகின்றன. 

        பல வகையான பண்புகளுக்குக் காரணமான மரபணுக்கள் ஒரே குரோமோசோமிலோ அமைந்திருக்கலாம். 

  மறுகூட்டிணைவு- குறுக்கேற்றத்தின் விளைவாக உருவாகும் புதிய பண்புகளைப் பெற்ற உயிரினங்கள். 

9. பால் நிர்ணயம்- என்பது உயிரினங்களிடையே ஆண், பெண் வேறுபாடுகளை உருவாக்குகின்ற முறைகளாகும். 

        பால் குரோமோசோம்கள் தவிர மீதமுள்ள அனைத்தும் உடல் குரோமோசோம்கள் என அழைக்கப்படுகின்றன. 

       பால் குரோமோசோம்கள் ஒரு பாலினத்தில் உருவம் ஒத்த குரோமோசோம் அமைப்பு. 

        மற்றொரு பாலினத்தில் உருவம் வேறுபட்ட குரோமோசோம் அமைப்பு. 

10. சடுதி மாற்றம். 

        ஒரு உயிரினத்தின் மரபுப் பொருளில் திடீரென ஏற்படும் மாற்றம். சடுதி மாற்றம் என்ற சொல் ஹியூகோ டீவ்ரிஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் அந்தி ப்ரிம்ரோஸ் (ஈனோதீரா லாமார்க்கியானா) என்ற தாவரத்தில் செய்த ஆய்வின் அடிப்படையில் சடுதி மாற்றக் கோட்பாட்டை வெளியிட்டார். 

11. மரபுக்கால் வழித்தொடர் பகுப்பாய்வு. 

     பொருத்தமான மரபுக் குறியீடுகளைக் கொண்டு வரையப்பட்ட ஒரு குடும்ப மரமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட புறப் பண்புகளின் மரபுக்கடத்தல் வழிகளை கண்டறியலாம். 

12. மெண்டலின் குறைபாடுகள். 

      இரத்தக் கசிவு நோய்- ஹீமோபிலியா என அழைக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களை விட ஆண்களில் அதிகம் காணப்படுகின்றது. 1803 ல் ஜான் கோட்டோ என்பவர் முதன் முதலில் மரபுக்கடத்தல் அடிப்படையிலான இந்நோயினை பற்றிய தகவல்களை அளித்தார். இந்நோய் ஒடுங்கிய X சார்ந்த மரபணுவால் ஏற்படுகிறது. 

      பினைல்கீடோநியூரியா- இது பினைல் அலனைன் வளர்சிதை மாற்ற பிறவிக் குறைபாட்டு நோயாகும். உடல் குரோமோசோம்களில் உள்ள ஒரு இணை ஒடுங்கு மரபணுக்களால் இந்நோய் ஏற்படுகிறது.

13. குரோமோசோம் களின் குறைபாடுகள். 

     டவுண் சிண்ட்ரோம் (21 டிரைசோமி) - 21 ஆவது குரோமோசோம் டிரைசோமி நிலையில் இருக்கும். தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு, மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல் , இரு கண்களுக்கிடையே அதிக தூரம் காணப்படுதல், தட்டையான மூக்கு, செவி குறைபாடு, வாய் எப்போதும் திறந்து இருத்தல் மற்றும் நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல் ஆகியவை இந்நோயின் பண்புகளாகும். 

      கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் (XXY ஆண்கள்) - இவ்வகை மரபியல் குறைப்பாட்டிற்கு ஆண்களில் ஒரு X குரோமோசோம் கூடுதலாக இருப்பதே காரணமாகும். இதன் விளைவாக இச்சிண்ட்ரோம் கொண்ட நபர்களுக்கு 44AA+XXYஎன மொத்தம் 47 குரோமோசோம்கள் உள்ளன. 

     டர்னர் சிண்ட்ரோம்( XO பெண்கள்) - இவ்வகை மரபியல் குறைபாட்டிற்கு பெண்களில் ஒரு X குரோமோசோம் குறைந்து காணப்படுவது காரணமாகும். இந்த சிண்ட்ரோம் கொண்ட நபர்கள் 45 குரோமோசோம்களை மட்டுமே பெற்றுள்ளனர். 


கலைச்சொல் அகராதி. 

1.பிற்கலப்பு.

        முதல் மகவுச்சந்ததிகளில் ஏதேனும் ஒரு கலப்புயிர் பெற்றோரிடமிருந்து உருவாக்கும் கலப்பு. 

2. மரபணு வகையம். 

     ஒரு தனி உயிரியின் அல்லீல்களின் வெளிப்பாடு. 

3. மாறுப்பட்ட பண்பிணைவு. 

         இரு வேறுபட்ட அல்லீல்களையுடைய இருமடிய உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்திலுள்ள மரபணு. 

4. ஒத்த பண்பிணைவு. 

        இரு ஒத்த அல்லீல்களையுடைய இருமடிய உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்திலுள்ள மரபணு. 

5. புன்னட் சதுரம்/செக்கர் பலகை. 

         புன்னெட் சதுரம் என்பது மரபியல் கலப்பில் தோன்றும் சந்ததிகளின் சாத்தியமுள்ள மரபணு வகைகளைக் கணக்கிட உதவும் வரைபட விளக்கமாகும்.

6. கவிகை. 

       தனித்தனி தாவரங்களின் உச்சிப் பகுதிகளால் உருவாக்கப்பட்ட தாவர சமுதாயத்தின் மேல்பரப்பு. 

7. புற்றுநோய்த் தூண்டி கள். 

      புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள். 

8. இதய இலயமின்மை. 

       . இயல்பான இதயத்துடிப்பிலிருந்து வேறுபட்டு காணப்படுதல். 

9. கடத்திகள். 

       வெளிப்படாத ஒடுங்கு மரபணுவைக் கொண்ட ஹெட்டிரோசைகஸ் உயிரி.

10. பேரழிவு. 

        ஒரு பொருள் அல்லது நிகழ்வால் திடீரென ஏற்படுதல்

Technical points 

1. Genetics. 

      The science of heredity (inheritance) - is the branch of biological Science which deals with the mechanism of transmission of characters from parents to offspring. 

       The term genetics was introduced by W. Bateson in 1906.

2. Seven characters of Pisum sativum studied by Mendel. 

     1. Stem length- Tallx dwarf. 

      2. Pod shape- inflatedx constricted. 

      3. Seed shape- Roundx wrinkled

     4. Seed colour- Yellowx Green. 

      5. Flower position- Axialx terminal

       6. Flower colour- purplex white

       7. Pod colour- greenx yellow. 

3. Mendel's law of heredity. 

       The  law of dominance

       The law of segregation (Law of purity of gametes) 

      Law of independent assortment. 

4. Monohybrid cross- is the inheritance of a single character ie; plant height. It involves the inheritance of two alleles of a single gene. 

      Phenotypic ratio- 3:1

     Genotypic ratio- 1:2:1

Dihybrid cross- it is a genetic cross which involves individuals differing in two chatacters. It is the inheritance of two separate genes each with two alleles. 

      Phenotypic ratio- 9:3:3;1.

5. Incomplete dominance. 

          One allele is not completely dominant to another allele. 

        The German Botanist Carl Correns (1905) experiment- In 4 O clock plant, Mirabilis jalapa when the pure breeding homozygous red parent is crossed with homozygous white, the phenotype of the F1 hybrid is heterozygous pink. 

6. Codominane. 

       This pattern occurs due to simultaneous expression of both alleles in the heterozygote. 

      The phenomenon in which two alleles are both expressed in the heterozygous individual. 

Ratio - 1:2:1.

7. Chromosomal theory of inheritance. 

      Sutton and Boveri (1903) independently proposed the chromosome theory of inheritance. 

       Sutton United the knowledge of chromosomal segregation with Mendelian principles. 

      Support- Thomas Hunt Morgan (1910) on the fruit fly Drosophila melanogaster (2n=8). 

8. Linkage. 

        The genes which determine the character of an individual are carried by the chromosomes. 

        The genes for different characters may be present either in the same chromosome or in different chromosomes. 

    Recombination- crossing over results in the formation of new combination of characters in an organism. 

9. Sex determination - is the method by which the distinction between male and female is established in a species. 

    The chromosomes other than the sex chromosomes of an individual- autosomes. 

     Sex chromosomes may be similar- homomorphic

    In one sex and dissimilar - heteromorphic in the other. 

10. Mutation. 

     A sudden change in the genetic material of an organisms. The term mutation was introduced by Hugo de Vries while he has studying on the plant, evening primrose (Oenothera lamarkiana) and proposed mutation theory. 

11. Pedigree analysis. 

         Is a family tree, drawn with standard genetic symbols, showing the inheritance pathway for specific phenotypic chatacters. 

12. Mendelian disorders.

      Haemophilia- commonly known as bleeder's disease, which is more common in men than women. This hereditary disease was reported by John Cotto in 1803. It is caused by recessive X linked gene. 

      Phenylketonuria- it is an inborn error of phenylalanine metabolism caused due to a pair of autosomal recessive genes.

13. Chromosomal disorders. 

      Down syndrome/Trisomy 21- it is characterized by severe mental retardation, defective development of the central nervous system, increased separation between the eyes, flattened nose, ears are malformed, mouth is constantly open and the tongue protrudes. 

      Klinefelter's syndrome (XXY males) - is due to the presence of an additional copy of the X chromosome resulting in a karyotype of 47,XXY.

      Turner's syndrome (XO females) - is due to the loss of a X chromosome resulting in a karyotype of 45,X.


Glossary. 

1. Back cross. 

      Crosses between F1 offsprings with either of the two parents. 

2. Genotype. 

       The type of alleles in a single individual. 

3. Heterozygous. 

         Diploid organisms that have two different alleles at a specific gene locus. 

4. Homozygous. 

       A  diploid organism in which both alleles are the same gene locus. 

5. Punnett square/  checkerboard. 

    A sort of cross multiplication matrix used in the prediction of the outcome of a genetic cross, in which male and female gametes and their frequencies are arranged along the edges. 

6. Canopy. 

        The canopy is the above ground portion of a plant community or crop, formed by the collection of individual plant crowns. 

7. Carcinogens. 

       Substances causing cancer. 

8. Cardiac arrhythmia. 

       Any variation from the normal rhythm in the heartbeat. 

9. Carrier. 

      An individual heterozygous for a recessive gene that is not expressed. 

10. Catastrophic. 

         Something or substance that involves or causes a sudden terrible disaster.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany