47 Days only for NEET 2021

 


Lesson 11. Transport in plants- part 1 (Tamil / English )

பாடம் 11. தாவரங்களில் கடத்து முறைகள்- பாகம் 1
1.செல்களுக்கிடையேயான கடத்து முறைகள். 
அ) ஆற்றல் சாரா கடத்தல்
பரவல்
மேம்படுத்தப்பட்ட பரவல்- கால்வாய் புரதம், தாங்கிப் புரதம். 
ஆ) ஆற்றல் சார் கடத்தல். 
கால்வாய் புரதம்
தாங்கிப் புரதம்
உந்திகள்

2. பரவல். 
அடர்வு அதிகமான இடத்திலிருந்து அடர்வு குறைவான இடத்திற்கு செறிவடர்த்தி சரிவு காரணமாக ஒட்டுமொத்த மூலக்கூறுகளும் சமநிலை எட்டப்படும் வரை இடம்பெயருகிறது. 
பரவலில் மூலக்கூறுகளின் இயக்கம் தொடர்ச்சியாகவும் ஒழுங்கற்றும் அனைத்து திசைகளிலும் நடைபெறும். 

3. மேம்படுத்தப்பட்ட பரவல். 
கடத்து புரதங்கள் எனப்படும் ஒரு சிறப்பான சவ்வுப் புரதத்தின் துணையால் ஏ. டி. பி ஆற்றலை பயன்படுத்தாமல் மூலக்கூறுகள் செல் சவ்வினை கடக்கின்றன.
போரின்- கணிகங்கள், மைட்டோகாண்ட்ரியா மற்றும் பாக்டீரியாவின் வெளிச்சவ்வில் காணப்படும் மிகப் பெரிய கடத்து புரதம். இவை சிறிய அளவிலான மூலக்கூறுகளைக் கடத்துவதற்கு ஏற்றவை.
அக்வாபோரின்- பிளாஸ்மா சவ்வில் பொதிந்து காணப்படும் நீர் கால்வாய் புரதங்களாகும்.இதன் மூலம் மிகப்பெரிய அளவில் நீர் மூலக்கூறுகள் சவ்வினைக் கடக்கின்றன. 

4 . மூன்று வகையான தாங்கி புரதங்கள். 
யூனிபோர்ட் அல்லது ஒற்றைக் கடத்தி- இவ்வகையில் ஒரே வகையான மூலக்கூறுகள் ஒரே திசையில் பிற மூலக்கூறுகளுடன் தொடர்பின்றி சவ்வின் வழியாகச் செல்லும். 
சிம்போர்ட் அல்லது இணை கடத்தி- ஒரே நேரத்தில் இரு வேறு மூலக்கூறுகளை ஒரே திசையில் கடத்தும் ஒருங்கிணைந்த சவ்வுப் புரதமாகும்.
ஆன்டிபோர்ட் அல்லது எதிர் கடத்தி- ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட மூலக்கூறுகளை எதிர் எதிர் திசைகளில் சவ்வின் வழியே கடத்தும் ஒருங்கிணைந்தச் சவ்வுப் புரதமாகும். 

5. நீரியல் திறன். 
ஸ்லேடையர் மற்றும் டெய்லர் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
ஒரே குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு அமைப்பில் உள்ள நீரை, தூய நீரின் நீரியல் ஆற்றலுடன் ஒப்பிடுவதாகும். 
நீரியல் திறன் (சை) எனும் கிரேக்க குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதனுடைய அலகு பாஸ்கல்(Pa) ஆகும். 
திட்ட வெப்பநிலையில் தூய நீரின் நீரியல் ஆற்றல் பூஜ்ஜியமாகும். 
நீரியல் திறன்=கரைபொருள் உள்ளார்ந்த திறன்+அழுத்தம் உள்ளார்ந்த திறன். 

6. சவ்வூடுபரவல். 
இது ஒரு சிறப்பு வகையான பரவல் ஆகும். 
ஒரு தேர்வு செலுத்து சவ்வின் வழியாக நீர் அல்லது கரைப்பான் மூலக்கூறுகள் அதன் அடர்வு அதிகமான பகுதியிலிருந்து அடர்வு குறைவான பகுதிக்கு செல்லுதல். 

7. பிளாஸ்மா சிதைவு. 
ஒரு தாவர செல்லினை ஹைப்பர்டானிக் கரைசலில் வைக்கும் போது நீர் மூலக்கூறுகள் செல்லில் இருந்து வெளிச்சவ்வூடு பரவல் காரணமாக வெளியேறுகிறது. 
நீர் மூலக்கூறுகள் வெளியேறுவதால் செல்லின் புரோட்டோபிளாசம் சுருங்கி செல் சவ்வானது செல் சுவரிலிருந்து விடுப்பட்டு செல்லானது நெகிழ்ச்சி நிலையினை அடைகிறது. 

8. எதிர் சவ்வூடு பரவல். 
நீர் மூலக்கூறுகள் குறைவான அடர்வுள்ள இடத்திலிருந்து அதிக அடர்வுள்ள இடத்திலிருந்து தேர்வு கடத்து சவ்வின் வழியாக செல்லும். 
குடிநீர் சுத்திகரிப்பிற்கும் கடல் நீரை குடிநீராக்குவதற்கும் பின்னோக்கிய சவ்வூடுபரவல் பயன்படுத்தப்படுகிறது. 

9. உள்ளீர்த்தல். 
மரப்பிசின்,ஸ்டார்ச், புரதம், செல்லுலோஸ், அகார், ஜெலட்டின் போன்ற கூழ்ம அமைப்புகளை நீரில் வைக்கும் போது அவை நீரினை அதிக அளவில் உறிஞ்சி பெருக்கமடைகின்றன. 
இத்தகைய பொருட்கள் உள்ளீர்ப்பான்கள் என்றும் இந்நிகழ்வு உள்ளீர்த்தல் என்றும் அழைக்கப்படுகிறது. 

10. பரவல் அழுத்தப் பற்றாக்குறை. 
தூய கரைப்பான் அதிகமான பரவல் அழுத்தம் கொண்டது. 
இதில் கரைபொருளை சேர்க்கும் போது கரைப்பானின் பரவல் அழுத்தம் குறைகிறது. 
குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் உள்ள ஒரு கரைசலின் பரவல் அழுத்தத்திற்கும் அக்கரைசலின் கரைப்பானின் பரவல் அழுத்ததிற்கும் இடையேயான வேறுபாடு. 
இதற்கு பெயரிட்டவர் மேயர் (1938). 

கலைச்சொல் அகராதி. 
1. கூழ்மம். 
இரு வேறுபட்ட துகள்கள் தங்களது பண்புகளை இழக்காமல் ஒரு அமைப்பில் சரிவிகிதத்தில் விரவி காணப்படும் நிலை. 

2. சுக்ரோஸ். 
குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸால் ஆன குறைத்தலற்ற தன்மை கொண்ட இரட்டைச் சர்க்கரை. 

3. தட்டு ஆக்குத்திசு. 
ஆக்குத்திசு பகுபடும் திசை பரிதி இணைப்போக்கின் இருவழிவகைகளில் நடைபெறும். 

4. நீர் இறுக்கம் தாங்குதல். 
தாவரங்கள் நீர் இறுக்கத்தில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளாமல் எதிர் கொள்ளும் விதம். 

5. வறட்சியை எதிர் கொள்ளுதல். 
நீர் பற்றாக்குறையினால் உண்டாகும் இறுக்கத்தை எதிர்கொள்ளுதல்.

Technical points 
1. Cell to cell transport. 
a. Passive transport-
Diffusion 
Facilitated diffusion-
Channel protein
Carrier protein
b. Active transport. 
Channel protein
Carrier protein
Pumps

2. Diffusion. 
The net movement of molecules from a region of their higher concentration to a region of their lower concentration along a concentration gradient until an equilibrium is attained. 
The movement of molecules is continuous and random in order in all directions. 

3. Facilitated diffusion. 
Molecules cross the cell membrane with the help of special membrane proteins called transport proteins, without the expenditure. 
Porin- is a large transporter protein found in the outer membrane of plastids, mitochondria and bacteria which facilitates smaller molecules to pass through the membrane. 
Aquaporin- is a water channel protein embedded in the plasma membrane. It regulates the massive amount of water transport across the membrane. 

4. Three types of carrier proteins. 
Uniport- in this molecule of a single type move across a membrane independent of other molecules in one direction. 
Symport or co transport- integral membrane protein that simultaneously transports two types of molecules across the membrane in the same direction. 
Antiport or counter transport-
Integral membrane transport protein that simultaneously transports two different molecules, in opposite directions, across the membrane. 

5. Water potential. 
The concept of water potential was introduced in 1960 by Slatyer and Taylor. 
Potential energy of water in a system compared to pure water when both temperature and pressure are  kept the same. 
Water potential is denoted by the Greek symbol psi and measured in Pascal(Pa). 
At standard temperature, the water potential of pure water is zero. 
Water potential= solute potential+ pressure potential. 

6. Osmosis. 
Is a special type of diffusion. 
It represents the movement of water or solvent molecules through a selectively permeable membrane from the place of its higher concentration to the place of its lower concentration. 

7. Plasmolysis. 
When a plant cell is kept in a hypertonic solution, water leaves the cell due to exosmosis. 
As a result of water loss, protoplasm shrinks and all the cell membrane is pulled away from the cell wall and finally the cell becomes flaccid. 

8. Reverse osmosis. 
The water molecules move from the lower concentration to higher concentration through a selectively permeable membrane. 
Is used for purification of drinking water and desalination of sea water. 

9. Imbibition. 
Colloidal systems such as gum, starch, proteins, cellulose, agar, gelatin when placed in water, will absorb a large volume of water and swell up. 
These substances are called imbibants and the phenomenon is imbibition. 

10. DPD (Diffusion pressure deficit). 
Pure solvent( hypertonic) has a higher diffusion pressure. 
Addition of solute in pure solvent lowers its diffusion pressure. 
The difference between the diffusion pressure of the solution and its solvent at a particular temperature and atmospheric pressure. 
Term by Meyer (1938). 
       
  Glossary. 
1. Colloidal. 
An evenly distributed mixture of two different particles in a system without losing its own properties. 

2. Sucrose. 
Non reducing disaccharide composed of glucose and fructose. 

3. Rib meristem. 
Meristem which divides anticlinally in two planes. 

4. Dessication tolerance. 
Ability of plants which can tolerate extreme water stress without being killed. 

5. Drought resistance. 
Capacity of a plant to limit and control consequences of water deficit.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany