51 Days only for NEET 2021

 


Lesson 7- Structutal organisation in animals (Tamil / English )

பாடம் 7. 
விலங்குகளின் அமைப்பிலான கட்டமைப்பு 

1. எபிதீலியத் திசு. 
எளிய எபிதீலியம்- ஓரடுக்கு செல்களால் ஆனது. உறிஞ்சும், சுரக்கும் மற்றும் வடிகட்டும் உறுப்புகளில் இவை காணப்படுகின்றன. 
தட்டை வடிவ எபிதீலியம்- மெல்லிய தட்டையான ஓரடுக்கு செல்களால் ஆன ஒழுங்கற்ற விளிம்புகளைக் கொண்ட எபிதீலியம். 
கன சதுர வடிவ எபிதிலியம்- ஓரடுக்கு கனசதுர வடிவச் செல்களைக் கொண்டவை. 
தூண் வடிவ எபிதீலிய  செல்கள்- வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவைச் செல்லின் அடிப்பகுதியில் கொண்ட உயரமான ஒரடுக்குச் செல்கள். 
குற்றிழை கொண்ட எபிதீலியம்- கருப்பை, அண்ட நாளங்கள், தூண் வடிவ செல்களின் உச்சிப்பரப்பில் குறுயிழைகள் காணப்படும். 
சுரப்பு எபிதீலியம்- சில கனச் சதுர வடிவ மற்றும் தூண்வடிவ எபிதீலிய செல்கள் சுரப்புத் தொழிலைச் செய்வதற்காகச் சுரப்புற்றுக் காணப்படுகின்றன. 

2. கூட்டு எபிதீலியம்.
பல அடுக்கு செல்களால் ஆனவை. இவை சுரத்தலிலும் உறிஞ்சுதலிலும் சிறிதளவே பங்கு கொள்கின்றன. 
இறுக்கமான சந்திப்புகள்- செல்லில் உள்ள பொருட்கள் கசிந்து வெளியேறி விடாமல் தடுப்பதற்கு உதவுகின்றன. 
ஒட்டும் சந்திப்புகள்- அருகருகே அமைந்துள்ள செல்களை பிணைக்கின்றன. 
இடைவெளி சந்திப்புகள்- அருகருகே உள்ள செல்களின் சைட்டோபிளாசத்தை இணைத்து அச்செல்கள்  ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் பணியை செய்கின்றன. இதன் மூலம் அயனிகள் சிறிய, சில சமயம் பெரிய மூலக்கூறுகள் கடத்தப்படுதல் சாத்தியமாகிறது. 

3. தளர்வான இணைப்புத் திசுக்கள்- 
இவ்வகை திசுக்களில் உள்ள செல்களும் நாரிழைகளும், அரை திரவ வடிவத்தில் காணப்படும் அடிப்படைப் பொருட்களில் தளர்வாக அமைந்துள்ளன. இவற்றில் ஏரியோலார் திசு, அடிப்போஸ் திசு, ரெட்டிகுலார் திசு அடங்கியுள்ளன. 
அடர்வான இணைப்புத்திசு- இவற்றில் நாரிழைகளும் ஃபைப்ரோபிளாஸ்ட்களும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் அடர்வான சீரான திசு, அடர்வான சீரற்ற திசு, மீள்தன்மை திசு அடங்கியுள்ளது. 
சிறப்பு வகை இணைப்புத்திசுக்கள்- குருத்தெலும்பு, எலும்பு மற்றும் இரத்தம் ஆகியவை அடங்கியுள்ளன. 

4. தசைத்திசு. 
ஒவ்வொரு தசையும் இணை வரிசையில் அமைந்த நீண்ட உருளை வடிவ இழைகளால் ஆனது. ஒவ்வொரு இழையும் மையோஃபைப்ரில்கஸ் எனப்படும் பல நுண்ணிய இழைகளால் ஆனது. 
எலும்புத்தசை- இத் திசுக்கள் எலும்பு களோடு இறுக்கமாக இணைந்துள்ளன. 
மென்தசைகள்- இருமுனைகளும் கூர்மையாக, கதிர் வடிவத்தில் அமைந்த வரியற்ற தசை இழைகள். 
இதயத்தசைகள்- இதயத்தில் மட்டுமே காணப்படும் சுருங்கி விரியும் தசைகள். 

5. நரம்புத் திசு. 
தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கேற்ப நமது உடல் செய்யும் பதில் வினைகள் அனைத்தும் நரம்புத்திசுவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நரம்பு மண்டலத்தின் அலகுகளான நியூரான்கள் எனப்படும் நரம்பு செல்கள் நரம்பு மண்டலத்தில் காணப்படும் கிளர்ச்சியுறும் செல்கள் ஆகும். 

6. கிளைடெல்லம். 
முதிர்ச்சியடைந்த புழுக்களில் , 14 முதல் 17 வரையிலான கண்டங்களின் சுவர் சற்றே பருத்து, தடித்த தோல் சுரப்பிகளுடன் காணப்படுகிறது. 
சீட்டாக்கள்- புழுக்களின் ஒவ்வொரு கண்டத்தின் மையப்பகுதியில் வளையம் போன்று கைட்டினாலான உடல் சீட்டாக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சீட்டாவும் தோலில் உள்ள சீட்டாவிற்கான பையிலிருந்து தொடங்கி, பின் வளைந்து S வடிவம் கொண்டுள்ளது. சீட்டாக்களை வெளியே நீட்டவும், உள்ளிழுத்துக் கொள்ளவும் முடியும். இவற்றின் முதன்மைப் பணி இடப்பெயர்ச்சி யாகும். 
டிப்லோசோல்- குடலின் முதுகுப்புறச் சுவரில் இரத்த நாளங்கள் நிறைந்த மடிப்பு காணப்படுகின்றது. 

7. மால்பீஜியன் நுண் குழல்கள். 
கரப்பான் பூச்சியின் நடுக்குடலும், பின்குடலும் இணையுமிடத்தில் சுமார் 100-150 எண்ணிக்கையில் மஞ்சள் நிறமுடைய, மெல்லிய இழை போன்ற நுண் குழல்கள் காணப்படுகின்றன. இவை ஹீமோலிம்ப் திரவத்திலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. 

8. யூரிகோடெலிக். 
கரப்பான் பூச்சியில், யூரிக் அமிலமாகக் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதனால் யூரிக் அமில நீக்கிகள் ஆகும். கூடுதலாக கொழுப்பு உறுப்புகள், நெப்ரோசைட்டுகள், கியூட்டிகிள் மற்றும் யூரிகோஸ் சுரப்பிகள் ஆகியவையும் கழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன. 

9. தவளையின் பொருளாதார முக்கியத்துவம். 
சூழியல் மண்டலத்தினை நிலைப்படுத்தும் உணவுச் சங்கிலியின் முக்கிய அங்கமாக தவளைகள் உள்ளன
இரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருளாகப் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 
சுவையும், அதிக உணவூட்ட மதிப்பும் உடையதால் அமெரிக்கா ,ஜப்பான், சீனா, வடகிழக்கு இந்தியப் பகுதிகள் மற்றும் பல நாடுகளில் தவளைகள் மக்களால் சுவை மிகுந்த உணவாக உட்கொள்ளப்படுகின்றன. 

10. நரம்பு மண்டல நோய்கள். 
பார்கின்சன் நோய். 
உடல் இயக்கத்தை பாதிக்கும் நரம்பு மண்டல குறைபாடு. உடல் நடுக்கங்களும் ஏற்படும். 
அல்சீமயர் நோய். 
இது ஒரு நாள்பட்ட நரம்பு செல் சிதைவு நோய் ஆகும். சமீபத்திய நிகழ்வுகளைக் கூட நினைவு கூற இயலாமை, பேசும் மொழியில் குறைபாடு, சமநிலையற்ற, ஊசலாடும் மனநிலை ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும். 

கலைச் சொற்கள். 
1. ஈரிதழ்  வால்வு. 
       மிட்ரல் வால்வு எனவும் எனவும் அழைக்கப்படும். இடது ஆரிக்கிளுக்கும், இடது வென்டிரிக்கிளுக்கும் இடையே காணப்படும் இரு கதுப்புகளாலான இடது ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு. 
2. உயரிய அடையாளங்காட்டிகள். 
     சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க நிலைமைகள் நிலவுவதை தம்முடைய பண்பின் மூலம் வெளிப்படுத்தும் உயிரினங்கள், சிற்றினங்கள் அல்லது இனத்தொகை.
3. இருகால் இயக்கம். 
      இரண்டு கால்களால் நிற்பது மற்றும் நடப்பது. 
4. இரத்த அழுத்தம். 
        இரத்தக் குழல்களுக்குள் இரத்தம் சுழலும் போது அது அக் குழல்களின் சுவர்களில் ஏற்படுத்தும் அழுத்தம். 
5. புத்தகச் செவுள்கள். 
       நீர்வாழ் லிமுலஸில் உள்ள சுவாச உறுப்பு
6. புத்தக நுரையீரல். 
       தேள் , சிலந்தி போன்றவற்றின் சுவாச உறுப்பு. 
7. ஓரடைக் குஞ்சுகள். 
       ஒரு முறை அடைக்காத்தலுக்குப் பிறகு வெளிவரும் பறவைக் குஞ்சுகளைக் கொண்ட குடும்பம். 
8. கேட்டகோலமைன்கள். 
      நரம்புணர்வு கடத்திகளாகச் செயல்படக் கூடிய இயற்கையில் காணப்படும் அமைன்கள். கேட்டகோல் தொகுதியைக் கொண்ட இவை அமைன் தொகுதியுடன் இணைவதால் தோன்றுவதாகும். எ. கா. எபிநெஃப்ரின். 
9. கருமுட்டைக்கூடு. 
      கிளைடெல்லத்தில் காணப்படும் பை போன்ற அமைப்பு. முட்டைகளும், விந்தணுக்களும் இதனுள் சேமித்து வைக்கப்படுகின்றன. கரு வளர்ச்சியும் கருவுறுதலும் இதனுள் நடைபெறுகிறது.

Technical points 
1. Epithelial tissue. 
Simple epithelium- is composed of a single layer of cells. They are found in the organs of absorption, secretion and filtration. 
Squamous epithelium- is made of a single thin layer of flattened cells with irregular boundaries. 
Cuboidal epithelium- is made of a single layer of cube like cells. 
Columnar epithelium- is composed of single layer of tall cells with round to oval nuclei at the base. 
Ciliated epithelium- If the columnar cells bear cilia on their free surfaces. 
Glandular epithelium- some of the cuboidal or columnar cells get specialized for secretion. 

 2. Compound epithelium. 
Is made of more than one layer of cells and thus has a limited role in secretion and absorption. 
Tight junctions- help to stop substances from leaking across a tissue. 
Adhering junctions- perform cementing to keep neighbouring cells together. 
Gap junctions- facilitate the cells to communicate with each other by connecting the cytoplasm of adjoining cells, for rapid transfer of ions, small molecules and sometimes big molecules. 

3. Loose connective tissues-
In this tissue the cells and fibres are loosely arranged in a semi fluid ground substances. It includes Areolar, Adipose and Reticular tissues. 
Dense connective tissues- Fibres and fibroblasts are compactly packed . It includes dense regular, dense irregular and elastic. 
Specialized connective tissues are classified as cartilage, bones and blood. 

4. Muscle tissue. 
Each muscle is made of many long, cylindrical fibres arranged in parallel arrays. These fibres are composed of numerous fine fibrils called myofibrils. 
Skeletal muscle- is closely attached to skeletal bones. 
Smooth muscle- fibres taper at both ends and do not show striations. 
Cardiac muscle tissue- is a contractile tissue present only in the heart. 

5. Neural tissue. 
Nervous tissue exerts the greatest control over the body's responsiveness to changing conditions. Neurons, the unit of neural system are excitable cells. 

6. Clitellum. 
In mature worms, segments 14-17 may be found swollen with a glandular thickening of the skin. 
Setae- The worm body,  setae arises from a setigerous sac of the skin and it is curved as S shaped. Setae can be protruded or retracted and their principal role is in locomotion. 
Typhlosole- The dorsal wall of the intestine is folded into the cavity. 

7. Malpighian tubules. 
The digestive system of cockroach, the hindgut is marked by the presence of 100- 150 yellow coloured thin filamentous, helpful in removal of the excretory products from the haemolymph. 

8. Uricotelic. 
Cockroach excretes uric acid. In addition, fat body, nephrocytes, cuticle and urecose glands are also excretory in function. 

9. Economic importance of frog. 
Frog is an important animal in the food chain. 
Frogs are used in traditional medicine for controlling blood pressure and for its anti aging properties. 
In USA, Japan, China and North East of India, Frogs are consumed as delicious food as they have high nutritive value. 

10. Diseases of nervous system. 
Parkinson's disease. 
A degenerative disorder of the nervous system that affects movement, often including tremors. 
Alzheimer's disease. 
It is a chronic neurodegenerative disease which includes the symptoms of difficulty in remembering recent events, problems with language, disorientation and mood swings. 

Glossary. 
1. Berger's waves. 
          Are neural oscillations in the frequency range of 7.5 - 12.5 Hz arising from synchronous and coherent electrical activity of thalamic pacemaker cells in humans. 
2. Bicuspid valve. 
      Also called mitral valve. Left auricular ventricular valve with two flaps that is present between the left auricle and left ventricle. 
3. Biological indicator. 
      Refers to organisms, species or community whose characteristics show the presence of specific environmental conditions. 
4. Bipedal. 
      Walk or stand on two feet. 
5. Blood pressure. 
      Is the pressure exerted by the circulating blood against the walls of blood vessels. 
6. Book gills. 
     Respiratory organs in aquatic limulus. 
7. Book lungs. 
       Respiratory organs of Scorpions and most spiders. 
8. Brood. 
      A family of birds produced at one hatching or birth. 
9. Catecholamines. 
      Naturally occurring amines that function as neurotransmitters. They are characterised by catechol group in which an amine group is attached. Example- Epinephrine. 
10. Cocoon. 
      It is a bag like structure secreted by the clitellum. Eggs and sperms are deposited into it. Fertilization and development occurs within the cocoon.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany