50 Days only for NEET 2021

 


Lesson 8 - Cell- The unit of life (Tamil / English )

பாடம்  8 - செல்- ஒரு வாழ்வியல் அலகு 

1. செல். 
செல் என்ற வார்த்தை ஒரு சிறிய பெட்டி என்று பொருள்படும் செல்லே என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானது. 
செல் என்ற சொல் முதன் முதலில் இராபர்ட் ஹீக் (1662) என்பவரால் பயன்படுத்தப்பட்டது.  
எனவே செல் என்ற சொல் 300 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வந்தது என்று தெரிய வருகிறது. 
2. செல் கொள்கை. 
1833 ஆம் ஆண்டு ஜெர்மனி தாவரவியலார் மாத்தியோஸ் ஷிலீடன், ஜெர்மனி விலங்கியலார் தியோடர் ஷிவான் . 
அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை. 
ஏற்கனவே உள்ள செல் களிலிருந்து புதிய செல்கள் தோன்றுகின்றன. 
செல் மரபியல் தகவல்களைக் கொண்டுள்ளது. இவை பெற்றோரிடமிருந்து சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. 
அனைத்து வளர்சிதை மாற்ற வினைகளும் செல்லுக்குள்ளே நடைபெறுகிறது. 
ருடால்ப் விர்ச்செள (1858) செல் கொள்கையை மாற்றி அமைத்தார். 
3. செல் அமைவு வகைகள். 
புரோகேரியோட்டுகள். 
நியூக்ளியாய்டு, உண்மையான உட்கரு அற்றது. 
பொதுவாக வட்ட வடிவம், ஹிஸ்டோன் புரதம் அற்றவை. 
எ. கா. பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா.
யூகேரியோட்டுகள். 
சவ்வுடன் கூடிய உட்கரு காணப்படுகிறது. 
பொதுவாக நீள் வடிவம். ஹிஸ்டோன் புரதம் கொண்டவை. 
எ. கா. பூஞ்சை, தாவரங்கள் மற்றும் விலங்குகள். 
4. உயிரணு உட்பொருட்கள். 
சைட்டோபிளாசத்தில் உயிரற்ற பொருட்களில் காணப்படுகிறது. இவை கரிம மற்றும் கனிம கூட்டு பொருட்களுடன் காணப்படுகிறது. 
எ. கா. பாஸ்பேட், சயனோபைசியன் மற்றும் கிளைக்கோஜன் உடல்கள். 
5. பாய்ம திட்டு மாதிரி. 
ஜோனத்தான் சிங்கர் மற்றும் கார்த் நிக்கோல் சன் (1972). 
கார்போஹைட்ரேட்டை மிகக் குறைவாகவும், மேலும் லிப்பிடுகள் மற்றும் புரதங்களையும் இது பெற்றுள்ளது. 
இதில் உள்ள லிப்பிடு சவ்வு பாஸ்போலிப்பிடுகளால் ஆக்கப்பட்டுள்ளது. 
சவ்வில் உள்ள லிப்பிடு பொருட்கள் சவ்வின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செங்குத்து வாக்கில் இடப்பெயரும் தன்மைக்கு அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வு என்று பெயர். 
6. எண்டோபிளாச வலையின் பணிகள். 
வழவழப்பான எண்டோபிளாச வலை லிப்பிடு உருவாக்க உதவும் இடமாகவும் சொரசொரப்பான எண்டோபிளாச வலை புரதச் சேர்க்கை நிகழும் இடமாகவும் திகழ்கின்றன. 
தீமை விளைக்கும் சில வேதி சேர்மங்களை யும், லிப்பிடில் கரையும் மருந்துப் பொருட்களையும், நச்சு நீக்க உதவும் நொதிகளையும் வழவழப்பான எண்டோபிளாச வலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 
7. கோல்கை  உடலத்தின்  பணிகள். 
கிளைக்கோபுரதங்கள் மற்றும் கிளைக்கோலிப்பிடுகளைத் தயாரித்தல். 
சைமோஜென் துகள்களை உருவாக்குதல். 
லைசோசோம்களை உருவாக்குதல். 
லிப்பிடுகளைக் கடத்துதல் மற்றும் சேமித்தல். 
8. வாக்குவோல்கள். 
செல்லில் உள்ள பெரும்பாலான சுக்ரோஸ் சேர்மங்கள் தாவர வாக்குவோல்களில் சேமிப்புப் பொருளாகக் காணப்படுகிறது. 
அ) கரும்பு மற்றும் பீட்ரூட் தாவரங்களில் சர்க்கரையைச் சேமித்தல். 
ஆ) ஆப்பிள் கனிகளில் மாலிக் அமிலத்தைச் சேமித்தல். 
இ) சிட்ரஸ் கனிகளின் செல்களில் அமிலங்களைச் சேமித்தல். 
தாவரச் செல்களில் வாக்குவோல்கள் பெரிதாகவும் டோனோபிளாஸ்டு என்ற ஒற்றைச் சவ்வினால் சூழப்பட்டும் காணப்படுகிறது. 
9. கணிகங்கள். 
பசுங்கணிகம்- பசும் பாசிகள் மற்றும் உயர் தாவரங்களில் காணப்படுகிறது. பச்சையம் a மற்றும் பச்சையம் b ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 
அமைலோபிளாஸ்ட்- தரசத்தை சேமித்தல். 
இலையோபிளாஸ்ட்- லிப்பிடுகள் குறிப்பாக எண்ணெய்களைச் சேமித்தல். ஒரு விதையிலை மற்றும் இருவிதையிலை தாவரங்களின் விதைகள். 
அல்லுரோபிளாஸ்ட் அல்லது புரோட்டியோபிளாஸ்ட்- புரதத்தைச் சேமிப்பவை.
10. ரைபோசோம்களின் வகைகள். 
70S-  30S துணை அலகு, 16SrRNA.
50S பெரிய துணை அலகு. 23 S மற்றும் 5S.
80S- 40S சிறிய துணை அலகு 18SrRNA.
60S பெரிய துணை அலகு  28S, 5.8 S, மற்றும் 5S.
11. கசையிழை. 
இதன் இழைப்பகுதி பிளஜெல்லின் என்ற புரதத்தால் ஆனது. இதில் அடிப் பகுதியானது சைட்டோபிளாச சவ்வுடனும், செல் சுவருடன் தொடர்பு கொண்ட பகுதியாகும். மேலும் குறு வளைவு மற்றும் நீண்ட முறுக்கிழைகள் இதில் காணப்படுகிறது. 
குறுயிழை.
பிளாஸ்மா சவ்விலிருந்து தோன்றும் சிறிய நுண்ணிழைகள் சூழ்ந்த பல நீட்சிகளுக்குச் குறுயிழை என்று பெயர். 
குறுயிழை சவ்வினால் சூழப்பட்டு அடிப்பகுதி, சிறு வேர்கள், அடித்தட்டு மற்றும் மைய அச்சு ஆக்சோனிமா கொண்டுள்ளது. 
12. குரோமோசோம் களின் வகைகள். 
குரோமோசோம் களில் சென்ட்ரோமியரின் அமைவிடத்தைக் கொண்டு அவை டீலோசென்ட்ரிக் (நுனி அமைந்த சென்ட்ரோமியர்), அக்ரோசென்ட்ரிக் (நுனி கீழ் அமைந்த சென்ட்ரோமியர்), சப்மெட்டாசென்ட்ரிக் (மைய அருகு சென்ட்ரோமியர்) , மெட்டாசென்ட்ரிக் (மையம் அமைந்த சென்ட்ரோமியர்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
யூகேரியாட்டுகளில் குரோமோசோம்கள் கோல் வடிவம் ( டீலோசென்ட்ரிக் மற்றும் அக்ரோசென்ட்ரிக்), L வடிவம் (சப்மெட்டாசென்ட்ரிக்), V வடிவம் (மெட்டாசென்ட்ரிக்) ஆகியவை காணப்படுகின்றன. 

கலைச்சொல் அகராதி. 
1. மரபணு தொகையம்.
ஒர் உயிரினத்தின் ஒட்டுமொத்த ஜின்களின் தொகுப்பு. 
2. கேரியோடைப். 
யூகேரியாட்டிக் செல்களில் உள்ள மெட்டாபேஸ் குரோமோசோமின் மொத்த தொகுப்பின் எண்ணிக்கை, அளவு மற்றும் வடிவம். 
3. உட்கரு ஒத்த அமைப்பு. 
பாக்டீரியத்தின் மரபுப் பொருள். 
4. புளூரிலாக்குலார். 
இரண்டிற்கு மேற்பட்ட சூலக அறைகளைக் கொண்ட சூலகப்பை. 
5. ஃபாஜ் முன்னோடி. 
ஒம்புயிரி DNA உடன் ஒருங்கிணைந்த ஃபாஜ் DNA.


Technical points 
1. Cell. 
The word cell comes from the Latin word Celle which means 'a small compartment'. 
The word cell was first used by Robert Hooke (1662) therefore the term cell is as old as 300 years. 

2. Cell theory. 
In 1883, German botanist Matthias Schleiden and German zoologist Theodor Schwann. 
All organisms are made up of cells. 
New cells are formed by the division of pre- existing cells. 
Cells contains genetic material which is passed on from parents to daughter cells. 
All metabolic reactions take place inside the cells. 
Modified cell theory- Rudolf Virchow. 

3. Cellular organization. 
Prokaryotes. 
Nucleoid, no true nucleus. 
Usually circular without histone proteins. 
Example- Bacteria and Archaea. 
Eukaryotes-
Nucleus with nuclear membrane. 
Usually linear with histone proteins. 
Example- Fungi, plants and animals. 

4. Inclusion bodies. 
The cell inclusions are the non living materials present in the cytoplasm. 
They are organic and inorganic compounds. 
Example- phosphate granules, cyanophycean granules, glycogen granules. 

5. Fluid mosaic model. 
Jonathan Singer and Garth Nicolson (1972). 
It is made up of lipids and proteins together with a little amount of carbohydrates. 
The lipid membrane is made up of phospholipid. 
The movement of membrane lipids from one side of the membrane to the other side by vertical movement is called flip flopping or flip flop movement. 

6. Functions of Endoplasmic Reticulum. 
Rough endoplasmic reticulum is involved in protein synthesis and smooth endoplasmic reticulum are the sites of lipid synthesis. 
The smooth endoplasmic reticulum contains enzymes that detoxify lipid soluble drugs, certain chemicals and other harmful compounds. 

7. Functions of Golgi complex. 
Glycoproteins and glycolipids are produced. 
Zymogen granules are synthesised.  
Formation of lysosomes.
Transporting and storing lipids.

8. Vacuoles. 
Store most of the sucrose of the cell. 
a) Sugar in sugar beet and sugar cane. 
b) Malic acid in Apple
c) Acids in citrus fruits. 
In plant cells vacuoles are large, bounded by a single unit membrane called Tonoplast. 

9. Plastids. 
Chloroplast- occurs in green algae and higher plants. Pigments chlorophyll a and b. 
Amyloplast- stores starch. 
Elaioplast- store lipids. Seed of monocot and dicots. 
Aleuroplast or Proteoplast- store protein. 
Leucoplast- colourless plastids store food materials. 

10. Types of ribosomes. 
70S- 16SrRNA in 30S subunit. 
23S and 5S large subunit. 
80S- 18SrRNA in 40S small subunit. 
28 S, 5.8 S and 5S in larger 60S subunit. 

11. Flagella.
The filament contains a protein called flagellin. The structure consists of a basal body associated with cytoplasmic membrane and cell wall with short hook and helical filament. 
Cilia- They are short, cellular, numerous microtubule bound projections of plasma membrane. Cilium is membrane bound structure made up of basal body, rootlets, basal plate and shaft. 

12. Chromosomes. 
Based on the position of centromere chromosomes are called telocentric (terminal centromere), Acrocentric (terminal centromere capped by telomere), Sub metacentric (centromere subterminal), and metacentric (Centromere median). 
The eukaryotic chromosomes may be rod shaped (telocentric and acrocentric), L shaped (sub metacentric) and V shaped (metacentric). 


Glossary. 
1. Genome. 
Complete set of genes in an organism. 
2.Karyotype.
Number, sizes and shapes of the entire set of metaphase chromosomes of a eukaryotic cell. 
3. Nucleoid. 
Genetic material of bacterium. 
4. Pluriocular. 
An ovary with two or more locus. 
5. Prophage. 
The integrated phage DNA with host DNA.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany