57 Days only for NEET 2021

 



Lesson 3- plant kingdom  (Tamil / English )

பாடம் 3. தாவர உலகம்

1. வகைப்பாட்டின் வகைகள். 
அ) செயற்கை வகைப்பாட்டு முறை. 
கரோலஸ் லின்னேயஸ். 
இவர் தம் வகைப்பாட்டில் மகரந்தத் தாள்களின் எண்ணிக்கை, இணைவு, நீளம் போன்ற பல பண்புகளின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தினார். 
ஆ) இயற்கை முறை வகைப்பாடு. 
ஜார்ஜ் பெந்தம் மற்றும் ஜோசப் டால்டன் ஹூக்கர். 
விதை தாவரங்களை வகைப்படுத்தினார். 
இ) இனப்பரிணாம வழி வகைப்பாடு. 
அடால்ஃப் எங்ளர் மற்றும் கார்ல் A   பிரான்டில் வகைப்பாடு. 
ஆர்தர் கிரான்கிவிஸ்ட் வகைப்பாடு முறை. 
பூக்கும் தாவரங்களின் பரிணாமம் மற்றும் வகைப்பாடு. 

2. பாசிகளின் பாலினப்பெருக்கம். 
ஒத்த கேமீட்டுகளின் இணைவு- புற அமைப்பிலும் செயலிலும் ஒத்த கேமீட்டுகளின் இணைவு. எ. கா. ஸ்பைரோகைரா. 
சமமற்ற கேமீட்டுகளின் இணைவு- புற அமைப்பு அல்லது செயலில் வேறுப்பட்ட கேமீட்டுகளின் இணைவு. எ. கா. கிளாமிடோமோனஸ். 
முட்டை கருவுறுதல்- புற அமைப்பிலும் செயலிலும் வேறுபட்ட கேமீட்டுகளின் இணைவு. எ. கா. வால் வாக்ஸ் மற்றும் பியூகஸ்.

3. பாசிகளின் பயனுள்ள பொருட்கள். 
அகார் அகார்- (கிராசிலேரியா, ஜெலிடியல்லா, ஜிகார்டினா) செல் சுவரிலிருந்து பெறப்படும் பொருள், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி கூடங்களில் வளர் ஊடகம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 
கேராஜினின்- (கான்ட்ரபஸ் கிரிஸ் பஸ்) பற்பசை, வண்ணப்பூச்சு, இரத்தம் உறைவிடம் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. 
ஆல்ஜினேட்- (லேமினேரியா, ஆஸ்கோபில்லம்) ஐஸ்கிரீம், வண்ணப்பூச்சு, தீப்பற்றி கொள்ளாத துணிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. 

4. பாசிகளின் சேமிப்பு. 
     குளோரோஃபைசி- தரசம்
     ஃபியோஃபைசி- லாமினாரின் தரசம், கொழுப்பு. 
    ரோடோஃபைசி- புளோரிடியன்  தரசம். 
5. பிரையோஃபைட்கள். 
அ) ஜெம்மாக்கள். 
மார்கான்ஷியா தாவரத்தில் காணப்படுகிறது. இது ஒரு பாலிலா இனப்பெருக்கம். 
ஆ) எலேட்டர்கள். 
சில வித்தகங்களில் காணப்பட்டு அவை வித்து பரவுதலுக்கு உதவுகின்றன. 
எ. கா. மார்கான்ஷியா. 

6. டெரிடோஃபைட்கள். 
ஒத்தவித்துத்தன்மை- ஒரே வகையான வித்துக்கள். எ. கா. லைக்கோபோடியம். 
மாற்றுவித்துதன்மை- இரு வகையான வித்துகள். எ. கா. செலாஜினெல்லா. 

7. முன் உடலம். 
வித்துகள் முளைத்து பசுமையான பல செல் கொண்ட தனித்து வாழும் திறன் கொண்ட இதய வடிவ ஒற்றை மைய சார்பின்றி வாழும்  முன் உடலத்தை உருவாக்குகின்றன. 

8. ஜிம்னோஸ்பெர்ம்கள். 
பவழ வேர்கள். 
சைகஸ் தாவரத்தில் காணப்படும். நீலப்பசும்பாசிகளுடன் ஒருங்குயிரி வாழ்க்கை மேற்கொள்கிறது. 
பல்கலை நிலை காணப்படுகிறது. திறந்த சூல்கள் விதைகளாக மாற்றமடைகின்றன. ஒற்றைமடிய கருவூண்திசு கருவுறுதலுக்கு முன்பாகவே உருவாகிறது. 

9. ஆஞ்சியோஸ்பெர்ம்கள். 
மகரந்தக்ச்சேர்க்கைக்கு மகரந்த குழல் உதவி செய்கிறது. ஆகையால் கருவுறுதலுக்கு நீர் அவசியமில்லை. 
இரட்டை கருவுறுதல் காணப்படுகிறது. 
கருவூண்திசு மும்மடியத்தில் உள்ளது. 

10. சந்ததி மாற்றம். 
ஒற்றைமடிய கேமீட் உயிரி- வால்வாக்ஸ், ஸ்பைரோகைரா. 
இரட்டை மடிய கேமீட் உயிரி- ஃபியுகஸ் சிற்றினம், ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள். 

கலைச்சொல் அகராதி. 
1. பாலிணைவின்மை. 
கேமீட்டுகளின் இணைவின்றி கேமீட்டக தாவர உடல திசுக்களிலிருந்து வித்தகத்தாவரம் தோன்றுதல். 
2. குன்றலில்லா வித்துத் தன்மை. 
வித்துகளை தோற்றுவிக்காத வித்தக தாவரத்திலிருந்து கேமீட்டக தாவரங்கள் தோன்றுதல். 
3. அக வித்து. 
தடித்த உறையுடைய ஓய்வு நிலை வித்து. 
4. உண்மை வித்தகத் தன்மை. 
பல தோற்றுவிகளிலிருந்து வித்தகம் தோன்றுதல். 
5. கேமீட்டக தாவரம். 
ஒற்றை மடிய தாவர உடலம். 
6. மாற்று வித்துத் தன்மை. 
வேறுப்பட்ட அளவுடைய வித்துகளை தோற்றுவித்தல் (பெரு வித்து மற்றும் நுண் வித்து) 
7. மெலிவித்தக தன்மை. 
       ஒற்றை தோற்றுவியிலிருந்து வித்தகம் தோன்றுதல். 
8. வித்தகத் தாவரம். 
        இரட்டை மடிய தாவர உடலம். 
9. இயங்கு வித்து. 
       நகரும் திறனுடைய பாலிலா வித்து. 
10. உறக்க கருமுட்டை. 
       தடித்த சுவருடைய இரட்டை மடிய ஓய்வு நிலை வித்து.

Technical points 
1. Types of classification. 
a) Artificial system of classification. 
Carolus Linnaeus
Classified on the basis of number, union, length and distribution of stamens. 
b) Natural system of classification. 
George Bentham and Joseph Dalton Hooker. 
Classified on seeded plants. 
c) phylogenetic system of classification. 
Adolph Engler and Karl A prantl system of classification. 
Arthur Cronquist system of classification. 
The evolution and classification of floweing plants. 

2. Sexual reproduction in algae. 
Isogamy- fusion of morphologically and physiologically similar gametes. Example- Spirogyra. 
Anisogamy-  Fusion of either morphologically Or physiologically dissimilar gametes. 
Example- Chlamydomonas. 
Oogamy- Fusion of both morphologically and physiologically dissimilar gametes. 
Example- Volvox and  Fucus. 

3. Important products of algae. 
Agar agar - (Gracilaria, Gelidiella, Gigartina) cell wall material used for media preparation in the microbiology lab. 
Carrageenan - (Chondrus crispus) preparation of tooth paste, paint, blood coagulant. 
Alginate - (Laminaria, Ascophyllum) ice cream, flame proof fabrics. 

4. Reserve food materials of algae. 
Chlorophyceae - starch
Phaeophyceae - Laminarin starch and fats. 
Rhodophyceae - Floridean starch. 

5. Bryophytes. 
a) Gemmae - In Marchantia propagative organs. Help in asexual reproduction. 
b) Elaters - In some sporophytes elaters are present and help in dispersal of spores. Example- Marchantia. 

6. Pteridophytes. 
Homosporous - produce one type of spores. 
Example- Lycopodium.                 
Heterosporous- produce two types of spores. Example- Selaginella. 

7. Prothallus. 
In pteridophyta, spore germinates to produce haploid, multicellular green, cordate shaped independent gametophytes. 

8.Gymnosperm.
Coralloid root. 
In cycas have symbiotic association with blue green algae. In pinus the roots have mycorrhizae. 
Polyembryony is present. The naked ovule develops into seed. The endosperm is haploid and develops before fertilization. 

9. Angiosperms. 
Pollen tube helps in fertilization, so water is not essential for fertilization. 
Double fertilization is present. 
The endosperm is triploid. 

10. Alternation of generation. 
Haplontic life cycle- Volvox, Spirogyra. 
Diplontic life cycle- fucus, gymnosperms and angiosperms. 
Haplodiplontic life cycle- bryophytes, pteridophytes, ectocarpus, polysiphonia. 

Glossary. 
1. Apogamy. 
Formation of sporophyte from the gametophytic tissue without the fusion of gametes. 
2. Apospory. 
Development of the gametophyte from the sporophyte without the formation of spores. 
3. Endospore. 
Thick walled resting spores. 
4. Eusporangiate. 
Sporangium formed from a group of initials. 
5. Gametophyte. 
The haploid plant body. 
6. Heterospory. 
Production of spores of different sizes, megaspores and microspores. 
7. Leptosporangiate. 
Sporangium formed from a single initial. 
8. Sporophyte. 
Diploid plant body 
9. Zoospore. 
Motile asexual spores. 
10. Zygospore. 
Thick walled diploid resting spores. 

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany