Lesson 6- Anatomy of flowering plants (Tamil / English )
பாடம் 6. பூக்கும் தாவரங்களின் உள்ளமைப்பியல்
1. ஆக்குத் திசுக்கள்.
அமைவிடத்தின் அடிப்படையில்- நுனி ஆக்குத்திசு, இடையாக்குத் திசு, பக்க ஆக்குத்திசு.
தோற்றத்தின் அடிப்படையில்- முதலாம் நிலை ஆக்குத்திசு, இரண்டாம் நிலை ஆக்குத்திசு.
பணிகளின் அடிப்படையில்- புரோட்டோடெர்ம், புரோகேம்பியம், தள ஆக்குத்திசு.
பகுப்பின் அடிப்படையில்- பொருண்மை ஆக்குத்திசு, விலா அல்லது வரிசை ஆக்குத்திசு, தட்டு ஆக்குத்திசு.
2. உறக்க மையக் கொள்கை.
வேர் நுனி ஆக்குத்திசுவின் செயல்பாட்டினை விளக்கும் உறக்க மையக் கொள்கையை வெளிப்படுத்தியவர் க்ளாவஸ் .
இப்பகுதியானது வேர் மூடிக்கும் , வேரின் வேறுபாடடைகின்ற செல்களுக்குமிடையே காணப்படுகிறது.
வேர் ஆக்குத்திசு பகுதியிலமைந்த தெளிவான செயலூக்கமற்ற பகுதி உறக்க மையம் எனப்படும்.
இது ஹார்மோன் உற்பத்தி மையமாகவும் மற்றும் ஆக்குத்திசு செல்களை உருவாக்கும் பகுதியாகவும் உள்ளது.
3. நிலைத் திசுக்கள்.
எளிய திசுக்கள்- ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு. இச்செல்கள் அமைப்பு மற்றும் செயலால் ஒன்று பட்டவை. 1.பாரங்கைமா 2. கோலங்கைமா 3. ஸ்கிலிரங்கைமா.
கூட்டுத் திசுக்கள்- ஒரு குறிப்பிட்ட பணியினை மேற்கொள்ளப் பல்வேறு வகையான செல்களின் ஒரு கூட்டமைப்பு. 1. சைலம் 2. புளோயம்.
4. திசுத் தொகுப்பின் பணிகள்.
புறத்தோல் திசுத் தொகுப்பு.
தாவர உடலைப் பாதுகாக்கிறது. வேர்களில் இருந்து நீரை உறிஞ்சுகிறது. ஒளிச்சேர்க்கைக்கானவளிமப் பரிமாற்றம், சுவாசித்தல் தண்டு தொகுதியில் நீராவிப் போக்கு.
தள/ அடிப்படை திசுத் தொகுப்பு.
உறுப்புகளுக்கு வலிமை அளித்தல், இலை, தண்டு போன்றவற்றில் உணவு தயாரித்தல், சேமித்தல்.
வாஸ்குல அல்லது கடத்தும் திசுத் தொகுப்பு.
நீர், உணவு கடத்துதல், வலிமை அளித்தல்.
5. காஸ்பேரியப் பட்டைகள்.
வேர்களில், அகத்தோல் செல்களின் ஆரச்சுவர் மற்றும் உள் பரிதி இணைப்போக்கு சுவர் சூபரின் மற்றும் லிக்னின் என்ற பொருட்களால்
தடிப்பு ற்று காணப்படும்.
அகத்தோல் செல்களில் காஸ்பேரியப் பட்டைகள் இருப்பதால் அவற்றின் வழியே நீர்கடத்தப்படுவதில்லை6. இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை வேர்.
இருவிதையிலை வேர்.
பெரும்பாலும் சைலம், புளோயம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.
இணைப்புத் திசு பாரங்கைமாவால் ஆனது.
இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது.
நான்கு முனை கொண்டவை.
ஒரு விதையிலை வேர்.
பெரும்பாலும் சைலம், ஃ புளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இணைப்புத் திசு ஸ்கிலிரங்கைமாவால் ஆனது.
கேம்பியம் முற்றிலும் இல்லை.
சைலம் பல முனை கொண்டவை.
7. இருவித்திலை மற்றும் ஒருவித்திலைத் தண்டு.
இருவித்திலைத் தண்டு.
புறத்தோலடித்தோல் கோலங்கைமா செல்களாலானது.
வாஸ்குலக் கற்றைகள்- ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை, ஒரு வளையமாக அமைந்துள்ளன, இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது.
ஒருவிதையிலைத் தண்டு.
புறத்தோலடித்தோல் ஸ்கிலிரங்கைமா செல்களாலானது.
வாஸ்குலக் கற்றைகள் ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை, அடிப்படைத் திசுவில் சிதறிக் காணப்படுகிறது, இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுவதில்லை.
8. குமிழுரு செல்கள் அல்லது இயக்கச் செல்கள்.
புறத்தோலின் சில செல்கள் பெரியனவாகவும், மெல்லிய செல் சுவருடன் உள்ளன.
இச்செல்கள் தட்பவெப்ப மாறுதலுக்கு ஏற்ப இலை சுருளுதலுக்கும், சுருள் நீங்குதலுக்கும் உதவுகின்றன.
9. கற்றைக் கேம்பியம்.
சைலம் மற்றும் ஃபுளோயத்திற்கு இடையில் காணப்படும்.
புரோகேம்பியத்தில் இருந்து தோன்றுகிறது.
தோற்றத்தில் இது முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதியாகும்.
கற்றையிடைக் கேம்பியம்.
இரு வாஸ்குலார் கற்றைளுக்கிடையே காணப்படும்.
மெடுல்லா கதிர் களிலிருந்து தோன்றுகிறது.
தோற்றம் முதலே இது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதியாகும்.
10. வசந்தகாலக் கட்டை அல்லது முன் பருவக் கட்டை.
கேம்பியத்தின் அதிகமான செயல்பாடே அகன்ற உள்வெளி கொண்ட அதிக எண்ணிக்கை வெசல்கள்/டிரக்கீடுகள் கொண்ட சைலக்கூறுகளையும் தோற்றுவிக்கின்றன.
குளிர் காலக் கட்டை அல்லது பின்பருவக் கட்டை.
குளிர் காலத்தில் கேம்பியத்தின் செயல்பாடு வெகுவாகக் குறைந்த, குறுகலான செல் உள்வெளி கொண்ட வெசல்கள்/ டிரக்கீடுகளை பெற்ற, குறைந்த அளவிலான சைலக்கூறுகளைத் தோற்றுவிக்கின்றன.
11. சாற்றுக்கட்டை(அல்பர்னம்).
கட்டையின் உயிருள்ள பகுதி.
கட்டையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளது.
வெளிறிய நிறத்தில் காணப்படும்.
டைலோஸ்கள் அற்றது.
நீடித்த உழைப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்புத் திறன் அற்றது.
வைரக் கட்டை (டியூரமென்).
கட்டையின் உயிரற்ற பகுதி.
கட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
அடர் நிறத்தில் காணப்படும்.
டைலோஸ்கள் கொண்டது.
நீடித்த உழைப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்புத் திறன் கொண்டது.
12. பட்டைத் துளை.
தண்டு மற்றும் வேர்களின் பட்டையின் புறப் பரப்பிலிருந்து சற்று உயர்ந்து காணப்படுகின்ற வாயில்.
ஃபெல்லோஜென் அதிகச் செயல்பாட்டுடன் இருக்கும் பொழுது பட்டைத் துளை பகுதியில், ஒரு திரளான நெருக்கமற்று அமைந்த மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்கள் உருவாகின்றன.
பட்டைத் துளைகள் வாயுப் பரிமாற்றமும் பட்டைத்துளை நீராவிப் போக்கும் செய்கின்றன.
கலைச்சொல் அகராதி.
1. ஃ புளோயம் சூழ் வாஸ்குலக்கற்றை/மைய சைலம்.
சைலத்தை சூழ்ந்து ஃ புளோயம் காணப்படுவது.
2. சைலம் சூழ் வாஸ்குலக் கற்றை/ மைய ஃ புளோயம்.
ஃபுளோயத்தை சூழ்ந்து சைலம் காணப்படுவது.
3. நுனி செல் கொள்கை.
தனி நுனி செல் முழு தாவரமாக வளர்ச்சி அடைகிறது.
4. அச்சு பாரங்கைமா.
பாரங்கைமா செல்கள் நீள்போக்காக அச்சிற்கு இணையாக காணப்படுவது.
5. காலோஸ்.
சல்லடை தட்டுகளில் உள்ள துளைகளில் அடைப்பட்டுள்ள பொருள்.
6. மூடிய வாஸ்குலக் கற்றைகள்.
சைலத்திற்கும் ஃபுளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படாது.
எ. கா. ஒரு விதையிலைத் தண்டு.
7. நார் டிரக்கீடுகள்.
டிரக்கீடு ஒத்த நார்கள்.
8. ஹேட்ரோம்.
ஹேபர்லேண்ட் சைலத்தை ஹேட்ரோம் என பெயரிட்டார்.
9. ஹிஸ்டோஜெனிசிஸ்.
வேறுபாடடையாத ஆக்கு திசு வேறுபாடுடைய திசுக்களாக மாறுபாடு அடைவது.
10. லெப்டோம்.
ஹேபர்லேண்ட் ஃபுளோயத்தை லெப்டோம் என பெயரிட்டார்.
11. செல் அறை.
டிரக்கீடு, சைலக்குழாய், நார்களில் காணப்படும் செல் அறை.
12. பொருண்மை ஆக்குத்திசு.
ஆக்குத்திசு செல்கள் அனைத்து திசைகளிலும் பகுப்படைகிறது.
13. திறந்த வாஸ்குலக்கற்றை.
சைலத்திற்கும் ஃபுளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுவது.
14. குழி தடிப்புகள்.
குழியை சுற்றி சீரான தடிப்புகளை கொண்டது.
15. ஆரப்போக்கமைந்த வாஸ்குலக் கற்றைகள்.
சைலமும் ஃபுளோயமும் அடுத்தடுத்த வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ளது.
16. கதிர் பாரங்கைமா.
ஆரப்போக்காக அமைந்துள்ள பாரங்கைமா.
17. ஸ்லைம் உடலங்கள்.
முதிர்ந்த சல்லடை குழாய்களில் காணப்படும் சிறப்பு வகை புரதம்.
18. துணைச் செல்கள்.
இலைத் துளையில் காப்பு செல்களைச் சூழ்ந்து காணப்படும் செல்கள்.
19. டிரைக்கோபிளாஸ்ட்கள்.
புறத்தோல் செல்களில் காணப்படும் குட்டையான செல்கள்.
20. டிரைக்கோம்கள்.
ஒரு செல் அல்லது பல செல் நொதிகள்.
21. டூனிகாகார்பஸ் கொள்கை.
டூனிகா கார்பஸ் கோட்பாட்டின் படி தண்டு நுனி ஆக்குத்திசு டூனிகா மற்றும் கார்பஸ் என்ற இரண்டு திசுப் பகுதிகளை கொண்டது.
22. சைலோஸ்.
கட்டை.
Technical points
1. Meristematic tissue.
Based on the position- Apical meristem, Intercalary meristem, Lateral meristem.
Based on the origin- primary meristem, secondary meristem.
Based on function- protoderm, procambium, Ground meristem.
Based on the plane of division- mass meristem, rib or file meristem, plate meristem.
2. Quiescent centre concept.
Proposed by Clowes (1961) to explain root apical meristem activity.
These centre is located between root cap and differentiating cells of the roots.
The apparently inactive region of cells in root promeristem.
It is the site of hormone synthesis and also the ultimate source of all meristematic cells of the meristem.
3. Permanent tissues.
Simple tissue- are composed of one type of cells only. The cells are structurally and functionally similar. 1.parenchyma 2. Collenchyma 3. Sclerenchyma.
Complex tissue- is a tissue with several types of cells but all of them function together as a single unit. 1.xylem 2. Phloem.
4. Functions of tissue system.
Epidermal tissue system.
Protection of plant body; absorption of water in roots; gas exchange for photosynthesis and respiration; transpiration in shoots.
Ground or fundamental tissue system.
Gives mechanical support to the organs; prepares and stores food in leaf and stem.
Vascular or conduction tissue system.
Conducts water and food; gives mechanical strength.
5. Casparian strips.
In roots, the radial and inner tangential walls of endodermal cells possess thickening of lignin, suberin and some other carbohydrates in the form of strips.
The main function to prevent the re-entry of water into the cortex once water entered the xylem tissue.
6. Dicot root and monocot root.
Dicot root-
Usually limited number of xylem and phloem strips.
Conjunctive tissue is parenchymatous.
Cambium appears as a secondary meristem at the time of secondary growth.
Xylem is tetrach.
Monocot root-
Usually more number of xylem and phloem strips.
Conjunctive tissue is sclrenchymatous.
Cambium is altogether absent.
Xylem is polyarch.
7. Dicot stem and monocot stem.
Dicot stem-
Hypodermis is made up of collenchymatous.
Vascular bundles are collateral and open, arranged in a ring, secondary growth occurs.
Monocot stem-
Hypodermis is made up of sclrenchymatous.
Vascular bundles are collateral and closed, scattered in ground tissue, secondary growth usually does not occur.
8. Bulliform cells.
In monocot leaf, some cells of upper epidermis are large and thin walled. Also called motor cells.
These cells helpful for the rolling and unrolling of the leaf according to the weather change.
9. Intrafascicular cambium.
Present inside the vascular bundles.
Originates from the procambium.
Initially it forms a part of the primary meristem.
Interfascicular cambium.
Present in between the vascular bundles.
Originates from the medullary rays.
From the beginning it forms a part of the secondary meristem.
10. Spring wood or early wood.
Cambium is very active and produces a large number of xylary elements having vessels/ tracheids with wide lumen.
Autumn wood or late wood.
The cambium is less active and forms fewer xylary elements that have narrow vessels/tracheids .
11. Sap wood or Alburnum.
Living part of the wood.
It is situated on the outer side of wood.
It is less in coloured.
Tyloses are absent.
It is not durable and not resistant to microorganisms.
Heart wood or Duramen.
Dead part of the wood.
It is situated in the centre part of wood.
It is dark in coloured.
Tyloses are present.
It is more durable and resists microorganisms.
12. Lenticel.
Is raised opening or pore on the epidermis or bark of stems and roots.
When phellogen is more active in the region of lenticels, a mass of loosely arranged thin walled parenchyma cells are formed. It is called complementary tissue or filling tissue.
It helpful in exchange of gases and transpiration is called lenticular transpiration.
Glossary.
1. Amphicribal/ Hadrocentric.
Xylem in the centre with phloem surrounding it. Example- ferns (polypodium).
2. Amphivasal/Leptocentric.
Phloem in the centre with xylem surrounding it. Example- Dragon plant- Dracena and Yucca.
3. Apical cell theory.
Single apical cell growing into whole plant.
4. Axil parenchyma.
Parenchyma arranged longitudinally along the axis.
5. Callose.
Sieve pores are blocked by substances called callose.
6. Closed vascular bundle.
Cambium absent between xylem and phloem. Example- monocot stem.
7. Extra stellar ground tissue.
Tissues outside the stele.
8. Fibre- tracheids.
Transitional form between fibre and tracheids.
9. Hadrome.
Xylem by Haberlandt.
10. Histogenesis.
Differentiate tissues from undifferentiated cells of meristem.
11. Intrastelar ground tissue.
Tissues within the stele.
12. Leptome.
Phloem by Haberlandt.
13. Lumen.
Space inside the tracheid /vessel/fibres.
14. Mass meristem.
Meristem which divides in all planes.
15. Open vascular bundle.
Cambium present between xylem and phloem.
Ex. Dicot stem.
16. Pitted thickening.
Uniformly thick except at their pits.
17. Prickles.
Stiff and sharp outgrowth.
18. Radial vascular bundles.
Xylem and phloem present on different radii.
19. Ray parenchyma.
Parenchyma cells arranged in radial rows.
20. Slime body.
A special protein in sieve tubes.
21. Stellate hairs.
Star shaped hairs.
22. Subsidiary cells.
Surrounding guard cells in the leaf epidermis.
23. Trichoblasts.
One type of epidermal cells that is also called short cell.
24. Trichomes.
Unicellular or multicellular appendages.
25. Tunica carpus theory.
Two zones of apical meristem Tunica and Carpus.
26. Xylos- wood.
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment