Lesson 4- Animal kingdom (Tamil / English )
பாடம்- 4- விலங்குலகம்
1. செரிமான மண்டலம்.
திறந்த வகை- சுற்றோட்ட மண்டலத்தில் இரத்த நாளங்களின்மையால் இரத்தம் திசு இடைவெளியில் நிரம்பிக் காணப்படும்.
மூடிய வகை- சுற்றோட்ட மண்டலத்தில் இரத்தம் பல்வேறு அளவுடைய இரத்தக் குழாய்களின் வழியே செலுத்தப்படுகிறது (தமனி, சிரை, இரத்த நுண் நாளங்கள்).
2. சமச்சீர் அமைப்பு முறைகள்.
சமச்சீரற்றவை- உடல் மையத்தின் வழியாகச் செல்லும் எந்தப் பிளவும் இவ்வுயிரிகளின் உடலை இரு சம பகுதிகளாகப் பிரிக்காது.
ஆரச்சமச்சீர்- மைய அச்சின் வழியாகச் செல்லும் எந்த ஆரக்கோடும் இரு சமபகுதிகளை கொடுக்கிறது.
இருபக்க சமச்சீரமைப்பு.
மைய அச்சின் வழி செல்லும் கோடு அல்லது தளம் உயிரியை இரு சமப் பகுதியாகப் பிரிக்கிறது.
3. ஈரடுக்கு மற்றும் மூவருக்கு கட்டமைப்பு.
ஈரடுக்கு விலங்குகள்.
புறப்படை மற்றும் அகப்படை என இரு அடுக்குகளைக் கொண்ட விலங்குகள்.
மூவடுக்கு விலங்குகள்.
சில விலங்குகள் வளர்கரு புறப்படை, அகப்படை, நடுப்பட்டி என மூன்று கருமூல அடுக்குகளைக் கொண்டுள்ளன.
4. உடற்குழி.
பெரும்பாலான விலங்குகளில் உடற்குழியானது உடற்சுவருக்கும் உணவு குழலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
உடற்குழியற்றவை.
உடலில் உடற்குழியை பெற்றிராத விலங்குகள்.
எ. கா. பிளாட்டிஹெல்மின்தஸ்.
போலி உடற்குழி விலங்குகள்.
உடற்குழிகளைப் பெற்றுள்ள விலங்குகள்.
எ. கா. ஆஸ்கெல்மின்தஸ்.
5. கண்டமாக்கம்.
சில விலங்குகளின் உடல், உள்ளும் புறமும், வரிசையாக ஒரே மாதிரியான பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
6. தொகுதி. துளையுடலிகள்.
கொயனோசைட்டுகள் அல்லது கழுத்துப்பட்டை செல்கள் எனப்படும் சிறப்பு தன்மை கொண்ட கசையிழை செல்கள் ஸ்பான்ஞ்சோசீல் மற்றும் கால்வாய் பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.
எ. கா. சைக்கான், ஸ்பான்ஜில்லா.
7. தொகுதி. சீலன்ட்ரேட்டுகள்.
இத்தொகுதி விலங்குகள் பாலிப் மற்றும் மெடுசா எனப்படும் இருவகை உடலமைப்புகளைப் பெற்றுள்ளது. இதில் பாலிப் குழல் வடிவ அமைப்புடன் நிலையாக ஓரிடத்தில் ஒட்டி வாழும் தன்மையுடையது (எ.கா.ஹைட்ரா, ஆடம்சியா). குடை வடிவம் கொண்ட மெடுசா, நீந்தித் திரியும் தன்மையுடையது.
8. தொகுதி. டினோஃபோரா.
இடப்பெயர்ச்சிக்குப் பயன்படும் எட்டு வரிசையிலான குறுயிழைகளுடன் கூடிய வெளிப்புறச் சீப்புத்தகட்டைப் பெற்றுள்ளதால், கோம்ப் ஜெல்லி அல்லது கடல் வாதுமை என்று அழைக்கப்படுகிறது.
உயிரிகளிலிருந்து ஒளி உருவாகும் உயிரொளிர்தல் பண்பு.
எ. கா. புளூரோபிராக்கியா, டீனோபிளானா.
9. தொகுதி. பிளாட்டிஹெல்மின்தஸ்.
தட்டை புழுக்கள் என்று அழைக்கப்படும்.
எ. கா. டீனியா (நாடா புழு), ஃபேசியோலா (கல்லீரல் புழு).
10. தொகுதி. ஆஸ்கெல்மின்தஸ்.
உருளைப்புழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எ. கா. அஸ்காரிஸ், உச்சரீரியா.
11. தொகுதி. அன்னலிடா.
கரு வளர்ச்சி நேரடியானதாகவோ அல்லது ட்ரோகோஃபோர் போன்ற லார்வாக்களுடன் கூடிய மறைமுகமானதாகவோ காணப்படுகிறது.
எ. கா. நீரிஸ், ஹிருடினேரியா.
12. தொகுதி. கணுக்காலிகள்.
விலங்குலகத்தின் பெரிய தொகுதி கணுக்காலிகள் ஆகும். இதில் 2-10 மில்லியன் எண்ணிக்கை கொண்ட பூச்சிகள் எனும் பெரிய பிரிவு உள்ளது.
மல்பீஜியன் குழல்கள், பச்சை சுரப்பிகள் மற்றும் காக்சல் சுரப்பிகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.
எ. கா. பூச்சி- ஏபிஸ்.
நோய்க்கடத்திகள்- அனாபிலிஸ்.
வெட்டுகிளி- லோகஸ்டா.
உயிருள்ள படிவம்- லிமுலஸ்.
கலைச் சொற்கள்.
1. அசிட்டைல் கொலை ன்.
இது நரம்பு மண்டலம் முழுவதும் காணப்படும் நரம்புணர்வு கடத்தியாகும்.
2. அசிடோஸிஸ்.
கீட்டோசிஸ் விளைவால் கீட்டோ அமிலங்களின் அடர்வு உயர்ந்து இரத்தத்தின் pH குறையும் தன்மை அசிடோஸிஸ் ஆகும்.
3. அசினஸ்.
செல்கள் வளைய அமைப்பில் அமைந்து ஒரு சுரக்கும் அலகை ஏற்படுத்துதல்.
4. அடினோசின் டிரை பாஸ்ஃபேட்.
இது, அடினைன், ரிபோஸ் மற்றும் மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகள் கொண்ட நியுக்ளியோடைட் ஆகும். உயிரிய மண்டலங்களில் ஆற்றல் பரிமாற்றத்தின் போது இதன் பங்கு மையமானதாகும்.
5. அடிப்போசைட்.
பெரிய கொழுப்புத்திவலையை மையத்தில் கொண்டு அதைச் சுற்றிலும் மெல்லிய விளிம்பாக சைட்டோபிளாசம் அமைந்து காணப்படும் பெரிய செல் (200 மைக்ரான் வரை).
Technical points
1. Circulatory system.
Open type- the blood remains filled in tissue spaces due to the absence of blood capillaries.
Closed type- the blood is circulated through blood vessels of varying diameters (arteries, veins and capillaries).
2. Patterns of symmetry.
Asymmetrical- any plane that passes through the centre does not divide them into equal halves.
Radial symmetry- when any plane passing through the central axis of the body divides the organism into two identical halves.
Bilateral symmetry- Animals which have two similar halves on either side of the central plane.
3. Diploblastic and Triploblastic organization.
Diploblastic- Animals in which the cells are arranged in two embryonic layers, the external ectoderm, and internal endoderm.
Triplonblastic- Animals in which the developing embryo has three germinal layers.
4. Coelom.
Most animals possess a body cavity between the body wall and the alimentary canal, and is lined with mesoderm.
Acoelomates- Animals which do not possess a body cavity. Ex. Platyhelminthes.
Pseudocoelomates- Animals that possess a pseudocoel. Ex. Aschelminthes.
5. Metameristem.
In some animals, the body is externally and internally divided into a series of repeated units called segments with a serial repetition of some organs.
6. Phylum- Porifera.
Choanocytes- or collar cells are special flagellated cells lining the spongocoel and the canals.
Examples- Sycon, Spongilla.
7. Phylum. Coelenterata.
They exhibit two basic body forms, polyp and medusa. The polyp forms are sessile and cylindrical, whereas the medusa are umbrella shaped and free swimming.
Ex. Physalia, Adamsia.
8. Phylum- Ctenophora.
They have eight external rows of ciliated comb plates which help in locomotion, hence commonly called comb jellies or sea walnuts.
Bioluminescence- the ability of a living organism to emit light.
Ex. Pleurobrachia, Ctenoplana.
9. Phylum- Platyhelminthes.
Also called flat worms.
Ex. Taenia (Tapeworm), Fasciola (Liver fluke).
10. Phylum- Aschelminthes.
Also called round worms.
Ex. Ascaris, Wuchereria.
11. Phylum- Annelida.
Development is direct or indirect and includes a trochophore larva.
Ex. Neries, Hirudinaria.
12. Phylum- Arthropoda.
This is the largest phylum of the kingdom animalia and includes the largest class called insecta.
Excretion takes place through malpighian tubules, green glands, coxal glands.
Ex. Insect- Apis
Vectors- Anopheles
Gregarious pest- Locusta
Living fossil- Limulus.
Glossary.
1. Acetylcholine.
A neurotransmitter found throughout the nervous system.
2. Acidosis.
Condition characterised by lower blood pH, due to the increase of keto acids(ketosis).
3. Acinus.
Cells arranged into circular secretory unit.
4. Adenosine triphosphate (ATP) .
A nucleotide molecule consisting of adenine, ribose and three phosphate molecules. It plays a central role in energy exchange in biological systems.
5. Adipocyte.
Large cell (upto 200microns) with only a thin film of cytoplasm due to the presence of a large fat droplet.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment